4) ராகம்

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
74
Reaction score
1
Points
8
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 4


வீட்டுக்குள் நுழைந்தவர்களை


"தாத்தா ,பாட்டி, சித்தி, மாமா"


என்ற மழலை மொழியில் வந்தவர்களை வீட்டிற்கு வரவேற்றனர் அபி ரேயனின் தவப்புதல்வி பெற்ற செல்வங்கள்..


" அட ரோகன் ரோகினி வாங்க வாங்க"


என்று ஹர்ஷா அனிருத் ஆளுக்கு ஒரு பிள்ளையை தூக்கி முத்தம் கொடுக்க..



"போங்க மாமா நான் உங்ககிட்ட பேசவே மாட்டேன் உங்ககிட்ட மட்டும் இல்ல சின்ன தாத்தா சின்ன பாட்டி பெரிய தாத்தா பெரிய பாட்டி எல்லார் கூடையும் நான் பேசமாட்டேன் நீங்க ஏன் எங்கள பாக்க வரவே இல்ல நாங்க மட்டும் தான் அங்க வந்தோம் அப்புறம் நீங்க எங்க வரவே இல்ல அத்தைங்க கூட இன்னிக்கு தான் வந்தாங்க யாருமே இல்லாம எவ்வளவு போர் தெரியுமா நகுல் சித்தப்பா கூட இப்ப என்கூட டைம் ஸ்பென்ட் பண்றது கிடையாது"


என்று ரோகிணி உதட்டைப் பிதுக்கிக்கொள்ள அதற்கு ரோகனும் ஆமாம் போட அனைவருக்கும் ஐயோ என்று ஆகியது பெரியவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபத்தை சிறியவர்கள் அறிய மாட்டார்களே...


"அதான் எல்லாரும் வந்தாச்சுல கண்ணா இது நம்ம ஜாலியா இருக்கலாம் சரி எங்க பாட்டி அம்மா அப்பா எல்லாம்"


என்று கேட்க


அவர்கள் பேசுவதற்கும் வெளியே கோலம் போட்டு முடித்த மகா காமினி விஷாகா மூவரும் உள்ளே வரவும் சரியாக இருந்தது அவர்கள் பேசுவதை கேட்ட மகா ருக்மணியை பார்த்து


"அத்... ஸ்.. அவங்க கோவிலுக்கு போயிட்டு அய்யர் கிட்ட பேசிட்டு வர போய் இருக்காங்க ஒரு அரை மணி நேரத்துல வந்துருவாங்க விஷாகா அவங்களுக்கு ஏதாவது கொண்டு வா"


என்று சொல்லி அவளை அனுப்பி வைக்க அவளும் கிச்சனுக்குள் சென்று யார் யாருக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து அவர்களுக்கான பானத்தை தயார் செய்து வைக்க இங்கு அதற்குள் இவர்கள் அவர்கள் அறைக்குள் சென்று புத்துணர்ச்சியாக வேற்றுடை மாற்றிக் கொண்டு ஹாலில் ஹாஜராகி இருந்தனர்..


ரோகன் ரோகினி இருவரும் சொல்லும் விஷயங்களை கொஞ்சும் மொழியில் பேசும் பிஞ்சுகளை ரசித்துக் கொண்டே இருக்க ஒரு பெரிய ட்ரேவில் அனைவருக்கும் பானத்தை எடுத்து வந்தவள் அவர்களிடம் நெருங்க பயந்து போய்..


"மினி அக்கா எல்லாருக்கும் இதை கொடுங்க எனக்கு கொஞ்சம் கிச்சன்ல வேலை இருக்கு நான் போறேன்"


என்று அவசர அவசரமாக கொடுத்துவிட்டு கிச்சனுக்குள் பதறி அடித்துக் கொண்டு சென்று விட்டாள் மினி மனம் வேதனைக்கு உண்டாகியது பொத்தி பொத்தி செல்லமாக வளர்க்கப்பட்டவள் ஏற்கனவே நிறமும் மெலிந்த உடலைப் பார்த்து கேலி செய்பவர்களை ஓரளவுக்கு எதிர்க்க கற்றுக் கொண்டாலும் வாழ்க்கையில் இது படக்கூடாத பெரிய அவமானம் அந்த வலியை மறக்க முடியாதவள் யாரிடமும் முழுமையாக சந்தோஷமாக பேசி பல நாட்கள் ஆகிவிட்டது இதோ இவர்களை எதிர்க்க கூட தெம்பு இல்லாமல் இப்படி நடுங்கி போய் இருக்கிறாளே காரணமானவர்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அவளுக்கு கோபம் தான் வந்தது..


