ராமிடம் எதுவும் பேசாமல் யோகிதா அங்கிருந்து வந்த பிறகு அவள் யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை மறுநாள் எப்போதும் போல பள்ளிக்கு சென்று இயல்பாக தான் இருந்தாள்
ஆனால் அவளைப் பார்த்து எதிர்கொள்ள தான் ராமால் முடியவில்லை ஏதோ ஒன்று அவனை இம்சை செய்ததுஇதுவரை அவன் இப்படி தடுமாறியது இல்லை அவளது பாராமுகம் அவனை வாட்டி வதைத்தது எப்பொழுதும் அவனைப் பார்த்து புன்னகை முகமாக பேசும் யோகி இப்பொழுது இல்லை
அவனை பார்த்தால் பத்தடி தூரம் நகர்ந்து செல்லும் யோகி தான் அவனுக்கு புதிதாக காணப்பட்டதுஅவளை எதிர்கொள்ளவும் அவளிடம் முகம் கொடுத்து பேச தைரியம் இல்லாததால் ராம் கூனி குறுகி தன்னைத்தானே வருத்திக் கொண்டான்
கிட்டதட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது மேலும் மேலும் யோகிதா மீது பைத்தியம் பிடித்தது போல் அலைந்து கொண்டிருந்தாள் இந்த இரண்டு மாதத்தில் எந்த பெண்ணையும் அவன் தேடவில்லை ஏனோ அவளை அடைந்த பிறகு மற்ற பெண்கள் மீது அவனுக்கு ஆர்வம் இல்லாமல் போனது ஆச்சரியம் தான்இதை அனைத்து நினைத்துப் பார்த்தவனுக்கு தன்மீதே கோபம் வந்தது குடித்த மது பாட்டில்கள் அனைத்தையும் கீழே போட்டு உடைத்து சில்லு சில்லாக அதை சிதறுவதை பார்த்து வெறிகொண்டவன் போல் அறை அதிர கத்தி கூச்சல் போட்டு
“நான் ஒரு சாப ஜென்மம் எனக்கு இந்த உலகத்துல வாழ எந்த ஒரு அருகதையும் இல்லை என்னை நம்பி உன்னை கொடுத்து நீ தாண்டி கஷ்டப்பட்டுகிட்டு இருக்க நானெல்லாம் உணர்ச்சி இல்லாத ஜென்மம் உன்ன மாதிரி ஒரு பொண்ணு கூட வாழ எனக்கு என்ன தகுதி இருக்கு நீ புனிதம் நீ சுத்தமானவஆனா நான் அப்படி இல்ல அழுக்கு அசிங்கம்,
அவமானத்தின் உச்சம் நான் உனக்கு வேண்டாம் யோகி என்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெற்ற நீதான் ரொம்ப அவஸ்தை படுவ தினம் என்னோட கடந்த காலத்தை பத்தி தெரிஞ்ச பிறகு உன்னால் எப்படி என் கூட அது ரொம்ப அவமானம்”.
