இசை கன்னத்தில் கை வைத்து அவனைப் பார்க்க, அவனும் அவளைக் கலங்கிய விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தான்.சிறிது நேரத்திற்கு முன்பு இருவரும் அறைக்குள் வந்த பிறகு, இனியன் அவளைப் பார்த்து,
“உனக்கான டிரஸ் நான் வாங்கி வைத்திருக்கிறேன். ஃபிரெஷ் ஆகிட்டு அதை உடுத்திக்கொள். நான் பால்கனியில் காத்திருக்கிறேன்” என்று சொல்லப் போனான். அவனைக்கை பிடித்து நிறுத்திய இசை, “உங்கள் அறைக்கு வந்த விருந்தினர் கிடையாது நான்; உங்கள் மனைவி. உரிமையாக நீங்களே எடுத்துத் தரலாம்.
அதே சமயம் நீங்கள் வெளியே போக வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்னை ஒதுக்குகிறீர்கள்?” என்று பாவமாகக் கேட்டாள்.அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக்கொண்டே இனியன் பேசினான், “நான் காதலிக்கிற பெண் எனக்காக மட்டுமே வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதாவது அவள் மனதிலுள்ள காதல் என்கிற இடத்தில் எனக்கு ஒரு தனி இடம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால், நீ ரொம்பச் சுயநலமான பெண். என் கூடவே பழகிவிட்டு ஆசையைத் தூண்டி, இப்போது என்னை விட்டு ஒதுங்கப் பார்க்கிறாயே? உன்னுடைய அம்மா அடித்து மிரட்டிய பிறகுதான் நீ கல்யாணம் செய்துகொண்டாய். நானும் எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால், நீ அப்படியே இருந்திருப்பாய் அல்லவா? உன்னுடைய காதலுக்காக நீ போராடி இருக்க மாட்டாய். செத்துவிட்டேனடி! சுயநலமாக நீ பேசிவிட்டுப் போன வார்த்தைகளைக் கேட்டுத் துடித்துக் கொண்டிருக்கிறேன்.
இருந்தாலும் என்னால் உன்னை விட முடியவில்லை. அதனால்தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்; வேறு எதுவும் கிடையாது.”இனியன் சொன்னதைக் கேட்டு இசை கைதட்டிச் சிரித்தாள். “சபாஷ்! ஏன் இப்படி நாடகம் ஆடுகிறீர்கள்? இப்போதுதான் முதன்முதலில் நாம் சந்தித்துப் பழகியது போல் பேசுகிறீர்கள்.
உங்களைப் பற்றி எனக்கு எல்லாமே தெரியும் இனியன். அன்று நடந்தது எல்லாம் மறந்து போச்சா? இப்போது எல்லார் முன்னாடியும் நல்லவன் மாதிரி, ‘கனவு தேவதை’ என்று ஒரு பிட் போட்டு, மறுபடியும் சேர்த்து வைத்துக்கொள்ளலாம் என்று திட்டம் போட்டுத்தானே என் பின்னாடி நாய் மாதிரி வந்தாய்? என்னுடைய உடம்பிற்காகத்தானே ஐந்து வருடமாகக் காத்துக் கொண்டிருக்கிறாய்? பள்ளி படிக்கும் பெண் என்று கூடப் பார்க்காமல் என்னிடம் நீ… ச்சீ… நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது.”தொடர்ந்து பேசினாள்,
“அன்று நான் உங்களை வேண்டாம் என்று சொன்னது நினைவிருக்கிறதா? அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் எனக்குப் பழைய விஷயங்கள் ஞாபகம் வந்தன. எதுக்கடா இப்படிச் சதைவெறி பிடித்து அலைகிறீர்கள்? நீயும் உன் நண்பர்களும் பண்ண அசிங்கத்தை இப்போது சொன்னால் என்ன ஆகும் தெரியுமா? ஆனால், சொல்ல முடியவில்லையே! காரணம், இந்தப் பாவியும் உன்னைத் தானே விரும்பித் தொலைத்தாள். நீதாண்டா என் காதலைக் கொன்றாய். உண்மையிலேயே செத்தது நான்; நீ இல்லை.
இப்போது உனக்கு என்னுடைய உடம்புதானே வேண்டும்? அதை அடைவதற்காகத்தானே இத்தனை நாள் காத்திருந்தாய்? இதோ எடுத்துக்கொள்!” என்று தன் சேலையை உருவி அவன் முகத்தில் வீசினாள்.அவளின் எதிர்பாராத செயலால் வெறி கொண்ட இனியன், ஓங்கி ஓர் அறை விட்டான். இசை சுருண்டு போய் விழுந்தாள்.
