21) தீயே 🔥

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
100
Reaction score
1
Points
18
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 21

மேனகா விஷ்வா இருவரும் அரை மணி நேரத்தில் அந்த ரிசார்ட் வந்து சேர்ந்தனர் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு அவர்கள் உள்ளே சென்று விட கார் பார்க்கிங் சூப்பர்வைசர் யாருக்கும் போன் செய்து ஏதோ சொல்ல உடனடியாக ஒரு இளைஞன் வந்தான் அவளைப் பார்த்து அந்த மேலாளர்

"இப்ப எனக்கு டீ பிரேக் நான் இப்போ டீ பிரேக்குக்கு போன மாதிரி இந்த பக்கம் கேமரா இல்லாததால் தான் உன்னை இந்த பக்கம் வர சொன்னேன் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது சட்டுபுட்டு வேலையை முடிச்சிட்டு போ இல்லன்னா என் வேலை போயிடும்"

நன்றி எச்சரித்துவிட்டு கேமரா கண்ணுக்கு படாமல் அவர் பொதுவான கேமரா முன் பகட்டி பிரேக்குக்கு செல்வது போல் கேண்டின் பக்கம் சென்று விட இங்கே அந்த இளைஞன் சரியாக விஷ்வாவின் காரை அடையாளம் கண்டு அதற்கான அடியில் சென்று ஏதேதோ சித்து வேலைகள் செய்து முடித்து அப்படியே காருக்கு பின் பக்கமாக ஒதுங்கி சென்றுவிட்டான்.

இங்கே விஷ்வா மீனாக இருவரும் பொறுமையாக ரிசார்ட் மொத்தமும் சுற்றி பார்த்து அங்கே வேலை செய்பவர்கள் அனைவரையும் பார்த்து ஒவ்வொருவரின் வேலை என்னன்னு தெரிந்து கொண்டு இருவரும் ஃபுட் கோர்ட் வந்து ஒரு காபி அணிந்து கொண்டு பேச தொடங்கினர்..

"நீ சொல்லு இதுதான் ஹோட்டலோட ஃபுல் டீடைல்ஸ் எல்லாத்தையும் நீயும் விசிட் பண்ண தானே நாம இத வாங்கலாமா வேண்டாமா??"

என்று ஒரு மிடறு காபி அறிந்து விட்டு விஷ்வா அவளை பார்த்து கேட்க

"ம்ம்.. நம்ம ரிசார்ட்டுக்கும் இதுக்கும் வெறும் 20 நிமிட இடைவெளி தான் நிச்சயம் இத வாங்கலாம் அதுவும் இது நஷ்டத்தில் போகல எல்லா அக்கவுண்ட் க்ளியரா இருக்கு நான் செக் பண்ணிட்டேன் அதனால கண்டிப்பா வாங்கினால் நமக்கு லாபம் தான் இதுக்கு மேல வேற எதுவும் வேண்டாம் என்று நினைக்கிறேன் ஏன்னா ஏற்கனவே ஒரு பெரிய ரெசார்ட் ஏலத்துல வாங்கி இருக்கோம் அதோட இப்ப வேலையும் நமக்கு இருக்கு பாரத தலைக்கு மேல சுமத்த வேண்டாம் நமக்கு ஈவென்ட் ஒரு பக்கம் போயிட்டு இருக்கு ரிசார்ட் ரெண்டு மூணு இருந்தா தான் ஒரு அளவுக்கு இருக்கும் அதுக்கு மேல வாங்க வேண்டாமே"

என்று சொல்ல விஷ்வா சிரித்துக் கொண்டே..

"இந்த மாதிரி யாரும் சரி எனக்கும் சரி தோன்றியதே கிடையாது என நான் ஒன்னும் இல்லாத நிலைமையில தம்பிகளுடன் இருக்கிறப்போ அவங்க மட்டும் தான் எனக்கு உதவி அப்புறம் சுரேந்திர அங்கிள் மத்தவங்க யாரும் என் பக்கம் கூட எட்டி பாக்கல அதனால எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு இந்த காசு பணம் தான எல்லாரும் மதிக்கிறது அதனால காசு பணத்தை வச்சி என்னால என்ன பண்ண முடியுமோ அதெல்லாம் பண்ணேன். சொத்துக்கள் அதிகம் சேர்த்து வச்சுக்கிட்டே போகணும்னு நிறைய பண்ணேன் அதனால்தான் இந்த ரிசார்ட் பிசினஸ் அப்படி இப்படின்னு போய்ட்டு இருக்கு ஆனா எல்லாத்தையும் ஒரு அளவோடு பண்ண சொல்ற அதும் நல்லது தான் தலைக்கு மேல பாரம் வேண்டாமே அப்படின்னு நீ சிம்பிளா சொல்லிட்ட"

