6) ராகம்

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
74
Reaction score
1
Points
8
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 6


நீலவேணி திடீரென்று இப்படி ஒரு பிட்டை போட்டு விட மூன்று ஆண்களும் என்ன செய்வது என்று தெரியாமல்.. தவித்துக் கொண்டிருக்கும் பொழுது சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்த ஹர்ஷா இதற்கு மேல் பேச்சு வாங்க கூடாது என்று நீலவேணி நீட்டிய குங்குமச்சிமிழ் இருந்து ஒரு துளி குங்குமம் எடுத்து விஷாகா நெற்றி மற்றும் தாலியில் வைத்துவிட்டு


"ஆன்ட்டி இன்னும் ஆபீஸ்ல கல்யாணம் யாருக்கும் அறிவிக்கப்படவில்லை. ரிசப்ஷன் எதுவுமே நடக்கல வெறும் ரெஜிஸ்ட்ரேஷன் மட்டும் தான் நடந்திருக்கு இதுக்கே ரொம்ப ஊரு வாய்க்கு வந்த மாதிரி பேசுது இப்ப பாருங்க உங்க கிட்ட கூட பேச்சு வாங்க வேண்டியது நிலைமை வந்து இருக்கு இனிமே இத வளர்க்கக்கூடாது நினைக்கிறேன் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைக்கிறோம் எல்லாரும் கொஞ்சம் பிசி அதனால இவங்களுக்கும் இந்த கல்யாண வாழ்க்கை ஏத்துக்க டைம் வேணும் இல்லையா எதுக்கு இப்படி கட்டாயப்படுத்துறீங்க இன்னைக்கு ஏதோ சமாளிச்சோம் இனிமே இந்த மாதிரி பேச்சுக்கள் நீங்கள் யாருக்கும் வரக்கூடாது"


என்று ஏதேதோ சொல்லி நீலவேணியை குழப்பிவிட்டு சென்றுவிட அதன் பிறகு அனிருத் வந்து மகாவிற்கு குங்குமம் வைத்து விட்டு சென்றுவிட இதற்காக காத்திருந்தவன் போல் ஆரவ் ஓடிவந்து காதலோடு கண்களில் மோகம் பொங்க காமினி நெற்றியில் தாலி பொட்டில் குங்குமம் வைத்து அவள் கன்னத்தை வருடிவிட அவள் சட்டென்று அவன் கையை தட்டி விட்டு ஓரமாக போய் நின்று கொண்டாள்..


நீலவேணி குறும்பாக சிரித்துக்கொண்டே ருக்மணியை பார்த்து கண்ணடிக்க அவளும் ஆத்மிகாவும் கண்களாலே பல கோடி நமஸ்காரங்கள் அவளுக்கு வைத்தனர் பின்னே ஏதாவது ஒரு கிரின்ச் பண்ணியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்பதை இவர்களின் பிளான் அல்லவா..


"இப்பதான் அழகா இருக்கீங்க சரி சரி இன்னும் நாலு நாள்ல உங்க வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு வரும்போது நீங்களும் குடும்பமா வந்து எங்கள வரவேற்கணும் அப்புறம் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இவங்க கல்யாண விஷயத்தை ஊருக்கு தெரியாம வச்சுக்க போறீங்க வெறும் சொந்த பந்தங்கள் தெரிஞ்சா மட்டும் போதுமா ஊர் உலகத்துக்கு தெரியணும் இப்ப நான் கேட்ட மாதிரி இந்த பொண்ணுங்களோட தாலி செயினை பார்த்து எத்தனை பேர் கேப்பாங்க இங்க பாருங்க ஒரு சில விஷயத்தை பதுக்கி வச்சா நல்லா இருக்கும் ஒரு சில விஷயத்தை வைக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்ல எனக்கு என்னமோ இது பிடிக்காத உறவு மாதிரி தான் இருக்கு ஒன்னு அறுத்துவிட்டுடனும் இல்ல சேர்த்து வைக்கணும் ரெண்டும் கெட்டான் மாதிரி ரெண்டு பேரோட வாழ்க்கையும் நாசமாக்க கூடாது நான் சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம் சரிங்க நான் வரேன் எல்லாரும் சீமந்தத்துக்கு வந்துடுங்க"


என்று சொல்லிவிட்டு நீலவேணி அவளுடன் இருந்த பெண்ணும் சென்றுவிட..


