8) ராகம்

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
74
Reaction score
1
Points
8
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 8




நீதிமன்றத்தில் அனைவரும் பரபரப்பாக காத்துக் கொண்டிருந்தனர் சுலபமா என்ன ஏகே நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது அதுவும் பல ஏழைகளின் மனதை வென்ற இலவச மருத்துவமனை மீது அந்த வீட்டு பெண் வழக்கு பதிவு செய்திருப்பது அனைவருக்கும் இன்னும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..


இதோ மகா அவளது தோழி இருவரும் அங்கே வந்துவிட இங்கே தனது விலை உயர்ந்த காரில் இருந்து கம்பீரமாக இறங்கி வந்தான் அனிருத்


தன் கருப்பு நில கூலரை போடுவது போல் போட்டு ஓரக் கண்ணால் அவளைப் பார்த்து கண்ணடிக்க..


"பொறுக்கி இன்னும் இந்த புத்தி போகல"என்று அவள் இதழ்கள் முனுமுனுத்தாலும் பழைய நினைவுகள் சம்பந்தமே இல்லாமல் வாட்டி வதைக்க அது தற்சமயம் ஒதுக்கிவிட்டு



இதோ உள்ளே நுழைந்தாள் அவள் தரப்பு வக்கீல் ஒரு பக்கம் நிற்க இங்கே அனிருத் சர்வசாதாரணமாக தன் வக்கீலுடன் நின்று கொண்டிருந்தான்..


"மிஸ்ஸஸ் மகாலட்சுமி அனிருத் அசிஸ்டன்ட் பவுண்டர் ஆஃப் ஏ கே ஹாஸ்பிடல்.. இவ்ளோ பெரிய நிறுவனத்தோட கோ ஃபவுண்டரா இருந்துகிட்டு நீங்க அந்த நிறுவனத்து மேல வழக்கு போட்டு இருக்கீங்க…


காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா??"


என்று என்று ஒரு வக்கீல் விசாரணையை ஆரம்பிக்க..


" நான் கோ ஃபௌண்டர்தான் ஒத்துக்குறேன் ஆனா நான் முழுமையா அந்த வேலையில இறங்கல நான் இப்பதான் மெடிக்கல் பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்க அதே ஏ கே ஹாஸ்பிடல் சென்னை பிரான்ச்ல அப்படி இருக்கும்போதுதான் ஒரு பேஷண்ட் ஒரு ஆக்சிடென்ட் கேஸ்ல அட்மிட் ஆக்கப்பட்டார் 95% அவர் முழுசா குணமாகிட்டாரு இன்னும் ரெண்டு நாள் ட்ரீட்மென்ட் பண்ணா கண்டிப்பாக அந்த ரெண்டு நாளைக்கு முன்னாடி நாள் அந்த பேஷண்ட் மூளை சாவு அடைந்ததா ரிப்போர்ட் வந்து இருக்கு அது எங்களுக்கு புரியல அதனால்தான் சிசிடிவி ஃபுட்டேஜ் பார்க்கும்போது அந்த பேஷண்ட்ட சில நபர்கள் மாஸ் அனிந்து எங்கேயோ தூக்கிட்டு போற மாதிரி ஒரு கிளிப்பிங் மேனேஜ்மென்ட் கிட்ட ரிப்போர்ட் பண்ணா அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க உங்களுக்கு தேவையில்லாததுன்னு சொல்லி ஒதுக்க பாக்குறாங்க கோபம் எனக்கே இந்த நிலைமை அதனால்தான் இதை சும்மா விடக்கூடாதுன்னு நான் இங்க வந்து ரிப்போர்ட் கொடுத்து இருக்கேன் நீங்க தான் இந்த வீடியோ பார்த்து தக்க விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்"


இன்று பணிவாக சொல்லிவிட அவள் கொடுத்த சிசிடிவி ஃபுட்டேஜ் வீடியோவை உற்றுப் பார்த்து நீதிபதி..



"மகாலட்சுமி நீங்க ஒரு முறை இந்த வீடியோவை முழுசா பாத்தீங்களா??"


என்று வீடியோவை அவளை பார்க்குமாறு ஆணையிட அங்கு இருக்கும் நபரோ பணிவாக அந்த வீடியோவை அவளிடம் காட்டி ஒளிபரப்பு செய்தார்..


அதில் அதே நபரை அவர் இறந்ததாக கருதப்பட்ட நாளன்று அவரை அந்த இடத்தில் இருந்து நீக்கி பிணவறையில் வைக்கும் படி அமைக்கப்பட்டது அந்த வீடியோ அதை பார்த்தவளுக்கு அதிர்ச்சி இல்லையே முதலில் பார்த்தது உயிரோடு அவன் இருப்பவனை அனஸ்தேசியா கொடுத்து அங்கிருந்து தூக்கி செல்லும் வீடியோ தானே இது என்ன விசித்திரம் என்று தன் தோழியை பார்க்க அவ்வளவு முகத்தில் வேர்வை சொட்ட சொட்ட பேந்த பேந்த மொழித்துக் கொண்டு இருந்தாள்..