என்று சொல்லி அவன் சிரிக்க மேனகாவும் தலை அசைத்து ஒரு நல்ல நாள் பார்த்து உறுதி பத்திரம் எழுதி ரிசார்ட் வாங்கிவிடலாம் இப்பொழுது கிளம்பலாம் என்று சொல்ல இருவரும் கார் பார்க்கிங் வந்து தங்கள் காரை எடுத்துக் கொண்டு சில நேரம் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது எதிரே இருசக்கர வாகனம் வர விஷ்வா பிரேக் போட்டு காரன் மெதுவாக இயக்க பார்க்க ஆனால் பிரேக் பிடிக்கவில்லை கட்டுப்பாடு இல்லாமல் கார் சென்று கொண்டிருக்க விஷ்வாவுக்கு புரிந்து விட்டது ஏதோ ஆகி இருக்கிறது என்று அருகில் இருக்கும் மேனகாவை பார்த்து

"சீட் பெல்ட் டைட்டா போட்டுக்கோ நான் மரத்துல மோத போறேன் ஏர் பேக் இருக்கு. பிரச்சனை கிடையாது."

என்று சொல்லிக்கொண்டே ஒரு மரத்தில் மோதி ஏர்பேக் உதவியோடு இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிக்க கார் டேமேஜ் சிறிதாக ஏற்பட்டு நின்றது..

சத்தம் கேட்டு அந்த தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் சிறு வியாபாரிகள் அனைவரும் ஒன்று கூட அங்கு இருக்கும் மக்கள் கூட ஒன்று கூடி விட்டதற்கு 20 30 பேர் என்னாச்சு ஏதாச்சு என்று காரில் இருந்து இருவரையும் வெளியே கொண்டு வந்து கேட்க..

விஷ்வா கம்பெனி கார் ரேட் பிடிக்கவில்லை என்றும் இதற்கு முன்பாக இங்கே தான் வந்தோம் மீண்டும் வரும்பொழுது இப்படி ஆகி இருக்கிறது என்று சொல்ல அதில் ஒரு இளைஞன்..

"சார் நான் மெக்கானிக் சார் நான் வேணா கார் செக் பண்ணி பாக்கட்டுமா"என்று கேட்டவுடன் விஷ்வா சரி என்று சொல்ல கார் முழுமையாக செக் செய்துவிட்டு அந்த மெக்கானிக் அவனைப் பார்த்து

"சார் பிரேக் பிடிக்காம இருக்க ஒயர் கட் பண்ணி இருக்காங்க மேலும் டீசலை குறைச்சு வச்சிருக்காங்க ஏதோ பிளான் பண்ணி எல்லாம் பண்ண மாதிரி இருக்கு"

என்று சொல்ல விஷ்வாவுக்கு ஒன்றும் புரியவில்லை யாராக இருக்கும் என்று..

அருகே மேல தான் உயிர் தப்பு இருந்தாலும் ஒரு சிறு விபத்து தானே அதிர்ச்சியில் இருக்க அவள் அருகே ஒரு பெண்மணி அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தார். விஷ்வா அவள் அருகில் வந்து அவளை பார்த்து

"ஆர் யூ ஓகே??"என்று கேட்க மேனகா மெதுவாக தலை அசத்து அவன் கரங்களை கெட்டியாக பிடித்துக் கொள்ள அவனும் அவளை வாகாக அனைத்து கொண்டாள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் என்பது போல் அரவணைத்துக்கொள்ள சுட்டு இருப்பவர்கள்...

"அந்த சாரோட பொண்டாட்டி பயந்த சுபாவம் போல அதனால்தான் இப்படி அதிர்ச்சியா இருக்காங்க அவர் பார் பொண்டாட்டி எவ்ளோ அழகா அரவணைச்சு இருக்காரு என் கையில் தீக்காயம் பட்டது ஆனா அத பாத்து என் புருஷன் இதெல்லாம் ஒரு விஷயமா சொல்லிட்டு போவாள் ஒவ்வொருத்தருக்கும் நல்ல புருஷன் அமையறது ரொம்ப கஷ்டம் தான் போல அமைஞ்சா அது அதிர்ஷ்டம் இந்த பொண்ணு மாதிரி அமையனும்"

