25) பார்வை 😍

srija

srija novels
Staff member
அத்தியாயம் 25

அது விஜய் ரெஸ்டாரண்ட்க்கு சில தொலைவில் இருக்கும் ஒரு இன்னொரு ஐந்து நட்சத்திர ரெஸ்டாரண்ட் அதுவும் நல்வழியில் சென்று கொண்டிருப்பதனால் அங்கே தான் தன் நண்பன் வேலை பார்ப்பது அதன் கணவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக தன் கர்ப்பமாக இருக்கும் பாசிட்டிவ் கிட் எடுத்து டெக்ரேசன் எல்லாம் செய்து ஒருமுறை மேற்பார்வை பார்த்துவிட்டு தன் நண்பனை பாராட்டியபடி வெளியே வந்து நிற்க

"என்ன அஞ்சு உன்னோட வீட்டுக்காரருக்கு பயங்கரமான சர்ப்ரைஸ் போல இருக்கு ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு தெரிஞ்சு போச்சு வாழ்த்துக்கள் தனிமையே உன்னோட வாழ்க்கையா இருந்துச்சு இப்போ உனக்கு ஒரு குடும்பம் இருக்கு இப்போ உனக்கும் ஒரு குட்டி பாப்பா பொறக்க போகுது கண்டிப்பா உன்னுடைய சீமந்தம் பாப்பா பொறக்கும் போது எனக்கு சொல்லணும் சரியா??"என்று அவன் சொல்லிக் கொண்டே போக

"கண்டிப்பா உனக்கு சொல்லாம இருக்க மாட்டேன் எப்பவுமே நீ எனக்கு முக்கிய ம் தனிமையில் இருக்கும்போது நீதான் என்ன சக மனுஷியா பார்த்து பழகி எனக்குனு உற்ற நண்பனா இருந்தது உன்னை விடமாட்டேன் எப்பவுமே நீ எனக்கு உயிர் நண்பன் அதுக்கு மேல"

என்று நண்பனின் கரங்களைப் பிடிக்க அவன் ஆதரவாக அஞ்சலியை தன் வளகரத்தால் அணைத்துவிட்டு விடுதலை செய்ய

1000274293.jpg


இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை தன் ரெஸ்டாரண்டுக்கு செல்லும் வழியாக அஞ்சலி நின்று கொண்டிருக்கும் ரெஸ்டாரண்டை தாண்டி சென்றது விஜயின் கார் கூட ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் அரிய அமர்ந்து கொண்டிருந்தார் இருவரும் எதிர்சியாக அந்த காட்சியை பார்க்க வேண்டியதாக இருந்தது...

பிறகு ஏதோ அஞ்சலி ஹோட்டல் ரூமில் மறந்து போனதால் மீண்டும் தன் நண்பனோடு உள்ளே சென்று விட

அப்பொழுது அந்த தொழிலதிபர்..

