அத்தியாயம் 21..
இங்கே காமினி கடத்தப்பட்டு ஒரு குடோனின் மயங்கி கிடந்திருந்தாள்…
கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்து பார்த்தவள் கடத்தப்பட்டிருக்கிறோம் என்று தெரிந்தது ஆனால் ஏன் எதற்காக என்று புரியவில்லை யார் என்று புரியவில்லை ஐயோ அம்மா என்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று சினிமாவில் வரும் கதாநாயகிகள் போல் சத்தம் போட வேண்டிய அவசியம் இல்லை எதுவா இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம் நமக்கு தெரியாத வித்தையா என்று அமைதியாக இருந்த சிறிது நேரத்தில் வழக்கம் போல் ஒரு வசனம் பேசிக்கொண்டே ஒரு அடியாள் மொபைலில் யாருக்கோ தகவல் சொல்ல..
"பாஸ் இந்த பொண்ணு கண் முழிச்சிட்டா இப்ப என்ன பண்ணனும்"
மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ சிறிது நேரத்தில் அவள் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு…
"ஓகே மேடம் உங்கள ரிலீஸ் பண்ண சொல்லிட்டாங்க இதோ இந்த டிரைவர் ரொம்ப நல்லவன் நீங்க எங்க இறங்கணுமோ அங்க போய் எறங்கிக்கோங்க"
என்று அவளை அனுப்பி வைக்க ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தாள் ஆனால் அவன் எதுவும் பேசவில்லை இங்கிருந்து தப்பித்தாள் போதும் என்று நேரடியாக வீட்டின் முகவரி சொல்லியவுடன் கார் மின்னல் என அவளை டிராப் செய்ய பறந்தது…
______________________________________________________________________
இங்கே ஒரு சின்ன கிளினிக்கில் மயக்க நிலையில் இருந்தாள் மகா அவளிடம் டாக்குமெண்ட் பிடுங்கப்பட்டு சென்று திருடன் பிடிக்கப் போகும் பொழுது எதிரே வந்த கார் மீது மோதி விட அது இருப்பவன் பரிதாபப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து விட்டு அதற்கான பணத்தையும் கொடுத்து சென்றுவிட மருத்துவர் அவளுக்கு சிகிச்சை கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து கண் முழித்தாள்…
எழ முயற்ச்சித்தவளுக்கு அடிவயிற்றில் சுருக்கென்ற வலி வரவே வயிற்றைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்தாள் ஏனென்று அவளுக்கு விளங்கவில்லை அப்பொழுது அருகில் இருந்த செவிலிப்பைன் அவளை கைதாங்கலாக பிடித்துக் கொண்டு..
"மேடம் இப்ப நீங்க உடம்பை வருத்திக்க கூடாது பிகாஸ் உங்களுக்கு மிஸ் கேரேஜ் ஆயிருக்கு கிளீன் பண்ணிட்டோம் ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரி ஆயிடும் உங்களுக்கு வெறும் 25 நாள் கரு தான் இருந்தாலும் வயித்துல ரணம் இருக்கும் இல்லையா சோ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் இப்ப உங்களால எந்திரிக்க முடியாது நீங்க படுத்துகிட்டே இருங்க உங்களை யாராவது கூட்டிட்டு போக வருவாங்களா இதோ உங்கள அட்மிட் பண்ண அவர் உங்க ஹேண்ட் பேக் மொபைல் போன் எல்லாம் கொடுத்துட்டு தான் போனாரு"
என்று அடுக்கடுக்காய் செவிலி சொல்ல மகா தலையில் பெரிய இடி வந்து விழுந்தது…
அப்படி என்றால் அப்படி என்றால் தான் கர்ப்பம் அடைந்து இருக்கிறேன் ஆனால் அது எனக்கே தெரியவில்லை ஒரு மருத்துவராக இருந்து என உணர முடியவில்லை பிள்ளையே இதோ 25 ஆவது நாளிலேயே அதை தொலைத்து விட்டு விட்டேனே எந்த தைரியத்தோடு கணவன் முகத்தில் முழிக்க முடியும் குழந்தை வேண்டும் என்று ஆசையாக கேட்டானே இதை சொன்னால் நிச்சயம் அவன் தாங்க மாட்டான்…
'இதை என்னோட அனிருத்துக்கு தெரியவே கூடாது தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவான்'
என்று உண்மையை அத்தோடு மறைத்தவள் தன் மொபைல் எடுத்து காமினிக்கு அழைப்பு விடுக்க
அப்பொழுது வீட்டிற்கு செல்லும் வழியில் இருந்த காமினி மகா வின் அழைப்பு வந்து ஏற்று
"சொல்லுடி"
என்று காமினி சொன்னவுடன் மகா விரைவாக இங்கே இருக்கும் கிளினிக் வந்து என அழைத்துச் செல்லுமாறு கேட்க ஏதோ விஷயம் நடந்து இருக்கிறது என்று காமினி டிரைவரிடம் அப்படியே கிளினிக்கிடம் டிராப் செய்ய சொல்ல அவனும் டிராப் செய்துவிட்டு மின்னல் என பறந்து விட்டான்..
