அத்தியாயம் 10
அந்தப் பிரம்மாண்டமான மாளிகை தரைமட்டமான பிறகு, டேவிட் மற்றும் காயத்ரியின் பயணம் ஒரு புதிய திசையை நோக்கித் திரும்பியது. டேவிட் அவர்களை மெக்சிகோவின் ஒதுக்குப்புறமான மலைப்பகுதியில் இருந்த ஒரு ரகசிய இல்லத்திற்கு அழைத்துச் சென்றான். அது காடுகளுக்கு நடுவே இருந்த ஒரு நவீனக் குடில்.அங்கே சென்றடைந்தபோது நள்ளிரவு கடந்திருந்தது. காயத்ரியின் அம்மா சீதா, அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஒரு அறையில் உறங்கிப் போயிருந்தார்.
காயத்ரி குளியலறையில் இருந்து வெளிவந்தபோது, அவளது ஈரக்கூந்தலில் இருந்து சொட்டிய நீர்த்துளிகள் அவளது தோள்களை நனைத்துக் கொண்டிருந்தன.அறையில் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, ஜன்னல் வழியாக வந்த நிலவொளி மட்டும் நீல நிறத்தில் படர்ந்திருந்தது. டேவிட் சட்டையின்றிக் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து, தன் தோளில் இருந்த காயத்திற்கு மருந்து போட முயன்று கொண்டிருந்தான்.
அவனது முதுகில் இருந்த பழைய தழும்புகளோடு, என்று ஏற்பட்ட புதிய தழும்புகள் அறிமுகம் செய்து கொள்வது போல் இருந்தது.காயத்ரி மெல்ல அவனருகே சென்றாள். அவனிடமிருந்து மருந்தைப் பிடுங்கி, “நானே போடுறேன்,” என்றாள்.
அவளது குரலில் ஒரு மென்மையான கோபமும், அளவற்ற காதலும் கலந்திருந்தது.அவளது மென்மையான விரல்கள் அவனது காயத்தின் மீது பட்டபோது, டேவிட் ஒரு கணம் சிலிர்த்துப் போனான். காயத்ரி இடையை கிண்டியாக பற்றிக் கொண்டார் பிறகும் மெதுவாக தலை நிமிர்ந்து பார்க்க, நிலவொளியில் காயத்ரி ஒரு தேவதை போலக் காட்சியளித்தாள்.
அவளது உடலோடு ஒட்டியிருந்த அந்த மெல்லிய உடை, அவளது அழகை இன்னும் அதிகப்படுத்திக் காட்டியது.”காயு… இன்னைக்கு நடந்ததெல்லாம் நினைச்சா…” என்று அவன் ஆரம்பிக்க, காயத்ரி அவனது இதழ்களில் தன் விரலை வைத்துத் தடுத்தாள்.”பேசாதீங்க டேவிட்… இந்த நிமிஷம் நமக்கு மட்டுமானது,” என்று சொல்லிவிட்டு, அவனது காயத்தில் மருந்தைத் தடவி மெல்ல ஊதினாள்.
அவளது சூடான மூச்சுக்காற்று அவனது உடலில் பட்டபோது, டேவிட்டின் கட்டுப்பாடு மெல்ல நழுவியது.அவன் சட்டென்று அவளது இடையைப் பற்றித் தன்பக்கம் இழுத்தான். காயத்ரி அவனது மடியில் வந்து விழுந்தாள். இருவரது இதயங்களும் ஒரே தாளத்தில் துடிக்கத் தொடங்கின.
டேவிட் அவளது முகத்தை வருடி, அவளது கண்களை ஆழமாகப் பார்த்தான்.”நீ என் பக்கத்துல இருக்கும்போது, எனக்கு மரணத்தைப் பத்தின பயமே வரல காயு. ஆனா, உனக்கு ஏதாவது ஆயிடுமோங்கிற பயம் தான் என்னை ஒரு கோழையா மாத்திடுமோன்னு தோணுது,” என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.காயத்ரி அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனது தோளில் முகம் புதைத்தாள்.