இருவருக்கும் அந்த சம்பாஷனையை மொத்த குடும்பம் பார்க்க தான் செய்தது ஆனால் எதுவும் பேசவில்லை ..


திரும்பி அவர்களை பார்த்து மினி பார்வையாலேயே கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாதவர்கள் என்று சொல்லாமல் சொல்லியது அவளது பார்வை.


அனைவருக்கும் அவரவர்களுக்கு பிடித்த பானத்தை கொடுக்க அனைவரும் அதை பார்த்து


'இன்னும் வரைக்கும் எல்லாருக்கும் என்ன பிடிக்கும் தெரிஞ்சு வச்சிருக்க இவளுக்கு போய் இப்படி ஆயிடுச்சு'


நொந்து கொண்டனர் ஆனால் அவன் ஒருவனைத் தவிர செய்த பாவத்திற்கு இதெல்லாம் தண்டனையாக்கும் என்பது போல் இருந்தது அவனது செயல்..


இங்கே மஹாவுக்கு பதட்டமாகவே இருந்தது நாளை தீர்ப்பு அவள் கேஸ் போட்டுட்டு சும்மாவா ஏகே நிறுவனத்தின் மீது தலைமை கிளை இங்கேதானே இருக்கிறது அதனால் இங்கே இருக்கும் நீதிமன்றத்தில் தான் முக்கியமாக இவர்கள் வந்த காரணமே இதுதான் ஊருக்கே வரக்கூடாது என்ற முடிவு செய்தார்கள் ஆனால் நீதிமன்றத்தில் வேலை இருப்பதால் தான் மூன்று பெண்களும் ஒன்றாக வந்திருந்தனர் தனக்கு சாதகமாக கேஸ் வரவேண்டும் ஏதோ ஒரு சூழ்ச்சி நடக்கிறது அதை கண்டுபிடிக்க வேண்டும் முக்கியமாக அனிருத் அனைவரும் முன்பும் தலைகுனிய வேண்டும் அதுதான் அவளுக்கு தேவையானது..


சிறிது நேரத்தில் அனைவரும் ஓய்வெடுக்க செல்லம் ஒரு மணி நேரம் கழித்து வந்தனர் ரஞ்சினி அவளது கணவன் அசோக் சாத்விகா அவரது கணவன் அர்ஜுன்..



ஏற்கனவே தகவல் சொல்லப்பட்டதால் சாத்விகா மகிழ்ச்சியாக

"அம்மா அப்பா ருக்கு மம்மி ஆத்மி மம்மி அமர் டாடி க்ரிஷ் பா "


என்று அனைவரையும் அழைத்துக் கொண்டே நடு ஹாலில் கத்திக் கொண்டிருக்க அவள் குரல் கேட்டவுடன் மொத்த குடும்பமும் வந்தது நின்றது..


"வாங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா"


என்று ரஞ்சனி அசோக் கண்களில் ஜீவன் இல்லாமல் வாய் நிறைய புன்னகையோடு கேட்க இவர்களும் நலம் விசாரிக்க ஒரு மௌன பரிமாற்றம் நடந்து கொண்டது..


ஆனால் அர்ஜுன் யாரிடமும் பேசவில்லை..


இதைப் பார்த்து ருக்மணி


"என்ன மாப்ள நல்லா இருக்கீங்களா வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு"


என்று சாதாரணமாகவே பேச அவன் கடமைக்காக.


