அத்தியாயம் 11
அவள் சொல்லி முடிப்பதற்குள் தன் இதழ்களால் அவள் இதழ்களுக்குத் தண்டனை கொடுக்க ஆரம்பிக்க, கோபத்தில் ஆரம்பித்த முத்தம் மோகத்தில் முடிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவள் கைகளில் இருந்த ஃபைலைத் தூக்கி விசிறியடித்து, அவளை அப்படியே தூக்கித் தன் இரு பக்க இடுப்பிலும் அவள் கால்களைப் போட்டுக்கொண்டு, அவளைத் தன் மீது ஏற்றிக்கொண்டு முத்தமிட ஆரம்பிக்க, அவனிடமிருந்து போராடித் தோற்றுப்போய் அவனிடமே அவள் சரணாகதியாகிவிட்டாள்.
“எவ்ளோ நாளாச்சு தெரியுமா?” ‘மொச் மொச்’ என்று முத்தமிட்டுக்கொண்டே அவன் ஏக்கத்தோடு சொல்ல…
“ப்ளீஸ் வி… விஜய்” என்று தட்டுத்தடுமாறி அவனிடமிருந்து விடைபெறப் பார்த்தாலும் முடியாமல், அவளை அப்படியே சரித்து கீழே தரையோடு தரையாகப் பல்லி போல் அவள் மீது படர்ந்திருந்தான்.
“இது ஆபீஸ் விஜய், கண்ட்ரோல் பண்ணுங்க” என்று அவனுக்கு எச்சரிக்கை செய்ய,
“ஆபீஸ், வீடு, நம்ம பிரைவேட் ஜெட், ஏன் பாத்ரூம்ல கூட நம்ம எல்லாமே பண்ணி இருக்கோம். புதுசா நான் தொடுவது மாதிரி ரொம்ப சீன் போடாதடி” என்று சொல்லிக்கொண்டே அவள் சுடிதார் டாப்பை எடுத்து மேலே தூக்கினான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவன் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் தன் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அவன் கரங்களை வலுவாகப் பிடித்துத் தள்ளி எழுந்து நின்றவள், கீழே சிதறி இருந்த கோப்புகள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு தன் உடையைச் சரிசெய்து…
“அப்போ நான் உங்களுக்கு முழு நேரத் தாசியாக இருந்தேன். அதனால நீங்க இஷ்டப்படி என்ன எப்படி வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம். ஆனா இப்போ நான் அப்படி கிடையாது. அதனால என்னைப் பழைய கீதாஞ்சலியாக நினைச்சுக்கிட்டு என்னைச் சீண்ட வேண்டாம்னு நினைக்கிறேன். உங்களுக்குப் பர்சனல் செகரட்டரியா இருக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால பர்சனல் அக்கவுண்டன்ட் ஜாப்புக்கு என்னைச் செலக்ட் பண்ணுவீங்கன்னு நான் நம்பி இருக்கேன். யார்கிட்டயும் இன்னும் என்னோட பர்சனல் செக்யூரிட்டி அப்படின்னு நீங்க இன்னும் என்னை அறிமுகப்படுத்தி இருக்க மாட்டீங்க. அதனால முன்கூட்டியே நான் ஜாப் மாத்திக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்” என்று தன் முடிவைச் சொல்ல…
அவளைத் தன் கோட் அணிந்துகொண்டு நக்கலாகப் பார்த்துக்கொண்டு, அங்கிருக்கும் ஒரு பேப்பரைத் தூக்கி அவள் மீது அடிக்க, என்னவென்று அதைப் படித்துப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி.
