அத்தியாயம் 13
பண்ணை வீட்டின் மொட்டை மாடியில் நிலவொளி அந்த காதலர்களை நனைத்துக் கொண்டிருந்தது. டேவிட் காயத்ரியின் இடையோடு தன் கைகளை இறுக்கி, அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தான்.”காயு… உன் தம்பி சாரு ஒரு நேர்மையான போலீஸ்காரன். அவனோட கோபம் நியாயமானதுதான். ஆனா இந்த மெக்சிகோவோட இருட்டு உலகம் அவனுக்குப் புதுசு. கோஸ்ட் அவனை ஒரு கருவியா பயன்படுத்தப் பார்ப்பான்,” என்று டேவிட் மெல்லிய குரலில் எச்சரித்தான்.
காயத்ரி அவனது தலைமுடியைக் கோதிவிட்டாள். “அவனுக்கு நான் புரிய வைப்பேன் டேவிட். ஆனா இப்போதைக்கு ஆண்டனி எங்க இருக்கான்னு தெரியணுமே?”டேவிட் அவளைப் பிரித்து, அவளது கண்களைப் பார்த்தான். அவனது பார்வையில் ஒரு தீவிரம் படர்ந்தது. “ஆண்டனி ஒரு நரி. அவன் இப்போ கோஸ்ட்டோட பாதுகாப்பில் இருப்பான். ஆனா அவனுக்கு ஒரு பலவீனம் இருக்கு… அது அவனோட கௌரவம். ஹோட்டல்ல நடந்த தோல்வியை அவனால தாங்கிக்க முடியாது.”அவர்கள் இருவரும் கீழே வந்தபோது, சாருகேஷ் ஒரு சோபாவில் அமர்ந்து தனது துப்பாக்கியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான்.
டேவிட்டைக் கண்டதும் அவனது முகம் மீண்டும் கடுகடுவென மாறியது.”காயத்ரி! நீ கிளம்பத் தயாரா இரு. விடிஞ்சதும் நாம இந்தியா கிளம்புறோம். இங்க இருக்கிற லோக்கல் போலீஸ் கிட்ட பேசிட்டேன், அவங்க பாதுகாப்பு கொடுப்பாங்க,” என்றான் சாரு அதிகாரமாக.டேவிட் குறுக்கே வந்தான். “சாரு… நீ பேசுற அந்த ‘லோக்கல் போலீஸ்’ தான் கோஸ்ட்டோட சம்பளத்துல இருக்காங்க. நீ அவங்களை நம்புனா, நீயே உன் காயத்ரிக்கு குழி பறிக்கிறன்னு அர்த்தம்.””என்கிட்ட உன் மாஃபியா வேலையைக் காட்டாதே டேவிட்!” என்று சாரு கடுமையாக பேசிவிட.அந்த விவாதத்தை ஒரு போன் கால் தடுத்தது. சாருகேஷின் போன் தான் அது. எடுத்துப் பார்த்தால், அவனது உயர் அதிகாரி (Commissioner) டெல்லியிலிருந்து அழைப்பது போலத் தெரிந்தது.
“எஸ் சார்… சொல்லுங்க சார். ஆமா, நான் மெக்சிகோல தான் இருக்கேன். என்னது? ஆண்டனி சரணடையத் தயாரா இருக்கானா? என்கிட்ட மட்டும்தான் பேசுவானா?” சாருவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.சாரு போனை வைத்துவிட்டு உற்சாகமாக காயத்ரியைப் பார்த்தான். “காயத்ரி! பார்த்தியா? என் டிபார்ட்மென்ட் மூலமா ஆண்டனி காண்டாக்ட் பண்ணியிருக்கான். அவன் என்கிட்ட சரணடையறதா சொல்லியிருக்கான். ஆனா ஒரு கண்டிஷன்… அவனைத் தனியா வந்து சந்திக்கணுமாம்.”டேவிட்டின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. “இது பொறி சாரு! போகாதே. ஆண்டனி சரணடையற ஆள் இல்லை.””உன் அட்வைஸ் எனக்குத் தேவையில்லை. நான் ஒரு இந்தியன் போலீஸ், எனக்கு என் கடமை தெரியும்,” என்று சொல்லிவிட்டு சாரு விறுவிறுவென வெளியேறினான்.