அப்பொழுது அனிருத் பக்கம் இருக்கும் வக்கில் தன் பக்க நியாயங்களை கூற அனிருத் பக்கம் வெற்றி வந்துவிடவே சிரித்துக் கொண்டே அங்கிருந்து விடை பெற்றான். இது மகாலட்சுமி கடும் கோபத்தில் இருந்தாள் தன் தோழிடம் அவள் தோழி சினேகா நடுங்கியவாறு அவளிடம் சென்று..



", தப்பா எடுத்துக்காதடி அவங்க என்னோட குழந்தையை எங்கேயோ மறைத்து வைத்திருக்கிறார்கள் வீடியோ மாத்தி இந்த பென்டிரைவ் கொடுக்க சொன்னாங்க இது குடுத்தா தான் குழந்தை பத்திரமா வீட்டுக்கு வரும்னு சொன்னாங்க சாரி டி எனிவே அனிருத் அண்ணா கெட்டவர் கிடையாது ஏதோ ஒரு விஷயம் இருக்கு அதனால்தான் இதெல்லாம் நடந்திருக்கு பாப்பாவ அவரு கிரீச்ல தான் வச்சிருக்காரு நான் தான் குழந்தையை கடத்திட்டாங்கன்னு தப்பா நினைச்சேன் ஏதோ இருக்கு அந்த பேஷன்ட் மேல நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் உன்னோட வாழ்க்கையை பாருடி நான் வரேன்"



என்று அவள் சென்று விட அங்கே தன்னந்தனியே நின்று கொண்டிருந்த மகாலட்சுமி எந்த ரூபத்தில் அவனுக்கு ஏதாவது ஒரு நன்மை நடந்து விடுகிறது ஏதாவது ஒன்று ஆப்பு வைக்கலாம் என்று பார்த்தால் முடியவில்லை என்று நினைக்க நினைக்க ஆத்திரம் பொத்திக் கொண்டு வந்தது

சிறிது நேரத்தில் மேகம் கருத்து சிறு சிறு துளிகளாக வந்தது மழை குடை கூட இல்லாமல் நனையும் போது தான் தெரிந்தது அவள் இன்னும் அங்கே நின்று கொண்டிருந்தாள் என்று சரி விரைவாக சென்று ஸ்கூட்டி இல் அமர்ந்து செல்லும் பாதி வழியில் ஓரிடத்தில் பஞ்சர் ஆகிவிட எப்படி செல்வது என்று முழித்துக் கொண்டிருக்கும் சமயம் அவள் அருகில் ஹார்னடிக்கப்பட்டது அனிருத் கொண்டு வந்து வாகனம்..



அவள் காதும் கிழியும் அளவிற்கு ஹாரன் அடித்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த மகா..


"அதான் நீ இருக்கிறது கூட மதிக்காம நான் ஓரமா தான் நின்னுகிட்டு இருக்க எதுக்கு காத கொய்யின்னு கிழிக்கிற மாதிரி ஆரன் அடிக்கிற எப்படியும் ஏதோ கோல்மால் பண்ணி என் பிரண்டு குழந்தையை வைத்து பிளாக்மெயில் பண்ணி காரியத்தை சாதிச்சிட்டன்னு பெருமை படுக்காத"


என்று கடுகடுவென்று பேச அவனும் தன் பக்க இருக்கையின் கதவை திறந்து உள்ளே ஏறு என்று சைகை காட்ட அவன் பேசாமல் ஏதோ சைகையால் சொல்வதை ஒருவித கலவரத்தை உருவாக்க இதற்கு மேல் பிரச்சனை உருவாக்க வேண்டாம் மேலும் வீட்டிற்கு சீக்கிரம் செல்ல வேண்டும் ஆனால் வண்டி அனாதையாக ரோட்டில் இருப்பதை அவனுக்கு சுட்டிக்காட்ட..


அதை பார்த்து புரிந்து கொண்டவன் யாருக்கோ அழைப்பு விடுக்க பத்து நிமிடத்தில் ஒரு நபர் வந்து..


"கொஞ்சம் டேமேஜ் நிறைய இருக்கு நான் ஷெட்டுக்கு எடுத்துட்டு போயிட்டு நாளைக்கு நம்ம வீட்டுக்கே வந்து கொடுத்துட்டு போயிடுறேன் சார்"


என்று பணிவாக சொல்லிவிட்டு அந்த ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட பெருமூச்சு விட்ட மகா நிம்மதியாக காருக்குள் சென்று அமர்ந்து கதவை மூட கார் மின்னல் என பறந்தது எங்கேயோ அழைத்து செல்கிறான் ஆனால் அமைதியாக வந்தாள் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை டவுனை தாண்டி கிராமத்திற்கு முக்கா மணி நேரம் பயணம் தேவைப்படும் ஆனால் இங்கே நீண்ட நேரமாக பயணம் மேற்கொண்டு இருந்தது



"வீட்டுக்கு போகாம எங்க போயிட்டு இருக்கோம்??"