"ம்ம்.. போயிட்டு இருக்கு எனக்கென்ன நல்லா தான் இருக்கேன் நீங்க எல்லாரும் நல்லா இல்லன்னு சொல்ல முடியாது நல்லா தான் இருக்கீங்க ரொம்ப சந்தோஷமா..


அப்புறம் சாத்வி எல்லாரையும் கவனிச்சுக்கோ சரியா யார் மனசையும் நோக்கமா பாத்துக்கோ நம்ம வீட்டுக்கு வந்தவங்கள நம்ம தான் மரியாதையா நடத்திக்கணும் "


என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட அனைவருக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது மூச்சுக்கு நூறு முறை அத்தை மாமா அத்தை மாமா என்று அழைப்பவன் ஏதோ யாரோ விருந்தாளிகள் வந்திருப்பது போல் நடத்துகிறானே என்று.


"சாரிப்பா சாரிமா உங்களுக்கு தான் தெரியுமில்ல நீங்க எதைப் பற்றியும் தப்பா நினைச்சுக்காதீங்க சரி பிரயாணம் எல்லாம் எப்படி இருந்துச்சு??"


என்று பேச்சை மாற்றிவிட அவர்களும் நீண்ட நாட்கள் கழித்து அவளை பார்த்த மகிழ்ச்சியில் அனைவரும் ஒன்றாக கூடி அமர்ந்து அவளுடன் பேசிக் கொண்டிருந்தனர் ரஞ்சினி தன் கணவருடன் அறைக்குள் அடங்கி விட்டார் அர்ஜுன் வேலை விஷயமாக வெளியே சென்று விடும் இங்கே பின்பக்கம் தோட்டத்தில்

காமினி பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருக்க மகா தனது ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு விஷாகா பூக்களே கோர்த்துக் கொண்டிருந்தாள்..


"அத்தை அத்தை நம்ம மட்டுமே விளையாடிட்டு இருக்கோமே மாமா சித்தி எல்லாம் வந்திருக்காங்களே அவர்களையும் கூப்பிடலாம் இல்ல"


என்று பிள்ளைகள் இருவரும் மடம் பிடிக்க சுருக்கென்று கோபம் வந்த மினிக்கு


"அவ்ளோ ஆசையா இருந்தா உங்க சித்தி மாமாங்க கூட நீங்களே விளையாடிக்கோங்க நாங்க எதுக்கு போங்க"


என்று கையில் வைத்துக் கொண்டிருந்த பந்தை தூக்கிப்போட்டு அங்கிருந்து சென்றுவிட..


"அடடா மினி உனக்கு ஏன் இவ்வளவு கோவம் வந்துகிட்டே இருக்கு எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு தான் நம்ம இப்படி இருக்கும் சும்மா நீ அதை ஞாபகப்படுத்துற மாதிரி ஏதாவது ஒன்னு பண்ணாத இவங்க சின்ன பிள்ளைங்க இவங்க என்ன பண்ணாங்க குட்டீஸ் நீங்க பீல் பண்ணாதீங்க நீங்க என்ன பண்றீங்க காவியா உங்க மாமாங்களை கூப்பிட்டு விளையாடிக்கோங்க..


விஷா வா நாம் கிளம்பலாம்"


என்று அவளை கையோடு அழைத்து சென்றுவிட அவர்கள் குழந்தையோடு பேசுவது முதல் இப்போது செல்வது வரை பார்த்து கொண்டுதான் இருந்தனர் காவியா ஹர்ஷா ஹாரர் அனிருத்..


"என்ன ப்ரோ உன் உன் ஆளுக்கு இன்னும் கோபம் போல ஒரு மாசம் உன் கம்பெனில தானே இருந்தா பெருசா பேசுன நான் அப்படி கரெக்ட் பண்ணிக்கொண்டு போய் இப்படி கரெக்ட் பண்ணுவேன் அப்படின்னு ஒன்றும் பண்ண காணோம் அதோ அஞ்சு ரூபா டாக்டர் சுத்தம் கேஸ் போடுற அளவுக்கு வந்தாச்சு ஒருத்தர பத்தி சொல்றதுக்கு ஒன்னும் கிடையாது"


என்று ஹர்ஷாவை பார்த்து முணுமுணுக்க அதைக் கேட்டவுடன் தங்கையை பார்த்து முறைக்க..