என்று சுற்றி இருக்கும் பெண்மணிகள் பேச ஆண்கள் எல்லோரும் ஜோடி பொருத்தம் பிரமாதம் என்று சொல்ல அப்பொழுது தான் இருவரும் தாங்கள் இருக்கும் நிலைமையை பார்த்து உணர்ந்து இருவரும் விலகி நிற்க சுற்றி இருப்பார்கள் சிரித்துக் கொண்டிருந்தனர் அப்பொழுது ஒரு டாக்ஸி புக் செய்து வரவைத்து அதை டாக்ஸியில் இருவரும் வீட்டிற்கு சென்றனர் அந்த மெக்கானிக் காரை முழுமையாக சரி செய்துவிட்டு வீட்டு அட்ரஸ் கொடுத்தால் நானே வந்து கொடுத்து விடுவேன் என்று சொல்ல அவன் மீது வைத்த நம்பிக்கையின் அடிப்படையில் விஷ்வா அவனிடம் கார் சாவியை கொடுத்துவிட்டு வீட்டு அட்ரஸ் என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டு விட..

"பாவம் நல்ல மனுஷன் மாதிரி இருக்காங்க இவங்களுக்கு போய் ஒரு உயிருக்கு ஆபத்து வந்துருச்சு நான் கார் சரி பண்ணிட்டு சீக்கிரம் அவங்க வீட்ல போய் கொடுத்து விடனும் அப்பதான் அவர் என் மேல வச்சு நம்பிக்கை அடையாளமா இருக்கும்"

என்று அந்த இளைஞர் தன் மெக்கானிக் ஷெட் போக அப்போது அந்த வேலை செய்யும் ஒரு இளைஞன் அவன் எடுத்து வரும் காரை பார்த்து அதிர்ச்சியாகி..

"அண்ணே இந்த கார் எதுக்கு இங்க எடுத்துட்டு வந்த கார்ல ஆக்சிடென்ட் ஆயிடுச்சா இல்ல உள்ள இருக்குறவங்க போய் சேர்ந்துட்டாங்களா"என்று அடுக்கடுக்காய் கேட்க

"டேய் ஏன்டா நல்ல வார்த்தை உன் வாயில வராதா பாவம் ஏதோ புருஷன் பொண்டாட்டி போல கார் பிரேக் பிடிக்காம மரத்துல மோதி நின்னுச்சு நல்ல வேலை உள்ள ஏதோ சேப்டியா வெச்சிருந்ததால அவங்க ரெண்டு பேரும் நல்லபடியா புழச்சிட்டாங்க கார் தான் கொஞ்சம் பிரச்சனை நான் சரி செஞ்சு எடுத்துட்டு வரேன்னு சொல்லி இருக்கேன் ரொம்ப நல்ல மனுஷன் எனக்கு கைல காசு கூட கொடுத்தாரு. அவர் வீட்டு அட்ரஸ் கூட இருக்கு போய் கொடுத்துட்டு வந்துடனும் ரிப்பேர் பண்ண பிறகு என்று அந்த மெக்கானிக் சொல்ல அப்போது அந்த இளைஞன் தயக்கமாக..

"ஐயோ அண்ணே இவ்வளவு பெரிய விஷயமாகவும் எனக்கு தெரியாதுங்க எக்ஸ்ட்ரா காசுக்கு நான் அப்பப்போ யாராவது சொல்ற வேலையை செய்ய போகவில்லையா அந்த மாதிரி ஒருத்தர் இந்த கார் தான் பிரேக் பிடிக்காம ஆக்சிடென்ட் ஆகும்படி என செய்ய சொன்னாரு நான் தான் டீசலை அப்புறம் பிரேக் வயர் ஆயில் எல்லாம் லீக் பண்ற மாதிரி பண்ணி வச்சேன் கடைசில அந்த கார் நம்ம மெக்கானிக் ஷெட்டிக்கே வந்துருச்சு உள்ள இருக்குறவங்க புருஷன் பொண்டாட்டி சொல்லி இருக்க நல்ல வேலை பிழைச்சிட்டாங்க குழந்தைகள் யாராவது இருந்திருந்தால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும் அந்த பாவம் எனக்கும் வந்து சேர்ந்திருக்கும் இந்த மாதிரி இனிமே எக்ஸ்ட்ரா வேலைக்கு நான் போகவே மாட்டேன் அப்புறம் இந்த கார்ல இருக்கிறவங்களுக்கு ஆபத்து இருக்குது புரியுது இனிமே கடவுள் தான் அவங்கள காப்பாத்தணும்"

