அத்தியாயம் 12
ஹோட்டலின் அந்த 50-வது மாடியில் மூச்சுக்காற்று கூட உறைந்துவிட்டது போலத் தோன்றியது. ஒரு பக்கம் காயமடைந்த புலியாக டேவிட், மறுபக்கம் மிரட்சியுடன் காயத்ரி. அவர்களுக்கு முன்னால், வெள்ளி முகமூடி அணிந்த ‘தி கோஸ்ட்’ மற்றும் வஞ்சகமாகச் சிரிக்கும் ஆண்டனி.”டேவிட்… துப்பாக்கியைக் கீழே போடு. இல்லன்னா உன் காதலியோட உடம்பு சிதறி இந்த மெக்சிகோ சிட்டி முழுக்கத் துண்டு துண்டா விழும்,” கோஸ்ட்டின் குரல் அந்த அறையெங்கும் எதிரொலித்தது.
டேவிட் மெல்லத் தனது துப்பாக்கியைத் தரையில் வைத்தான். அவனது கண்கள் காயத்ரியைப் பார்த்தன. அவளது முகத்தில் இருந்த பயம் அவனை நிலைகுலையச் செய்தது. “காயு, பயப்படாதே. நான் இருக்கும்போது உனக்கு எதுவும் ஆகாது,” என்று அவன் கண்கள் வழியாகவே அவளுக்குத் தைரியம் சொன்னான்.ஆண்டனி மெல்ல நடந்து வந்து டேவிட்டின் முகத்தில் ஓங்கி ஒரு மிதி விட்டான். “எவ்வளவு திமிர் இருந்தா என் இடத்துக்கே வந்து கை வைப்ப? இப்போ உன் உயிர் என் கையில்!”அதே சமயம், டெல்லி விமான நிலையத்தில் சாருகேஷ் மெக்சிகோவிற்கான விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தான்.
அவனது கையில் டேவிட் மில்லரின் ‘மோஸ்ட் வான்டட்’ கோப்பு இருந்தது. “டேவிட்… நீ காயத்ரிய ஒரு கேடயமா பயன்படுத்துறன்னு எனக்குத் தெரியும். உன்னைச் சும்மா விடமாட்டேன்,” என்று பற்களைக் கடித்தான். அவனது பிடிவாதம் ஒரு போலீஸ்காரனாகச் சரியாக இருந்தாலும், ஒரு உடன்பிறந்த சகோதரனாக காயத்ரி மனதில் இருக்கும் உண்மையை அறியாமல் இருந்தான்.மீண்டும் மெக்சிகோ ஹோட்டலில்…
கோஸ்ட் தனது ரிமோட்டை உயர்த்திப் பிடித்தான். “டேவிட், நீ சாகுறதுக்கு முன்னாடி ஒரு உண்மையைச் சொல்லவா? உன் அப்பா எப்படிச் செத்தார்னு உனக்குத் தெரியுமா? அவர் விபத்துல சாகல… நான்தான் அவரைக் கொன்னேன். ஏன்னா அவர் என் வழிக்குக் குறுக்கே வந்தார்!”டேவிட்டின் உடல் நடுங்கியது. அவனது நரம்புகள் புடைத்தன. பல ஆண்டுகளாக அவன் தேடிக்கொண்டிருந்த ரகசியம் இப்போது உடைந்தது. “நீ… நீதான் என் அப்பாவைக் கொன்னியா?” என்று கர்ஜித்துக் கொண்டே அவன் பாய முயன்றான்.”நில்!” என்று கத்தினான் கோஸ்ட். “ரிமோட் பட்டன் மேல என் விரல் இருக்கு!”அந்த நெருக்கடியான தருணத்தில், காயத்ரி ஒரு ரகசியத் திட்டத்தைப் போட்டாள்.
அவள் தனது எம்பிராய்டரி செய்யப்பட்ட பட்டுச் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு மிகச்சிறிய மின்காந்தக் கருவியை (EMP jammer) மெல்லத் தட்டிவிட்டாள். அது ஒரு டிடெக்டிவாக அவள் எப்போதும் கையில் வைத்திருக்கும் கருவி.அடுத்த வினாடி, ஹோட்டலின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோஸ்ட்டின் கையில் இருந்த ரிமோட்டின் சிக்னல் செயலிழந்தது.”இப்போதான் ஆட்டம் ஆரம்பம்!” என்று கத்திய டேவிட், இருட்டில் ஒரு மின்னலைப் போலப் பாய்ந்து ஆண்டனியின் கழுத்தைப் பிடித்துத் தூக்கினான்.காயத்ரி தரையில் உருண்டு சென்று கோஸ்ட்டின் கால்களை வாரிவிட்டாள்.
