மீனாட்சியை எப்படியாவது வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற திட்டத்தோடு தென்னரசு ஜீப்பை விரட்டினான். ஆனால் ஆட்டோவில் அவள் ஏறிச் சென்றுவிட, ஏமாற்றமும் கோபமும் தலைக்கேற, வேகத்தை குறைக்காமலே வண்டியை ஓட்டியவன், சாலையைக் கடக்க முயன்ற வைஷ்ணவி மீது மோதி பிரேக் அடித்தான்.
வைஷ்ணவி அலறியடித்துக்கொண்டு கீழே விழ, ஜீப்பில் இருந்து இறங்கிய தென்னரசு, பதற்றப்படுவதற்குப் பதிலாக, வயதிற்கேற்ற முதிர்ச்சியோ, பொறுப்போ இல்லாமல் அதிகாரத் தோரணையில் அவளை முறைத்தான்.”ஏய்.. கண்ண எங்கயாவது கழட்டி வச்சுட்டு வர்றியா? வண்டி வர்றது தெரியல?” என்று ஒரு ரவுடியைப் போலக் கத்தினான்.
அடியில் பட்ட வலியோடு எழுந்த வைஷ்ணவிக்கு அவன் பேசிய விதம் சுள்ளென்று கோபத்தை ஏற்படுத்தியது. “யோவ் அறிவு இருக்கா உனக்கு? வேகமா வந்து இடிச்சது நீ… இப்ப என்னையே கேள்வி கேட்குற? வண்டி ஓட்டத் தெரியலனா வீட்ல இருக்கணும்.கண்ணு மண்ணு ரோட்ல வந்து எங்கள மாதிரி ஆளுங்க உசுரு மேல விளையாடுறியா?” என்று நடுரோடு என்றும் பாராமல் சத்தமாகத் திட்டினாள்.
வைஷ்ணவியின் அந்தப் பேச்சைக் கேட்டுத் தென்னரசுவின் ஆத்திரம் சீண்டப்பட்டது. அவளை அடிக்கக் கை ஓங்கியவன், சட்டென அவள் மீனாட்சியின் தோழி என்பது நினைவுக்கு வர, கையை அடக்கிக்கொண்டு, “வாய மூடுடி… பொம்பளையா லட்சணமா இருக்க கத்துக்கோ… உன்கிட்ட நின்னு பேசுறது என் தகுதிக்குக் குறைச்சல்,” என்று ஆணவமாகச் சொல்லிவிட்டு ஜீப்பை எடுத்துக்கொண்டு சென்றான்.
வைஷ்ணவி, “இவனெல்லாம் மனுஷனா…” என்று வெறுப்போடு அவனைத் திட்டிவிட்டு நகர்ந்தாள்.மறுபுறம், ரெஸ்டாரண்ட்டிற்குள் நுழைந்த மீனாட்சிக்கு, அன்று அரிசி மூட்டைகளின் வலி இன்னும் கைகளில் இருந்தது. ஆனால் அதைவிட, அதிரவன் அனைவரின் முன்பாக செய்த அவமானம் நெஞ்சில் கனத்தது.
சீஃப் செஃப் என்று அசைவ உணவுகளில் கடல் வகை உணவுகளை எப்படி வெட்ட வேண்டும் என்பதற்கான ட்ரெய்னிங் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அதிரவனின் ஹெட் செக்கரட்டரி அங்கே நுழைந்தார். ஹாய் மிஸ்டர் ஆனந்த் நீங்க என்ன இந்த பக்கம்??என்று செஃப் கேட்கஹலோ சிஃப் சார் காபி கொண்டு வர சொன்னாரு அதுவும் புதுசா வந்திருக்க உங்க நியூ ட்ரைனர் மீனாட்சிய எடுத்துட்டு வர சொன்னாருஅதைக் கேட்டவுடன் செஃப் அப்படியா என்று சொல்லி மீனாட்சி நீ பாஸ்க்கு காபி எடுத்துட்டு போ நல்ல ஸ்ட்ராங்கா அவருக்கு அப்படி தான் பிடிக்கும் எந்த ஒரு சொதப்பல் பண்ணாம கரெக்ட்டா இரு என்றார்.
