7) ராகம்

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
74
Reaction score
1
Points
8
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 7


மகா காலையில் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தாள் இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க வேண்டிய நாள் ஆதாரங்கள் அனைத்தும் பத்திரமாக தோழியிடம் ஒப்படைத்து இருந்தாள் தன்னை சுற்றி என்னவெல்லாம் நடக்கும் என்பது அவள் அறியாதது ஒன்னும் இல்லை அனிருத் தனது சாதகமாக எதை வேணாலும் செய்வான் ஆனால் இப்போது அந்த பயமில்லை ‌..


"அக்கா எனக்கு என்னமோ நீ அவசரப்படுறியான்னு தோணுது எதுக்கு அனாவசியமா ஹாஸ்பிடல் மேல கேஸ் போட்டு இந்த அளவு கொண்டு வந்து இருக்க அங்க என்ன நடந்தா என்ன மாமாவோட கண் பார்வையில தப்பான விஷயங்கள் நடக்குமா நீயே சொல்லு கண்டிப்பா ஏதோ ஒரு காரணமாக தான் அந்த இறப்பு நடந்திருக்கு நீ தான் அனாவசியமா அதையே பிடிச்சுகிட்டு லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்க அதே சமயம் உன்கிட்ட அந்த சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்கறதுனால இப்படி பண்ணிட்டு இருக்க


எதுக்கு நீ இவ்ளோ மெனக்கெட்டு பண்ணு?"


என்று துணிகளை மடித்தவாறு விஷாகா தன் சொற்பொழிவுகளை ஆரம்பிக்க..


"அடியே பைத்தியக்காரி கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்க இங்க பாரு என்னதான் என்னதான் அம்மா வயித்துல மூணு பேரும் உன்ன பிறந்தாலும் நேர கணக்கிட்டு பார்த்தா நீ எங்களை விட ஆறு மணி நேரம் சின்ன பொண்ணு நாங்க எல்லாம் முன்னாடி நாள் பொறந்தோம் நீ மறுநாள் தான் பொறந்த அதை முதலில் ஞாபகம் வச்சுக்கோ மூச்சுக்கு 300 தரவ அக்கா அக்கான்னு கூப்பிட தெரியுறதுல அப்படிப்பட்ட அக்காங்களுக்கு நீ தான் சப்போர்ட் பண்ணனும் எனக்கே சந்தேகமா தான் இருக்கு இந்த எருமை மாடு ஆரவ் பிசினஸ் என்கிற பெயரில் நிறைய பேர தன்னோட கம்பெனி கீழ கொண்டு வந்து அடிமாட்டு வியாபாரம் மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கான்..


இந்த அனிருத் சரியான ஊமக்கொட்டான் எப்போ என்ன நடக்குதுன்னு தெரியல அந்த ஹாஸ்பிடல்ல..


அதுக்கு மேல கடைசியா பொறந்த ஜந்து பார்க்க நல்லா பால்கோவா மாதிரி வெள்ளை வெள்ளைன்னு பிறந்து இருக்கான் சினிமாவில் நடிக்கும் போது உண்மையிலேயே அவன் தான் அந்த கேரக்டர் மாதிரி நடிப்பான் நிஜத்துல ஒண்ணுத்தையும் புடுங்க காணோம் மூணு பேரும் ஒவ்வொரு ஜந்து எந்த நேரத்தில் பெத்தாங்கன்னு தெரியல அதுக்கு மேல கடைசியா பிறந்த குட்டி குரங்கு


அது எங்கேயாவது விரட்டி விடுவாங்கன்னு பார்த்தா நம்ம அண்ணனுக்கே கட்டி வச்சுருவாங்க போல அக்காவும் தங்கச்சியும் மட்டும் நல்ல குடும்பத்தில் கட்டிக்கிட்டு சந்தோசமா இருக்கணும் …


அவங்க வீட்டு பொண்ணுங்க மட்டும் நல்ல மாமியார் மாமனார் நல்ல புருஷன் கூட சந்தோஷமா இருக்கணும் அவங்க வீட்டுக்கு வந்த பொண்ணுங்கள நாய் மாதிரி நடத்த கூட தயங்க மாட்டாங்க


ஏதோ சாத்விக்கா அண்ணி பரவாயில்ல ஆனா அந்த காவியாவை சத்தியமா நான் ஏத்துக்க மாட்டேன் அண்ணனுக்கு சரியான ஜாலரா"


என்று மினி புலம்பிக்கொண்டே திரும்பிப் பார்க்க அங்கே வாசலில் ஒரு பக்கம் காவியா ஒரு பக்கம் சாத்விகா இருவரும் அவளை பார்த்துக் கொண்டிருந்தனர்..