அவள் சுயவிருப்பத்துடன் விஜய்க்குப் பர்சனல் செக்ரட்டரி ஜாப்புக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அதுவும் 10 ஆண்டுகள் அக்ரிமென்ட் என்று எழுதப்பட்டிருந்தது. அதில் கொட்டை எழுத்தில் அவளது கையெழுத்து வேறு ஸ்டாம்ப் அடித்து இருந்தது. மேலும் ஒரு புதிய ப்ராஜெக்டில் அவள் ஈடுபாடு இருப்பதற்கான அத்தாட்சி இருந்தது. அதனால் நிச்சயம் அவள் இருந்துதான் ஆக வேண்டும்; இல்லையென்றால் போர்டு மெம்பர்களுக்கு அவள் பதில் சொல்ல வேண்டி இருக்கும். எப்படித் தன்னுடைய அனுமதி இல்லாமல் இது செய்யப்பட்டிருக்கும் என்று அவனைக் கோபமாகப் பார்க்க…
“உன் கூடக் குடும்பம் நடத்துனவன், ஒட்டி உரசி உன் கூட நெருங்கி இருந்தவன்… உன்னோட எழுத்தைப் போடத் தெரியாதா செல்லம்?” என்று அவளைப் பார்த்துக் கண்ணடிக்க, அந்தப் பேப்பரைக் கிழிக்கப் போனவளைப் பார்த்தவன் இன்னொரு பேப்பரை எடுத்துக்காட்டினான்.
“அது காப்பிதான். ஒரிஜினல் காப்பி இப்போ போர்டு மெம்பருக்கு, அதாவது புதுசா நம்ம கூட ப்ராஜெக்ட் போட்டிருக்க ப்ராஜெக்ட் மேனேஜருக்குப் போயிடுச்சு. நீ இப்ப மட்டும் இங்கிருந்து எஸ்கேப் ஆகப் பார்த்தா, அவன் உன்னைத் தேடிக் கண்டுபிடிச்சு கேஸ் ஃபைல் பண்ணுவான். என்னை விட உனக்குத்தான் திறமை அதிகம்னு அவன்கிட்ட உருட்டி விட்டுருக்கேன்” என்று இன்னும் இன்னும் அவளை வெறுப்பேற்றிச் சொல்ல…
“எதுக்கெடுத்தாலும் பொய்! எப்பவுமே என்னை ஏமாத்திக்கிட்டே இருக்குறது உங்க பழக்கமா போச்சு. இப்படிப் பொய் சொல்லிப் பொய் சொல்லி என்னை ஏமாற்றி இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தீங்க. இன்னும் நீங்க என்னதான் எதிர்பார்க்கிறீங்க? உங்க கற்பனையில உங்க முன்னாள் காதலி என்கூடக் குடும்பம் நடத்தணுமா? சொல்லுங்க, இதுக்கு ஒரு முடிவு கட்டத்தான் நான் தைரியமா இங்க வந்ததுக்கு இன்னொரு காரணம். என்னைக்கா இருந்தாலும் உங்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை நடக்கும், அதுக்காகத்தான் நான் எப்பவுமே கையோட இதை ரெடியா வச்சிருப்பேன். ஒரு நிமிஷம்” என்று அந்த ஃபைலுக்கு உள்ளே இருக்கும் ஒரு பேப்பரை எடுத்துக்காட்ட, அதைப் பார்த்தவன் கண்கள் சிவந்து போனது. இவளுக்குப் போனா போகட்டும் என்று பாவம் பார்த்துவிட்டால் இவள் தலைக்கு மேலே ஏறி நிற்பாள் போலிருக்கிறது என்று அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. வந்த கோபத்தில் அந்தப் பேப்பரைப் பிடித்துக் கிழித்துத் தள்ளினான்.
“என்ன பண்றீங்க நீங்க? இது எவ்ளோ முக்கியமான பேப்பர் தெரியுமா?”
“என்னடி பெரிய முக்கியமான பேப்பர்? நாம ரெண்டு பேருக்கும் இருக்கிற கல்யாண பந்தம் இதோட கிடையாது, முறிச்சுவிடும் அப்படின்னு போட்டுருக்கு. விவாகரத்து பத்திரம்! இதுக்குப்போய் இப்படி அழுவுற? என்கிட்ட டிவோர்ஸ் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறியா?”
“போராடிப் பார்க்கிறேன். உங்க கூட ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன். அதுதான் கிடைக்காதே! நாம இப்படி வாழ்றதுக்கு நிரந்தரமா பிரிஞ்சிடலாமே?”