கன்னத்தில் கை வைத்து அவனைப் பார்க்க, அவனோ வெறி கொண்டவன் போல் அறை அதிரக் கத்தினான்.”ஆஆஆஆஆஆஆஆ…. இதை மறக்க வேண்டும் என்றுதான்டி எல்லாவற்றையும் நான் மறைத்து வைத்தேன். உனக்கு ஞாபகம் இல்லாதது எனக்குச் சாதகமாகப் போயிற்று. நீ என்னை எங்கே வெறுத்து ஒதுக்கிப் போய்விடுவாயோ என்ற பயத்தில்தான் நான் அப்படிச் செய்தேன். அதனால்தான் நீ எனக்குக் கிடைப்பதற்காக நிறைய பொய் சொன்னேன்.
ஐந்து வருஷமாக உனக்காகத்தான்டி காத்துக் கொண்டிருக்கிறேன். ப்ளீஸ், என்னைப் புரிந்துகொள். நான் அப்படிப்பட்டவன் கிடையாது. அன்று என்ன நடந்தது என்றால்…” என்று அவளிடம் நெருங்கினான்.”வேண்டாம் இனியன், என் பக்கத்தில் மட்டும் வர வேண்டாம். எல்லார் முன்னிலையிலும் நானே குற்றவாளியாக இருக்கிறேன். நீங்கள் நல்லவராகவே இருங்கள். நான் எதையும் கேட்க விரும்பவில்லை. இப்போது கூட அன்று நடந்ததை மறந்து உன் கூட நெருங்கித்தான் வந்தேன்.
ஆனால் நீதான் என்னை ஒதுக்கி என்னென்னவோ பேசிவிட்டாய். என் மேல் ஒரு கேவலமான பழியைப் போட்டுவிட்டாய். இதைவிட எனக்கு வேறு என்ன நடக்க வேண்டும்? அன்று நான் தப்பு பண்ணவில்லை, இன்றைக்கு இந்தப் பெண் தப்பு பண்ணவில்லை. ஆனால், அசிங்கமும் அவமானமும் எனக்குத் தானே? இருந்தாலும் என்னால் உன்னை மறக்க முடியவில்லை. பிகாஸ் ஐ லவ் யூ விஷ்ணு…”(இசை இனியனை செல்லமாக அழைக்கும் பெயர்) “இன்னும் நான் உன்னை விரும்பிக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்குப் பழைய விஷயங்கள் ஞாபகம் இல்லாவிட்டாலும், முதன்முதலில் நாம் சந்தித்த தருணம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதற்குப் பிறகு நடந்த விஷயங்கள் தான் எனக்கு ஞாபகம் இல்லாமல் போயிருந்தது. முதல் முறை பார்க்கும் போது என் மனது உன்னிடம் தடுமாறியது உண்மைதான்.
அதையே மனதிற்குள் ஐந்து வருடமாகப் பூட்டி வைத்திருந்தேன். பிறகு நீ சென்னையில் பள்ளித் தலைமையாசிரியராக (Principal) இருப்பதை அறிந்துகொண்டேன். அதனால்தான் நான் Application போட்டேன்.
எல்லாம் நன்றாகத்தான் நடந்தது. ஆனால், என் சித்திக்கு உன் மாமா மூலம் நடந்த அநியாயத்தைப் பார்த்து நான் பயந்துவிட்டேன். அதே சமயம் எனக்குப் பழைய ஞாபகங்கள் வந்துவிட்டன. மறக்கவே மாட்டேன் இனியன், அன்று நீயும் உன்னுடைய நண்பர்களும் என்னிடம் என்ன செய்தீர்கள் என்று நீங்கள் மறந்து போகலாம், ஆனால் காயம் பட்ட எனக்கு அந்த அதிர்ச்சி சாகும் வரை இருக்கும்” என்று சொல்லிவிட்டு, உடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றுவிட்டாள்.
இனியன் அப்படியே மண்டியிட்டுத் தன் தலைமுடியைப் பற்றிக்கொண்டான். எதை அவளுக்கு ஞாபகம் வரக்கூடாது என்று நினைத்துக் காத்து வந்தானோ, அது ஞாபகம் வந்துவிட்டது.’அன்று நடந்த கோரச் சம்பவத்திற்கு நானும் ஒரு காரணமாகிப் போய்விட்டேன். அதனால்தான் ஐந்து வருடமாக உன்னைக் கண்காணித்துக் கொண்டே இருந்தேன்.
திடீரென்று நீ என்னுடைய பள்ளிக்கே வேலைக்கு விண்ணப்பிப்பாய் என்று நான் நினைக்கவில்லை. உனக்கு எதுவும் ஞாபகம் வரக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தேன். ஆனால் விதி என்னைப் பழிவாங்கிவிட்டது’ என்று நொந்து துடித்தான்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு…இசை பன்னிரண்டாம் வகுப்பு செங்கல்பட்டில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர்களாகப் பணியாற்றச் சில ஆசிரியர்கள் அங்கே வந்திருந்தார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் பயிலும் பள்ளி என்பதால் இளம் வயது ஆசிரியர்கள் வந்திருந்தனர். மாணவர்களுக்கு அந்த இரண்டு மாத காலம் குதூகலமாக இருந்தது.இசை, தன் வகுப்புக்கு அடுத்த வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் அழகாக இருப்பதை அறிந்து அடிக்கடி அவரைப் பார்த்து வருவாள்.