காயத்ரி பதறினாள். “டேவிட்! அவனைத் தடுத்து நிறுத்துங்க. அவன் தனியா போனா அவனை அவங்க கொன்னுடுவாங்க!”டேவிட் சட்டென்று தன் ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டு, காயத்ரியின் கையைப் பற்றினான். “அவனைத் தடுக்க முடியாது காயு, ஆனா நாம பின்னாடியே போகலாம். கார் எடு!”சாருகேஷ் ஒரு டாக்ஸியில் ஏறி மெக்சிகோ சிட்டியின் புறநகரில் இருந்த ஒரு பாழடைந்த தேவாலயத்தை நோக்கிச் சென்றான். அவனுக்குத் தெரியாமல் டேவிட் மற்றும் காயத்ரி ஒரு மறைவான தூரத்தில் அவனைப் பின்தொடர்ந்தனர்.
தேவாலயத்திற்குள் சாரு நுழைந்தபோது, அங்கே மெல்லிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஆண்டனி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனது கைகள் கட்டப்பட்டிருப்பது போலத் தெரிந்தது.”ஆண்டனி! உன் ஆட்டம் முடிஞ்சுது. கையை உயர்த்து!” என்று சாரு கத்தினான்.ஆண்டனி மெல்லச் சிரித்தான். “மிஸ்டர் சாருகேஷ்… நீங்க ரொம்ப வேகமா இருக்கீங்க. ஆனா விவேகம் கொஞ்சம் கம்மி.”திடீரென்று தேவாலயத்தின் கதவுகள் தானாக மூடிக்கொண்டன. மேலிருந்து ஒரு பெரிய இரும்பு வலை சாருவின் மேல் விழுந்து அவனைச் சுருட்டியது.
அதே நேரம், கோஸ்ட் தனது வெள்ளி முகமூடியுடன் இருளில் இருந்து வெளிப்பட்டான்.”டேவிட் மில்லரை இங்கே வரவழைக்க நீ ஒரு அருமையான தூண்டில் சாருகேஷ்!” என்று கோஸ்ட் சொன்னான்.வெளியே டேவிட்டும் காயத்ரியும் வந்து சேர்ந்தனர். கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்ட டேவிட், “காயு, குனிஞ்சுக்கோ!” என்று சொல்லி ஒரு வெடிகுண்டை கதவில் வைத்தான்.’டும்’ என்ற சத்தத்துடன் கதவு தெறிக்க, டேவிட் உள்ளே பாய்ந்தான். அங்கே சாரு ஒரு இரும்பு வலையில் சிக்கித் தவிப்பதையும், ஆண்டனி துப்பாக்கியுடன் அவனை நோக்கி நிற்பதையும் பார்த்தான்.”டேவிட்! சரியான நேரத்துக்கு வந்திருக்க,” ஆண்டனி கத்தினான். “உன் காதலியோட தம்பி உயிருடன் இருக்கணுமா? இல்ல இப்போவே இவன் மண்டையைத் துளைக்கவா?”டேவிட் ஒரு நொடி யோசித்தான். அவனது இடது கை காயத்ரியின் கையைப் பிடித்திருந்தது.
