அத்தியாயம் 2
மாலை ஆறு மணி அளவில் அந்த அரண்மனை என்று ஓரளவுக்கு சொல்லலாம் என்ற அழகிய வீட்டில் வெளியே தோட்டக்காரர்கள் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு அவரவர் குடிலுக்கு சென்று ஒதுங்கிவிட..
சரியாக கருப்பு நிற ஆடி கார் ஒன்று உள்ளே நுழைந்தவுடன் வாட்ச்மேன் அதில் இருக்கும் நபருக்கு செல்யூட் அடித்து உள்ளே அனுப்ப
அதன் பிறகு வந்த வெள்ளை நிற பென்ஸ் கார் ஒன்று வந்தது அதில் இருப்பவனுக்கும் சல்யூட் அடிக்க
அதனைத் தொடர்ந்து வந்த நீல நிற ஜாகுவார் கார் ஒன்று வர அதில் இருப்பவனுக்கும் சல்யூட் அடித்து ஓய்ந்து போய்விட்டார் வாட்ச்மேன் மூன்று கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக அங்கு இருக்கும் அவரவர் இடத்தில் வரிசை கட்டி வந்து நின்றது...
காரில் இருந்து வந்த நபர்கள் ஒருவர் ஒருவர் பார்த்து ஐஃபை அடித்துக் கொண்டு ஒன்றாக வீட்டிற்குள் நுழைந்தனர்..
"மம்மி".... என்றும் மூவரும் சத்தம் போட ஆளுக்கு ஒரு அறையில் இருந்து வந்த மூன்று பெண்மணிகள் தங்கள் மகன்களின் வருகைகளை பார்த்து சிரித்துக் கொண்டே..
"மணி 6க்கு மேல ஆகுது இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க அனிருத் இன்னைக்கு எந்த ஒரு மீட்டிங் இல்ல சொன்ன ஆனா நீங்க வந்த டைம் என்ன அதே மாதிரி ஆரவ் நான் சொன்ன டைம் என்ன நீ வந்த டைம் என்ன ஹர்ஷா உன்கிட்ட சொல்லி பிரயோஜனம் இல்ல நீ என்னைக்கு சொன்ன பேச்சு கேட்டு இருக்க மூணு பேரும் மூன்று வித்தியாசம்"
என்று வீட்டின் மூத்த குடும்ப தலைவி அபி சலித்துக் கொள்ள..
"சாரி மம்மி டெண்டர் விஷயம் கோபி ஆனதால கொஞ்சம் லேட் ஆயிடுச்சு அத என்குயரி பண்ணி முடிக்கறதுக்குள்ள போதும் போதும் ஆகிட்டு புதுசா அடுத்த டெண்டர் அடுத்த டிசைன் எல்லாம் ரெடி பண்ண பிளான் போட்டு வச்சிருக்கோம் "
என்று அபியின் கன்னத்தை பிடித்துக்கொள்ள அவ்வளவுதான் மகனின் செயல்களில் சமாதானமாகி அவன் தலையை வருடி விட்டு
"எனக்கு தெரியும் டா கண்ணா பிசினஸ் பண்றவனுக்கு எவ்ளோ கஷ்டம்னு எனக்கு தெரியும் ஆனா இந்த சினிமா ஆக்டர் க்கும் இந்த டாக்டர் பையனுக்கும் தான் எதுக்கு இவ்வளவு நேரம் ஆகுதுன்னு தெரியல இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம எல்லாரும் ஊருக்கு புறப்படனும் இல்லையா நம்ம ரெண்டு பாட்டிங்களுக்கும் தெவசம் பண்ண வேண்டிய நாலு ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க "
என்று நொடித்துக் கொள்ள..
