Home ANTIHERO1) யட்சன் 😈

1) யட்சன் 😈

by sreejanovels
110 views

அத்தியாயம் 1

மெக்சிகோ சிட்டியின் இரவு… அது ஒரு மாயக்காரி போன்றது. ஒருபுறம் ‘பாசியோ டி லா ரிபார்மா’ சாலையின் நவீன விளக்குகள் வைரங்களைச் சிதறியது போல் மின்ன, இன்னொரு புறம் பழமை வாய்ந்த கட்டிடங்களின் நிழல்கள் மர்மங்களை ஒளித்து வைத்திருந்தன.

அந்த இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒரு கறுப்பு நிற ‘மெர்சிடிஸ் மேபேக்’ கார் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது.காரின் உட்புறம் ஒருவிதமான சந்தன வாசனை கலந்த புகையிலையின் மணம். அங்கே அமர்ந்திருந்தான் “டேவிட் மில்லர்”.அவனது தோற்றம் ஒரு கிரேக்கச் சிற்பத்திற்கு உயிர் கொடுத்தது போல் இருக்கும்.

33 வயது, ஆறடி இரண்டு அங்குல உயரம், ஜிம்முக்குப் போய் செதுக்கியது போன்ற அகன்ற தோள்கள். அவனது முகம் ஒரு கூர்மையான கத்தி போலத் தீட்டப்பட்டிருக்கும். அடர்த்தியான கறுப்புத் தலைமுடி, லேசாக வளர்ந்த தாடி, எல்லாவற்றிற்கும் மேலாக அவனது கண்கள்.

அந்தக் கண்கள் சாதாரணமாகப் பார்க்கும்போது அமைதியாகத் தெரியும், ஆனால் கோபத்தில் அவை ஒரு வேட்டைக்கார சிறுத்தையின் கண்களாக மாறிவிடும்.டேவிட் ஒரு மாஃபியா தான், ஆனால் அவனது விரல்கள் பெண்களின் கண்ணீரைத் துடைத்திருக்கிறதே தவிர, ஒருபோதும் அவர்களைத் துன்புறுத்தியது கிடையாது. போதைப்பொருள் விற்கும் கும்பல்களை மெக்சிகோவை விட்டே துரத்துவது தான் அவனது மறைமுக லட்சியம்.

“சார்… ஸ்பாட் வந்தாச்சு,” என்றான் அவனது நம்பிக்கைக்குரிய ஆள் ஆல்பர்ட்.கார் ஒரு பழைய கப்பல் கட்டும் தளத்தில் நின்றது. டேவிட் காரை விட்டு இறங்கினான். அவனது ஒவ்வொரு அடியிலும் ஒரு ராஜ நடை இருந்தது. அவனது நீண்ட கால்கள் நிலத்தில் பதியும்போது, அங்கிருந்த ரவுடிகளுக்கு இதயம் ஒரு நொடி துடிப்பதை நிறுத்தியது.”டேவிட்… நீ வருவேன்னு தெரியும்,” என்றான் பெட்ரோ, டேவிட் நேரடி எதிரியான ஆண்டனியின் ஆள்.டேவிட் அவனைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகை செய்தான்.

அந்தப் புன்னகையில் கருணை கிடையாது, மரணம் இருந்தது. “டீலிங் பத்தி பேசலாமா? இல்ல நேரா ஹாஸ்பிடலுக்கு போறியா?” அவன் குரல் ஒரு பேஸ் கிட்டார் அதிருவது போலக் கனமாக ஒலித்தது.”நீ பெரிய ஆளா இருக்கலாம்… ஆனா ஆண்டனி சார் நினைச்சா…”பேசி முடிப்பதற்குள் டேவிட்டின் கை பெட்ரோவின் சட்டையைப் பற்றித் தூக்கியிருந்தது. “ஆண்டனி கிட்ட சொல்லு… இந்த ஊர்ல பொண்ணுங்களை வைச்சு பிசினஸ் பண்றது, போதைப் பொருள் கடத்துறது எல்லாம் இனி நடக்காது.

மீறிச் செஞ்சா… உங்க எல்லாருக்கும் நானே எமனா வருவேன். ஏன்னா, இந்த டேவிட் மில்லர் ஒரு ‘யட்சன்’ மாதிரி… கண்ணுக்குத் தெரியாமலே உன் உயிரை எடுப்பான்.”அந்த இடமே டேவிட்டின் ஆளுமையால் அதிர்ந்தது. ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல், வெறும் பார்வையாலேயே அந்த கும்பலை நடுங்க வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் அந்த நிழல் உலகச் சக்கரவர்த்தி.