என்று கேட்க அவள் யாரோ போல் தன்னிடம் பேசுவது நினைக்க நினைக்க அனிருத் மனம் வெந்து போய்விட்டது


"எப்பிடி ரெண்டு மாசம் ரத்தம் சதம் மாதிரி வாழ்ந்துட்டு இப்ப எப்படி என்ன யாரோ மாதிரி ட்ரீட் பண்ற ஏன் நீ ரொம்ப மாறிட்ட அவ்வளவு மோசமானவனா நானு இல்ல என்னோட காதல் உனக்கு புரியலையா சீதா"



என்று சீதா என்று உருக்கமாகவும் அதே சமயம் அவள் இதயத்தில் இறங்குவது போலவும் அழைத்தவுடன் அவள் கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்க்காமல் இல்லை ஆனால் அதை உள் இழுத்துக் கொண்டவள்


"அனாவசியமா எதுவும் பேச வேண்டிய நேரம் இல்லை ஒழுங்கா வீடு பக்கம் வண்டியை திருப்புங்க நீ இப்ப எங்க கூட்டிட்டு போறேன்னு எனக்கு தெரியும் என்னதான் நீ இப்போ பேசினாலும் அன்னிக்கு நீ பேசுனது என்னால மறக்க முடியல ராம்"


என்று அவளும் ராம் என்று உடைந்து அழ ஆரம்பிக்க அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் சட்டையின் மேல் மூன்று பொத்தான்களை அவன் போடவில்லை என்பதால் அவன் நெஞ்சில் வாகாக சாய்ந்து அழ ஆரம்பிக்க அவள் கண்ணீர் அனைத்தும் அவன் நெஞ்சை நினைத்து ஒருவித உஷ்ணத்தை உண்டு பண்ணியது..


"மனசுல காதல் இன்னும் இருக்குடி உனக்கு ஆனா ஏன் வெளியே சொல்ல இவ்வளவு தலைகனம் நான் அன்னைக்கு அப்படி என்ன சொல்லிட்டேன் சீதா என்ன விட்டு எங்க போய்ட போறான்னு பயத்துல தான் அப்படி பேசினேன் ஆனா என்ன பத்தி கொஞ்சம் கூட நீ யோசிக்கவில்லை தானே நான் மட்டும்தான் என் சீதா எப்ப வேணாலும் என்கிட்ட வருவா அப்படின்னு புலம்பி கொண்டு இருந்த போல"



இன்று இறுதியாக பரிதாபமாக சொல்ல


"எனக்கு உங்க மேல காதல் எல்லாம் இருக்கு ஆனால் நான் எவ்வளவு சென்டிவ் முன்கோபகாரி உங்களுக்கு தெரியும் அதுவும் என்கிட்ட அழுத்தம் ஜாஸ்தி நான் மத்த ரெண்டு பேரும் மாதிரியும் இல்லை என்னால நீங்க சொன்ன வார்த்தை தாங்கிக்க முடியல அதனால தான் அது மட்டும் இல்லாம படிப்பும் இருக்கு எப்படியோ தனியா தான் இருந்தாகணும் அதுதான் இது ஒரு சாக்கு ஆனா என் தங்கச்சியை அழவெச்சிட்டு சந்தோஷமா புகுந்த வீட்ல என்னால இருக்க முடியுமா எங்களுக்காக தானே என் தங்கச்சி அவ்ளோ பெரிய காரியத்தை பண்ணா தன்னோட வாழ்க்கை இழந்து நிக்க நாங்க ரெண்டு பேரு மட்டும் சந்தோஷமா உங்க கூட குடும்பம் நடத்தி இருக்கிறது நினைக்கும்போதே எனக்கு வலிக்குது



ஆல்ரெடி உங்களுக்கு தெரியும் நாங்க ரெண்டு பேரும் விசாவ ஒரு குழந்தை மாதிரி தான் ட்ரீட் பண்ணிட்டு இருக்கோம் உங்களுக்கு அவளை பத்தி தெரியாது சொன்னாலும் புரியாது அதுதான் டிஸ்கஸ் பண்ண போறாங்களா எங்க முடிவு பத்தி ஆல்ரெடி உங்களுக்கு தெரியும் நினைக்கிறேன் நாங்க முடிவு எடுத்துட்டோம் இந்த உறவுக்கு ஒரு மு"




முற்றுப்புள்ளி என்ற வார்த்தையை பேசவிடாமல் அவள் இதழ்களை தன் இதழுக்குள் அடக்கி கொண்டான் அனிருத் இவ்வளவு கொடூரமான வார்த்தை அது கேட்ட பிறகு அவனால் இருக்க முடியுமா அவன் சீதாவை தான் விட்டுவிட முடியுமா எத்தனை வருட காதல் இது வெளியே பார்த்தல் எலி பூனை போல் அதுவும் யாரோ போல் நடந்து கொள்பவர்கள் மனதிற்குள் 10 15 பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு வாழ்பவர்கள் ஆயிற்றே..