"நான் மனசால நினைச்சது இந்த அக்கா சொல்லிட்டு போறாங்க இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த விஷயம் மறைச்சு வைக்கிறது அவங்கள கூப்பிட்டு பஞ்சாயத்து வைக்கலாம் முடிவா என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு யாருக்கு சேர தோணுதோ சேரட்டும் அறுத்து விடுபவர்களுக்கு அத்து விடலாம் "


என்று ஆத்மிகா படப்பாடவென்று பேச அமர் அவள் ஒரு பார்வை பார்க்க மென்மையாக கண் சிமிட்டி நான் இருக்கிறேன் என்று சைகை காட்டியவுடன் அமைதி ஆகிவிட்டான் என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் ஆறு பிள்ளைகளும் அவளுக்கு கண் போன்றவர்கள் இதில் பெண் ஒதுக்கமில்லை ஆண் ஆதிக்கம் இல்லை ஆனால் ஏன் எதற்காக என்று தெரியவில்லை கணவன் மனைவி பிரச்சினைகுள் வரக்கூடாது என்ற பேசிக் டீசன்ட் முறையில் தான் அவள் ஒதுங்கி இருக்கிறாள் இப்போதைக்கு வாழ்வை அதிகாரபூர்வமாக வைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அதனால் தானே அமைதியாக இருக்கிறாள் ஏதோ குற்றம் செய்தது போல் தன்னையே அனைவரும் சாடுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..


தன் ரூம் சென்று முடங்கிக் கொள்ள பின்னால் அவள் ஆருயிர் கணவனும் அவளுக்கு ஆறுதல் சொல்ல கிளம்பிவிட்டார் மற்றவர்களும் சென்ற பிறகு நடு ஹாலில் வெறும் மூன்று பெண்கள் மட்டும் தான் இருந்தனர்..


"அக்கா என்னக்கா கூடி பேசி முடிவெடுக்க போறத சொல்லிட்டு இருக்காங்க என்னக்கா பண்றது என்னோட முடிவு பத்தி ஆல்ரெடி சொல்லிட்டேன் அம்மா சொன்ன வார்த்தைக்காக தான் நான் இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன் என்ன வெறுத்து ஒதுக்குற மனசுல நான் எப்படிக்கா மறுபடியும் போக முடியும் இந்த நாளுக்காக தான் காத்துகிட்டு இருந்தேன் என்னோட பதில் எனக்கு ஹர்ஷா வேண்டாம் அக்கா அவன் அவன் வாழ்க்கை போக்கில் இருக்கட்டும் நான் எனக்குன்னு இருக்குற வாழ்க்கையில வாழ ஆசைப்படுகிறேன்"


என்று வாய் தான் சொல்லியதை தவிர அவன் கட்டிய பொன் தாலியை கெட்டியாக பிடித்துக் கொண்டாள் அதை அவிழ்க்கும் எண்ணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள்..


காமினி தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி தங்கையிடம் இதற்கு என்ன அர்த்தம் என்று பார்வையால் கேட்க..


"அக்கா அது இது நான் விரும்பி ஏத்துக்கிட்டது இதாவது என் கழுத்துல இருக்கட்டும் மற்றபடி சட்டப்படி நடக்க வேண்டியது நடக்கட்டும்"


என்று சொல்லி தலையை கவிழ்த்து விட..


"இங்க பாரு நீ நல்லா இருந்தாதான் நாங்க சந்தோஷமா இருப்போம் நீ இப்படி பண்ணா நாங்களும் அதே முடிவை தான் எடுப்போம் இருந்தா ஒண்ணா இருப்போம் இல்லையா ஒன்னாவே ஒரு முடிவு எடுப்போம் என்ன மினி நான் சொல்றது??"


என்று மகா கேட்க அவளும்


"அப்படி ஒரு முடிவு எடுத்ததால் தானே என் பின்னாடி ஆரவ் சுத்தி சுத்தி வந்து எவ்ளோ குட்டி காரணம் போட்டாலும் ஒத்துக்காம இருக்க காரணம் ஏன் தங்கச்சி நல்லா இருக்கத்தான் அவளை வேணாம்னு சொன்ன குடும்பத்துல என்னால எப்படி சந்தோஷமா வாழ முடியும் அப்புறம் அந்த ஹர்ஷாவை பார்க்கும்போது அவன் என் தங்கச்சிய அவமானப் படுத்திய ஞாபகம் வரும் ஆனா ஆரவ் கிட்ட ஆல்ரெடி சொல்லிட்டேன் ஆனா அவர் முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்றார் எனக்கு தெரியல அனிருத் சைலன்ட் கில்லர் அவரை பற்றி நான் பேசுறதுக்கு ஒன்னும் இல்ல"