உள்ளே வந்து மகா இருக்கும் இடத்திற்கு வந்து பார்த்த காமினி அங்கே மருத்துவர் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்து போய் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு அப்படியே உடன்பிறப்பை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்…
"என்னடி பார்த்து கேர்புல இருக்க மாட்டியா ஃபைல் போனா போய் தொலையட்டும் எதுக்கு நீ பின்னாடி ஓடின உனக்கு சின்ன சின்ன சிம்டம்ஸ் தெரிஞ்சிருக்கணுமே அது கூடவா நீ கவனிக்கல"
என்று மகாவை கடிந்து கொண்டிருக்க அனைத்தும் தன் தப்புதான் என்று தலையில் அடித்துக் கொண்டு அழ சமாதானம் செய்து இது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று இருவரும் ஒரு முடிவை எடுத்து வேறு ஒரு டாக்ஸி புக் செய்து அமைதியாக வீடு வந்து சேர்ந்தனர்…
இருவரும் வீட்டின் வாயிலுக்குள் அடி எடுத்து வைக்க ஹர்ஷா விஷாகா கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதற்கும் சரியாக இருந்தது கீழே விழப்போன தங்கையை தாங்கிப் பிடித்தவர் இரு சகோதரிகளும்…
என்ன இது மீண்டும் ஒரு கூத்து என்பது போல் ஆகிவிட்டது இருவருக்கும் விஷக்காவின் அழுகை முகவும் சிவந்த கண்ணமும் காட்டிக் கொடுத்தது எதோ நடந்திருக்கிறது என்று..
"ஹர்ஷா என்ன இது எதுக்கு இவ கிட்ட இப்படி பிஹேவ் பண்ற மறுபடியும் வேதாளம் முருகன் படம் அடிச்சா இத்தனை நாள் இல்லாம மறுபடி உன்னோட ஆணவம் தழைக்கிற ஆரம்பிச்சுடுச்சு போல??"