இப்படியே விட்டால் இது சரி வராது என்று இதழ்கள் அவள் கழுத்தின் கீழ் ஊர்வலம் நடத்த காருக்குள் பாதி கற்பழிப்பு நடந்து விட்டது உடல் எங்கும் முத்தத்தை வைத்து அவள் மேல் துப்பட்டாவை விளக்கி நெஞ்சு குழி முத்தமிட்டு அங்கத்தை ருசித்து அவளை கிரங்கடித்தான்..


அபாய கட்டத்தை அவன் கைகளும் இதழ்களும் கடக்கும் போது தான் நிலவரம் புரிந்து கொண்டவள் அவனை தடுத்து நிறுத்தி கன்னத்தில் ஓங்கி அறைந்து..



"இதெல்லாம் பண்ணா மட்டும் உன் பின்னாடி வந்து விடமாட்டேன் இப்படி பண்ணா உன் பின்னாடியே இந்த ஆசைக்காக வருவ நினைச்சிங்கனா இனி உங்க சீதா வ உயிரோடவே பார்க்க முடியாது"



என்று இறுதி வார்த்தை அழுத்தம் கொடுக்க அனிருத் கரங்கள் சும்மா இல்லாமல் அவள் கன்னத்தை பதம் பார்த்ததே இப்படி இருவரும் மாறி மாறி சண்டை போட்டு பல முத்தங்களும் நடைபெற்றது இது இப்போது நடக்கும் சண்டையா எப்போதெல்லாம் தனிமை கிடைக்குமோ இருவரும் இதைத்தானே பேசிக்கொண்டு அடித்துக் கொள்வார்கள் இறுதியில் முத்தமிட்டும் சமாதானம் செய்வார்கள் ஆனால் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்ற பிரச்சினைக்கு..



"டிஸ்கஷன் நடக்கும் பொழுது நீ நமக்கு சாதகமாக தான் சொல்லுற இல்ல நான் வேணா அப்படி நினைச்சேன்னா உன்னை நான் உயிரோட இருக்க மாட்டேன் கழுத்துல அஞ்சு பவுன்ல போட்டு மறைத்து வைத்திருக்க பாரு அதை கழட்ட வேண்டிய நிலைமை வரும் மனசுக்குள்ள பெரிய சீதாதேவி நெனச்சு தானே ஏழு வயசுல எனக்கு மாலை போட்டு பாதி கல்யாணத்தை முடித்த அதுவும் அந்த வயசிலேயே அவ்வளவு போட்டி வேற ஒரு பொண்ணு சீதாவா நடிக்க வேண்டியது நடுவுல நீங்க குழப்பி குட்டி சீத்தாவா என் கூட நடிச்சீங்க நம்ம கல்யாணம் சாதாரண முறைனு நினைச்சாலும் நீ மனசுக்குள்ள அது பெரிய விஷயமா நினைச்சு தான் கல்யாணம் பண்ண நான் உன்னை தொடாத இடமா முத்தம் கொடுக்காத இடமா ரத்தம் சதையுமா வாழ்ந்த வாழ்க்கை இது என்னால விட்டுக் கொடுக்க முடியாது பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு"



என்று சொல்லி முடித்தவன் வண்டியை ஓட்டுவதில் கவனம் செலுத்தினான் வீடு வரும் வரை எதுவும் பேசவில்லை இருவரும் அவன் மனதில் 75% நம்பிக்கை இருந்தது.


ஆனால் இவள் மனதிலோ எப்படி இந்த வாழ்க்கை சாத்தியம் என்று நினைத்துக் கொண்டே தலைவலி அதிகரித்தது..



வீடு வந்தவுடன் யாரையும் பார்க்காமல் ஓடி சென்று தன் அறைக்குள் முடங்கிக் கொண்டாள் மகா அனிருத் அனைவரிடமும் அங்கு நடந்த விஷயத்தை கூற அவர்களும் எதுவும்
பேசாமல் சரி என்று அமைதியாக சென்று விட்டனர்..



இங்கே ஆரவ் தன்னுடைய அறையில் காமினியின் வெற்று மார்பில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்தான்…
 

Author: srija
Article Title: 8) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.