"அய்யய்யோ இந்த அங்கவை சங்கவை சிஸ்டர்ஸ் எப்ப வந்தாலுங்க ஒப்பாரி வச்சா மொத்த குடும்பமும் அழுவுங்க முக்கியமா அந்த மூன்று முட்டாபயளுங்க்களுக்கு தெரியவே கூடாது இல்ல பஞ்சாயத்துக்கு வருவாங்க"


என்று மனதில் முக்கோடி முக்கோடி தேவர்களில் வணங்கிக் கொண்டு அவர்களைப் பார்த்து இளித்து..



"அது அது ஒன்னும் இல்ல நம்ம விஷா குட்டி ஒரு வெப் சீரிஸ் நடிச்சா இல்லையா அதுல ஒரு டயலாக் நேத்து தான் பார்த்தேன் ரொம்ப புடிச்சி இருந்தது அதை சொல்லி பார்த்தேன் வேற ஒன்னும் இல்ல ஹிஹீ"


என்று மழுப்பி அங்கிருந்து ஓடிவிட மகாவும் தனக்கு நேரமாவதால் அவளும் அவர்களுடன் சிறு தலை அசத்து விடை பெற்று விட அங்கே தனித்து விடப்பட்டது விஷாகா தான்..


காவியா சாத்விகா இருவரும் விஷாகா அருகே வந்து அவள் கைகளை பிடித்துக் கொண்டு..


"உன்ன தான் மலை போல நம்பியிருக்க எங்க குடும்பத்தோட சந்தோஷமே நீ எடுக்கிற ஒரு முடிவு கிட்ட தான் இருக்கு நேத்து நீ உங்க அக்கா கிட்ட பேசுனது தான் கேட்டேன் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நீ மட்டும் இந்த உதவி பண்ணல நான் சத்தியமா எங்க குடும்பம் மறுபடியும் இன்னும் மோசமான நிலைமைக்கு போய் இருக்கும் உனக்கு ரொம்ப நல்ல மனசு ஆனா ஹர்ஷா தான் அத புரிஞ்சுக்கல நீ கவலைப்படாத உன் நல்ல மனசுக்கு நல்லபடியா நடக்கும் ஆனா மத்த ரெண்டு பேரோட வாழ்க்கைய வீணாக்க கூடாது அவங்க ஒருத்தருக்கு மேல ஒருத்தர் உயிரையே வச்சிருக்காங்க ஆனா அவங்க பிரிஞ்சு இருக்க காரணம் ஹர்ஷா எங்க உன்னோட அக்காங்க இப்படி இருக்க காரணம் நீ முடிஞ்ச அளவுக்கு பேசி எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு அனுப்புற மாதிரி பண்ணு "

என்று சாத்வி அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு உருக்கமாக பேச அவள் சிரித்துக் கொண்டே..


"உனக்கு உன்னோட ரெண்டு அண்ணன்களோட வாழ்க்கை முக்கியம்னா எனக்கு ரெண்டு அக்கா முக்கியம் கண்டிப்பா அவங்க ஒன்னு சேருவாங்க இதுக்கு நான் பொறுப்பு பிரச்சனை எங்களால தான் நாங்களே அத ஒரு முடிவுக்கு கொண்டு வரோம் எனக்கு தெரிஞ்ச ஹர்ஷா இதுல ஒன்னும் உடன்பாடு இருக்கிற மாதிரி தெரியல சீக்கிரமா விவாகரத்துக்கு அப்ளை பண்ணிடலாம் அதான் மூணு வருஷம் ஆயிடுச்சுல்ல ரெஜிஸ்ட்ரேஷன் கூட இருக்கு குடுத்தா சீக்கிரம் ஒரு ரெண்டு மூணு மாசத்துல கிடைச்சிடும் நமக்கு தெரியாத வக்கிலா என்ன அதான் நாளைக்கு தெவசம் முடிஞ்ச மறுநாள் இத பத்தி தான் பேசலாம்னு எல்லாரும் முடிவு எடுத்து இருக்காங்க இல்லையா இப்பதான் அம்மா எங்க கிட்டயும் சொல்லிட்டு போனாங்க நான் அக்காங்களை முடிஞ்ச அளவுக்கு பிரைன் வாஷ் பண்ணி இருக்கேன் அவங்க மனசுல இருக்குற ஆசையை தூண்டினால் போதும் கூட பொறந்தவங்களுக்காக வாழ்க்கை துணை ஒதுக்கி வைக்கிறது எனக்கே பிடிக்காத விஷயம் தான் நான் அன்னைக்கே சொன்னேன் ஆனா கேட்கல அப்புறம் எல்லாரும் படிச்சுக்கிட்டு இருந்த சமயம் சோ எல்லாரும் அவங்கவங்க எஜுகேஷன் ல பிஸியா போக்கஸ் பண்ணதால இதெல்லாம் விட்டுட்டோம் ஆனா இப்ப மறுபடியும் குடும்பம் எல்லாம் ஒன்னா இருக்கும்போது இந்த முடிவு எடுப்பதும் கையோடு கையை முடிச்ச மாதிரி இருக்கும் சோ நீங்க டென்ஷன் ஆகாதீங்க எல்லாம் நான் பாத்துக்குறேன்"