—மறுபுறம்…

டெல்லியின் அதிகாலைப் பொழுது.இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ஒரு தேவதை போன்ற உருவம் தன் லக்கேஜ்களுடன் நின்றிருந்தது. அதுதான் நம் நாயகி”காயத்ரி மல்ஹோத்ரா”.காயத்ரியின் அழகு ஒரு தென்றலைப் போன்றது. அவளது நிறம் பழுத்த கோதுமையின் நிறம். பெரிய கண்கள், அதில் எப்போதும் ஒரு தேடல் இருக்கும்.

அவளது உதடுகள் எப்போதும் எதையாவது முணுமுணுத்துக் கொண்டே இருக்கும், ஒருவேளை அவளது மூளை எப்போதும் குற்றவாளிகளைப் பற்றியே சிந்திப்பதால் இருக்கலாம். அடர்த்தியான கறுப்புத் தலைமுடியை ஒரு ‘போனி டைல்’ ஆகக் கட்டியிருந்தாள்.அவள் கிரிமினாலஜி கோல்ட் மெடலிஸ்ட்.

குற்றவாளிகளின் நாடித் துடிப்பை வைத்தே அவர்கள் பொய் சொல்கிறார்களா என்று கண்டுபிடித்துவிடும் அசாத்தியத் திறன் கொண்டவள்.”காயு! இங்க பாரு,” என்று அவளது அம்மா சீதா குரல் கொடுத்தார்.காயத்ரி தன் அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.

“அம்மா… ஏன் அழுதுட்டு இருக்கீங்க? நான் என்ன போர் க்கா போறேன்? ஜாலியா மெக்சிகோ போய் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சில வேலை பார்க்கப் போறேன்.””என்னவோ போடி… அந்த ஊர்ல இருக்கிறவனுங்க எல்லாம் கொடூரமானவனுங்கன்னு டிவில சொல்றாங்க. எனக்கு என்னவோ பயமா இருக்கு,” என்றார் சீதா கவலையுடன்.

அப்போது அவளது இரட்டைச் சகோதரன் சாருகேஷ் குறுக்கிட்டான். “அம்மா, கவலைப்படாதீங்க. என் உடன்பிறப்பு கிட்ட எந்த மாஃபியாவாவது மாட்டினா அவனுங்களுக்குத் தான் ஆபத்து. இவ போலீஸை விட பயங்கரமானவ!”சாருகேஷ் ஒரு துடிப்பான இளைஞன். தன் சகோதரி மீது அளவு கடந்த பாசம் கொண்டவன்.

கூடிய விரைவில் அவனும், ஒரு காக்கி சட்டைக்கு சொந்தக்காரனாக போகிறான். ஆம் சாருக்கேஷ் காவல்துறையில் சேர்ந்திருக்கிறான்.

“சாரு… அம்மாவை பத்திரமா பார்த்துக்கோ. நான் அடிக்கடி போன் பண்றேன். அங்க போய் செட்டில் ஆனதும் உன்னையும் கூப்பிடுறேன்,” என்றாள் காயத்ரி அவன் கையைப் பிடித்துக்கொண்டு.விமான நிலையத்தின் அறிவிப்பு ஒலித்தது. காயத்ரி தன் குடும்பத்தைப் பிரிந்து, ஒரு புதிய தேசத்தை நோக்கிப் பயணமானாள்.

அவள் கையில் இருந்த ‘மெக்சிகன் டிக்‌ஷனரி’ புத்தகத்தைவிட, அவளது மனதில் இருந்த தைரியம் பெரியதாக இருந்தது.மெக்சிகோ அவளை வரவேற்கக் காத்திருந்தது. ஒருபுறம் அன்பும், அறமும் கொண்ட மாஃபியா டேவிட் மில்லர்…

மறுபுறம் அறிவும், அழகும் கொண்ட டிடெக்டிவ் காயத்ரி மல்ஹோத்ரா.இரு துருவங்கள் சந்திக்கப் போகும் அந்தத் தருணம், மெக்சிகோவின் வரலாற்றையே மாற்றப் போகிறது.–

-மெக்சிகோ சிட்டியின் ‘பெனிட்டோ ஜுவாரெஸ்’ சர்வதேச விமான நிலையம். ஒரு பெரும் கடலைப் போல மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. அந்த கூட்டத்திற்கு நடுவே, ஒரு வெளிர் நீல நிற குர்தியும், வெள்ளை நிற லெகிங்ஸும் அணிந்து, தோளில் ஒரு லேப்டாப் பேக்கைச் சுமந்தபடி காயத்ரி வெளியே வந்தாள்.