“அஞ்சலி, பைத்தியக்காரி மாதிரி பேசாத. நான் ஒன்னும் உன் பின்னாடி சுத்தல, நீதான் என் பின்னாடி வந்து அலைஞ்ச. ‘நீங்க இல்லன்னா எனக்கு இந்த உலகத்துல வேற எதுவுமே கிடையாது விஜய், விஜய்’னு சொல்லிச் சொல்லி அப்பாவியா இருந்த என்னை மொத்தமாக மாத்தி விட்டுட்டு, இப்ப என்கூடக் கல்யாண பந்தத்தை முடிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்க… எவ்வளவு கொழுப்புடி உனக்கு! கண்டிப்பா உன் மேல நான் கேஸ் போட்டு, பிரக்னண்டா இருக்கிறதைச் சொல்லாம குழந்தை பெத்து இத்தனை வருஷம் என்னை ஏமாத்தி இருக்கன்னு சொல்லுவேன். அப்புறம் கோர்ட்ல என்னோட வசதியைப் பார்த்துக் குழந்தையை என்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணுவாங்க” என்று அவளைப் பார்த்து நக்கலாகச் சொல்ல…
“இப்பவும் நீங்க திருந்தல. எனக்கு இந்த ஜென்மத்துல விமோசனம் கிடையாது. ஆமாம் சார், நான் தான் உங்க பின்னாடி வந்தேன். அது உண்மைதான், நீங்கதான் வேணும்னு ஆசைப்பட்டேன். காரணம் நீங்க என்னைப் பார்த்த விதம், என்னிடம் பழகின விதம் அப்படி இருந்தது. ஆனா ஏமாந்து போயிட்டேன் சார். ஆனா எனக்குள்ள துடிக்கிற இதயத்துக்காகத்தான் நீங்க வந்துகிட்டு இருக்கீங்க. எனக்கு அப்போ தெரியாம போயிடுச்சு. நான் என்ன பண்றது? என்னோட புருஷன் என் பேரைச் சொல்லி எனக்காக வாழவேண்டும் என்று ஆசைப்படுறேன். அது தப்பா சொல்லுங்க? தப்பா? என் புருஷன் எனக்காக வேணும்னு ஆசைப்பட்டேன், அதுக்கு நீ தகுதி இல்லைன்னு நீ எப்படியெல்லாம் என்னைக் கொடுமைப்படுத்தி இருக்க… அதை என்னால மறக்கச் சொல்றியா? என்ன நெனச்சுட்டு இருக்க?” என்று அவள் மிகவும் அழுத்தமாகக் கேட்க, அவனுக்கு ஒரு மாதிரியாகிப் போனது. அந்தச் சம்பவத்தை எப்படி அவனால் மறக்க முடியும்? அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் அவனால் மறக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறப்பட்டு, அஞ்சலிதான் தனக்குச் சர்வமும் என்று நினைத்து அவளை நெருங்கி வரும் சமயம், தன்னை விட்டுச் சென்றதையே அவனால் மறக்க முடியாது. விட்டுச் சென்ற பிறகு இன்னும் மோசமான மிருகமாய் தான் மாறுவதற்கான காரணமே தன் மனைவிதான் என்று அவள் மீது கோபம் வந்தது.
“புருஷனைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர தெரியாத நீயெல்லாம் ஒரு பொண்ணு? இப்போ என்கிட்ட நியாயம் பேச வந்துட்டியா? ஊர்ல இருக்குற பொண்ணுங்களைப் பாத்துருக்கியா? புருஷனை ஃபிங்கர் டிப்ல வச்சு ஆடிட்டு இருப்பாளுங்க. நீ என்னையே அடக்கத் தெரியாம பயந்துகிட்டு இருக்க. நீயெல்லாம் எப்படி இந்த உலகத்தை ஜெயித்துக் காட்டுவ? ரொம்பப் பேசாம போய் வேலையைப் பாரு, உனக்கு ஈஸியாத்தான் இருக்கு” என்று முகத்தில் அடித்தது போல் பேசிவிட்டு அவன் இருக்கையில் சென்று அமர்ந்து விட, இவளும் இவனிடம் போராடி ஒன்றும் புடுங்க முடியாது என்று அமைதியாகத் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவன் கொடுத்த மலையளவு வேலைகளைப் பொறுமையாகச் சமாளித்து, எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் திட்டுக்கள் பல வாங்கி, அன்றைய நாள் அவளைச் சக்கையாகப் பிழிந்துவிட்டது. மதியம் 12 மணிக்குச் சரியாகக் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தனது கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது சரியாக அவன்…
“இந்த அக்கவுண்ட் டாக்ஸ் கொஞ்சம் கிளியர் பண்ணிக் குடுக்குறீங்களா? நாளைக்கு ஒரு அர்ஜென்ட் மீட்டிங் இருக்கு. உன்னால இன்னைக்கு நடக்க வேண்டிய 10 மணி மீட்டிங் கேன்சல் ஆகிடுச்சு. நாளைக்கு நடக்கப்போற மீட்டிங்ல பிரசன்டேஷன் பக்காவா இருக்கணும். புது கிளையண்ட் நிறைய பேர் வராங்க, சோ நம்ம கணக்கு கரெக்டா இருக்கணும். நீ இதை கிளியர் பண்ணிட்டு அப்புறமா சாப்பிடப் போ. கொஞ்ச நேரம் சாப்பிடாவிட்டால் உடம்பு ஒன்னும் இளைச்சுப் போயிடாது” என்று தாய்மையின் பிரதிபலனாக மெருகிச் செழித்திருக்கும் அவள் உடல் வளைவுகளை ரசித்துக்கொண்டே பேசினான்.
“விஜய், இந்த டைம் நான் போய்தான் ஆகணும். சோட்டுக்கு ஊட்டி விட்டாதான் சாப்பிடுவான். சுவாதி அங்கே இருக்காளா இல்லையான்னு தெரியல. ப்ளீஸ் விஜய்” என்று கெஞ்சி கேட்க,
கதவுக்கு வெளியே அனுமதி கேட்கும் சத்தம் கேட்க, அவன் அனுமதி கொடுத்தவுடன் அறைக்குள் நுழைந்தார் டே கேரில் வேலை செய்யும் ஒரு பெண்மணி. கையில் குழந்தையோடு அவன் சோட்டுதான்… அம்மாவைப் பார்த்தவுடன் “அம்மா” என்று அவளிடம் தாவப் பார்க்க…
குழந்தையை ஒற்றைக் கையால் வாங்கித் தூக்கி வைத்துக்கொண்டவன், அந்தப் பெண்ணிடம் கண் அசைத்தவுடன் அந்தப் பெண்மணி மரியாதையாக அங்கிருந்து சென்றார். பிறகு டோர் லாக் செய்யப்பட்டு, “உன்னை விட எனக்கு அக்கறை நிறையவே இருக்கு பார்” என்பது போல் அவன் பார்வை இருக்க…
“மா… மம்மம்” என்று குழந்தை கேட்க…
உடனே தன் கைப்பையில் இருக்கும் உணவை எடுத்து, அங்கிருக்கும் அவன் ஓய்வு அறைக்குச் சென்று, மைக்ரோ ஓவனில் சாப்பாட்டுச் சட்டியைச் சூடு படுத்தி, அந்தச் சாப்பாட்டை எடுத்து மகனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விட, தன் மகனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். கொஞ்சம் அவன் ஜாடை முழுக்க முழுக்க அம்மாவின் ஜாடையை உரித்து வைத்துப் பிறந்திருக்கிறான் மகன்.
ஏனோ தன் சரிபாதி மீது கோபம் இருந்தாலும், தன் உதிரத்தில் பூத்த மகவிடம் எந்த ஒரு தந்தையும் வெறுப்பைக் காட்ட மாட்டான். உண்மையான தந்தை பாசத்தில் இருப்பவன் அவன்.