என்று சொல்லி முடித்து மூச்சு வாங்குவதற்குள் காவியா முந்திக்கொண்டு


" ஹான் இன்னொரு விஷயம் நக்குலன்"என்று இழுக்கும் போது புரிந்து கொண்ட விஷா சிரித்துக் கொண்டே..


"புரியுது ஆனா இன்னொருத்தவங்க விஷயத்தை தலையிட எனக்கு பிடிக்காது ஒருத்தங்களுக்காக பரிந்து ரெகமெண்டேஷன் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்காது அதெல்லாம் மனசுல இருந்து தானா வர வேண்டிய விஷயம் இது உன்னோட விஷயம் தானே நீ தான் போராடி பாக்கணும் போதும் இத்தனை நாள் நம்ம ஆளுங்க தானே என்று முடிஞ்ச அளவுக்கு நம்பி இந்த நிலைமைக்கு வந்து இருக்கேன் இதுக்கு மேல என்னால எதுவும் பண்ண முடியாது பா"



என்று சொல்லி அவளும் அங்கிருந்து சென்றுவிட


காவியா நொடிந்து கொண்டு


"என்ன இருந்தாலும் இந்த கருப்பிக்கு இவ்வளவு கொழுப்பா ஆகாது ஹர்ஷா என்ன அப்படி என்ன தப்பு பண்ணிட்டான் அவன் எதிர்பார்த்தது அழகான பொண்ணு அவனுக்கு ஏத்த மாதிரி துணை அது கிடைக்கல அதனால சண்டை போட்டான் இவள நாலு வார்த்தை பேசிட்டான் அது ஒரு பெரிய விஷயம் மாதிரி இந்த அழகி சிலித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டா கூடவே அக்காக்காரிங்க புருஷன் கூட வாழாம தங்கச்சிக்கு ஜால்ரா அடிச்சுட்டு வந்துட்டாளுங்க..



அப்படியே ஒருத்தருக்கு மேல ஒருத்தர் பாசம் தான் அதுக்கு மேல இவளுங்களோட அண்ணன்காரன் நல்லா இளிச்சி நல்லா தான் பேசிகிட்டு இருந்தான் எப்போ இந்த பிரச்சனை வந்து விடிஞ்சது அப்பதிலிருந்து என்னோட காதலுக்கு இடி விழுந்தது உன்னோட மாமியார் குடும்பம் இருந்தாலும் இவ்ளோ பாசம் வைத்திருக்க கூடாதுப்பா அதுவும் இந்த விஷாகா இப்ப ரொம்ப தலைகனம் புடிச்ச ஆடறா அப்ப எல்லாம் பாவம் மாதிரி இருப்பா இப்போ பயங்கர ஆள் ஆயிட்டா காக்கா பாலிஷ் போட ஆரம்பிச்சிருச்சு"



என்று வாய் விட..


"அடியே உங்க அக்கா இந்த வீட்ல தான் வாழுற அதை முதல்ல யோசிச்சு பாரு அதுக்கப்புறம் நீ இந்த வீட்டு பையன் முக்கியமா விஷாகாவ உயிரா நேசிக்கிற நகுல் தம்பியை தான் நீ விரும்புற இப்படி வார்த்தை விடாதே ரொம்ப தப்பு அவ மேல என்ன தப்பு இருக்கு நம்ம ஹர்ஷா தானே இதெல்லாம் பண்ணா அந்த பொண்ணு அப்ப கூட பெருந்தன்மையா ஒதுங்கி தான் இருந்தா இனி அவளை பத்தி பேசாத உனக்கு என்ன தெரியும் அவளை பத்தி இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன்"



என்று சாத்விகா தங்கைக்கு எச்சரிக்கை செய்ய…


"என்ன அவளுக்கு நீ வக்காலத்தா அவளும் அவ மூஞ்சும்"