"அந்தப் பையன் பார்க்க சின்ன பையன் மாதிரி இருக்கு பொண்ணுக்கு கல்யாணம் ஆன மாதிரி இருக்கு ஒருவேளை வேற விஷயத்துக்காக வந்திருக்காங்க போல இப்ப எல்லாம் கல்யாணமான பொண்ணுங்க தான் புருஷன் கிட்ட எதுவும் கிடைக்கலைன்னா இந்த மாதிரி போக வேண்டி தான் இருக்கு நம்ம கிட்ட சொத்து பணம் இருந்தாலும் அது இருந்தா தான் பொண்டாட்டி அமைதியா நம்ம கூட இருப்பா உதாரணத்துக்கு நானே என் பொண்டாட்டிக்கு எல்லாமே கொடுத்தேன் ஆனா என் கூட திருப்தி இல்லன்னு என் முகத்தில் காரி துப்பாத குறையா யார் கூடயோ ஓடிப்போயிட்டா பக்கத்துல இருந்து இந்த பொம்பளைங்கள நம்பவே மாட்டேங்குது. அதுவும் இந்த கல்யாண வாழ்க்கையே அடியோடு வெறுத்துப் போனேன் மறுபடி அடிச்சு புடிச்சு மறுபடியும் ஒரு கல்யாணம் பண்ணி வச்சாங்க நல்ல வேலை வாய் பேச முடியாத ஊமை அதனால வீட்டோட அடைந்து எச்சரிக்கை பிரிண்ட் குழந்தைகள் வெளிநாட்டில் பேசிட்டு இருக்காங்க எப்பவுமே சரி நாம நம்ம குழந்தைங்க கரெக்ட்டா இருக்கனும்னா பொண்டாட்டி வரவ கரெக்டா இருக்கணும் எனக்கு இப்பவாச்சது ஒரு ஊமங்கறதால அடியோடு வீட்ல வச்சிருக்கேன் 25 வருஷமா அமைதி காத்து இருக்கா என் முதல் பொண்டாட்டி மாதிரி கிடையாது அப்புறம் உங்க கூட கல்யாணம் ஆச்சுன்னு கேள்விப்பட்டேன். உங்க வைஃப் இந்த மாதிரி கிடையாது இல்ல எனக்கு ஆம்பளைங்க கூட சிரிச்சு பேசி கைய புடிச்சுகிட்டு போற பொம்பளைங்கள பார்த்தாலும் பிடிக்கவே பிடிக்காது அப்புறம் உங்க வைஃபை எப்ப எங்களுக்கு அறிமுகப்படுத்த போகிறீர்கள் ஆக்சுவலி நானும் அந்த ஐலண்டுக்கு வரவேண்டியதா இருந்துச்சு பட் என்னால வர முடியல ஏன்னா உங்க மனைவியை பார்த்து இருப்பேன். இந்த சோசியல் மீடியாவில் நான் இல்லாததால உங்க வைஃப் போட்டோ கூட என்னால பாக்க முடியல ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்து ஒரு டின்னர் சாப்பிட்டு போறேன்"இன்று அவர் சொல்லிக்கொண்டே போக விஜய் அதெல்லாம் கேட்கவில்லை தன் மனைவி ஒரு ஆணோடு தொட்டு தழுவி பேசிக்கொண்டு ஹோட்டல் ரூமுக்கு செல்வது அவனுக்கு வெறுப்பை கொடுத்தது. மேலும் இவர் சொல்வது போல் அப்படியா இருக்கும் இல்லையே அஞ்சலி அப்படி இல்லை என்று அவன் மனம் சொன்னாலும் இவர் எரியிற தீயில் என்னை ஊற்றுவது போல் பேசிக் கொண்டிருப்பது இன்னும் அவன் உடல் தகதகவென எரிந்தது தன் மனைவி கட்டுப்பட்டு இருந்தால் தான் குடும்பம் விளங்கும் என்று அவர் சொன்னது அவனுக்கு தோன்றியது வீட்டிற்கு சென்றவுடன் அவளுக்கு இந்த பாடம்புகட்ட வேண்டும் என்று முடிவு செய்தான்..

1000274294.jpg

,,,,,

அஞ்சலி வீட்டில் புத்துணர்வாக வலம் வருவது அனைவரும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர் வாசலை பார்ப்பதும் உருளை செல்வதுமாக அவள் இருக்க என்ன இவள் கணவனுக்காக இப்படி காத்திருக்கும் ரகம் இல்லையே என்று அனைவருக்கும் சந்தேகம்..

பிறகு விஜயின் கார் வந்தவுடன் வாசலில் அவனுக்காக ஆவலாக நிற்க உள்ளே வந்து விஜய் அஞ்சலி பார்த்துக்கொண்டே சற்றென்று அவள் கைகளைப் பிடித்து அப்படியே நடுக்கூடத்தில் தள்ளிவிட அஞ்சலி ஏதோ சொல்ல வர தன் கணவன் செயலில் அதிர்ச்சி அடைந்தவள் தன் வயிற்றை மெதுவாக பிடித்துக் கொண்டு கீழே விழுந்து இருக்க..