என்று நினைத்து அவளை விட்டு விலகி செல்ல பார்க்க ஆனால் விதி இருவரையும் இணைக்கும் விதமாக அவனது உயிர் அவள் கருவறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது ___________________________________________அலுவலகத்திற்கு நேரமானதால் அவசர அவசரமாக தயாராகிக் கொண்டிருந்தாள் அம்பை மேலும் அவள் அவன் இன்று முக்கியமான மீட்டிங் இருக்கிறது நீதான் முக்கிய பொறுப்பு ஏற்க வேண்டும் என்று செழியன் சொல்லிவிட்டு சென்றதால் சற்று பரபரப்பாக காணப்படஎதேர்ச்சியாக டேபிள் இடித்து இசையின் டைரி கீழே விழ அதில் எது புகைப்படம் ஒட்டிப்பட்டு இருந்தது என்னவென்று எடுத்துப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி செழியனின் சகோதரன் இனியனின் புகைப்படம் கீழே
“ஐ லவ் யூ விஷ்ணு குட்டி”என்று எழுதப்பட்டிருந்தது”இது செழியன் பிரதர் தானே இவர் போட்டோ இசை டைரில அதுவும் இது அவரோட பர்சனல் டைரி ஆச்சே கடவுளே என்ன நடக்குது இங்க”என்று குழம்பிக் கொண்டிருக்கும் போது குளியலறையில் இருந்து வெளியே வந்த இசை அம்பை கையில் டைரி இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி திருடன் மாட்டிக் கொண்டது போல் முழித்துக் கொண்டிருக்க
அம்பை அவளை உணர்ச்சியற்ற பார்வையில் என்ன இது என்பது போல் கேட்க”அக்கா உங்கிட்ட முதலிலேயே இதை சொல்லி இருக்கணும் ஆனா இன்னும் இது அபிஷியல் ஆகல அவர் கூட எனக்கு நல்ல பழக்கம் இருக்கு ரெண்டு பேரும் நல்லா பேசிக்கிறோம் நண்பர்களா இருக்கிறோம் ஆனால் அதையும் தாண்டி எனக்கு அவர் மேல ஒரு அலாதி பிரியம் அப்புறம்தான் புரிஞ்சுது அது காதல் அப்படின்னு
பொறுமையா சொல்லலாம் அப்படின்னு அதுக்குள்ள உன்கிட்ட மாட்டிகிட்டேன் மத்தபடி நான் எந்த தப்பும் பண்ணல மதர் ப்ராமிஸ்”அப்பாவி பிள்ளை போல் சொல்லி முடிக்க அம்பை சிரித்துக் கொண்டே”நம்ம சித்தி மாதிரி நம்ம வாழ்க்கை ஆக கூடாதுன்னு அம்மா சின்ன வயசுல இருந்து சொல்லியிருக்காங்க அது உனக்கு தெரியும் தானே ஏன் நம்ம சித்தி கூட இப்ப வரைக்கும் காதல் பண்ணுங்க சரியான நபரை காதல் பண்ணுங்க
அப்படின்னு சொல்லுவாங்க இதுவரைக்கும் நம்ம ரெண்டு பேருமே காதல் விஷயத்தில் எல்லாம் தான் இருக்கும் பார்க்கலாம் வாழ்க்கை போற போக்குல”என்று அவள் சொல்லி முடித்தவுடன் இசை அக்காவை கட்டிக்கொண்டு
“தேங்க்யூ அக்கா என்னோட குழப்பத்துக்கு ஒரு சொல்யூஷ ரொம்ப குழப்பிகிட்டே இருந்தேன் சரி நான் கிளம்புறேன்”என்று இசை பள்ளிக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருக்கிற அப்பொழுதே தனக்கு நேரம் மனதை உணர்ந்து கொண்ட அம்பை அரக்க பறக்க தயாராகி அந்த ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு பத்தே நிமிடத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தாள் .