மீனாட்சிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அந்த அரக்கன் முகத்தில் மீண்டும் விழிக்க வேண்டுமா என்று தயங்கினாலும், வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில், கையில் காபி கோப்பையுடன் நடுங்கும் கால்களோடு அதிரவனின் அறை நோக்கி நடந்தாள்.
எக்ஸ்க்யூஸ் மீ சார் என்று அனுமதி கேட்க எஸ் கம்மிங் என்று கம்பீரமான குரல் வந்தது மீனாட்சி மெதுவாக கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, குளிரூட்டப்பட்ட அந்த அறையின் மையத்தில், ஒரு மன்னனைப் போலத் திமிராக அமர்ந்திருந்தான் அதிரவன்.
மீனாட்சி மேஜையின் அருகில் சென்று காபியை வைக்கும்போது, அதிரவன் வேண்டுமென்றே தன் கையை அசைத்து அந்தக் கோப்பையைத் தட்டிவிட்டான். சூடான காபி மீனாட்சியின் கையில் பட்டுத் தெறிக்க, “ஆ…” என்று வலியால் துடித்தவள் கையை உதறினாள். காபி அந்த விலையுயர்ந்த கம்பளத்தில் கொட்டிப் பரவியது. ஆனால் அதிரவன் முகத்தில் ஒரு துளி கூட இரக்கம் இல்லை.”என்னடி முறைக்கிற?” என்று கேட்டவன், மெதுவாக எழுந்து அவள் அருகில் வந்தான். மீனாட்சி வலியை மறைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்க, அதிரவன் தனது அடுத்த அஸ்திரத்தை எடுத்தான்.
“ம்ம்… உன் அப்பாவுக்கு நீ ரொம்பச் செல்லம் போல? பாவம் அந்த மனுஷன்… தன் பொண்ணு மெட்ராஸ்ல காலேஜ் போய் படிச்சு, முடிச்சுட்டு தன்னுடைய கிராமத்துல வெளியூர்ல வேலை பாக்குற சொந்தக்கார பையனுக்கு பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணி வச்சு பொண்ண செட்டில் ஆகலாம்னு நினைச்சுட்டு இருக்காரு.
ஆனா அந்தப் பொண்ணு இங்க ஒரு ஹோட்டல்ல எச்சில் பிளேட் கழுவறதும், இப்படி காபி கொண்டு வந்து கொட்றதும் அவருக்குத் தெரிஞ்சா… அந்தப் பெரியவருக்கு ஹார்ட் அட்டாக் கூட வந்திரும் இல்லையா?”என்று கேள்வியோடு நிறுத்தினான். மீனாட்சி அதிர்ச்சியில் உறைந்து போனாள். இவன் எப்படித் தன் அப்பாவைப் பற்றித் தெரிந்து கொண்டான் என்ற பயம் அவளை ஆட்கொண்டது.
அவள் பார்வையில் அவள் கேள்விக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டவன் ஹா ஹா ஹா என்ன மீனாட்சி உன்ன பத்தி எல்லாம் விஷயமும் அதுவும் மலை மேல வாழ்ந்துகிட்டு இருக்க உங்க அப்பாவ பத்தியும் விஷயம் எப்படி தெரியும்னு கேக்குறியா நான் அதிரவன் சக்கரவர்த்தி என்கிட்ட வெளியே சொல்லிவிடுகிற வாட்ச்மேன் வேலைக்கு வர ஒரு ஜாதகம் கூட என்னிடம் இருக்கும் நீ அசிஸ்டன்ட் செஃப் போஸ்டிங்க்கு வந்திருக்க உன்ன பத்தி இது கூட தெரிஞ்சுக்க எப்படி அதுவும் மேடம் வந்த முதல் நாளே என்னோட கோபத்தை சம்பாரிச்சு வச்சிருக்கீங்க அதனால்தான் உன்னை பத்தி கொஞ்சம் எக்ஸ்ட்ராவா தெரிஞ்சு வச்சுகிட்டேன் என்ன நான் சொல்றது கரெக்டா மலை கிராம பொண்ணு என்று மிகவும் கிண்டலாக பேசஹலோ உங்க ஆபீஸ்ல வர்றவங்க டீடைல்ஸ் தெரிஞ்சுக்கறது ஓகே தான் ஆனா மலகிராம பொண்ணு அந்த கிராம பொண்ணு என்னோட பின்னணிய நான் வந்த இடத்தை வச்சு என்ன கிண்டல் பண்ண வேண்டாம் என்னோட வேலை என்னவோ அதுதான் செய்யப் போறேன் அவ்வளவுதான் என்று அந்த நடுக்கத்திலும் அவள் பதில் திமிராக வர மேலும் அவன் ஈகோ தூண்டப்பட்டு கொண்டே இருந்தது.
