அத்தியாயம் 14
அந்தப் புகைய மண்டலத்திற்குள் துப்பாக்கிச் சத்தம் எதிரொலித்து ஓய்ந்தது. தேவாலயத்தின் நிசப்தம் இப்போது இன்னும் பயங்கரமாக இருந்தது. புகையும் தூசியும் மெல்ல விலகியபோது, காயத்ரி அங்கேயே சிலையாக உறைந்து நின்றாள்.குண்டு பாய்ந்தது டேவிட்டின் தோளில்!ரிகார்டோவின் குறி தப்பவில்லை.
ஆனால், டேவிட் ரிகார்டோவின் கையைத் திருகிய வேகத்தில் குண்டு அவனது இதயத்தைத் துளைக்காமல் தோளைத் துளைத்துச் சென்றது. ரத்தம் டேவிட்டின் வெள்ளை நிறச் சட்டையில் ஒரு செந்நிறப் பூவைப் போலப் படரத் தொடங்கியது.”டேவிட்!” என்று கதறிக்கொண்டு காயத்ரி அவனை நோக்கி ஓடினாள்.டேவிட் வலியால் துடித்தாலும், அவனது கண்கள் ரிகார்டோவை விட்டு நகரவில்லை.
ரிகார்டோ கீழே விழுந்த துப்பாக்கியை மீண்டும் எடுக்க முயன்றான், ஆனால் காயத்ரி மின்னல் வேகத்தில் அவனது கையைத் தன் காலால் மிதித்தாள்.”வேண்டாம் சார்! இதுக்கு மேல ஒரு துளி ரத்தம் சிந்தினாலும் நான் உங்களைக் கொன்னுடுவேன்!” காயத்ரியின் குரலில் இருந்த ஆக்ரோஷம் ரிகார்டோவை ஒரு கணம் திகைக்க வைத்தது.ஆண்டனி இதற்குள் சுதாரித்துக் கொண்டு எழுந்து சாருவின் தலையில் துப்பாக்கியை இன்னும் பலமாக அழுத்தினான்.
“எல்லாரும் நிறுத்துங்க! இல்லன்னா இப்போவே இவன் மண்டையைச் சிதற வச்சுடுவேன்!”சூழல் மீண்டும் ஒரு முட்டுக்கட்டைக்கு வந்தது. டேவிட் ஒரு கையால் தன் காயத்தைப் பிடித்துக்கொண்டு மூச்சிரைக்க எழுந்து நின்றான். ரத்தம் அவனது விரல்களுக்கிடையே வழிந்து தரையில் சொட்டியது.ரிகார்டோ மெல்ல எழுந்து தனது கோட்டைத் தட்டிவிட்டான்.
“பார்த்தியா காயத்ரி? ஒரு குருவா நான் உனக்குக் கத்துக்கொடுத்த வித்தையை எனக்கே எதிரா பயன்படுத்துற. ஆனா உனக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கு. இந்தத் தேவாலயத்தைச் சுத்தி இப்போ என் ஆளுங்க வர்றாங்க. நீங்க யாருமே இங்கிருந்து உயிரோட போகப்போறது இல்ல.”திடீரென்று வெளியே கார்களின் டயர் உரசி நிற்கும் சத்தமும், நூற்றுக்கணக்கான கால்தடங்களின் சத்தமும் கேட்டது. ரிகார்டோ வஞ்சகமாகச் சிரித்தான்.
“வந்தாச்சு என் படை. டேவிட் மில்லர்… உன்னோட சாம்ராஜ்யம் இதோட முடியுது.”ஆனால், கதவுகள் திறந்தபோது உள்ளே நுழைந்தது ரிகார்டோவின் ஆட்கள் அல்ல!கருப்பு உடை அணிந்த கமாண்டோக்கள் சரசரவென உள்ளே புகுந்தனர். அவர்களின் சீருடையில் இருந்த முத்திரை ரிகார்டோவைப் பதற வைத்தது. அது ‘இன்டர்போல் ஹெட் குவார்ட்டர்ஸ்’ (Interpol Headquarters) நேரடிப் படை!அதற்குத் தலைமை தாங்கி வந்த அதிகாரி, ரிகார்டோவைப் பார்த்துச் சொன்னார், “ரிகார்டோ, யு ஆர் அண்டர் அரெஸ்ட்! உன்னோட பணப் பரிமாற்றங்கள், ஆண்டனியோட நீ வச்சிருந்த ரகசியத் தொடர்புகள் எல்லாத்தையும் காயத்ரி ஏற்கனவே எங்களுக்கு அனுப்பி வச்சுட்டா!”ரிகார்டோ அதிர்ச்சியுடன் காயத்ரியைப் பார்த்தான்.