“நீங்க என்னைக் கோழையாக்கல டேவிட்… என்ன தைரியமான பெண்ணா மாற்றி இருக்கீங்க. டெல்லியில் இருந்து நான் வந்த காரணமே நீங்க நடக்கிற மாஃபியாக்கள் பத்தி தெரிஞ்சுக்க தான். ஆனால், எல்லாம் மாஃபியாவும் கெட்டவங்க இல்ல நல்லவங்களும் இல்லை அது நீங்க &ஆண்டனி உங்க ரெண்டு பேரோட குழுவ பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன். இதுல ஆண்டனி தான் ரொம்ப கொடூரமானவன் தெரிஞ்சுகிட்டு அவன பத்தி விசாரணை எடுக்கும்போது எதிர்பாராத உங்களுடைய அறிமுகம் உங்களோட அந்த நெருக்கம் எல்லாமே என்ன மொத்தமா மாத்திடுச்சு டேவிட்.உங்களைக் காதலிக்க ஆரம்பிச்சதுல இருந்து தான் எனக்குப் பயமே போயிருச்சு,” என்று சொல்லி அவனது மார்பில் ஒரு மெல்லிய முத்தத்தைப் பதித்தாள்.
அவளது இதழ்களின் ஈரம் அவனது உடலில் ஒரு எரிமலையைக் கிளப்பியது. டேவிட் அவளது முகத்தைத் தூக்கி, அவளது இதழ்களை ஆழமாக, வெறித்தனமாகப் பருகினான். அந்த முத்தத்தில் பல இழப்புகளின் வலியும், இனி வரப்போகும் காதலின் தாகமும் கலந்திருந்தது. காயத்ரியின் அடிவயிற்றில் ஒரு இனம்புரியாத சிலிர்ப்பு ஏற்பட, அவள் அவனது பிடரியைச் சுற்றித் தன் கைவிரல்களைப் புதைத்தாள்.
டேவிட் அவளை அப்படியே தூக்கி மெத்தையில் கிடத்தினான். அவனது கைகள் அவளது மேனியை மெருகேற்றின. அவளது ஒவ்வொரு அசைவிலும் ஒரு கவிதை இருந்தது. அந்த இரவின் நிசப்தத்தில், அவர்களின் மூச்சுக்காற்று மட்டுமே ஒரு சங்கீதமாக ஒலித்தது. நிலவொளி சாட்சியாக, ஒரு டேவிட் மற்றும் காயத்ரி இருவரும் தங்கள் ஆன்மாக்களை தங்கள் காதல் கூடல் மூலம் ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றிக் கொண்டனர்.
மறுநாள் காலை…
காயத்ரி டேவிட்டின் அணைப்பில் விழித்தாள். ஜன்னலுக்கு வெளியே பறவைகள் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. ஆனால், அந்த அமைதியைக் கலைத்தது ஒரு போன் கால்.டேவிட் போனை எடுத்தான். மறுமுனையில் ஆண்டனி. அவன் சாகவில்லை என்பது டேவிட்டுக்குத் தெரியும், ஆனால் அவனது குரல் இப்போது இன்னும் அதிகாரம் மிக்கதாக இருந்தது.”டேவிட்… அந்தச் சுரங்கத்துல நான் சமாதி ஆயிட்டேன்னு நினைச்சியா? நான் உன்னோட அந்தப் பழைய மாளிகையோட இடிபாடுகளுக்குள்ள இருந்து எழுந்து வந்துட்டேன்.
ஆனா இப்போ நான் தனியா இல்ல… ‘தி கோஸ்ட்’ எனக்காக ஒரு பெரிய ராணுவத்தையே தயார் பண்ணி வச்சிருக்காரு. உன் காதலியோட சந்தோஷம் இன்னும் சில நாட்கள் தான். மெக்சிகோ நகரத்தோட வீதிகள்ல உன் ரத்தம் ஓடுற நாளை நான் குறிச்சுட்டேன்!”ஆண்டனி சிரித்துக் கொண்டே போனை வைத்தான்.