என்று மெக்கானிக் ஓனர் காலில் விழுந்து அந்த இளைஞன் அழ

"அடப்பாவி உன்னால ரெண்டு உயிர் போக பார்த்து இருந்தது நல்ல வேலை இரண்டு பேரும் பிழைத்து விட்டாங்க கடைசில பாரு நீ எந்த கையால் தப்பு பண்ணியோ இப்போ அந்த கையால தான் இந்த காரை சரி பண்ண வேண்டிய நிலைமை வந்துருச்சு இனிமே இப்படி பண்ணாத உனக்கு சம்பளத்துக்கு என்ன குறை நல்லா தானே இருக்க படிச்சுக்கிட்டு இருக்க அப்புறம் எதுக்குடா எக்ஸ்ட்ரா காசு குடிக்கிறதுக்கும் கஞ்சா அடிக்கிறதுக்கும் இனி அந்த பழக்கத்தை வச்சுக்கிட்டு உன்னை கொன்னுடுவேன் நீ எதைப் பத்தியும் பேசிக்காத நான் தெளிவா சார் கிட்ட போய் பேசுகிறேன்"

என்று அந்த ஓனர் இளைஞர் பதட்டமாக அந்த கார் முழுவதுமாக சரி செய்து முடித்து சில நேரத்தில் விஷ்வா வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக பயணத்தை மேற்கொள்ள அதே சமயம் டாக்ஸி விட்டு இறங்கிய விஷ்வா தடுக்கி விழ இருந்த மேனகாவை தாங்கி பிடித்து பார்த்து நட என்று அறிவுரை சொல்லி வீட்டிற்குள் அவளை அழைத்து வர அந்த நேரம் சுஷ்மா இருவரையும் பார்த்துவிட..

"இப்படித்தான் ரெண்டு பேரும் ஜோடி போட்டு வருவீங்களா? அவள் உங்களோட பர்சனல் செகரட்டரி. ஆனா கைபிடிச்சு கூட்டிட்டு வர்ற அளவுக்கு நெருக்கமான பர்சனல் செக்யூரிட்டி இது என்ன விஷ்வா"

என்று சுஷ்மா இத்தனை நாள் அடக்கி வைத்த ஆதங்கத்தை வெளிப்படையாக கேட்க ஏற்கனவே டென்ஷனில் இருந்த விஷ்வா அவளை பார்த்து

"வாய மூடு வர வழியில என்ன நடந்தது தெரியுமா தெரிஞ்சுக்காம அரைகுறையா வந்து பேசாத அவ என் பர்சனல் செக்யூரிட்டி தான் நீ மனசுல எந்த அளவுக்கு கேவலமா நினைச்சுகிட்டு இருக்கியோ அந்த விஷயம் உனக்கே வந்து சேரட்டும் உன்னை எல்லாம் எனக்கு தகுதியான பொண்ணு கல்யாண வரைக்கும் கொண்டு வந்து நினைச்சு தான் கவலையா இருக்கு போ உன் முகத்தை பார்க்க அருவருப்பு"

என்று முகம் சுழித்து விஷ்வா ஆகுது சென்றுவிட சுஷ்மாவின் கண்கள் கலங்கியது மேனகா பரிதாப பார்த்து அவள் அருகே வந்து நின்று

"சாரோட கார் பிரேக் ஒயரை யாரும் கட் பண்ணிட்டாங்க வர்ற வழியில ஒரு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு அது ஒரு டென்ஷன் இல்லாம கார விட்டு இறங்கும் போது நான் கீழ வேற வேலை பார்த்தேன் சார் தாங்கி பிடித்து விட்டார் மத்தபடி எதுவும் கிடையாது"

என்று சொல்லி அவளும் அங்கு சென்று விட அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்தவள்

"இங்க என்ன நடக்குது எனக்கு கல்யாணம் நடக்கும்னு சொன்னாங்க ஆனா கல்யாணம் படுக்க போறவர் என் முகத்தை பார்க்கவே அருவருப்பா இருக்குன்னு சொல்லிட்டு போறாரு இப்படிப்பட்ட கல்யாணம் தேவையான நொடிக்கு நொடி என்ன சில விஷயங்கள் சிந்திக்க வைக்குது இதுக்கெல்லாம் எப்ப முடிவு கிடைக்கும்"

என்று மெதுவாக தனக்குள் முடித்துக் கொண்டு அமைதியாக சோபா மீது சாய்ந்து கொண்டாள் பணக்கார வாழ்க்கைக்காக எவ்வளவு கவுரவத்தை கெ
டுக்க வேண்டி இருக்கிறது.

_____________________________________________:
 

Author: srija
Article Title: 21) தீயே 🔥
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.