"போதும் போதும் உன்னோடு செல்ல பையனை ரொம்ப கொஞ்சாத பண்றது எல்லாம் பண்ணிட்டு எனக்கு தெரிஞ்சு இவன்தான் எல்லாரும் லேட் பண்ண வச்சிருப்பான் சரி சரி அனிருத் ஹர்ஷா எல்லாரும் வாங்க சீக்கிரம் ரெடி ஆயிட்டு டின்னர் சாப்பிடலாம் நைட்டு பத்து மணிக்கு நம்ம எல்லாருக்கும் ட்ரெயின் உங்க அப்பா கிட்ட போராடி ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணி வச்சிருக்கேன்"
எங்கள் வீட்டின் இரண்டாவது குடும்பத் தலைவி ருக்மணி சலித்து சொல்ல
"எங்க மம்மி னா மம்மி தான்"
என்று ஹர்ஷா அவள் கன்னத்தைப் பிடித்து கிள்ளிவிட தனியாக விடப்பட்ட அனிருத் அங்கே அமைதியாக நிற்கும் ஆத்மிகாவை பிடித்துக் கொண்டு எனக்கும் செல்ல மம்மி என்று அவள் கன்னத்தில் முத்தமிட..
இதை அனைத்தையும் பார்த்த புதிதாக வேலை செய்த பெண்மணி அருகில் இருக்கும் மூத்த வேலைக்கார பெண்மணியிடம்
"அக்கா இந்த வீட்ல மூணு பெரிய ஐயா மூணு பெரியம்மா இருக்காங்க அப்புறம் மூணு சின்னையா ஒரு சின்னம்மா கல்யாண கட்டி கொடுத்துட்டாங்க ஒரு சின்னமா இப்பதான் காலேஜ் முடிக்கப் போறாங்க இதுல யாரு யாருடைய பசங்க அக்கா எல்லாரையும் அம்மா அம்மான்னு சொல்லி இந்த பிள்ளைங்க கூப்பிடுது யாருக்கு யாருடைய பிள்ளை??"
என்று தலை சொறிந்து கேட்க..
அந்த பெண்மணி சிரித்துக்கொண்டே..
"இவங்க எல்லாரும் பகதூர் சமஸ்தான ஆளுங்க பசங்க படிப்பு அப்புறம் ஒரு மாற்றத்திற்காக எல்லாரும் இந்த சிட்டில வந்து செட்டில் ஆகிட்டாங்க நம்ம பெரிய ஐயா ஆத்ரேயா பெரியம்மா அபிலாஷா அம்மாவுக்கு ரெண்டு பசங்க மூத்த பொண்ணு சாத்விகா அவங்கள தான் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காங்க அவங்களுக்கு இரண்டாவது பொறந்த பையன் தான் ஹர்ஷா அதான் டிவில நடிப்பாரே அந்த தம்பி
அடுத்தது ருக்மணி அம்மாவுக்கும் கிருஷ்ணா அய்யாவுக்கும் பிறந்தது ஒரே பிள்ளை அவன் தான் அனிருத் வீட்டுக்கு மூத்தவன் அவன் தான் பெரிய ஹாஸ்பிடல் பெரிய டாக்டர் படிப்பு படிச்சிட்டு இப்ப தலைமை பொறுப்புல இருக்காரு அவருக்கு கீழ நிறைய டாக்டர் இங்கு வேலை பார்க்கிறார்கள் நம்மள மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இலவசமாக சிகிச்சை கொடுக்கிறார்..
கடைசியா இருக்கிறது அமர் ஐயாவும் ஆத்மிகா அம்மாவும் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் முதல் பையன் ஆரவ் அவனுக்கும் அனிருத்தும் ஒரே வயசு அனிருத் அய்யா பத்து நாள் மூத்தவர்..
அப்புறம் அவங்களுக்கு இரண்டாவது ஒரு பெண் குழந்தை ரொம்ப வருஷம் கழிச்சு பிறந்தது அவங்க தான் நம்ம காவியா குட்டி காலேஜ் முடிக்க போகுது..
ஊர்ல இருக்கும்போது அகிலாதேவின்னு இந்த மூணு அய்யாக்களுக்கு ஒரு பாட்டியும் பத்மா அம்மானு இவங்க மூணு பேரோட அம்மாவும் இருந்தாங்க ..