நல்ல வேலை இன்னும் அவளுக்கான நேரம் முடியவில்லை விரைவாக வந்து மீட்டிங் ஹாலில் அவரவர் கோப்பைகளை சரிபார்த்து அனைத்தையும் தயார் செய்து வைத்திருக்க சிறிது நேரத்தில் மற்ற அனைவரும் அங்கே ஆஜர் ஆகிவிட்டனர்”
அம்பை இந்த ப்ராஜெக்ட் சக்சஸ் ஆகுறது உங்க டீம் கிட்ட தான் இருக்கு நீங்க தான் லீட் பண்ணி இருக்கீங்க பாக்கலாம் உங்கள் பர்பாமென்ஸ் எப்படி இருக்கு அப்படின்னு”
என்று மேனேஜர் ஹெச் ஆர் போன்றவர்கள் வாழ்த்துக்கள் சொல்லி செல்ல அங்கே அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் செழியன்சும்மா சுடிதாரில் வருபவளை அள்ளிக்கொண்டு சரசங்கள் செய்வான் இன்று போதாக்குறைக்கு லெமன் நிற மைசூர் சில்க் புடவை தங்க செயின் சின்ன ஜிமிக்கி சிகப்பு நிற போட்டு மேலும் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்தது போல் இடப்பக்கம் மூக்கில் குத்தப்பட்ட மூக்குத்தி அவ்வளவுதான் மொத்தமாக விழுந்துவிட்டான்
அவள் மீது ஒரு பக்கம் கோபம் இருந்தாலும் ஒரு பக்கம் காதல் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே தான் செல்கிறது யாருக்கும் அவளை விட்டு தரக்கூடாது தினமும் இரவு பகல் என்று பாராமல் அவளை தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வெறி அவனுக்கு அனுதினம் ஏறிக்கொண்டு இருந்தாலும்,
ஒரு பக்கம் ஒரு உயிர் உருவாகதற்கு முன்பு தன்மீது தன் காதல் மீது சந்தேகப்பட்டு உலகிற்கு வர வேண்டிய உயிரை உருவாக்காமல் தடை செய்யப்பட்ட அவள் தவறை தண்டிக்கவே அனுதினமும் ஏதாவது சொல்லி அவளை அழ வைக்க மீண்டும் மீண்டும் அவனிடமே வந்து தஞ்சம் அடைந்தாள்இதுவே தன் காதலுக்கான வெற்றி என்று கர்வத்தில் மிதந்து கொண்டு இருந்தான்.
ஆனால் ஒரு சமயத்தில் அவன் காலில் விழுந்து கெஞ்சினாலும் நீ எனக்கு வேண்டாம் என்று அவனை வெறுத்துவிட்டு செல்லும் நாட்கள் மிக அருகினில் என்று அவனுக்கு தெரியாமல் போனதுதான் பரிதாபம்சிறிது நேரத்தில் முக்கிய கிளைன்ட் வந்து மீட்டிங்கை பார்க்க அம்பை அவளது குழுவினர் சிறப்பாக விவாதத்தை முடித்து ப்ராஜெக்டை தெளிவுபடுத்த அவருக்கும் பிடித்தது என்று என்பது கோடி ரூபாய் ப்ராஜெக்ட் சக்சஸ் ஆகி விட மகிழ்ச்சியில் செழியன் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைவருக்கும் பார்ட்டி என்று அறிவிக்க,
அனைவரும் நிச்சயம் வருகிறோம் என்று பதில் அளித்தனர்அனைத்து முடிந்த பிறகு அனைவரும் அவரவர் இடத்தில் வேலை செய்து கொண்டிருக்க எப்பொழுதும் போல் அம்பையை தன் அறைக்கு அழைத்து அவளை மடிமீது அமர வைத்தவன்
“வர பார்ட்டிக்கு நான் சொல்ற டிரஸ் தான் நீ போடணும் நான் இன்னைக்கு ஆர்டர் பண்ணுவேன் நாளைக்கு உன் கைக்கு வரும் அதுதான் நீ போட்டுகிட்டு வரணும் எல்லாரும் விட நீ தான் சூப்பரா இருக்கணும் அதை மீறி என்னோட உடை என்னோட விருப்பம் அப்படின்னு புரட்சி பேசி உன் இஷ்டத்துக்கு ஏதாவது ஒன்ன போட்டுகிட்டு வந்த அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்”
என்று கடுமையாக அவளிடம் நடந்து கொள்கிறேன் என்ற பெயரில் அவளை மடியில் அமர வைத்து கன்னத்தை தடவி கொஞ்சிக் கொண்டிருக்கஅவள் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்க அவள் கன்னத்தை அழுத்தி பிடித்தவன்
“என்ன நான் பாட்டு பேசிக்கிட்டு இருக்கேன் அதுக்கு எந்த ஒரு ரியாக்ஷன் தராமல் எப்படி பொம்மை மாதிரி இருக்க பதில் சொல்லுடி”என்று அவள் கன்னம் சிவக்க அழுத்தி பற்ற வலி தாங்க முடியாத அம்பை
“ம்ம்… போதும் போதும் ஒரு பக்கம் என்ன திட்டி தீர்க்க வேண்டியது ஒரு பக்கம் கொஞ்சி கொள்ள வேண்டியது உங்களை என்னால புரிஞ்சுக்க முடியல ஆமா நான் அன்னைக்கு பண்ணது தப்புதான் நம்ம ரெண்டு பேருக்கும் நடந்த விஷயம் நீங்களும் எங்க போனீங்கன்னு தெரியல பயத்துல மாதிரி போட்டுகிட்டேன் .