"இவ என்ன பண்றா ஏது பண்றான்னு வீட்ல இருக்குறவங்க யாரும் கவனிக்க மாட்டீங்களா புருஷன் வேலைக்கு போனா பொண்டாட்டி அடக்க ஒடக்கமா வீட்ல இருக்கணும் அத விட்டு தெருவுல கண்டவன் கூட சுத்த கூடாது புரியல ஏய் எங்கடி போயிட்டு வர??"என்று அவன் ஒரு விதமான குரலில் கேட்க அஞ்சலி பயந்து கொண்டு

"அது அது வெளிய என் பிரண்ட் பாக்க ரெஸ்டாரன்ட்"இன்று தத்து தடுமாறி சொன்னார் தன் கணவன் நம்புவான் இப்படியே சொன்னால் சர்ப்ரைஸ் இருக்காது அடி வாங்கினாலும் கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதில் பிடிவாதமாக இருந்தது இந்த பிள்ளை

"அடி செருப்பால புருஷன் வேலைக்கு போனதுக்கு பிறகு எவண்டி உனக்கு பிரண்டு அதுவும் ரெஸ்டாரண்டுக்கு போய் பாக்குற என்ன இந்த சைக்கோவ சொத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம் சுகத்துக்கு இன்னொருத்தர் தேடி போயிட்டியா ஏண்டி இந்த பொம்பளைங்க எல்லாம் இப்படி இருக்கீங்க எங்க வீட்டு பொம்பளைகளை பார்த்து இருக்கியா எல்லாரும் புருஷன் கூட அவங்கவங்க கேரியருக்கு சப்போர்ட் பண்றவங்க நீ கொஞ்ச நாள் ஆபீஸ்க்கு வந்த அதுக்கப்புறம் பாதியில போயிட்ட உடம்பு சரியில்லன்னு இருப்பேன்னு பார்த்தா எவன் கூடிய கொஞ்சி குலாவிக்கிட்டு என்ன பண்ணிட்டு வந்த யாருக்கு தெரியும்"என்று நாக்கில் நரம்பில்லாமல் பேச கோபத்தில் அஞ்சலி அவன் சட்டை பிடித்து

"என்னடா வாய்க்கு வந்தபடி பேசுற நான் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது ஒருத்தன் போனா இன்னொருத்தன் அப்படின்னு ஆரம்பத்துல இருந்து இப்ப வரைக்கும் உன் மேல மட்டும் தான் என் காதல் இருக்கு நீ தான் என் காதலை புரிஞ்சுக்கவே இல்லையே சரி நல்ல புருஷனா இருந்தா என்ன பண்ணி இருக்கணும் பொண்டாட்டி அங்கு எதுக்கு நிக்கிற அப்படின்னு காரை விட்டு இறங்கி வந்து என்னன்னு கேட்டு இருந்தா அப்பவே சொல்லி தொலைத்திருப்பேன் ஆனா உன்ன மாதிரி ஒருத்தன் கிட்ட இந்த விஷயம் சொல்றதுக்கு சொல்லாமலே இருக்கலாம் மத்தவங்க கூட படுக்க போற மாதிரி இருக்கா"என்று அவள் பொறுமையாக கேட்டாலும் அவ்வளவு ஆக்ரோஷம் அவள் சட்டை பிடித்து இருந்த வலிமையில் தெரிந்தது

"என்ன நடக்குது இங்க வீட்ல அஞ்சலி கொஞ்சம் பொறுமையா பேசுமா இவன பத்தி தெரிஞ்சு தான கல்யாணம் பண்ண இவன் வாயில வர வார்த்தைகள் எல்லாம் விஷ மாதிரி தாக்குது"

என்று ராதா ஒரு பக்கம் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அனைவரும் சத்தம் போட ஆனால் அவன்..