என்று காமெடி கேட்க கோபத்தில் கைமுட்டிகளை முறுக்கி
"இங்க பாருங்க அண்ணி தப்பு என் மேல இல்ல அவ மேல இங்க பாருங்க என் பழைய விஷயத்தை கலர நான் விரும்பல ஆனா நான் ரதிங்கற பொண்ண எவ்வளவு லவ் பண்ணனும் உங்களுக்கு நல்லாவே தெரியும் அவ மேல எனக்கு காதல் ஆரம்பத்துல இல்ல தான் ஆனா எப்போ எனக்கு கல்யாணம் ஆச்சோ அப்பதான் நான் உணர ஆரம்பிச்சேன் ரதி கிட்ட இருந்தது எனக்கு காதல் அப்படின்னு அதனால்தான் கல்யாணத்துக்கு அப்புறம் அவளுக்கு ஒரு லெட்டர் எழுதி அனுப்புன என் மனசுல இருக்குற காதல மொத்தமா சொல்லி ஆனா பதில் கடிதம் எதுவுமே வரல அவ்வளவுதான் ரதி இனி என் வாழ்க்கையில இல்ல ஆனா ஒரு நாளாவது பாக்கணும்னு ஆசைப்பட்டேன் ஆனா முடியாம போயிடுச்சு…
நா இது இயற்கையான விஷயம் என்று நினைத்தேன் ரதி அவளா முடிவு பண்ணி என்கிட்ட இருந்து விலகி போயிட்டான்னு ஆனா எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்தது இந்த விஷாகா என்னோட ரதியை என் கூட சேர விடாம தான் மட்டும் தான் என் வாழ்க்கையில முழுமையா இருக்கணும்னு நினைச்சு சுயநலமா என்னோட காதல் ரதியை என்கிட்ட பிரித்த பாவி உங்க தங்கச்சி விஷாகா தான் இந்த விஷயம் எனக்கு நேத்து தான் தெரிஞ்சது"
என்று அவளை வாய்க்கு வந்தபடி திட்ட இரு சகோதரிகளும் அவளை பார்த்து அப்படியா என்று கேட்க அவளும் ஆமா என்று சொல்ல என்ன சொல்ல முடியும் தங்கையா இப்படி செய்தது என்று அனைவருக்கும் ஒரு மாதிரியாகி போனது..
"இதோ இது என் ரதி எழுதின கடைசி லெட்டர்"
என்று அதை காண்பிக்க..
"அன்புள்ள என்னோட ஷா (ரதி ஹர்ஷாவை அழைக்கும் செல்ல பெயர்) அவர்களுக்கு
நான் உங்களோட ரதி உங்க லெட்டர் எனக்கு கிடைச்சது ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் பொறாம என்னால உங்க வாழ்க்கையில வர முடியாமல் போனதுக்கு ஆனா நீங்க என் உயிரோட கலந்துட்டீங்க நம்ம காதலுக்கான அடையாளங்கள் நிறைய இருக்கு..
ஆனா நீங்க கடைசியா எழுதி இருக்கிறது என்ன ஒரு தடவை பார்க்கணும்னு அது மட்டும் ஜென்மத்தில் நடக்காத ஹர்ஷா எப்போ நீங்க இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களோ அப்பவே நான் உங்களுக்கு சொந்தமில்லை என்று முடிவு பண்ணேன். சரி ஒரு முறையாவது உங்கள பாக்கலாம்னு நினைச்சு வரும்போதுதான் உங்க மனைவி விஷாகாவை பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தது…
அவங்க என்கிட்ட கண்டிப்பா சொல்லிட்டாங்க என் புருஷன் வாழ்க்கைல நீ வரவே கூடாது அப்படின்னு அப்படி வந்தா எல்லாரும் வருத்தப்படுவாங்க அது மட்டும் இல்லாம என்னோட வாழ்க்கை கேள்விக்குறியாயிடும் உன்ன பார்த்த பிறகு அவர் மனசு மாறினாலும் மாறும் என்ன மாதிரி பொண்ணுங்க ஆசைப்பட்டவன கல்யாணம் பண்றது பெரிய விஷயம் ஏதோ எனக்கு ஹர்ஷா கிடைச்சிருக்காரு அத நீ கெடுக்காத அப்படின்னு ரொம்ப கெஞ்சி கேட்டாலே இந்த லெட்டர் மூலியமா கடைசியா நம்ம பேச்சுவார்த்தை முடிச்சுக்கலாம்னு இருக்கேன் இருந்தாலும் உங்க மனைவிக்கு உங்க மேல அதிக காதல் தான் எனக்கே பொறாமை வருது நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல உங்க மனைவி இருக்கிற வரைக்கும் என்னால உங்கள பாக்க முடியாது ஹர்ஷா"
லவ் யூ ஹர்ஷா…
என்று லிப்ஸ்டிக் சாயத்தால் உதடு முத்தம் கொடுத்த சின்னன் இருக்க அதை பார்த்தவர்களுக்கு விஷாகா மீது என்னவென்று சொல்ல முடியாத அளவிற்கு கோவம் வந்தது…
"பாக்க அமைதிப்பொண்ணா இருக்கா புத்திசாலியாவும் வாழ்க்கை நடத்துறா அப்படின்னு ஒரு நம்பிக்கையில் தான் என் பையனை உனக்கு கட்டி வச்ச அவனும் எல்லாத்தையும் மறந்து உன்கூட குடும்பம் நடத்த தயாராக இருந்தான் நடுவுல ஏதோ ஒன்னு நடந்திருக்கு நீங்க ரெண்டு பேரும் பிரிச்சீங்க மறுபடியும் இங்க ஒரு மாசம் சந்தோஷமா தான் இருந்தீங்க இப்போ இந்த விஷயத்தால தான் தெரியுது என் பையன் உன்ன வீட்டை விட்டு அனுப்புனது தப்பே இல்ல"
என்று ருக்மணி கடிந்து கொள்ள..