வயசானதால அகிலாதேவி அம்மா படுக்கப் படுக்கையை ஆயிட்டாங்க அவங்களுக்கு ஏதோ கொடிய நோய் தாக்கிடுச்சு யாரையும் கிட்ட விடல பத்மா அம்மா மட்டும்தான் மாமியார கிட்ட இருந்து பார்த்துகிட்டு அவங்களுக்கும் அந்த நோய் தொத்திக்கிச்சு ஒரு நாள் ரெண்டு பேருமே ரொம்ப முடியாமல் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இறந்து போயிட்டாங்க ரெண்டு பேருக்கும் தவச நாள் நாளை மறுநாள் வருது அதனாலதான் இப்ப பிள்ளைகளை எல்லாரையும் விரட்டாத குறையா ஊருக்கு கிளம்ப ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க..
இன்று குடும்ப கதையை சுருக்கமாக சொல்லி முடிக்க
"ஊர்ல சமஸ்தானம் இருக்குனு சொல்றீங்களே அங்கே யாரு இருக்கா??"
என்று அதி புத்திசாலித்தனமான ஒரு கேள்வியைக் கேட்க..
"அங்க நம்ம அபி அம்மாவுக்கு உயிர் சிநேகிதி ஒருத்தவங்க அவங்க குடும்பத்தோட அரண்மனை வீட்ட பார்த்துக்கிறாங்க
அவங்க இருக்க மாட்டேன் என
அடம்பிடிச்சாங்க
ஆனால் நம்ம அம்மா இருந்தே ஆகணும்னு சொன்னாங்க ஆனா சும்மா அந்த வீட்ல தங்கறதுக்கு பிடிக்காம மாசம் ஆனா வாடகை பணத்தை கொடுத்துட்டு வாங்க அதுவும் ஒரு கண் துடைப்புக்காக தான் ரொம்ப நேர்மையானவங்க அசோக் ஐயா அங்கே இருக்கிற தாசில்தார் ஆச்சே கை சுத்தம் அவங்களுக்கு அஞ்சு பிள்ளைங்க மூத்தவர் தான் அர்ஜுன் ஐயா நம்ம சாத்விக்கா அம்மாவோட புருஷன் ரெண்டு பேரும் இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க
இப்போ அவங்களும் சமஸ்தானத்தில் தான் இருக்காங்க அங்க ஒரு தனியா இவங்க ஒரு பெரிய ரெஸ்டாரன்ட் வச்சி நடத்திக்கிட்டு இருக்காங்க அப்புறம் நகுலன் தம்பி அவரும் அண்ணன் கூட சேர்ந்து ஹோட்டல் பிசினஸ் தான் பண்ணிக்கிட்டு இருக்காரு அதுக்கப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு ஒரே பிரசவத்தில் ரஞ்சனி அம்மாவுக்கும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தார்கள் அவங்க இங்கதான் எங்கேயோ வேலை பாக்குறது தான் கேள்விப்பட்டேன் எப்பயாவது அவங்க லீவுக்கு அவங்க ஊருக்கு போயிட்டு வருவாங்க ஆனா இந்த வீடு பக்கம் வந்தது கிடையாது..
இப்போதைக்கு எனக்கு தெரிஞ்சது இதுதான்..
என்று சொல்லி முடிக்க மொத்த கதையும் கேட்ட திருப்தியில் இரவு உணவை தயார் செய்து வைத்து விட்டனர் அந்த பெண்மணிகள்..
"ராஜாம் அக்கா இன்னைக்கு என்ன சமையல் ??"
என்று கிச்சனுக்குள் நுழைந்து அங்கிருக்கும் மேடை மீது ஏறி அமர்ந்து கேரட்டை நொறுக்கி கொண்டு இருந்தால் காவியா..
"அட காவியா கண்ணு இன்னிக்கி எல்லாருக்குமா பிடிச்ச ஐட்டம் தான் எல்லாரும் ஊருக்கு பிரயாணம் பண்றிங்கள அதான் தெம்பா இருக்கிற மாதிரி எல்லாருக்கும் பிடிச்ச களி உருண்டையும் நாட்டுக்கோழி குழம்பு"
என்று சொல்ல நாக்கை சப்பு கொட்டி கொண்டால் காவியா நாட்டுக்கோழி குழம்பு என்று சொன்னவுடன் மூன்று பெரிய தூண்கள் கிச்சனுக்குள் முற்றுகை இட்டனர்..