இருட்டில் சண்டை தீவிரமானது. ரத்தமும், வியர்வையும், காதலும் கலந்த ஒரு இரவு அது.டேவிட் ஆண்டனியை ஒரு தூணில் முட்டித் தள்ளினான். “நீ சாகக்கூடாது ஆண்டனி… ஏன்னா உன்னை நரகத்துக்கு அனுப்ப வேண்டியவன் நான் இல்லை, சட்டம்!” என்று சொல்லி அவனை மயக்கமடையச் செய்தான்.ஆனால் கோஸ்ட் இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு தப்பித்து ஓடினான். டேவிட் அவனைத் துரத்த முயல, காயத்ரி அவனது கையைப் பற்றிக்கொண்டாள்.
“வேண்டாம் டேவிட்! பில்டிங் முழுக்க வெடிகுண்டு இருக்குன்னு சொன்னான். நாம இங்கிருந்து தப்பிக்கணும்!”இருவரும் படிக்கட்டுகள் வழியாகக் கீழே ஓடினர். 50 மாடிகளையும் அவர்கள் ஓடிக் கடந்த போது, காயத்ரியின் மூச்சு திணறியது. டேவிட் அவளைத் தன் கைகளில் அள்ளிக்கொண்டு ஓடினான். அவளது இதயம் அவனது மார்பில் அதிர்ந்தது. அந்த ஆபத்தான நேரத்திலும், அவனது அணைப்பின் சூடு அவளுக்கு ஒரு பாதுகாப்பைத் தந்தது.
அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியே வந்து சில அடி தூரம் சென்றிருப்பார்கள்… ஹோட்டலின் மேல் தளம் பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.டேவிட் காயத்ரியைத் தரைமட்டமாகப் படுக்க வைத்து, தன் உடலால் அவளைப் போர்த்திக் கொண்டான். நெருப்புத் துண்டுகள் அவர்கள் மேல் விழுந்தன. புகை அடங்கியதும், டேவிட் மெல்ல எழுந்து காயத்ரியைப் பார்த்தான். அவளது முகம் கரியால் படிந்திருந்தது, ஆடை கிழிந்திருந்தது.அவன் அவளது முகத்தை வருடி, மெல்ல அவளது இதழ்களில் முத்தமிட்டான்.
“இன்னொரு தடவை உன்னை மரணத்துக்கிட்ட இருந்து மீட்டுட்டேன் காயு,” என்று மூச்சிரைக்கச் சொன்னான்.காயத்ரி அவனை இறுக்கக் கட்டிக்கொண்டாள். “அந்த கோஸ்ட் தப்பிச்சுட்டான் டேவிட். அவன் மறுபடியும் வருவான்.””வரட்டும்… இந்த முறை அவன் முகமூடியைக் கிழிக்காம நான் விடமாட்டேன்,” என்று டேவிட் சூளுரைத்தான்.அப்போது டேவிட்டின் ஆட்கள் ஒரு கறுப்பு நிறக் காரைக் கொண்டு வந்தனர்.
அவர்கள் அங்கே இருந்து தப்பிச் செல்லும் போது, தூரத்தில் ஒரு போலீஸ் வாகனம் வந்து நின்றது.மெக்சிகோ மண்ணில் கால் வைத்தான் சாருகேஷ். அவனது கண்கள் அந்த எரிந்து கொண்டிருக்கும் ஹோட்டலையே பார்த்தன.
_____
புகை மண்டலமாகக் காட்சியளித்த அந்த ஹோட்டலின் வாசலில், டேவிட் காயத்ரியைத் தாங்கிப் பிடித்தபடி நின்றிருந்தான். காயத்ரியின் ஆடை கிழிந்து, முகம் முழுவதும் கரியும் வியர்வையுமாக இருந்தபோதும், அவளது கண்கள் டேவிட்டை ஒரு மீட்பனாகப் பார்த்துக் கொண்டிருந்தன.
தூரத்திலிருந்து வந்த சைரன் சத்தம் அருகில் வந்து நின்றது. ஒரு கறுப்பு நிற எஸ்யூவி (SUV) கார் சீறி வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய அந்த உருவத்தைக் கண்டதும் காயத்ரி அதிர்ச்சியில் உறைந்தாள்.”சாரு…!”டெல்லி காவல்துறையின் கம்பீரத்தோடு, கையில் துப்பாக்கியை ஏந்தியபடி சாருகேஷ் நின்றிருந்தான். அவனது கண்கள் காயத்ரியின் நிலையைப் பார்த்ததும் சிவந்தன.