அதே சமயம் தான் சற்று தாமதமாக அனிருத் ஆரவ் இருவரும் வந்து சேர்ந்தனர் …
வீட்டு வெளியில் குடும்பத்தார்கள் அனைவரும் நின்று ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தவர்கள் அருகில் வரும்போது ஏதோ பிரச்சனை என்று புரிந்தது கைகளை கட்டிக்கொண்டு பார்வையாளர்களாக மாறிவிட்டனர்..
அபி ருக்மணியை சமாதானம் செய்து
"நீ என் பையன் மேல ரொம்ப காதலா இருக்க னு எனக்கு தெரிஞ்சது அதனால் தான் உனக்கு கல்யாணம் பண்ணி உன்னோட ஆசை நிறைவேற்றலாம் என்று இருந்தேன் ஆனா என்னால என் பையன் மனசில என்ன இருக்குன்னு தெரியாம போயிடுச்சு ஏன்மா அந்த பொண்ண ஒரு தடவை என் பையன் பார்க்க ஆசைப்பட்டானே நீயேன் தடுத்துட்ட??"
என்று அபி உடைந்த குரலில் கேட்க…
"சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் ஹர்ஷா மட்டும் தான் எனக்கு எல்லாமே அவ என்னோட உயிர் மறைமுகமா என் காதலை சொல்ல வந்தாலும் அப்போ அவருக்கு ஏன் என்னை பிடிக்கவில்லை என்று எனக்கு தெரியல அப்பதான் புரிஞ்சது என்னோட உண்மையான முகத்தை கண்ணாடியில் பார்த்து தெரிஞ்சுகிட்டேன் இதுதான் காரணம் அப்படின்னு அவர் விரும்புவது அழகு மட்டும் தான் அப்படின்னு அதிலிருந்து நான் கொஞ்சம் கொஞ்சமா என்னை நானே எல்லாம் ஒதுங்கி தான் போயிருந்தேன் ஆனால் என்னால் ஹர்ஷாவை மட்டும் மறக்கவே முடியல…
அப்படி இருக்கும்போதுதான் உங்க மூணு பசங்களுக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணிங்க எங்க மூணு பேருக்குமே கஷ்டம் காரணம் நாங்க மூணு பேருமே உங்க மூணு பசங்கள தான் விரும்பினோம் ஆனால் நீங்க அவங்களுக்கு வேற வேற இடத்துல இருந்து பொண்ணு பார்த்து கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டீங்க
நாங்களும் எதுவும் சொல்லாம அமைதியா இருந்துட்டோம் உங்க மத்த ரெண்டு பசங்களும் ரொம்ப சுயநலமா வேற இருந்தாங்க எங்க அக்காக்களை அவங்களும் தான் விரும்பினாங்க ஆனால் நீங்க சொன்ன உடனே அப்படியே இவங்கள மறந்து இன்னொரு கல்யாணம் பண்ணிக்க பார்த்தாங்க..