என்று இறுதியாக முடித்துக் கொள்ள மகா முகம் சுருங்கி விட்டது


அதைப் பார்த்து அவள் வலியை உணர்ந்து கொண்ட விஷாகா ஒரு பக்கம் மினி கையையும் மறுபக்கம் மகாவின் கைகளையும் பிடித்துக் கொண்டு..


"இப்பவும் சொல்றேன் உங்களுக்கான வாழ்க்கை பிரகாசமா காத்துகிட்டு இருக்கும்போது நீங்களே அதை வெறும் எனக்காக குழி தோண்டி புதைக்கிறது எல்லாம் சுத்தம் முட்டாள்தனம் என் மேல பாசமா இருந்திங்கனா உங்க தங்கச்சி சந்தோஷமா இந்த உலகத்துல தலை நிமிர்ந்து வாழனும்னு ஆசைப்பட்டீங்கன்னா கண்டிப்பா நீங்க மாமாங்க கூட நல்லபடியா வாழனும் உங்க மேல உயிரையே வச்சிருக்காங்க அக்கா நம்ம மேல உயிரையே வைத்திருக்கிறவர்களை ஒதுக்குகிறது எவ்வளவு பெரிய வலி எனக்கு தெரியும் ப்ளீஸ் கா நீங்க அந்த தப்பா பண்ணிடாதீங்க நம்மள நேசிக்கிறவங்க கிடைக்கிறது வரும் அதுக்காக எத்தனையோ பேர் ஏங்கி இருக்கிறார்கள் அதோட வலி கூட எனக்கு தெரியும் அனுபவத்துல சொல்றேன் ப்ளீஸ் கா எனக்காக"


என்று இரண்டு பேர் கரங்களையும் தன் கண்களோடு ஒட்டிக்கொள்ள..



"ஹேய் என்னடி இப்படி எல்லாம் பேசுற உனக்கு இதெல்லாம் பேச தெரியுமா ஏன் விஷா இப்படி பண்ற நம்ம எல்லாருக்குமே ஒரே வயசு தான் ஆனா ‌ நாங்க ரெண்டு பேரும் உன்னை குழந்தை மாதிரி தான பாத்துக்கிட்டோம் உன்ன கைக்குள் வைத்து பார்த்துக் கொண்டோம் டி போனா ஒரே மாதிரி தான் இருக்கணும்னு முடிவு பண்ணி தாண்டி இந்த விஷயத்துக்கே நம்ம ஒத்துக்கிட்டோம் இப்ப ஏண்டி இப்படி பேசுற உண்மைய சொல்லு எங்கள விட காதல் பத்தி உனக்கு தாண்டி தெரியும் ஹர்ஷாவ நீ சின்ன வயசுல இருந்து உயிருக்கு உயிரா நேசித்த இந்த தாலி மீது சத்தியம் பண்ணி சொல்லு ஹர்ஷாவுக்கும் உனக்கும் விவாகரத்து ஆச்சுன்னா உன்னால சந்தோஷமா இருக்க முடியுமா???"


என்று மகா கேட்டவுடன் காமினியும் பதில் சொல் என்பது போல் பார்க்க அவளால் எதுவும் பேச முடியவில்லை ஒரு சேர அக்காக்களை கட்டிப்பிடித்துக் கொண்டு..



"இதற்கான பதில் உங்களுக்கு தெரியும் ஆனா நம்ம பிடிச்சவங்களுக்காக என்ன வேணா பண்ணலாம்னு காதல் அகராதியில் எழுதி வைக்காத ஒரு விடுமுறை இருக்கு அது நான் பண்ணலாம்னு இருக்கேன் என்ன மாதிரி எத்தனையோ பேர் இருக்காங்க ஏன்கா விவாகரத்து பிறகு என் வாழ்க்கை நல்லா இருக்காது நினைக்கிறீங்களா? இது என் வாழ்க்கை எனக்கு ரெண்டு அக்கா இருக்காங்க ஒரு ரெண்டு அண்ணங்க இருக்காங்க எனக்கு அம்மா அப்பா இருக்காங்க ஒரு குடும்பமே எனக்கு இருக்கு நம்ம என்னதான் அண்ணி குடும்பத்து மேல கோவமா இருந்தாலும் அண்ணி நமக்காக தானே இருக்காங்க அம்மா அடுத்து அண்ணி முத்து மாதிரி ரெண்டு குழந்தைங்க இதுக்கு இது போதும்