"என்னது நாட்டுக்கோழி குழம்பா எவ்வளவு நாள் கழிச்சு சாப்பிடறோம் என்ன கா சீக்கிரம் முடிஞ்சுதா சீக்கிரம் சாப்பிடணும் இல்ல ஊருக்கு டைம் ஆச்சுன்னு அம்மா ஒரு வழி பண்ணிட்டு வாங்க"
என்று ஹர்ஷா சட்டியில் இருக்கும் நாட்டுக்கோழி குழம்பு அழகாக தூக்கிக்கொண்டு ஓட அவன் பின்னாடியே அனிருத் ஆரவ் காவியா மூவரும் துரத்திக் கொண்டு ஓடினர் ..
வீட்டிற்குள் சிரிப்பு கும்மாள சத்தம் கேட்டது..
"இதுங்கள பாரு வயசு எருமை கணக்காய் ஏறிக்கிட்டே போகுது இப்ப போய் எப்படி அடிச்சுக்கிறாங்க இவனுங்க பொண்டாட்டிங்க ரொம்ப பாவம்"
என்று ஆத்மிகா கவலையாக சொல்ல..
ஆத்மிகா சொன்னதைக் கேட்டு அபி முகம் மாறிவிட ருக்மணி ஆத்மிகாவை மாட்டிக் கொண்டாய் என்பது போல் சைகை காட்ட அப்பொழுதுதான் தன் பேச வந்த வார்த்தை அளவு மீறிப் போய்விட்டது என்று எண்ணி நாக்கை கடித்துக் கொண்டு..
"சாரி சாரி கா.. இனி நான் அப்படி பேசல இருந்தாலும் நம்ம பசங்களோட எதிர்காலத்தையும் பாக்கணும் இல்லையா"
என்று சொல்லிய உடன் அபி வேண்டாம் என்பதற்கு ஒரு சைகை காட்டி மற்ற வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்..
சில நேரம் கழித்து வீட்டிற்குள் அறுபது கடந்தும் இன்னும் கட்டிளம் காளைகளாக கம்பீரமாக வந்து கொண்டிருந்தனர் ஆத்ரேயன் அமரேந்திரன் , கிருஷ்ணா
"என்ன நட்ட நடு ஹால்ல மூணு பேரும் என்ன வந்து பேசிகிட்டு இருக்கீங்க நேரம் ஆச்சு நாங்க வரதுக்குள்ள நீங்க எல்லாம் ரெடியா இருக்கணும்னு சொல்லி இருந்தோம் ஆனா என்ன நடக்குது இங்க ருக்மணி என்னம்மா உன் பேச்சு தான் இந்த பசங்க கேப்பாங்க எங்க நாலு பேரும் காணோம்"
என்று ரேயன் சத்தம் போட்டு பெரியப்பா குரல் கேட்டவுடன் காவியா பவ்யமாக ஓடி வந்து
" ரேயன் டாடி"
என்ற கட்டிக்கொள்ள அவ்வளவுதான் மகளைப் பார்த்தவுடன் இருந்த கடினம் தன்மை போய்விட்டது
" ஹலோ டியர் லிட்டில் பிரின்சஸ் நாங்க வரதுக்குள்ள எல்லாம் ரெடியா இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டு தானே கிளம்பினேன் ஆனா இன்னும் யாரும் இங்க வரவே இல்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க??"
"டாடி நான் அண்ணாங்கள கூப்பிட தான் போனேன் ஆனா அவங்க தான் நாட்டு கோழி குழம்பு வச்சிக்கிட்டு விளையாடிட்டு இருக்காங்க என்னன்னு போய் கேளுங்க"
என்று எரியும் தீயில் சிறப்பாக எண்ணையை ஊற்றி கலக்கத்தை மூட்டி விட..
ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக ஆல்ரெடி பெட்டி படிக்கையுடன் நல்ல பிள்ளைகள் போல் அங்கே வந்து நின்றனர் மூவரும்..
"ஓய் வாலு போட்டு கொடுக்கிறியா அங்க பாரு உனக்கு முன்னாடி உங்க அண்ணங்க எல்லாரும் அவங்க டிரஸ் பேக் பண்ணி ரெடியா இருக்காங்க நீ தான் கலகம் வச்சுக்கிட்டு இருக்க இரு உன்னை சீக்கிரம் இந்த வீட்டை விட்டு பார்சல் பண்றோம்"
என்று அமர் தன் செல்ல மகளை கடிந்துக் கொள்ள..