எப்படி எப்படி நடுங்காமல் தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறாள் என்று இருந்தாலும் இறுதி அஸ்திரத்தை பயன்படுத்தினான்.ஆமாம் ஆமாம் உங்களை எதுவும் சொல்லக்கூடாது ஆனா உங்க வீட்ல இருக்குற டெலிபோன் நம்பர் எனக்கு தெரியும் பத்திரமா வச்சிருக்கேன் வேணும்னா உங்க அப்பா கிட்ட ஸ்ட்ரெயிட்டா போய் சொல்லிடவா அவங்க பொண்ணு எங்க எனக்கு காபி கொடுக்கிற வேலை பாக்குற அப்படின்னு என்று பிரம்மாஸ்திரத்தை கொண்டு தாக்க.
எதற்கும் அஞ்சாமல் என்னவென்று பார்க்கலாம் என்று இருந்தவளுக்கு அப்பா என்று சொன்னவுடன் உடல் நடுக்கம் கொண்டது அவனைப் பார்த்து மிகவும் பாவமாக
“சார்… ப்ளீஸ், எங்க அப்பாகிட்ட எதுவும் சொல்லிடாதீங்க… அவருக்கு இதெல்லாம் தாங்காது,” என்று முதல் முறையாகத் தன் சுயமரியாதையை விட்டு கெஞ்சினாள். அதிரவன் அவளது பயத்தை ரசித்தான். “ஓ… அப்போ உன் அப்பாவுக்குத் தெரியக் கூடாதுன்னா, நான் சொல்றத நீ செய்யணும்,” என்றவன், கீழே சிதறிய காபியைத் தன் காலால் சுட்டிக் காட்டினான்.”ஒரு துணி எடுத்து, மண்டியிட்டு இந்தக் கறையைத் துடை. அதுவும் இப்போவே,” என்றான்.
மீனாட்சிக்குக் கண்களில் நீர் முட்டியது. தன்மானமா, அப்பாவின் உயிரான நம்பிக்கையா என்ற போராட்டத்தில், வேறு வழியின்றி மெதுவாகக் குனிந்து, தரையில் மண்டியிட்டு அந்தக் காபியைத் துடைக்க ஆரம்பித்தாள். அவளது கண்ணீர் தரையில் விழுவதையும், அவள் தன் காலடியில் பணிந்து கிடப்பதையும் பார்த்து, அதிரவன் சக்கரவர்த்தி ஒரு வெற்றிக் களிப்போடு நாற்காலியில் சாய்ந்தான்.
வீட்டில் இருக்கும்போது ஒரு சிறு துரும்பையும் அசைக்க விடாதவர் சுந்தரராஜர். “ஊரில், கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம், ‘நம் கிராமத்தில் பிறந்துவிட்டு இந்த வேலைகூடச் செய்யவில்லை என்றால் எப்படிப்பா? போகிற இடத்துல கஷ்டம் தானே’?” என்று சக ஆண்கள், ‘பெண் பிள்ளை இவ்வளவுதான்’ என்ற அர்த்தத்தில் கேட்க.”பொண்ணுங்கன்னா வீட்டு வேலை செய்வதற்கு மட்டும் இல்லை.