ஆனால், அவளது இடுப்பைச் சுற்றி வளைத்துத் தாங்கிப் பிடித்திருந்த டேவிட்டின் கரங்களைக் கண்டதும், அவனது கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.”காயத்ரிய விட்டுட்டுத் தள்ளி நில்லுடா கிரிமினல்!” என்று கத்தியபடி சாருகேஷ் தன் துப்பாக்கியைத் டேவிட்டை நோக்கிக் குறிவைத்தான்.
டேவிட் அலட்டிக்கொள்ளவில்லை. காயத்ரியைத் மெதுவாகத் தன் பின்னால் மறைத்துக்கொண்டான். “மிஸ்டர் சாருகேஷ், தப்பா நினைக்காதீங்க. நம்ம காயத்ரி இப்போ பாதுகாப்பா இருக்காங்கன்னா அதுக்குக் காரணம் நான் தான்.””வாயை மூடு!” என்று கர்ஜித்தான் சாரு. “காயத்ரி, இங்க வா. இவன் ஒரு தேடப்படும் குற்றவாளி. இவன் கூட நீ இருக்கிறது நம்ம குடும்பத்துக்கே அவமானம். இப்போவே இவனை அரெஸ்ட் பண்ணப் போறேன்.”காயத்ரி தன் தம்பிக்கும் காதலனுக்கும் இடையில் வந்து நின்றாள். “சாரு, துப்பாக்கியைக் கீழே போடு. உனக்கு உண்மை தெரியாது. டேவிட் ஒரு கெட்டவர் இல்லை.
அந்த கோஸ்ட்டும் ஆண்டனியும் தான் நம்ம அம்மாவைக் கடத்துனாங்க. அவங்ககிட்ட இருந்து எங்களைக் காப்பாத்தினது டேவிட் தான்!””அவன் உன்னை மூளைச் சலவை பண்ணிட்டான் காயத்ரி. ஒரு மாஃபியா டான் எப்படி நல்லவனா இருக்க முடியும்? டேவிட் மில்லர், உன் கையை உயர்த்து!” சாருகேஷ் விடாப்பிடியாக இருந்தான்.அந்தப் பதற்றமான சூழலில், டேவிட் மெல்லச் சிரித்தான். “உன் தம்பிக்கு என் மேல இருக்கிற கோபம் நியாயம் தான் காயு. ஆனா, அவனுக்குத் தெரியாது… இங்க போலீஸே கோஸ்ட்டுக்குத் தான் வேலை பார்க்குதுன்னு.”டேவிட் சொல்லி முடிக்கும் முன்பே, நான்கு மெக்சிகன் போலீஸ் கார்கள் அவர்களைச் சூழ்ந்தன.
அதிலிருந்து இறங்கிய அதிகாரிகள் சாருகேஷைப் பார்த்து, “மிஸ்டர் இந்தியன் ஆபீசர், இது எங்க ஏரியா. இந்த டேவிட் மில்லரை எங்ககிட்ட ஒப்படைச்சிட்டு நீங்க ஓரமா நில்லுங்க,” என்றனர் ஸ்பானிஷ் கலந்த ஆங்கிலத்தில்.சாருகேஷ் குழம்பினான். ஆனால், அந்த அதிகாரிகள் டேவிட்டைச் சுடுவதை விட, காயத்ரியைக் குறி வைப்பதைக் கவனித்தான்.
அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது—டேவிட் சொன்னது உண்மை. அங்கிருந்த போலீஸ்காரர்கள் அனைவரும் கோஸ்ட்டின் ஆட்கள்!”குனிங்க!” என்று டேவிட் கத்தியபடி காயத்ரியையும் சாருகேஷையும் தள்ளிக்கொண்டு தரையில் விழுந்தான்.சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு தொடங்கியது. சாருகேஷ் ஒரு கணம் திகைத்தாலும், அடுத்த நொடி ஒரு போலீஸ்காரனாகச் செயல்பட்டான்.
அவன் டேவிட்டோடு இணைந்து எதிரிகளைச் சுடத் தொடங்கினான்.”சாரு! அந்த வலது பக்கம் இருக்கிறவனைக் கவனி!” என்று டேவிட் கட்டளையிட, சாருகேஷ் கச்சிதமாகச் சுட்டான். முதல்முறையாக அந்த இரு துருவங்களும் ஒரு புள்ளியில் இணைந்தன.சண்டை ஓய்ந்ததும், டேவிட் தனது காரை நோக்கி அவர்களை அழைத்தான். “இங்க அதிக நேரம் நிக்க முடியாது. வாங்க!”காயத்ரி தன் தம்பியின் கையைப் பற்றிக் கொண்டாள். சாருகேஷ் தயங்கினாலும், சூழலைப் புரிந்து கொண்டு காரில் ஏறினான்.