"போதும் போதும் இப்படி மாறி மாறி பேசிகிட்டே இருந்தா நேரம் பொறு தெரியாது எல்லாரும் சீக்கிரம் ரெடி ஆகுங்க இல்ல நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது"
என்று அபி சத்தம் போட்டு சொல்ல அவ்வளவுதான் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு அவரவர் அறைக்குள் சென்று தயாராகி விட்டு வந்தனர்..
அனைவருக்கும் உணவு பரிமாற நல்ல பிள்ளைகளுக்குள் அனைவரும் சாப்பிட்டு முடித்து...
"ருக்கு மம்மி விண்டோஸ் சீட் கரெக்டா புக் பண்ணி இருக்கீங்களா எனக்கு ஏசி கோச் ஏதும் பண்ணிடலையே வயசானவங்க தான் ஏசி கோர்ச் ல போய் தூங்குவாங்களாம் எங்களை மாதிரி யூத் பாய்ஸ் எல்லாருமே ஜென்ரல் கோச் தான் செட் ஆகும்"
என்று ஆரவ் வேண்டும் என்றே வழக்கம் போல் தன் தந்தையை வாரி விட..
"அடி செருப்பால யாரை பார்த்து வயசானவன்னு சொன்ன என்ன 63 தான் ஆகுது மூணு வருஷத்துக்கு முன்னாடி தான் அறுபதாம் கல்யாணம் பண்ணி முடிச்சோம் இப்ப அதுக்கு என்ன பாத்தா எப்படி இருக்க உங்க அம்மாகிட்ட கேளு நான் வயசானவனா இல்லையான்னு இல்ல செல்லம்"
என்று ஆத்மிகாவை பார்க்க அவளோ அங்கு இருக்கும் கரண்டியை தூக்கி அடிப்பது போல் சைகை காட்டியவுடன் அமர் சுருட்டிக்கொண்டு அமைதியாக விட கலகலவென்று குடும்பம் விரைவாக பெரிய காரில் பயணம் மேற்கொண்டன ரயில்வே நிலையத்திற்கு ஹர்ஷா முகத்தை மட்டும் நன்றாக மறைத்துக் கொண்டான் அவனைப் பார்த்தவுடன் அவனது விசிறிகள் ஓடி வந்து விடுவார்கள் என்பதால்..
"இருந்தாலும் ஒரு ஹீரோ நான் பப்ளிக் ஓட பப்ளிக்கா இருப்பேன் அப்படின்னு சொன்னாலும் அது சீன் போடுற மாதிரி ஆயிடுச்சு எல்லாம் அஜித்துக்கு மட்டும்தான் செட் ஆகும் மத்த யாருக்கும் செட்டாகல"
என்று காவியா வழக்கம் போல் தான் அண்ணனை ஏதோ ஒன்று சொல்லி கலாய்த்து கொண்டிருக்க..
"போதும் போதும் சும்மா சும்மா என் பிள்ளையை கண்ணு வச்சுக்கிட்டே இருப்பா அவனுக்கு எத்தனை ஃபேன் பாலோவர்ஸ் தெரியுமா அவன் இன்ஸ்டாகிராம் மேனேஜ் பண்றது நான் தானே எனக்கு தெரியாதா எத்தனை பேர் கண்ணு பட்டு இருக்குன்னு என் ராஜா இன்னும் நல்ல பெரிய இடத்துக்கு வந்து ஆஸ்காரே வாங்கிட போறான் பாரு"
என்று ருக்மணி ஹர்ஷாவுக்கு திருஷ்டி எடுக்க அபிக்கு காதல் புகை வராத குறை நான் ஸ்கிரீன் பக்கம் வந்தாலே விசில் பறக்கும் நான் பெத்த பையன் இப்படி இல்லன்னா எப்படி என்பது போல் இருந்தது அவளது பார்வை..