"சரி சரி பசங்க பீல் பண்ணிக்கிட்டு இருக்காங்க வாங்க உங்க கூட விளையாடலாம்"




"ரோகன் பீல் பண்ணாதடா நம்ம விளையாடலாமா. "


என்று காவி குதூகலமாக கேட்க பிள்ளைகளும் சரி என்று தலையாட்டி அவர்களுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தனர்..



மினி மகா விஷாகா மூவரும் அறைக்குள் முடங்கிக் கொண்டனர் ...


ஜன்னல் வழியாக தோட்டத்தை எட்டிப் பார்த்த ரஞ்சினி..


"எப்படித்தான் எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இருக்க முடியும் தெரியல என்ன இருந்தாலும் பொண்ண பெத்தவங்க நம்ம தானே அன்னைக்கு நம்ம அவசரப்பட்டுக் கூடாது நானும் என்னதான் பிரண்ட்ஷிப் இருந்தாலும் ஒரு கட்டத்துல குடும்பம் வேற ஃப்ரெண்ட்ஷிப் வேற இருந்திருக்கணும் கடைசியில் என் பொண்ணுங்க வாழ்க்கையை வெறுத்துப் போய் இருக்காங்க இப்ப கூட கொஞ்ச நேரம் தோட்டத்துல இருந்தாங்க அதுக்குள்ள ரூம்குள்ள வந்துட்டாங்க மன்னிச்சிடுங்க என்னால் இந்த பொண்ணுங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க முடியல"


என்று ரஞ்சனி குரல் தழுதழுக்க அசோக் கரங்களைப் பற்றிக்கொள்ள..


"விடுமா இதெல்லாம் தெரிஞ்சா நடக்குது நம்ம பக்கம் தப்பு இருக்கு இல்ல அவங்க பாக்கவும் தப்பு இருக்கு முதல்ல மனசு பொருத்து தான் எல்லாமே இருக்குன்னு சொல்லுவாங்க நம்ம அதை புரிஞ்சுக்கல நம்ம சொன்ன ஒரு வார்த்தைக்காக எதையும் யோசிக்காமல் நம்ம பொண்ணுங்க பண்ண விஷயத்துக்கு நம்ம தான் பெரிய புண்ணியம் பண்ணி இருக்கணும் இப்போ அவங்க அவங்க வேலையில பிஸியா இருக்காங்க பொண்ணுங்களுக்கு அழியாத கல்வியை கொடுத்திருக்கோம் அது அவங்கள காப்பாத்தும் பாரு எல்லாத்துக்கும் பயந்து ஒதுங்கி போன நம்ம விஷாகா கூட்டி கூட இப்ப தைரியமா பத்து பேக்கரிக்கு ஓனர் என்கிற பெருமையை சேர்த்து வச்சிருக்கா..


இங்க பாரு உன் சின்ன புள்ள வர நேரம் ஆச்சு நீ இப்ப கண்ண கசக்கிட்டு இருந்த வீட்ட ரெண்டு பண்ணிடுவான் கண்ண தொடச்சுக்கோ மா என்ன இருந்தாலும் இது நம்ம வீடு இல்ல சீக்கிரமா நம்ம வீடு கட்டி முடிச்ச உடனே நம்ம எல்லாரும் அங்க குடி போயிடும் போதும் நம்ம இந்த சமஸ்தானத்தை பார்த்து விட்டது வந்தவங்கள போய் என்ன எதுன்னு விசாரி அவங்க கூட சந்தோஷமா இரு கடவுள் நம்மள பாத்துப்பாங்க"


என்று மனைவியை சமாதானம் சொல்லி அனுப்பி வைத்து விட்டான் ஆனால் அவன் மனதில் இருக்கும் பாரத்தை எப்படி சொல்வான் பெற்ற மகள்கள் வாழ்வு இப்படி கேள்விக்குறியாக இருப்பதை பார்த்த தந்தை எவனாவது சும்மா இருப்பானா இருக்கிறானே வேறு வழியில்லை மகள்கள் சொல்லிவிட்டார்களே எதுவும் சொல்ல வேண்டாம் என்று பல்லை கடித்துக் கொண்டிருக்கிறான்..