கார் மின்னல் வேகத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.காரின் பின் இருக்கையில் காயத்ரியும் சாருகேஷும் அமர்ந்திருக்க, டேவிட் காரை ஓட்டினான். சாருகேஷ் இன்னும் டேவிட்டை ஒரு சந்தேகப் பார்வையிலேயே பார்த்துக் கொண்டிருந்தான்.காயத்ரி தன் தம்பியின் தோளில் தலை சாய்த்தாள். “சாரு… எனக்காக ஒரு தடவை இவரை நம்பு.”சாரு அமைதியாக இருந்தான்.
ஆனால், டேவிட்டின் டிரைவிங் சீட்டுக்கு அடியில் இருந்த காயத்ரியின் கைகள், டேவிட்டின் கைகளை மென்மையாக வருடின. அந்தத் தீண்டலில் ஒரு நன்றியும், அளவில்லாத காதலும் இருந்தது. டேவிட் கண்ணாடியின் வழியாக அவளைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தான்.கார் ஒரு பாதுகாப்பான இடத்தை அடைந்ததும், சாருகேஷ் காரிலிருந்து இறங்கி டேவிட்டிடம் வந்தான். “உன்னைக் காப்பாத்தினதுக்காக நான் உனக்கு நன்றி சொல்ல மாட்டேன். என் அக்காவுக்காகத் தான் நான் உன் கூட வந்தேன். இப்போதைக்கு நாம சேர்ந்து அந்த கோஸ்ட்டை வேட்டையாடுவோம்.
ஆனா, எல்லாம் முடிஞ்சதும் என் அக்காவை இந்தியாவுக்குக் கூட்டிட்டுப் போவேன். அப்போ நீ தடுக்க நினைச்சா… என் துப்பாக்கி உன்னைத் தான் தேடும்,” என்றான் எச்சரிக்கையாக.டேவிட் அவன் கண்களை நேராகப் பார்த்தான். “அந்த கோஸ்ட்டை முடிக்கிறது தான் இப்போ என் ஒரே லட்சியம். அதுக்கப்புறம் காயத்ரி அவளோட முடிவை எடுக்கட்டும்.”அன்றைய இரவு அந்தப் பண்ணை வீட்டில் அமைதியாகத் தொடங்கியது. காயத்ரி தன் தம்பியைத் தூங்க வைத்துவிட்டு, மொட்டை மாடியில் தனியாக நின்றிருந்த டேவிட்டிடம் சென்றாள்.
அவள் அவனது பின்னால் இருந்து அவனது அகன்ற முதுகைக் கட்டிக்கொண்டாள். “கஷ்டமா இருக்கா டேவிட்?”டேவிட் அவளைத் தன் பக்கம் திருப்பி, அவளது இடுப்பைச் சுற்றித் தன் கரங்களை வளைத்தான். “உன் தம்பி என் மேல வச்சிருக்கிற வெறுப்பு எனக்குத் தெரியுது காயு. ஆனா, அவனை விட உன்னைப் பிரியணுமேங்கிற பயம் தான் எனக்கு அதிகமா இருக்கு.”அவன் அவளது கழுத்தில் முகம் புதைக்க, காயத்ரிக்கு உடல் சிலிர்த்தது.
“என்னை யாராலும் உங்ககிட்ட இருந்து பிரிக்க முடியாது டேவிட்,” என்று சொல்லி அவனது இதழ்களை ஆழமாக முத்தமிட்டாள். அந்த முத்தத்தில் ரத்தமும், பகையும் மறைந்து, காதல் மட்டுமே எஞ்சியிருந்தது.
மறுபுறம், ஒரு இருட்டு அறையில் ஆண்டனி கண் விழித்தான். அவனருகே கோஸ்ட் அமர்ந்திருந்தான்.
“ஆண்டனி… டேவிட் மில்லரோட காதலி அந்த காயத்ரியோட தம்பி இப்போ நம்ம லிஸ்ட்ல சேர்ந்துட்டான். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்… ரெடியா?”என்று சொன்னவுடன் ஆன்டனியின் மூளை பல சதித்திட்டங்களை தீட்டிக் கொண்டிருந்தது