மெக்சிகோவின் அந்த மதிய நேரத்து வெயில், இந்தியாவின் வெயிலை விடச் சற்று வித்தியாசமாக இருந்தது. காற்றில் ஒருவிதமான சோள டார்ட்டிலாக்களின் வாசனையும், லேசான காரமான மசாலாவின் மணமும் கலந்திருந்தது.”வாஹ்… இதுதான் மெக்சிகோவா!” என்று வியப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

விமான நிலையத்திற்கு வெளியே வரிசையாக நின்றிருந்த மஞ்சள் மற்றும் வெள்ளை நிற டாக்ஸிகள் அவளை வரவேற்றன. அவள் ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தான் தங்க வேண்டிய இடத்திற்குப் புறப்பட்டாள். டாக்ஸி ‘பாசியோ டி லா ரிபார்மா’ சாலை வழியாகச் சென்றபோது, சாலையின் இருபுறமும் இருந்த பிரம்மாண்டமான சிலைகளும், ஜகராண்டா (Jacaranda) மரங்களின் ஊதா நிறப் பூக்களும் அவளை வசீகரித்தன.”பார் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது…

ஆனால் இந்த அழகிற்குப் பின்னால் எத்தனை ரகசியங்கள்?” என்று நினைத்துக் கொண்டாள்.—அடுத்த நாள் காலை – அஸ்டெக் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி.காயத்ரி அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த அனைவரும் அவளை ஒருவித மரியாதையுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்தார்கள்.

இந்தியாவின் டெல்லியில் இருந்து ஒரு இளம்பெண், அதுவும் கிரிமினாலஜியில் தங்கம் வென்றவள் வந்திருக்கிறாள் என்ற செய்தி ஏற்கனவே அங்கே பரவியிருந்தது.”மிஸ். காயத்ரி, உள்ளே வாங்க,” என்று ரிகார்டோ அவளைத் தனது அறைக்கு அழைத்தார்.அவர் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர். முகம் முழுவதும் அனுபவத்தின் கோடுகள். “காயத்ரி, உன்னைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டேன். இந்த மெக்சிகோ பார்க்கத்தான் அமைதியா இருக்கும். ஆனா இங்க இருக்கிற மாஃபியாக்கள் ரொம்பப் பயங்கரமானவங்க. இப்போதைக்கு நீ எங்களோட ‘ஸ்பெஷல் கேஸ் யூனிட்’ல இருக்கப்போற.”அவர் அவளிடம் ஒரு கோப்பை நீட்டினார்.

அதில் இரண்டு மாபியா பற்றி விளக்கியிருந்தது. “இங்க பாரு, இதுதான் மெக்சிகோவோட தற்போதைய நிலவரம். ஒரு பக்கம் ஆண்டனி… இவன் ஒரு விஷப்பாம்பு மாதிரி. போதைப்பொருள், ஆள் கடத்தல்னு எல்லா அசிங்கமான வேலையையும் செய்வான். இன்னொரு பக்கம்…

டேவிட் மில்லர்.”டேவிட்டின் பெயரைச் சொல்லும்போதே ரிகார்டோவின் குரலில் ஒருவிதமான மரியாதை கலந்த பயம் தெரிந்தது.காயத்ரி கோப்பில் இருந்துடேவிட்டின் புகைப்படத்தைப் பார்த்தாள். நேற்று ஃபைலில் பார்த்ததை விட, இப்போது டிஜிட்டல் புகைப்படத்தில் அவனது கண்கள் இன்னும் கூர்மையாகத் தெரிந்தன.

அவன் ஒரு விலையுயர்ந்த கறுப்பு நிறச் சட்டையை அணிந்து, ஒரு பழைய மெக்சிகன் தேவாலயத்தின் முன்னால் நின்று கொண்டிருந்தான்.”இவரைப் பத்தி நான் கேள்விப்பட்டேன் சார். இவர் ஒரு மாஃபியான்னு சொல்றாங்க, ஆனா மக்கள் இவரை ஏதோ ஹீரோ மாதிரி பார்க்கிறாங்களே?” என்று கேட்டாள் காயத்ரி.ரிகார்டோ சிரித்தார்.