நான் இதை எப்படியாவது தடுக்க நினைச்சேன் ஆனா முடியல கடைசில அந்த மூணு பொண்ணுங்களும் எங்கே எப்படி மாயமா குடும்பத்தோட காணாம போனாங்கன்னு இப்போ வரைக்கும் எனக்கு புரியல கடைசி நேரத்துல எங்க அம்மா கிட்ட வந்து கெஞ்சி எங்கள உங்க பசங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க உங்க மத்த ரெண்டு பிள்ளைகளும் ஏதோ ஜாக் பாட் கிடைச்சா மாதிரி சந்தோஷமா இருந்தாங்க ஆனா ஹர்ஷா என்ன புழுவை பார்க்கிற மாதிரி பார்த்தாரு அவர் நினைச்சது நடக்கல அது என்னனு தெரியல எனக்கு தாலி கட்டுன பிறகுதான் இதுவரைக்கும் தோழி அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்த ரதி காதலியாக மாறிப் போயிட்டாளாம் இது என்ன அநியாயமா இல்ல???
கல்யாணமான முதல் இரவு மணிக்கு ஒரு பொண்ணுக்கு நடக்கக்கூடாது கொடுமை தான் எனக்கு நடந்தது ஆனா எதையும் சொல்லிக்கல எதையும் என் மத்த ரெண்டு அக்காங்களோட வாழ்க்கையும் இருக்கேன்னு அமைதியாக இருந்த பல்ல கடிச்சுக்கிட்டு போறதுக்கு கிட்ட ஒரு கட்டத்துல முடியல போயிட்ட ஆனா அக்காங்களும் வருவாங்கனு நினைச்சு கூட பாக்கல கேட்டா எங்களுக்கும் படிப்பு இருக்கு அது இருக்குனு சொல்லி மூணு வருஷம் காலத்தை கழித்து மறுபடியும் வாழ வந்த அப்ப கூட இவர் ரதி பொண்ண மறக்கவே இல்லை நான் என்ன பண்ண முடியும் ஏற்கனவே ரதி அனுப்புன லெட்டர் ஹர்ஷா கிட்ட வரதுக்கு முன்னாடி என்கிட்ட வந்துடுச்சு நான் தான் மறைத்து வைத்திருந்தேன் இப்ப என்ன அதுக்கு??"
என்று தைரியமாக அனைத்தையும் பேசி முடிக்க…
"சரி எல்லாம் விட்டுடு கடைசியா ஒரு விஷயம் பண்ணா போதும் நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன் என்ன இருந்தாலும் இப்ப எனக்கான காதல் உனக்கு மட்டும் தான் சொந்தம் ப்ளீஸ் ரதி எப்படி இருப்பா அவ இப்ப எங்க இருக்கா அது மட்டும் சொல்லு"
கெஞ்சும் குரலில் ஹர்ஷா கேட்க
"இல்ல எனக்கு தெரியாது இதுக்கு மேல என்ன எதுவும் கேட்க வேண்டாம்"
என்று அவள் சொல்ல மறுக்க…
"இவ்வளவு சொல்லியும் நீ இவ்வளவு கொடூரமா நடந்துக்கிறல அப்படி என்னடி உனக்கு தாழ்வு மனப்பான்மை சொல்லு வாயைத் திறந்து சொல்லு நான் தாண்டா ரதி நான் தாண்டா விஷாகா ரெண்டுமே நான் தான் உன் வாழ்க்கையில காதல் கோபம் 2க்கும் சொந்தக்காரி நான் தானேனு சொல்லி தொலையேண்டி பாவி"
என்று ஹர்ஷா அவள் கன்னத்தை மாறி மாறி அடிக்க திடுக்
கிட்டுப் போன விஷாகா எப்படி சாத்தியம் என்று முழிக்க ஹர்ஷா அவளை முறைத்துக் கொண்டு நிற்க சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் இது என்ன புது கதை என்பது போல் பார்த்தனர்…

Author: srija
Article Title: 21) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.