அப்புறம் நீ எல்லாம் எங்க உருப்பட போற நீ எல்லாம் லாய்க்கு இல்ல எதுக்குமே அப்படின்னு சொன்ன ஆளுங்களுக்கு முன்னாடி இப்போ தமிழ்நாட்டுல பெஸ்ட் பேக்கர் பாயிண்ட்ல என்னோட பேக்கரிஸ் அஞ்சாவது இடத்துல இருக்கு மூணு வருஷத்திலேயே நான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கேன் காரணம் நீங்க எல்லாருமே தான் நீங்க தான் எனக்கு எல்லாமே நடுவுல வந்தவங்க நடுவுல வந்த மாதிரியே போடட்டும் "

என்று சொல்லி தன் அறைக்கு சென்று விட அவர்களும் தங்கைக்கு பின்னால் சென்று தங்கள் அறைக்குள் அடைந்து விட


இவை அனைத்தையும் ஏதோ மெகா சீரியல் இவை அனைத்தையும் ஏதோ மெகா சீரியல் பார்ப்பது போல் அனிருத் ஆரம் ஹர்ஷா..



ஆனால் அவர்கள் முக காட்டும் பாவனைகள் மனதில் இருக்கும் முயற்சிகளை என்னவென்று சொல்ல இயலாத அளவிற்கு

வித்தியாசமாக வைத்துக் கொண்டிருந்தனர் ..



ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக் கொண்டனர் பார்வையால் என்ன பேசிக் கொண்டனரோ மூவரும் மொட்டை மாடிக்கு சென்று எப்பொழுதும் போல் சோக கீதம் வாசித்துக் கொண்டே மூன்று பாட்டில் பியர் ஆளுக்கு ஒரு பியர் என்று பிரித்து முழுதாக வாயில் சரித்துக் கொண்டனர்..


"பாத்தியானா இப்படி சென்டிமென்ட் பேசிப்பேசி பேசி பேசி நம்ம ஏதோ வில்லன் மாதிரியும் அவங்க ரொம்ப நல்லவங்க மாதிரியும் பண்றாங்க இல்ல ஏன் நம்ம விருப்பப்பட்ட மாதிரி ஒரு வாழ்க்கை அமைச்சுக்க கூடாதா?? அப்படி என்ன நம்ம குறைந்து போயிட்டோம் ஏதோ சொல்லிட்டேன் அப்படியே விடனும் இல்ல ஏன் திரும்பத் திரும்பத் திரும்ப என் வாழ்க்கையில் வந்து வந்து என்னை இம்சை பண்ணுது அவளை குறை சொல்ல முடியாது அவ நல்லா தான் இருக்கா அவளுக்கு பிடிச்ச மாதிரி செஞ்சுகிட்டு ஆனா ஏன்னா நம்ம பண்ணா மட்டும் ஆம்பளைங்க எல்லாருமே சுயநலவாதின்னு சொல்றாங்க என்னால நீங்க கூட வாழ்க்கையை தொலைச்சிட்டு வந்து நிக்கிறீங்களே அவ சொன்ன மாதிரி தான் சரி நீங்க எதுக்கு அண்ணிங்க கூட வாழ கூடாது கொஞ்சம் பிரச்சனையாவது முடியட்டும் எங்களோடு ஆரம்பித்த பிரச்சனை எங்களோட முடியட்டும் இதுக்கு மேல என்னால ஒன்னும் சொல்ல முடியாது என்ன காம்ப்ரமைஸ் பண்ணாதீங்க"


என்று சொல்லிவிட்டு அப்படியே ஹர்ஷா மல்லாக்கா படுத்து விட..



இருவரும் எதுவும் பேசாமல் அங்கு இருக்கும் சுவற்றில் சாய்ந்து கொண்டனர் மூவர் மனதிலும்


'எது நடந்தாலும் அந்த விஷயத்தை சந்திக்க தயாரா இருக்கணும்
'


என்று நினைத்தவுடன் மூவரையும் அறியாமல் அவரவர் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது..
 

Author: srija
Article Title: 6) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.