அதுக்காக நீங்க என்ன போதும் அளவிற்கு வெச்சி செஞ்சாச்சு இப்ப கூட நல்லா பேசுறீங்க ஆனா அடுத்த நிமிஷம் நீங்க எடுத்து எரிஞ்சு பேசி என் மனசு தான் கஷ்டப்படுத்துறீங்கஎல்லாம் எனக்கு பழகி போச்சு சிவா (செழியன் சிவசக்கரவர்த்தியின் செல்லப் பெயர் அம்பை அழைப்பது சிவா)இருந்தாலும் நான் அமைதியா இருக்க காரணம் நீங்க என் மேல வச்சிருக்க காதல்தான் இப்ப கூட சொல்றேன் என்ன அடிங்க திட்டுங்கள் என்ன வேணாலும் பேசுங்க
ஆனா நான் எப்பவுமே நம்ம காதலுக்கு உண்மையா தான் இருப்பேன் ஆரம்பத்துல உங்களை விட்டு விலகி தான் போனேன் ஆனா உங்களோட காதல பார்த்த பிறகு தான் நானே காதலிக்க கத்துக்கிட்டேன் காதல் மேல அதிக ஆசை வந்துருச்சு ஆனா எனக்கு என்னமோ ஒரு மாதிரி இருக்கு அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு அப்படின்னு சொல்ற மாதிரி எப்பவுமே சரி நம்ம காதலுக்கு நாம உண்மையா இருக்கணும் எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னை நீங்க விட்டு தரக்கூடாது. என்னை விட்டு போக மாட்டீங்க தானே”
என்று சிறு குழந்தை போல் அவன் கன்னத்தைப் பற்றி கண்கள் கலங்கி கேட்கஅவளுக்கு தன் மீது இவ்வளவு ஆசை இருக்கிறதா என்று என்றே புரிந்து கொண்டவன் அவளை வாரி அணைத்துக்கொண்டு முகம் முழுவதும் முத்தமிட
“போதும் போதும் சும்மா சும்மா உம்மா கொடுத்து என்னை அம்மா ஆக்க வேண்டாம் அதுக்கெல்லாம் டைம் இருக்கு”என்று அவனை விட்டு விலகி எழுந்து நிற்க அவள் இடையே வளைத்து பிடித்து கட்டிக் கொண்டவன் அவள் வயிற்றில் முத்தம் கொடுத்து
“என் கடந்த காலமும் சரி இப்ப இருக்கிற நிகழ்காலமும் சரி இனி வருங்காலமும் சரி என் வாழ்க்கை முழுக்க என்னோட அம்பை குட்டிக்கு மட்டும்தான் அவளை தவிர இந்த உலகத்துல வேற எந்த பொண்ணுக்கும் என்னோட மனசுல இடம் கிடையாது ஞாபகம் வச்சுக்கோ என்னோட வாழ்க்கை முழுக்க உனக்கு மட்டும் தான் என் உடல் பொருள் ஆவி எல்லாம்”
என்று அவள் வயிற்றில் மீசை தாடி குறுகுறுக்க முத்தமிட சிலிர்த்து அடங்கிய அம்பை அவனை வாரி அழைத்துக்கொண்டாள்ஆனால் தூரத்தில் இருந்து விதி செழியினை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.இங்கே ஸ்கூலில் லைப்ரரி அறையில் இசை கீழே இருக்க அவளை தன் வலியை கரங்களால் இறுக்கிப்பிடித்து அவள் மீது படர்ந்து இருந்தான் இனியன்