"இதுக்குதான் தகுதி பார்த்து கல்யாணம் பண்ணனும் லோ கிளாஸ் பொண்ணு நம்ம வீட்டுக்குள்ள உட்கார வச்சா இப்படித்தான் எல்லாரும் முன்னாடியும் புருஷன் அவமானப்படுத்திட்டு போவாங்க இப்ப என்னடி இதான் சாக்கு வச்சு என்னை விட்டு போகணும் உங்க அம்மா எப்படி உங்க அப்பனை விட்டு போனாள் அதே மாதிரி தானே"இன்று ஆக்ரோஷமாக பேசியவன் சற்று அஞ்சலி எதிர்பாரார் சமயம் அவள் பிடித்து தள்ளிவிட எப்படியும் தாக்குதல் நடைபெறும் என்று தன் வயிற்றில் பத்திரமாக பிடித்தவள் இங்கே எதிர்பாராத தாக்குதலில் அவள் அப்படி சோபாவில் வயிறு முட்டி அப்படியே சுருண்டு போய் கீழே விழ

"ஆஆஆஆஆ... என் குழந்தை"என்று கதறி துடித்து அழ

1000274295.jpg


ஒரு நிமிடம் அனைவருக்கும் சப்த நாடி அடங்கி போய்விட்டது வயிற்றைப் பிடித்துக் கொண்டு குழந்தை என்கிறாளே அப்படி என்றால் என்று அனைவரும் மகிழ்ச்சியாக அஞ்சலியை பிடிக்க வர இங்கே அவள் கதறும் சத்தத்தை கேட்டவன் சித்தபிரம்மையில் இருந்து மீண்டவன் போல் தன் மனைவிக்கு என்ன ஆனது அவள் குழந்தை என்கிறாளே என்னுடைய குழந்தையா என்று அப்படியே அதிர்ச்சியாக நின்று அவளே பார்க்க

"என்ன வேடிக்கை பாக்குறீங்க பிள்ளை உண்டாகி இருக்கா புரியலையா அவ சொல்றது எல்லாம் நேரம்"என்று ராதா அனைவரிடமும் சொல்லி அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல விஜய் ஒரு நிமிஷம் என்ன என்று நினைப்பதற்கே ஒரு முகம் தேவைப்படுது போல பிறகு பிரம்மை தெளிந்து அவனும் தன் கார் கொண்டு அவர்களை பின்தொடர்ந்து வர அதற்குள் எங்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஞ்சலிக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது வயிற்று வலியில் அவள் கத்துவது வெளியே வரைக்கும் கேட்டது சரியாக அவன் டிராபிக் கடந்து மருத்துவமனைக்கு நுழைய அனைவரும் வெளியே மிகவும் வருத்தமாக இருப்பதும் மேலும் ராதா தலையில் அடித்துக் கொண்டு அழுவதுமாக இருக்க..

'கூடாது கூடாது அப்படி நடக்க வாய்ப்பே இல்லை குழந்தை அஞ்சலி ரெண்டு பேரும் நல்லபடியா இருக்கணும்'என்று தனக்குள் சொல்லிக் கொண்டே உள்ளே நுழைய ராதா மகனை பார்த்து ஆக்ரோஷமாக அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு

"பாவி பாவி உன்னால என்ன பாவம் எல்லாம் சுமக்க போறேன் அப்படின்னு தெரியல ஏற்கனவே ஒரு பொண்ண மனசு நோக்கடிச்சா அவளும் பிள்ளைய இழந்து கடைசில உயிரை விட்டா எட்டு வருஷம் கழிச்சு மறுபடியும் ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து இருக்கேன் இப்போ அவ குழந்தையை கூட காவு வாங்கிட்ட நீ என்ன மனுசன்டா ஏண்டா உன் புத்தி இப்படி போகுது வயித்து பிள்ளை காரியம் தப்பு தப்பா பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கி அது மட்டும் இல்லாம கீழே தள்ளிவிட்டு உன் கையாலேயே உன் குழந்தைக்கு மரணம் அடைந்து இருக்கு புரியல குழந்தை இல்ல கண் முழிச்சு என் குழந்தை எங்கன்னு கேப்பா பதில் சொல்லு"

இன்று ராதா மகனை ஆக்ரோஷமாக திட்டி விட்டு சென்றுவிட விஜய் அப்படியே ஸ்தம்பித்து நின்
றான் இன்னும் என்னெல்லாம் சோதனை நடக்கப் போகிறதோ என்று..
 
Top