காயத்ரி ஒரு மெல்லிய புன்னகையுடன், “நீங்கதான் எனக்குக் கத்துக்கொடுத்தீங்க சார்… எதிரி நம்ம கூடவே இருக்கும்போது அவங்களுக்குத் தெரியாமலேயே வலை வீசணும்னு. நான் இந்தத் தேவாலயத்துக்கு வர்றதுக்கு முன்னாடியே என் வாட்ச்ல இருந்த சிக்னல் மூலமா எல்லா ஆதாரங்களையும் ஹெட் ஆபீஸ்க்கு அனுப்பிட்டேன்,” என்றாள்.
ரிகார்டோவின் முகம் வெளுத்தது. ஆண்டனி இதைப் பார்த்ததும் பயத்தில் சாருவை விட்டுவிட்டு தப்பிக்க முயன்றான். ஆனால் டேவிட், தன் காயத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு சிறுத்தையைப் போலப் பாய்ந்து ஆண்டனியின் கால்களை வாரிவிட்டான். ஆண்டனி தரையில் விழ, சாரு அந்த இரும்பு வலையிலிருந்து விடுபட்டு ஆண்டனியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.”இது அம்மாவைக் கடத்துனதுக்கு!” என்று சாரு ஆவேசமாக ஆண்டனியைத் தாக்கினான்.
ரிகார்டோவை அதிகாரிகள் பிடித்து விலங்கிட்டனர். அவன் போகும்போது டேவிட்டைப் பார்த்து, “டேவிட்… நீ ஜெயிச்சுட்டதா நினைக்காதே. ஆண்டனி இப்போ என் பதவியைப் பிடிக்கப் போறான். இந்த விளையாட்டு இன்னும் முடியல,” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.ஆண்டனி காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்டான். அவன் போகும்போது டேவிட்டையும் காயத்ரியையும் ஒரு கொடூரமான பார்வையால் பார்த்தான்.
அந்தப் பார்வையில், “நான் மீண்டும் வருவேன்” என்ற எச்சரிக்கை இருந்தது.அனைவரும் சென்ற பிறகு, அந்தத் தேவாலயத்தில் ஒரு மயான அமைதி நிலவியது. டேவிட் அப்படியே தள்ளாடிச் சரிந்தான். காயத்ரி அவனைத் தாங்கிப் பிடித்துத் தன் மடியில் கிடத்தினாள்.”டேவிட்! டேவிட்! கண்ணைத் திறங்க… ப்ளீஸ்!” என்று அழுதுகொண்டே அவனது காயத்தைத் துணியால் அழுத்தினாள்.டேவிட் மெல்லக் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான்.
அவனது கை காயத்ரியின் கன்னத்தை வருடியது. “காயு… இன்னைக்கு நீ ஒரு உண்மையான டிடெக்டிவா ஜெயிச்சுட்ட. என் அப்பாவோட ஆவி இப்போதான் சாந்தியடையும்,” என்று மெல்லிய குரலில் சொன்னான்.சாரு மெல்ல அவர்கள் அருகில் வந்தான். அவனது கண்களில் இப்போது டேவிட் மீதான வெறுப்பு மறைந்து ஒரு மரியாதை தெரிந்தது. அவன் குனிந்து டேவிட்டின் காயத்தைப் பார்த்தான்.”இவனை உடனே ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போகணும் காயத்ரி. இவன் மட்டும் இல்லைன்னா இன்னைக்கு நான் செத்திருப்பேன்,” என்றான் சாரு.
