Home ANTIHERO16) யட்சன் 😈

16) யட்சன் 😈

by sreejanovels
9 views

அத்தியாயம் 16

காரின் வேகம் மெக்சிகோவின் இரவு வீதிகளைக் கிழித்துக்கொண்டு சென்றது. பின் இருக்கையில் காயத்ரி, டேவிட்டின் மார்பில் சாய்ந்திருந்தாள். அவளது உடல் நெருப்பாகக் கொதித்தது. அந்த ‘புட்சர்’ அவளைத் தூக்கி வீசியதில், அவளது தலையில் பலமான அடி பட்டிருந்தது. அவளது நெற்றியிலிருந்து ஒரு மெல்லிய ரத்தக் கோடு வழிந்து, டேவிட்டின் சட்டையை நனைத்தது.”காயு… கண்ணைத் திற காயு… ப்ளீஸ்,” டேவிட்டின் குரல் முதல்முறையாக உடைந்து போயிருந்தது.

ஒரு மாஃபியா சாம்ராஜ்யத்தையே நடுங்க வைத்தவனின் கைகள் இன்று ஒரு பெண்ணின் உயிருக்காக நடுங்கின.சாரு கண்ணாடியின் வழியாகத் தன் அக்காவைப் பார்த்துவிட்டு காரை இன்னும் வேகமாக ஓட்டினான். “டேவிட், நம்மளோட ரகசிய டாக்டர் இடத்துக்குப் போக இன்னும் அரை மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் அவ தாங்குவாளான்னு தெரியல!”

“தாங்குவா… அவ என் உயிர் சாரு. அவளுக்கு எதுவும் ஆகாது!” என்று சொல்லி டேவிட் அவளது குளிர்ந்த கைகளைத் தன் உள்ளங்கைக்குள் வைத்துத் தேய்த்தான்.அவர்கள் ஒரு ஒதுக்குப்புறமான கிளினிக்கை அடைந்தனர்.

அங்கே டேவிட்டின் நம்பிக்கைக்குரிய டாக்டர் லூயிஸ் அவர்களுக்காகக் காத்திருந்தார். காயத்ரி அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.வெளியே தாழ்வாரத்தில் டேவிட் ஒரு சிலையைப் போல அமர்ந்திருந்தான். அவனது சட்டையில் காய்ந்து போயிருந்த காயத்ரியின் ரத்தக் கறையை அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். சாரு அவனருகே வந்து நின்றான்.”இப்போவாவது புரியுதா டேவிட்? உன் கூட இருந்தா அவளுக்குச் சாவுதான் மிஞ்சும். அந்த ரிகார்டோவும் ஆண்டனியும் உன்னை வச்சு அவளைச் சிதைக்கிறாங்க. நீ உண்மையாவே அவளை நேசிச்சா, அவளை விட்டுட்டுப் போயிடு,” என்று சாரு கசப்புடன் சொன்னான்.

டேவிட் மெல்லத் தலை நிமிர்ந்து சாருவைப் பார்த்தான். அவனது கண்கள் சிவந்து போயிருந்தன. “நான் அவளை விட்டுட்டுப் போனா, அவங்க அவளை இன்னும் சுலபமா வேட்டையாடிடுவாங்க சாரு. ஆனா ஒன்னு… இனிமேல் நான் ஒரு தற்காப்பு ஆட்டம் ஆடப்போறது இல்ல. இனிமேல் வேட்டை தான்!”சிறிது நேரத்திற்குப் பிறகு டாக்டர் லூயிஸ் வெளியே வந்தார். “டேவிட், அவளோட தலையில பலமான அடி. ஒரு மைனர் சர்ஜரி பண்ண வேண்டியிருக்கும். ஆனா அதுக்கு முன்னாடி, அவளுக்கு ஒரு அபூர்வமான மருந்து தேவைப்படுது. குறிப்பா சொல்லப்போனா அவளை தாக்கி இருந்த அந்த ஆயத்துல இந்த நோயை உண்டாக்கின மருந்து இருக்கு அதோட மாற்று மருந்து இருந்தா தான் இவங்களால பிழைக்க முடியும் அந்த மருந்து இப்போ ஆண்டனியோட கட்டுப்பாட்டுல இருக்கிற ஒரு மெடிக்கல் குடோன்ல மட்டும்தான் இருக்கு.”டேவிட்டின் முகம் கறுத்தது.