என்று முகம் சுழித்து பேசிய உடன் அவள் இடது கன்னம் வீங்கி இருந்தது …



சாத்விகா தான் அவளை அறைந்து இருந்தாள்


அவளுக்கு குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் சின்ன பிரச்சனை பேசிவிட்டால் தீர்ந்துவிடும் அவ்வளவுதானே தவிர ஒரு மனிதனை இவ்வளவு தரைக்குறைவாகவும் இழிவாகவும் பேசுவது முக்கியமாக உருவ கேலி வைத்து பேசுவது தனக்கு நல்லது நடக்க இன்னொருவர் அந்தரங்க விஷயத்தை தலையிடுவது போன்றவற்றை முற்றிலுமாக தடுப்பவள் முழுக்க முழுக்க அவள் கொல்லு பாட்டி அகிலாதேவியை உரித்து வைத்தவள் அப்படி பட்ட அவளை வைத்துக்கொண்டு இப்படிப் பேசினால் அடி இன்னும் பலமாக தான் விழும்..


“ அக்கா இப்ப நான் என்ன சொல்லிட்டேன் என்ன எதுக்கு அடிக்கிற நான் உன்னோட தங்கச்சி கல்யாணம் பிறகு பொறந்த வீட்டை மறந்துட்டியா உன்னோட நாத்தனாருக்கு இவ்வளவு சப்போர்ட் அப்போ உன் தங்கச்சி வாழ்க்கை முக்கியம் இல்லையா” என்று அடிவாங்கிய கன்னத்தை தேய்த்தவாறு காவியா பேச..



“ நிஜமா நீ என் தங்கச்சி தானா ஆத்மி மம்மி உன்னை இப்படித்தான் வளர்த்தாங்களா இதை மட்டும் அமர் டாடி ஆத்மிகா மம்மி கேட்டாங்க உனக்கு பெண்டு நிமிர்த்தி இருக்கும் எப்படி நீ இவ்வளவு சுலபமா சுயநலவாரியை யோசிக்க ஆரம்பிச்ச??


இங்க பாரு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ரிலேஷன்ஷிப் பண்றது சாதாரணம் கிடையாது பிடித்த உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டு அடுத்த வருஷமே குழந்தை பிறக்கிறது எல்லாம் நீ ஈஸியான விஷயம் நினைச்சுக்கிட்டு இருக்க ஒரு குடும்ப வாழ்க்கை ஏத்துக்கிட்டு ஒரு பொண்ணு வாழணும் தாம்பத்திய உறவுல கணவனோடு பின்னி பணிந்து இருக்கனும் குழந்தை அடுத்த கட்ட வாழ்க்கை எல்லாம் அவ்வளவு சுலபம் இல்லடி


நீ ஈசியா பேசிட்ட அவளை பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு அனாவசியமா என் நாத்தனார் பத்தி பேச வேணாம்

அது எனக்கு பிடிக்காது அண்ணி இன்னொரு அம்மா மாதிரி நான் வரும்போது மூணு பொண்ணுங்களும் என்னை சுத்தி சுத்தி இருப்பாளுங்க அண்ணி அண்ணின்னு அண்ணியாப் இல்லாம ஒரு அம்மாவா தான் அவங்ககிட்ட பழகி இருக்கேன் என் பொண்ணுங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் ஞாபக வச்சுக்கோ


ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ ஒன்பது வருஷமா நான் அவங்களை வளர்த்து இருக்கேன் எனக்கு தெரியும் அவங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது அவங்க என்ன முடிவு எடுப்பாங்க இப்ப நான் பேச வந்த காரணம் என்ன தெரியுமா ஒருத்தி முடிவெடுத்தா மத்தவங்களோட வாழ்க்கையில சில மாற்றங்கள் வரும் அதுக்காக மட்டும்தான் நான் வந்ததே தவிர இப்படி சுயநலமா யோசிக்க கிடையாது இந்த குணத்தை மாத்திக்க பாத்துக்கோ இல்லன்னு வை நீ என்ன அழுகிறது நகுல் பதில் சொல்றது நானே சொல்லுவேன் என் தங்கச்சி நம்ம குடும்பத்துக்கு செட்டாக மாட்டா வேற நல்ல பொண்ணா பார்த்து உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் தம்பி என்று”


என்று சாத்வி அங்கிருந்து சென்றுவிட காவியாவிற்கு தான் செய்த செயல் புத்திக்கு உரைத்தது அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டோம் என்று மனம் வருந்தி போனாள் ஆனால் ஒரு மனிதன் தனக்காக சுய
நலமாக இருப்பது தவறு இல்லையே என்று தோன்றியது ஒரு வழகப் பிரச்சினை எல்லாம் சரியாய் இருந்தால் போதும் என்று அமைதியாக சென்று விட்டாள்…
 

Author: srija
Article Title: 7) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.