வலது கை துப்பாக்கியில் இருந்தது.”சாருவை விட்டுடு ஆண்டனி… உனக்கு வேண்டியது நான் தானே?” டேவிட் மெல்ல முன்னேறினான்.அடிவயிற்றில் ஒரு நடுக்கத்துடன் காயத்ரி நின்றிருந்தாள். ஒரு பக்கம் தன் ரத்தமான தம்பி, மறுபக்கம் தன் உயிரான காதலன்.கோஸ்ட் வஞ்சகமாகச் சிரித்துவிட்டு, ஆண்டனியின் காதில் ஏதோ சொன்னான். ஆண்டனி சாருவின் தலையில் துப்பாக்கியை அழுத்தினான். “டேவிட், உன் துப்பாக்கியைக் கீழே போட்டுட்டு மண்டியிடு. உன் காதலியோட தம்பி பிச்சை எடுக்கட்டும்!”என்று நக்கலாக சொல்லி சிரித்தான்
______
தேவாலயத்தின் அந்தப் பாழடைந்த ஹாலில் பதற்றம் அதன் உச்சத்தில் இருந்தது. சாருவின் தலையில் ஆண்டனி துப்பாக்கியை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தான். டேவிட் தனது துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு, மண்டியிட்டு அமர்ந்தான். அவனது கண்கள் காயத்ரியைப் பார்த்தன. அவனது பார்வையில் “கவலைப்படாதே” என்ற செய்தி இருந்தாலும், அவனது இதயம் துடித்த வேகம் காயத்ரிக்கு உணர முடிந்தது.”இப்போவாவது உன் திமிரை அடக்கு டேவிட்!” என்று கத்தினான் ஆண்டனி. பிறகு மெல்லத் திரும்பி, “பாஸ், முகமூடியைக் கழட்டுங்க. இவங்க ரெண்டு பேரும் சாகுறதுக்கு முன்னாடி தங்களை அழிக்கிறது யாருன்னு தெரிஞ்சுக்கட்டும்,” என்றான் வஞ்சகமாக.
வெள்ளி முகமூடி அணிந்த அந்த ‘கோஸ்ட்’ மெல்ல முன்னே வந்தான். அவனது அசைவுகளில் ஒரு கம்பீரம் இருந்தது. அவன் தன் கைகளை உயர்த்தி, மெதுவாக அந்த முகமூடியின் ஓரங்களைப் பிடித்தான்.முகமூடி விலகியது.அங்கே நின்றிருந்த நபரைக் கண்டதும், காயத்ரியின் கையில் இருந்த துப்பாக்கி நழுவித் தரையில் விழுந்தது. டேவிட் அப்படியே சிலையாக உறைந்து போனான்.
இரும்பு வலையில் சிக்கியிருந்த சாரு கூட அதிர்ச்சியில் தன் வலியை மறந்தான்.”ரிகார்டோ…!” என்று காயத்ரியின் குரல் ஒரு மெல்லிய முனகலாக வெளிவந்தது.ஆமாம்! அது ரிகார்டோதான். காயத்ரியின் இன்டர்போல் ஏஜென்சியின் சீனியர் அதிகாரி. மெக்சிகோ மிஷனுக்காக அவளை அனுப்பி வைத்த அதே நபர். காயத்ரி யாரை ஒரு தந்தையைப் போலவும், ஒரு வழிகாட்டியாகவும் நம்பினாளோ, அவன்தான் இந்த மெக்சிகோவின் நிழல் உலகச் சக்கரவர்த்தி.ரிகார்டோ ஒரு வஞ்சகப் புன்னகையை உதிர்த்தான். “அதிர்ச்சியா இருக்கா காயத்ரி? நான் தான் உன்னை இங்க அனுப்பி வச்சேன். ஏன்னா, டேவிட் மில்லரை என்கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா நீ அவன்கிட்ட காதலைக் கண்டுப்பிடிப்பன்னு நான் எதிர்பார்க்கல. அது என்னோட பிளான்ல இல்ல,” என்றான் மிகச் சாதாரணமாக.
டேவிட் பற்களைக் கடித்தான். “நீ… நீதான் என் அப்பாவைக் கொன்னியா? என் கூடவே இருந்துட்டு எனக்குப் பின்னால குழி பறிச்சியா?””உன் அப்பா ஒரு நேர்மையான பிசினஸ்மேன் டேவிட். ஆனா இந்த உலகத்துல நேர்மைக்கு இடம் இல்ல. அவன் என் தொழிலுக்குத் தடையா இருந்தான், அதனால அவனை வழி அனுப்பி வச்சேன். அப்புறம் உன்னை என் வளர்ப்புப் பையனா மாத்தி, ஒரு மாஃபியாவா வளர்த்தேன்.