ஆண்டனி இதை ஒரு திட்டமாகவே செய்திருக்கிறான் என்பது அவனுக்குப் புரிந்தது. காயத்ரியைத் தாக்கினால் டேவிட் தானாகத் தேடி வருவான் என்று அவன் போட்ட கணக்கு இது.”நான் போய் எடுத்துட்டு வர்றேன்,” என்றான் டேவிட்.”வேண்டாம் டேவிட், இது ஒரு டிராப் (Trap)! ஆண்டனி அங்கே காத்துட்டு இருப்பான்,” என்று சாரு தடுத்தான்.”இருக்கட்டும் சாரு. என் காயுக்காக நான் நரகத்துக்குக்கூடப் போவேன்.

ஆனா ஒன்னு… நான் அங்க போகும்போது இங்க கிளினிக்ல பாதுகாப்பு கம்மியா இருக்கும். அந்த புட்சர் இங்க வர வாய்ப்பு இருக்கு. நீ உன் அக்காவைப் பார்த்துக்கோ,” என்று சொல்லிவிட்டு டேவிட் தனது துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டான்.டேவிட் தனது கறுப்பு நிற பைக்கில் மின்னல் வேகத்தில் புறப்பட்டான்.

அவனது இலக்கு – ஆண்டனியின் அந்தப் பாதுகாக்கப்பட்ட குடோன். அங்கே மரணம் அவனுக்காகக் காத்திருந்தது.குடோனை நெருங்கியபோது, அங்கே நூற்றுக்கணக்கான ஆட்கள் துப்பாக்கிகளுடன் நின்றிருந்தனர்.

டேவிட் பைக்கை நிறுத்தவில்லை.

அவன் ஒரு தற்கொலைப் படை வீரனைப் போல நேராகக் கூட்டத்திற்குள் பாய்ந்தான்.ஒரு கையில் துப்பாக்கி, மறு கையில் ஒரு சிறிய கத்தி. அவன் ஒரு ஆக்ரோஷமான தாண்டவத்தையே அங்கே ஆடினான். ஒவ்வொரு தோட்டாவும் ஒரு உயிரைக் குடித்தது. அவனது உடலில் இரண்டு இடங்கள் உரசிக்கொண்டு குண்டுகள் சென்றாலும், அவன் வலியை உணரவில்லை. அவனது கண்ணுக்கு முன்னால் காயத்ரியின் முகம் மட்டுமே தெரிந்தது.அவன் குடோனுக்குள் நுழைந்தபோது, அங்கே ஆண்டனி ஒரு மேஜையின் மேல் அமர்ந்து கையில் அந்த மருந்தைப் பிடித்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.”வா டேவிட்! உனக்காகத்தான் காத்துட்டு இருந்தேன். இந்த மருந்து வேணும்னா, நீ உன்னோட ரெண்டு கைகளையும் தரையில வச்சு மண்டியிடணும்,” என்றான் ஆண்டனி.டேவிட் மெல்ல முன்னேறினான். அவனது கண்கள் அனலைக் கக்கின.அதே நேரம் கிளினிக்கில்…சாரு காயத்ரியின் அறையில் காவல் இருந்தான். திடீரென்று ஜன்னல் கண்ணாடிகள் அதிரத் தொடங்கின. அந்தப் ‘புட்சர்’ லாரியுடன் கிளினிக் வாசலில் வந்து நின்றான். அவனது கையில் இருந்த கோடாரி நிலவொளியில் மின்னியது.சாரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு எழுந்து நின்றான். “அக்கா… உன்னைத் தொட அந்த மிருகத்தை நான் விடமாட்டேன்!”–

—டாக்டர் லூயிஸ் காயத்ரியின் காயத்தைப் பரிசோதித்தபோது அவரது முகம் வெளுத்தது. “டேவிட், இது வெறும் அடி இல்ல. அந்த புட்சர் பயன்படுத்தின கோடாரியோட முனையில ‘நியூரோ-டாக்ஸின்’ (Neuro-toxin) என்கிற ஒரு வீரியமான விஷம் தடவப்பட்டிருக்கு. இது மெல்ல மெல்ல நரம்பு மண்டலத்தைச் செயலிழக்கச் செய்யும்.