டேவிட் காயத்ரியைப் பார்த்தான். அவனது கண்களில் இப்போது காதல் மறைந்து, ஒரு கொடூரமான வேட்டைக்காரனின் பார்வை திரும்பியிருந்தது. ஆண்டனி மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டான். ஆனால் இந்த முறை, அவன் ஒரு மாஃபியா கூட்டத்தோடு மட்டுமல்ல, ஒரு நிழல் உலகச் சக்கரவர்த்தியான ‘தி கோஸ்ட்’ பின்னணியோடு வருகிறான்.
__________
காலை நேரத்து பனிமூட்டம் அந்த மலைக்குடிலைச் சூழ்ந்திருந்தது. காயத்ரி சமையலறையில் காபி தயாரித்துக் கொண்டிருந்தபோது, அவளது போன் அலறியது. திரையில் ‘சாரு’ என்று அவள் சகோதரனின் பெயர் மின்னியது.
அவள் போனை எடுத்தவுடனேயே மறுமுனையில் சாருகேஷின் ஆவேசமான குரல் கேட்டது. “ஹேய் காயு! நீ என்ன பண்ணிட்டு இருக்க அங்கே? அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு எனக்குத் தெரியும். அந்த டேவிட் மில்லர்ங்கிறவன் கூட நீ சுத்திட்டு இருக்கிறது டெல்லியில இருக்கிற போலீஸ் டிபார்ட்மென்ட் வரைக்கும் பெரிய பேச்சா இருக்கு. அவன் ஒரு கிரிமினல் காயத்ரி! அவனை நம்பாதே. உடனே அம்மாவை அழைச்சுக்கிட்டு இந்தியாவுக்குத் திரும்பு! , இல்லனா அவனால உனக்கு தான் நிறைய ஆபத்துக்கள் வரும் இப்பதான் உங்க ஆக்டிவிட்டி எல்லாமே மெக்சிகன் போலீஸ் மூலமா எங்களுக்கு தகவல் வந்தது உயிர் தப்பிச்சு வந்திருக்கீங்க எனக்கு நீயும் அம்மாவும் பத்திரமா வரணும் தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு காயத்ரி!”என்று சாருக் மிக பதற்றமாக சொல்ல.
காயத்ரி நிதானமாகப் பேச முயன்றாள். “சாரு, உனக்கு இதெல்லாம் புரியாது. டேவிட் மட்டும் இல்லன்னா இன்னைக்கு நானும் அம்மாவும் உயிரோட இருந்திருக்க மாட்டோம். அவன் எங்களை எவ்வளவோ பாதுகாப்பா…”என்று அவள் சொல்ல வருவதற்குள் மறுமுனையில் “பாதுகாப்பா?” சாருகேஷ் இடைமறித்தான்.
“அவனால தான் உங்களுக்கு ஆபத்தே வருது. அவனுக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க. நீ ஒரு டிடெக்டிவா இருந்துட்டு ஒரு மாஃபியாவுக்கு வக்காலத்து வாங்குறது கேவலமா இருக்கு. உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருந்தது, ஆனா இப்போ அருவருப்பா இருக்கு காயு! கூடிய சீக்கிரம் நான் மெக்சிகோ வருவேன்… அப்போ அந்த டேவிட்டை நானே என் கையால அரெஸ்ட் பண்ணுவேன்!” என்று கத்திவிட்டு போனைத் துண்டித்தான்.
காயத்ரியின் கண்கள் கலங்கின. தம்பியின் வெறுப்பு அவளைச் சுட்டது. அவளுக்குப் பின்னால் வந்து நின்ற டேவிட், அவளது தோள்களை மென்மையாகத் தடவினான்.”அவன் சொன்னதுல தப்பு இல்ல காயு. ஒரு உடன் பிறந்த சகோதரன் தரப்பு இருந்து பார்த்து அவன் கவலைப்படுறான். ஒரு போலீஸ்காரனா அவன் கடமையைச் செய்றான். நான் யாருன்னு அவனுக்குத் தெரியாது, வெறும் பேப்பர்ல வர்ற கிரிமினலா தான் நான் அவனுக்குத் தெரிவேன்,” என்றான் டேவிட் அமைதியாக.