ஏன்னா எனக்கு ஒரு போர்க்களம் தேவைப்பட்டது,” ரிகார்டோவின் குரலில் இருந்த அந்த இரக்கம் இல்லாத தன்மை அனைவரையும் உறைய வைத்தது.தாய் தந்தை அற்ற டேவிட் தனிமையில் இருக்கும் போது ரிகார்டோ அவனை தன் மகனைப் போல பார்த்துக் கொண்டார் நெருக்கமாக பழக விட்டாலும் தூரத்திலிருந்து டேவிட் அனைத்தும் சொல்லிக் கொடுத்தது அவர்தான் ஆனால் டேவிட் நல்ல மாஃபியாவாக வளர்ந்ததுதான் பெருந்தவரு அவனே ஒரு கெட்ட மாஃபியாவா மாத்தி அனைத்தையும் தன் கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஆனால் அவன் நல்லவன் ஆனால் உடனடியாக தமது முகமூடியை கழட்ட விரும்பாதவர் அப்படியே நாம் தூரத்திலிருந்து நம் நட்பை வளர்த்துக் கொள்ளலாம் என்று சென்றுவிட்டார்.
ஆனால் இப்போது அவர்தான் டேவிட் உயிருக்கே எமனாக நிற்பார் என்று டேவிட் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டான்.காயத்ரி அழத் தொடங்கினாள். “ஏன் சார்? என்னை எதுக்கு இதுல இழுத்தீங்க?””ஏன்னா உன்னோட அந்த டிடெக்டிவ் புத்தி எனக்கு வேணும் காயத்ரி. டேவிட்டோட எதிரிகளை அழிக்க உன்னைப் பயன்படுத்தினேன். ஆனா இப்போ நீயும் அவனும் ஒண்ணு சேர்ந்துட்டீங்க. அதனாலதான் இந்தத் தம்பியைத் தூண்டிலா போட்டேன்,” என்று சாருவைச் சுட்டிக்காட்டினான் ரிகார்டோ. டேவிட் சாம்ராஜ்யத்தை அழிப்பதற்காக தான் காயத்ரியை அழைத்தது அவள் எப்படியாவது டேவிட் பற்றி சில பல தகவல்கள் தெரிந்து கொண்டு பிறகு ஆண்டனி மூலம் டேவிட் ராஜ்யத்தை அழிக்க பார்த்தால் இப்போது காயத்ரி அவனுக்கு துணையாக போகவே இவர்களை அழித்துவிட வேண்டும் என்று ஒரு குறிக்கோளோடு இருக்கிறார்.
.சாரு கத்தினான், “காயத்ரி! இவன் ஒரு மிருகம். இவனைச் சுடுங்க!”ரிகார்டோ சிரித்துக்கொண்டே ஆண்டனியின் கையிலிருந்த துப்பாக்கியை வாங்கி டேவிட்டை நோக்கிக் குறி வைத்தான். “விடைபெறத் தயாராகு டேவிட். உன் அப்பாவைச் சந்திக்குற நேரம் வந்துடுச்சு!”அந்த இக்கட்டான நொடியில், காயத்ரி ஒரு முடிவெடுத்தாள். அவள் அழுகையை நிறுத்திவிட்டு, ஒரு ஆவேசமான பார்வையை ரிகார்டோ மீது வீசினாள்.
“இன்னும் ஒரு அடி எடுத்து வச்சீங்கன்னா… நான் உங்களைச் சுட்டுடுவேன்!” என்று தரையில் கிடந்த துப்பாக்கியைத் தீப்பொறி பறக்கக் கையில் எடுத்தாள்.”சுடுவியா காயத்ரி? நான் உன் சீனியர் ஆபிசர்.. உனக்குக் கத்துக் கொடுத்ததே நான் தான்!” என்று ரிகார்டோ ஏளனமாகச் சொன்னான்.டேவிட் அந்த விநாடியைப் பயன்படுத்தினான்.
அவன் மின்னல் வேகத்தில் தரையில் இருந்து எழும்பி, ஆண்டனியின் கால்களை வாரிவிட்டான். ஆண்டனி நிலைதடுமாறி விழ, டேவிட் ரிகார்டோவின் கையைப் பிடித்துத் திருகினான்.துப்பாக்கி சத்தம் கேட்டது!குண்டு யாரைத் துளைத்தது என்று தெரியாத அந்தப் புகைய மண்டலத்தில், காயத்ரி கத்திக்கொண்டே டேவிட்டை நோக்கி ஓடினாள்.—