இன்னும் ரெண்டு மணி நேரத்துல இதுக்குரிய மாற்று மருந்தை (Antidote) கொடுக்கலனா… காயத்ரியைக் காப்பாத்துறது கஷ்டம்.”காயத்ரியின் உடல் நீல நிறமாக மாறத் தொடங்கியது. அவளது மூச்சுத் திணறல் அதிகமாக, டேவிட்டின் இதயம் சுக்குநூறாக உடைந்தது.”அந்த மருந்து எங்க கிடைக்கும் டாக்டர்?” டேவிட் கர்ஜித்தான்.”இந்த விஷத்தை உருவாக்குனதே ஆண்டனியோட ரகசிய லேப் தான். அதோட மாற்று மருந்து அவன்கிட்ட மட்டும் தான் இருக்கும்,” என்றார் டாக்டர்.டேவிட் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை.

ஆண்டனி விரித்த வலை இதுவென்று தெரிந்தும், அவன் அந்த வலையில் விழத் தயாரானான். “சாரு! நான் அந்த ஆண்டனி கிட்ட போறேன். அவன் என்னைக் கொல்லத்தான் இதைப் பண்றான்னு தெரியும். ஆனா காயுக்காக நான் சாகவும் தயார். நான் வர்ற வரைக்கும் அவளைப் பார்த்துக்கோ.”என்று சற்று நேரத்துக்கு முன்பு நடந்தவை அனைத்தும் நினைத்துக் கொண்டே டேவிட் வண்டியை மேகமாக செலுத்தினான்.டேவிட் மின்னல் வேகத்தில் அந்த மெடிக்கல் குடோனை நோக்கிப் பறந்தான்.

அங்கே ஆண்டனி ஒரு கையில் அந்தச் சிறிய மாற்று மருந்து பாட்டிலை வைத்துக்கொண்டு, ஊஞ்சலில் ஆடுவது போல அமர்ந்திருந்தான்.”டேவிட்! உன் காதலியோட உயிர் என் கட்டை விரலுக்கு அடியில இருக்கு. நீ ஒரு அடி எடுத்து வச்சா கூட, இதைக் கீழே போட்டு உடைச்சிடுவேன்,” ஆண்டனி வஞ்சகமாகச் சிரித்தான்.டேவிட் தனது இரண்டு துப்பாக்கிகளையும் தூக்கித் தூர எறிந்தான். கைகளை உயர்த்தி மண்டியிட்டான்.

“ஆண்டனி… உனக்கு வேண்டியது நான் தானே? என்னை என்ன வேணாலும் பண்ணிக்கோ. ஆனா அந்த மருந்தைக் குடுத்துடு. அவளுக்கு இன்னும் ஒரு மணி நேரம் தான் டைம் இருக்கு.”ஆண்டனி எழுந்து வந்து டேவிட்டின் முகத்தில் ஓங்கி மிதித்தான். டேவிட்டின் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. “நீ மண்டியிட்டுப் பார்க்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை டேவிட். இப்போ உன் திமிர் எங்க போச்சு?” அவன் டேவிட்டைத் தொடர்ந்து தாக்கினான். டேவிட் எதையும் திருப்பிச் செய்யாமல், அந்த மருந்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.அதே நேரம் கிளினிக்கில்.