டேவிட் சாருவின் கையைப் பற்றிக்கொண்டான். “என்னால உங்க ரெண்டு பேருக்கும் மனக்கசப்பு எனக்கு ஏதாவது ஆச்சுன்னா பிரச்சனை இல்லை ஆனால், என் காயத்ரி கண் கலங்க கூடாது அவளை நல்லா பார்த்துக்கோ சாரு.””அதைப் பத்தி நீ கவலைப்படாதே… முதல்ல நீ உயிர் பிழைக்கிற வழியைப் பாரு,” என்று சொன்ன சாரு, டேவிட்டைத் தூக்க உதவினான்.அடுத்த சில நாட்களில், மெக்சிகோவின் செய்தித்தாள்களில் ‘தி கோஸ்ட்’ பிடிபட்ட செய்தி தலைப்புச் செய்தியாக வந்தது. ஆனால் டேவிட் மற்றும் காயத்ரியின் பெயர் எங்கும் வரவில்லை.
அவர்கள் இருவரும் அந்த மலைக்குடிலில் மீண்டும் தஞ்சம் புகுந்தனர்.டேவிட்டின் தோளில் கட்டு போடப்பட்டிருந்தது. காயத்ரி அவனுக்கு மருந்து கொடுத்து கொண்டிருந்தாள்.”டேவிட்… இப்போதாவது நாம இந்தியாவுக்குப் போயிடலாமா? அங்க அம்மா நமக்காகக் காத்துட்டு இருக்காங்க,” என்றாள் காயத்ரி.டேவிட் அவளைத் தன் ஒற்றைக் கையால் அணைத்துக்கொண்டான். “கண்டிப்பா போவோம் காயு. ஆனா அதுக்கு முன்னாடி…” என்று சொல்லி அவளது இதழ்களில் ஒரு நீண்ட, ஆழமான முத்தத்தைப் பதித்தான்.
அந்த முத்தத்தில் வெற்றியின் சுவையும், காதலின் மதுவும் கலந்திருந்தது.ஆனால் அவர்களுக்குத் தெரியாது… சிறையில் இருக்கும் ஆண்டனி, ரிகார்டோவின் இடத்தைப் பிடிக்கத் திரைமறைவில் வேலைகளைத் தொடங்கிவிட்டான் என்று. அந்த ஆடுபுலி ஆட்டம் இப்போதுதான் வேகம் எடுக்கத் தொடங்கியது.
தேவாலயத்தின் அந்தப் பரபரப்பான சூழல் அடங்கியிருந்தது. ரிகார்டோ விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இடத்தில்தான், காயத்ரியின் உண்மையான விஸ்வரூபம் சாருவுக்கும் டேவிட்டுக்கும் தெரிய வந்தது.மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், டேவிட் ஆச்சரியத்துடன் காயத்ரியைப் பார்த்தான். “காயு… ரிகார்டோதான் ‘கோஸ்ட்’னு எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனா, நீ எப்படி இவ்வளவு தெளிவா ஆதாரங்களைத் திரட்டின? நான் உன்கிட்ட கூட இதைச் சொல்லலையே?”காயத்ரி ஒரு மெல்லிய புன்னகையுடன் டேவிட்டின் கையைப் பற்றிக்கொண்டாள்.
“டேவிட், நீங்க ஒரு மாஃபியா டான்… ஆனா நான் ஒரு கிரிமினல் டிடெக்டிவ். நாம அந்த மலைக்குடில்ல இருந்தப்பவே ஒருமுறை நீங்க தூக்கத்துல ரிகார்டோவோட பேரைச் சொல்லி முணுமுணுத்தீங்க. அப்பவே எனக்குச் சந்தேகம் வந்துடுச்சு. ஒரு டிடெக்டிவா என் கடமை யாரையும் நம்புறது இல்லை.”சாரு ஆச்சரியமாகத் தன் அக்காவைப் பார்த்தான். காயத்ரி தொடர்ந்தாள்:”அன்னைக்கு ராத்திரி ரிகார்டோ எனக்கு போன் பண்ணப்போ, அவரோட பேக்ரவுண்ட்ல கேட்ட ஒரு சின்ன சத்தம்..