அனைவரும் அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டனர்
ஒரு பக்கம் தம்பதிகள் அனைவரும் தங்கள் இணையை விட்டு பிரியாமல் ஜோடியோடு அமர்ந்து விட அவர்கள் எதிர்பக்கம் இருக்கையில் அமர்ந்து கொண்டு தங்கள் வேலையை செய்ய ஆரம்பித்தனர் இன்னும் ஐந்து நிமிடத்தில் ரயில் புறப்படும் நிலை வந்து விட்டது..
ரயில் நகர்ந்த உடனே ஆளாளுக்கு பையில் இருக்கும் நொறுக்கு தீனியை எடுத்து விட்டனர்..
"இவனுங்களை என்ன சொல்லி அடிக்கிறதுன்னு தெரியல எப்படி எல்லாம் மானத்தை வாங்கலாம்னு திட்டம் போட்டு வரானுங்க கடவுளே"
என்று அபி கடிந்து கொள்ள மற்ற இருவரும் தங்கள் மகன்களின் சேட்டைகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்..
____________________________________________
அதே ரயில்வே நிலையத்தில் அதே ஜென்ரல் கோச் இடத்தில்..
"அக்கா சரியா பாத்தியா இங்க தானே நம்ம டிக்கெட் நம்பர் எங்க போட்டு இருக்குனு பாரு"
என்று விஷாகா சொல்ல
"ஹேய் கரெக்டான கோச் தான் ஆனால் இங்கு எல்லாம் ஃபுல்லா இருக்கிற மாதிரி இருக்குடி கொஞ்சம் முன்னாடி போய் பார்க்கலாம் வாங்க லட்சு அக்கா இந்த நம்பர் எங்க இருக்குன்னு நீயே பாரு "
என்று காமினி மகாலட்சுமி இடம் டிக்கெட்டை கொடுக்க..
"சரியான ஆராத்து ஒரு டிக்கெட் நம்பர் பார்த்து சீட்டை கண்டுபிடிப்பதற்கு என்ன எனக்குன்னு வந்து பிறந்து இருக்கீங்க பாரு சிறப்பான தங்கைகள் இரு என் ப்ராக்டிஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு சர்டிபிகேட் வரட்டும் நான் பண்ற முதல்ஆப்பரேஷனே உங்களுக்கு தான்"
என்று கடுகடுவென்று திட்டிக்கொண்டே முன்னோக்கி சென்று
தங்களுக்கான இருக்கையை பார்த்தவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டு..
"ஓ மை காட் ஒருவழியா சீட் கிடைச்சாச்சு நல்லவேளை நம்ம சீட்டை எவனும் களவாண்டு போகல சீக்கிரம் வாங்கடி"
என்று மூவரும் அவரவர்கள் இருக்கையில் வந்து அமர மூன்று பேர்களின் உரையாடலை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்
கடைசி நேரத்தில் ரயில் பிடித்து உள்ளே வந்துவிட்டார்கள் ஆனால் இப்பொழுதுதான் தாமதமாக தங்கள் இருக்கைக்கு வருகிறார்கள் என்று அவரவர் பேசிக் கொள்ள ஆனால் 10 பேர் கொண்ட ஒரு குழு அவர்களை ஆச்சரியமாகவும் கஷ்டமாகவும் அதிர்ச்சியாகவும் கோபமாகவும் சந்தோஷமாகவும் ஒவ்வொரு விதமாகவும் பார்த்துக் கொண்டிருந்தனர்..
அந்தக் குழுவில் ஒருத்தி துள்ளலாக
"ஏய் நீங்களும் எங்க கூட தான் வரிங்களா வாட் இஸ் சப்ரைஸ்"
என்று காவியா துள்ளலாக அவர்களுக்குள் வந்து நின்றுவிட அப்போதுதான் விஷாகா மகாலட்சுமி காமினி மூவரும் காவி
யாவை பார்த்தனர் அவளை பார்த்தவுடன் மெலிதாக சிரிக்க
அவளுக்கு வலப்பக்கம் இருக்கும் பெரியவர்களை பார்த்து மரியாதை நிமித்தமாக தலை அசைக்க அவர்களும் மெதுவாக தலை அசைத்தனர் இடப்பக்கம் இருக்கும் அந்த மூன்று பெயர்களில் இந்த மூன்று பெண்கள் ஏறெடுத்து கூட பார்க்கவில்லை…
STAY TUNED

Author: srija
Article Title: 2) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.