அவங்களுக்கான ஓய்வு நேரமும் இருக்கணும். நீங்களும் உங்க வீட்டுப் பெண்களுக்கு இதற்கான மரியாதை கொடுங்க. அப்பதான் வீடும் நல்லா இருக்கும், நீங்களும் நல்லா இருப்பீங்க,” என்று சொன்னவர் தான் மீனாட்சியின் தந்தை. ஆனால், அவரது மகள் இப்போது அவரது நம்பிக்கைக்காகத் தன்னுடைய சுயமரியாதை, தன்மானம் அனைத்தையும் விட்டு, தனக்குச் சம்பளம் தரும் இவனுக்காகப் பயத்தில் இந்த வேலையைச் செய்துகொண்டிருந்தாள்.”சைனீஸ் மண்டையா! நான் மீனாட்சி டா! எங்க கிராமத்திலேயே சொகுசா வாழ்ந்த டேட் லிட்டில் பிரின்சஸ் நானு. என்னையே இப்படி பண்ணிட்ட இல்ல? அடுத்த ஜென்மத்துல நீ என் கிராமத்தில் எங்க வீட்டு வேலைக்காரனா பிறக்கணும்.
நான் உனக்கு மகாராணியா இருந்து எல்லா வேலையும் வாங்கணும். என்னையே தரையைத் துடைக்க விடுற, உன்னை எங்க வீட்டுத் தோட்டத்துல சேறு சகதியில வேலைக்கு விடுகிறேன்.”என்று அந்தக் கவலையிலும் அவனைத் திட்டித் தீர்க்காமல் இல்லை.அவளது ஒரு சொட்டு கண்ணீர் தரையில் பட, அதைப் பார்த்த அதிரவனுக்கு மனமெல்லாம் குற்றாலச் சாரல் வீசியது. மேலும் அவன் கண்கள் அவளை விட்டு நீண்ட நேரமாக விலகவே இல்லை.
அவள் ஒவ்வொரு அசைவையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று அவன் அடிமனம்,”அந்தப் பொண்ணை ரொம்ப நேரமா நீ வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துக்கிட்டு இருக்க. அதுவும் பார்வை வேற ரகமாகப் போகுது. இதற்கு என்ன அர்த்தம் பாஸ்?” என்று நக்கல் அடிக்க.”அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அவ என்னைய எதிர்த்துப் பேசி இருக்கா. அதனால தான் அவளுக்கு இந்த Punishment. இன்னொரு தடவை இந்த மாதிரி ஏதாவது நடந்தா இதான் நடக்கும். எனக்கு வேற வேலை வெட்டி இல்ல பாரு.
இனிமே இவள என் பக்கமே வரவே கூடாது,”என்று நினைத்துக் கொண்டான். ஒரு நிமிடம் தனக்கே சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. இதுவரை தன்னிடம் வேலை பார்க்கும் யாரையும் இவ்வளவு நெருக்கமாக வர வைத்தது கிடையாது. எல்லாம் அவன் சீஃப் செகரட்டரி தான் பார்த்துக் கொள்வார்.
ஆனால், இன்று இவளை காபி எடுத்துட்டு வரச் சொல்லிய விஷயம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அது வேறு ரகமாக மாறியிருக்கும். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். மேலும், அவன் பெண்கள் விஷயத்தில் எப்படிப்பட்டவன் என்று எல்லாருக்கும் தெரிந்தாலும், தன்னிடம் நேரடியாகப் பேசும் பயம் கொண்டு யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை.
மீனாட்சி தன்னோடு வைத்து தவறாகப் பேசவும் வாய்ப்பு இருக்கின்றது என்பதால், இனி அவள் நன்மைக்கு அவளைக் தன்னிடம் நெருங்க விடக் கூடாது என்ற நிதர்சனத்திற்கு வந்தான்.”அடப்பாவி! அவ்வளவு நல்லவனா நீ?” என்று அவன் மனசாட்சி கேட்டது. ஏனோ, மற்ற பெண்களைப் போல் இவள் இல்லை. இவளுக்கு இந்தப் பெயர் மட்டும் வரக்கூடாது என்று ஒரு முடிவு மட்டும்தான். அதற்கு என்ன அர்த்தம் என்று அவனுக்கே தெரியவில்லை.—