..புட்சர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். சாரு துப்பாக்கியால் அவனைச் சுட்டான், ஆனால் புட்சரின் உடலில் இருந்த தையல் காயங்களும், காயங்களும் அவன் ஒரு மனிதனே இல்லை என்பதை உணர்த்தின. அவன் ஒரு பரிசோதனை மிருகம் போலத் தெரிந்தான்.சாரு ஒரு தந்திரம் செய்தான். கிளினிக்கில் இருந்த ‘லிக்விட் நைட்ரஜன்’ சிலிண்டரைத் திறந்து புட்சர் மீது பாய்ச்சினான். அந்த உறைநிலைக் குளிரில் புட்சரின் உடல் மெல்ல இறுகத் தொடங்கியது.

“அக்கா… உன்னைத் தொட விடமாட்டேன்!” என்று சாரு கத்தினான்.மீண்டும் குடோனில்…ஆண்டனி டேவிட்டை அடித்து ஓய்ந்தான். “சரி… இந்த மருந்தை உன்கிட்ட தர்றேன். ஆனா ஒரு கண்டிஷன். நீ இப்போவே உன்னோட ‘மாஃபியா டான்’ பதவியை விட்டுட்டு, உன் சொத்து எல்லாத்தையும் என் பேருக்கு எழுதி வைக்கணும். அதுமட்டும் இல்லாம, நீ இந்த மெக்சிகோவை விட்டுப் போகணும்.”டேவிட் சற்றும் தயங்காமல் அங்கிருந்த பத்திரத்தில் ரத்தக் கறையுடன் கையெழுத்திட்டான்.

“எல்லாவற்றையும் எடுத்துக்கோ ஆண்டனி. எனக்கு என் காயத்ரி மட்டும் போதும்.”ஆண்டனி அந்த மருந்தைத் தூக்கி எறிந்தான். டேவிட் அதைப் பாய்ந்து பிடித்துக் கொண்டு, தனது பைக்கை நோக்கி ஓடினான். அவன் பின்னால் ஆண்டனியின் ஆட்கள் சுட ஆரம்பித்தனர். ஒரு குண்டு டேவிட்டின் முதுகில் பாய்ந்தது, ஆனால் அவன் நிற்கவில்லை.அவன் கிளினிக்கிற்கு வந்து சேர்ந்தபோது, அவனது உடம்பே ரத்தக் காடாக இருந்தது.”டாக்டர்… மருந்து… குடுங்க…” என்று சொல்லிக்கொண்டே மயங்கி விழுந்தான்.டாக்டர் லூயிஸ் அந்த மருந்தை காயத்ரிக்குச் செலுத்தினார்.

சில நிமிடங்களில் அவளது உடல் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அவள் மெல்லக் கண்களைத் திறந்தாள்.”டேவிட்…” என்று அவள் முணுமுணுத்தாள்.அருகில் ரத்த வெள்ளத்தில் கிடந்த டேவிட்டைப் பார்த்ததும் அவள் அலறினாள். அவள் தன் வலியை மறந்து அவனருகே ஓடினாள்.

சாருவும் காயத்ரியும் டேவிட்டைத் தாங்கிப் பிடித்தனர்.”நான்… மருந்தைக் கொண்டு வந்துட்டேன் காயு…” டேவிட் புன்னகையுடன் மயங்கினான்.காயத்ரி அவனது முகத்தைக் கண்ணீரால் நனைத்தாள். “உங்களுக்கு ஒன்னும் ஆகாது டேவிட். இனிமேல் நம்ம வேட்டை வேற மாதிரி இருக்கும்!”அதே நேரம், ரிகார்டோ சிறைக்குள் ஒரு புதிய செய்தியைக் கேட்டான். ஆண்டனி இப்போது மெக்சிகோவின் அதிகாரப்பூர்வ டான் ஆகிவிட்டான்.

ஆனால் டேவிட் மில்லர் இன்னும் உயிரோடு இருக்கிறான் என்பது அவனுக்குத் தெரியும்.”ஆட்டம் இப்போதான் முக்கியமான அத்தியாயத்தைத் தொட்டுருக்கு.

இன்னும் இருக்கு டேவிட்… அதுக்குள்ள உன் காதலை நான் சாம்பலாக்குவேன்,” என்று ரிகார்டோ தனக்குள் சிரித்துக் கொண்டான்.—

You may also like

Leave a Comment

About Me

Featured