அது இனியன்தான். அவனுக்கும் தன்னை ஒரு பெண் அடிக்கடி வந்து பார்ப்பது பிடித்திருந்தது. 24 வயது வாலிபனான அவனும் அவளும் பார்த்துச் சிரித்துக் கொள்வார்கள்.அதே சமயம், அவனோடு பயிற்சிக்கு வந்த ‘ஆசிரியர்கள்’ என்ற வேஷம் போட்ட மிருகங்கள் இசையைப் பார்த்து அவளை அனுபவிக்கத் திட்டம் போட்டன. ஒரு நாள் தனிமையில் இனியனும் இசையும் பள்ளிக்குப் பின்பக்கம் இருக்கும் சிறு காட்டுப்பகுதியில் ஆளில்லாத நேரத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென்று வந்த அவர்கள், “நாங்கள் சொன்னது போல இந்த வாலிபன் பெண்ணை மயக்கிக் கொண்டு வந்துவிட்டான். இப்போது நாம் அனுபவிக்கும் நேரம்” என்று கூறினர்.இனியனின் முதுகில் போதை ஊசியைப் போட்டுவிட்டனர். சிறிது நேரத்தில் உச்சகட்ட போதைக்குச் சென்ற இனியன், “நீங்க அவளைத் தொடக்கூடாது; நான் தான் அவளைத் தொடவேன்” என்று போதையில் அவளிடம் அத்துமீறினான்.
தனியாக ஏதோ பேச வேண்டும் என்று சொல்லி அழைத்து வந்தவன் இப்படி நடந்துகொள்வானோ என்று இசை பயந்து போனாள். காதல் என்ற மாயவலையில் விழுந்து மாட்டிக்கொண்டோமே என்று அங்கிருந்து தப்பிக்க முயன்றாள். ஆனால் மற்ற இரண்டு மிருகங்களும் அவளைப் பிடித்துவிட, இசை மூவரிடமும் சிக்கிச் சின்னபின்னமானாள்.முதலில் இனியன் அவளைச் சிதைத்த பிறகு மயக்கத்தில் விழுந்துவிட, மற்றவர்கள் நெருங்கும் சமயம் அந்தப் பக்கம் வாட்ச்மேன் விசில் சத்தம் கேட்டது. பயந்துபோன அவர்கள் இனியனை மட்டும் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டனர்.
கிழிந்த நாராகக் கிடந்த இசையை வாட்ச்மேன் பார்த்தார். அவள் மார்த்தாண்டம் ஐயாவின் பேத்தி என்பதால், யாருக்கும் சொல்லாமல் அவர்கள் வீட்டிற்குத் தகவல் கொடுத்தார்.கதறிக்கொண்டு வந்த மார்த்தாண்டம், விஸ்வநாதன், ஜமுனா மற்றும் அம்பை அனைவரும் அவள் நிலையைப் பார்த்து வருந்தினர்.
போதாக்குறைக்கு அவளைத் தள்ளிவிட்ட வேகத்தில் கல்லில் இடித்துத் தலையில் பலத்த அடி பட்டிருந்தது. மருத்துவமனையில் ஒரு வார காலம் சுயநினைவின்றிச் சிகிச்சை பெற்று ஒரு வழியாகத் தேறி வந்தாள்.கண் விழித்த பிறகு, தான் ஏன் அங்கே வந்தேன் என்று கேட்டாள். அந்தச் சம்பவங்கள் அவளுக்கு மறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார்.
அதுவே நல்லது என்று கருதிய குடும்பத்தினர், ஒரு சிறிய விபத்து என்று கூறி அவளைப் பாதுகாத்தனர். விஷயம் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என்று கருதி ரகசியமாக வைத்திருந்தனர்.அதன் பிறகு அவள் ஆசிரியர் படிப்பு முடித்து இனியன் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தாள்.
சில நாட்கள் கழித்துத்தான் பழைய ஞாபகங்கள் வந்தன. இப்போது குளியலறையில் ஷவரின் அடியில் அமர்ந்து எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டிருந்தாள் இசை.’கடைசியில் மானத்திற்குப் பயந்த பெண்களைப் போல, நானும் என்னைக் கற்பழித்தவனையே திருமணம் செய்துகொண்டேன்’ என்று நொந்து போனாள்.
இங்கே செழியனும் அம்பையும் ஈருடல் ஓருயிராகக் கலந்துகொண்டிருந்தனர்.