. அது அந்த ஆண்டனியோட சிரிப்பு சத்தம்னு நான் கண்டுபிடிச்சேன். அப்பவே அவரோட போன் கால்களை ரகசியமா ஹேக் பண்ண ஆரம்பிச்சேன். அவரோட பணப் பரிமாற்றங்கள், மெக்சிகோ போலீஸ்க்கு அவர் கொடுத்த ரகசியக் கட்டளைகள் எல்லாத்தையும் என் போன்ல இருந்த ‘கிளவுட்’ (Cloud) ஸ்டோரேஜ்க்கு மாத்திட்டேன். நாம இந்த சர்ச்சுக்குள்ள நுழையுறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி, ‘என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டா இந்த ஆதாரங்கள் தானா இன்டர்போல் ஹெட் குவார்ட்டர்ஸ்க்கு போகணும்’னு ஒரு டைமர் செட் பண்ணி அனுப்பிட்டேன்.
அதான் போலீஸ் கரெக்டா வந்துச்சு!”டேவிட் வியந்து போனான். “காயு… உன்னை வெறும் அழகா மட்டும் பார்த்தது என் தப்பு. நீ ஒரு கூர்மையான ஆயுதம்!”அவர்கள் பாதுகாப்பான ஒரு இடத்திற்குச் சென்றனர். ஆனால், ரிகார்டோ பிடிபட்டது ஒரு தொடக்கம்தான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
சிறைக்குச் செல்லும் வழியில் ரிகார்டோ, ஆண்டனியைப் பார்த்து மெல்லச் சொன்னான், “ஆண்டனி… என் அதிகாரம் இப்போ உன் கைக்கு வருது. டேவிட் மில்லரை நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ. ஆனா அந்தப் பொண்ணு… அவளை உயிரோட பிடி. அவளோட அறிவு எனக்கு வேணும்.”சிறையில் இருந்தபடியே ஆண்டனி தனது புதிய ஆட்டத்தைத் தொடங்கினான்.
மெக்சிகோவின் தெருக்களில் புதிய வில்லன்கள் முளைக்கத் தொடங்கினர். ‘தி ஸ்கார்பியன்ஸ்’ என்ற ஒரு கூலிப்படை டேவிட்டைத் தேடி வேட்டையைத் தொடங்கியது.இரவு வேளையில், டேவிட்டின் காயத்திற்கு மருந்து போடும்போது காயத்ரி மிகவும் நெருக்கமாக வந்தாள்.
“டேவிட்… இப்போ நீங்க நிம்மதியா இருக்கலாம்ல?”டேவிட் அவளது இடையைச் சுற்றித் தன் கைகளை வளைத்தான். அவனது காயத்தின் வலி அவளது தீண்டலில் மறைந்தது. “இல்ல காயு… ரிகார்டோ ஒரு விஷப்பாம்பு. அவன் சிறையில இருந்தாலும் அவனோட விஷம் வெளியே பரவிக்கிட்டு தான் இருக்கும். இந்த ஆண்டனி இருக்கானே… அவன் அடுத்த ‘கோஸ்ட்’ ஆக முயற்சி பண்ணுவான்,” என்று சொல்லி அவளது கழுத்தில் இதழ் பதித்தான்.
காயத்ரி அவனது அணைப்பில் சிலிர்த்தாள். “இருக்கட்டும் டேவிட்… நீங்க என் கூட இருக்கிற வரைக்கும் எந்த ஆண்டனியும் நம்மளை ஒன்னும் பண்ண முடியாது,” என்று சொல்லி அவனது இதழ்களை ஆழமாகப் பருகினாள். அந்த ரொமான்டிக்கான தருணத்தை ஒரு துப்பாக்கிச் சத்தம் கலைத்தது.
வெளியே ‘தி ஸ்கார்பியன்ஸ்’ படையின் பத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மாளிகையைச் சூழ்ந்தன. அவர்களின் கைகளில் பெட்ரோல் குண்டுகள் இருந்தன.”ஆட்டம் மறுபடியும் ஆரம்பிக்குது காயு!” என்று டேவிட் கர்ஜித்தபடி தன் துப்பாக்கியை எடுத்தான்.