காயத்ரி அவனைத் திரும்பிப் பார்த்தாள். “அவன் உங்களை தப்பா நினைக்கிறான் டேவிட். எனக்கு அதுதான் கஷ்டமா இருக்கு.”டேவிட் அவளைத் தன்பக்கம் இழுத்து அணைத்துக்கொண்டான். “காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும். இப்போதைக்கு ஆண்டனி மறுபடியும் தலைதூக்குறான்.
அதனால அம்மாவை இங்க வச்சிருக்கிறது பாதுகாப்பில்லை. இன்னைக்கு நைட்டே அவங்களை ஒரு ரகசிய விமானம் மூலமா இந்தியாவுக்கு அனுப்பி வைக்கலாம். சாருகேஷ் அவங்களை ஏர்போர்ட்ல வந்து கூட்டிட்டுப் போவான். அவன் கோபம் அவங்ககிட்ட காட்ட மாட்டான்,” என்றான்.
அன்று இரவு, சீதாவை வழியனுப்பும் நேரம் வந்தது. சீதா காயத்ரியின் கைகளைப் பிடித்துக்கொண்டார். “காயு, நான் போனதுக்கு அப்புறம் நீயும் கிளம்பி வந்துடுவியா? இவரைப் பார்த்தா எனக்கு நல்லவரா தான் தெரியுது, ஆனா இவரோட உலகம் நமக்குச் செட் ஆகாதுமா.”காயத்ரி டேவிட்டைப் பார்த்துவிட்டுத் தன் அம்மாவை அணைத்துக் கொண்டாள். “அம்மா, நான் இங்க முடிக்க வேண்டிய வேலை இருக்கு. சீக்கிரம் வந்துடுறேன்.”விமானம் கிளம்பும் போது, டேவிட் ரகசியமாகச் சீதாவின் பையில் ஒரு ஜிபிஎஸ் கருவியையும், அவர்களுக்குத் தெரியாமலேயே டெல்லியில் அவர்களைப் பாதுகாக்கத் தனது ஆட்களையும் நியமித்திருந்தான்.
அம்மா சென்ற பிறகு, அந்த மலைக்குடில் ஒரு நிசப்தத்தில் ஆழ்ந்தது. காயத்ரி பால்கனியில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். டேவிட் மெல்ல அவள் பின்னால் வந்து அவளை அப்படியே அள்ளிக் கொண்டான். அவனது கைகள் அவளது வயிற்றைச் சுற்றி வளைத்து, அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டது.”இப்போ நாம ரெண்டு பேர் மட்டும் தான் காயு.
இந்த உலகத்துல நமக்கும், ஆண்டனிக்கும் இடையில நடக்கப்போற இந்த கடைசி யுத்தத்துல நாம ஜெயிக்கணும்,” என்று அவளது கழுத்தில் முத்தம் பதித்தான்.அவனது இதழ்களின் தீண்டல் காயத்ரியின் கவலையை ஒரு நொடியில் மறக்கடித்தது. அவள் அவனது பிடியில் திமிறாமல், தன்னை முழுமையாக அவனிடம் ஒப்படைத்தாள்.
“நீங்க கூட இருந்தா எமனையும் எதிர்ப்பேன் டேவிட்,” என்று அவனது மார்பில் சாய்ந்தாள்.இருவரும் அறையின் இருட்டுக்குள் மறைந்தனர்.
ஆனால் அதே நேரம், மெக்சிகோ நகரத்தின் ஒரு ரகசிய மாளிகையில் ‘தி கோஸ்ட்’ மற்றும் ஆண்டனி ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.”டேவிட்டோட பலவீனம் அந்தப் பொண்ணுதான். அவளைச் சிதைச்சா டேவிட் தானா வந்து சரணடைவான்,” என்றான் அந்த முகம் தெரியாத கோஸ்ட்.
ஆண்டனி வஞ்சகமாகச் சிரித்தான். அவன் கையில் டேவிட் மற்றும் காயத்ரி நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் இருந்தது.
தாங்கள் செய்யும் அனைத்துக் கொடூரங்களையும் எதிர்த்து ஒருவர் தட்டி நின்று கேட்பதால் அவனை வீழ்த்துவதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த கயவர்கள்.