“அதான் டேவிட் மில்லர். அவன் கெட்டவன் தான், ஆனா அவன் செய்றது எல்லாம் கெட்டவங்களுக்கு எதிரா இருக்கு. அவனுக்குன்னு சில கொள்கைகள் இருக்கு. பொண்ணுங்களை மதிக்கத் தெரியாதவனையும், போதைப்பொருள் விக்கிறவனையும் அவன் உயிரோட விடமாட்டான்.

ஆனா சட்டப்படி பார்த்தா அவனும் ஒரு குற்றவாளிதான்.”காயத்ரி அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்தாள். அவளது டிடெக்டிவ் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. ‘ஒரு மாஃபியாவுக்கு இவ்வளவு கருணை இருக்க முடியுமா? இல்லை இதுவெல்லாம் ஒரு முகமூடியா?’

அதே நேரம்… டேவிட்டின் தலைமை அலுவலகம்.நகரத்தின் உயரமான ஒரு கட்டிடத்தின் உச்சியில், கண்ணாடிச் சுவர்கள் கொண்ட அறையில் டேவிட் அமர்ந்திருந்தான். அங்கிருந்து பார்த்தால் மெக்சிகோ சிட்டியின் மொத்த அழகும் அவன் காலடியில் தெரிந்தது.

அவன் கையில் ஒரு சிறிய கிரிஸ்டல் கிளாஸ் இருந்தது. அதில் இருந்த தண்ணீர் அசையாமல் இருந்தது, அவனது மனதைப் போலவே.”சார்… ஆண்டனி இப்போ ரொம்பத் துடிச்சுப் போயிருக்கான். உங்க மேல ஏதோ பெரிய பிளான் போடுறான்னு தகவல் கிடைச்சிருக்கு,” என்றான் ஆல்பர்ட்.

டேவிட் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே சொன்னான், “ஆண்டனி ஒரு எலி ஆல்பர்ட்… எலி எப்போதுமே வலைக்குள்ள இருந்து தான் சத்தம் போடும். அவன் வெளிய வரட்டும், அப்போ பார்த்துக்கலாம். இப்போ எனக்கு முக்கியம் அந்த கான்கூன் டீலிங்.

அங்க இருக்கிற மீனவ மக்களுக்குச் சேர வேண்டிய நிலத்தை ஆண்டனி அபகரிக்கப் பார்க்கிறான். அதை முதல்ல தடுத்து நிறுத்தணும்.”ஆல்பர்ட் தயங்கியபடி, “ஆனா சார்… போலீஸ் இப்போ ரொம்ப உஷாரா இருக்காங்க. குறிப்பா புதுசா ஒரு இந்தியப் பொண்ணு டிடெக்டிவ் ஏஜென்சில சேர்ந்திருக்காளாம். அவ ரொம்ப புத்திசாலினு பேச்சு வருது. நம்மள பத்தி அவ விசாரிக்க ஆரம்பிச்சா..

.”டேவிட் முதல் முறையாகத் ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தான். ஒரு மெல்லிய ஏளனச் சிரிப்பு அவனது உதடுகளில் வந்து போனது. “இந்தியப் பொண்ணா? கிரிமினாலஜி படிச்சவளா? சுவாரஸ்யமா இருக்குமே! (Let her try)… இந்த டேவிட் மில்லரை அவ்வளவு சீக்கிரம் யாரும் கண்டுபிடிச்சிட முடியாது.”-

-இங்கேகாயத்ரி தன் வீட்டின் பால்கனியில் நின்று மெக்சிகோவின் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வானம் ஒருவிதமான ஆரஞ்சு மற்றும் ஊதா நிறத்தில் கலந்திருந்தது.அவள் கையில் இருந்த போனில் சாருகேஷிற்கு மெசேஜ் செய்தாள். ‘சாரு, இங்க எல்லாமே மர்மமா இருக்கு. நான் தேடி வந்த வேட்டை ஆரம்பமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.’

அப்போது அவளுக்குத் தெரியாது, அவள் தேடும் அந்த வேட்டைக்காரன், அவளது வாழ்க்கையையே ஒரு சூறாவளியாக மாற்றப்போகிறான் என்று.

அவள் தற்செயலாகத் திரும்பியபோது, சாலையில் ஒரு கறுப்பு நிற ஸ்போர்ட்ஸ் கார் மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. அந்த காரின் பின்னால் இருந்த கண்ணாடியில் ஒரு நிழல் தெரிந்தது. அது டேவிட் மில்லராக இருக்குமோ என்ற ஒரு உள்ளுணர்வு அவளுக்குத் தோன்றியது.

அவள் உள்ளுணர்வும் உண்மைதான்..—

You may also like

Leave a Comment

About Me

Featured