அவன் ஒரு நிமிடம் நினைத்தால் அபியை பார்த்து நான் மட்டும் உதவாமல் இருந்திருந்தால் இந்நேரம் நீங்கள் சின்னாபின்னமாகி இருப்பீர்கள் நான் செய்த உதவியாள்தான் இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்று ஆனால் சொல்லிக் காட்டு பழக்கத்தை உடையவன் அவன் அல்ல கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று அமைதியாக இருக்கும் ரகம்..



இதோ மாலை நேரம் வந்துவிட ஆறு மணி அளவில் பிரமாண்டமாக இருக்கும் பகதூர் சமஸ்தான பூஜை அறை..

மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இறைவனை வழிபாடு செய்தனர் மூன்று பெண்களும்..


இப்பொழுது அனாமிகா பகதூர் சமஸ்தானத்திற்கு இடைப்பட்டிருக்கும் இசை மட்டும் நடனப்பலியில் விஷாகா மற்றும் காமினி பொறுப்பேற்று இருக்கின்றனர் ..


இருவரும் இசையும் பரதமும் நல்வழியில் கற்று அரங்கேற்றம் செய்து இருக்கின்றனர்..


அருகில் இருக்கும் டியூஷன் சென்டர் நீட் கோச்சிங் சென்டர் அனைத்தையும் மகா பார்த்துக்கொண்டாள்

ஆனால் அவளுக்கும் நாட்டியம் நன்றாக வரும் பாடல் தான் கொஞ்சம் அவளுக்கு சுமார்..


இதோ அனைவரும் மாலை 6:00 மணி ஆகியவுடன் குடும்பமாக அங்கு ஆஜராகிவிட்டனர் எப்பொழுதும் சரி ஆறு மணிக்கு பூஜையை முடித்து மூன்று பெண்களும் மெய் மறந்து இறைவழிபாடு செய்யும் அழகை குடும்பமே பார்ப்பார்கள் இதோ அவர்களுடன் அபி குடும்பத்தாரும் அமர்ந்திருக்க..



"குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா"


"கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி

நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி

நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

யாதும் மறுக்காத மலையப்பா

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்

ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா

ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா".......



என்று விஷாகா அங்கே அமர்ந்து கண்களை மூடி மெய் மறந்து பாட இங்கே அதற்கு கேட்ட ஜதி தாளம் அபிநயங்கள் கொண்டு காமினி மகாலட்சுமி இருவரும் மயில் போல் நடனமாடிக்கொண்டு முடிக்க பலத்த கரகோஷம் விழுந்தது அப்பொழுதுதான் கவனித்தனர் சுற்றி அத்தனை பேர் தங்களை தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று இருவரும் அமைதியாக ஓரமாக நின்றுவிட இங்கே ஒருத்தி பாடி முடிந்த பிறகு கண்களை மூடி கண்ணனே கெதி என்பது போல் கண்கள் வழியும் கண்ணீரை துடைக்காமல் அப்படியே அமர்ந்திருக்க..


"விஷாகா வா போலாம்"


என்று மினி அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அழைக்க சென்று விட்டாள் அவள் பின்னால் மகாவும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து சென்றுவிட..


அனைவருக்கும் என்னவோ
போல் இருந்தது..



"என்ன என் தங்கச்சிங்க மூணு பேரும் படுற கஷ்டத்தை பார்த்து சந்தோஷமா கைதட்டி போக வந்தீங்களா "


என்று கரகரப்பான குரல் கேட்க அனைவரும் யார் என்று திரும்பிப் பார்க்க அங்கே அனைவரையும் முறைத்தது போல் நின்று கொண்டிருந்தான் நகுலன்.
 

Author: srija
Article Title: 4) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.