29) ராகம்

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
74
Reaction score
1
Points
8
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 29



மாதங்கள் சென்றது…


அன்று காமினிக்கு ஏழாவது மாதம் சீமந்தம் செய்யலாம் என்று குடும்பத்தார்கள் அனைவரும் திட்டமிட்டு இருந்தனர் வயிற்றில் 3 பிள்ளைகள் சுமந்து இருப்பதால் அடுத்த மாதம் இறுதியில் சிசேரியன் செய்துதான் குழந்தைகளை எடுக்க வேண்டும் ஒன்பதாவது மாதம் வரை கணம் தாங்க முடியாது என்று மருத்துவர் அறிக்கை சொல்லிவிட ஏழாவது மாதத்திலேயே அவளுக்கு சீமந்தம் தொடங்கிவிட்டனர்…



ஆரவ் கால்கள் இந்த பூமியில் இல்லை ஸ்கேன் ரிப்போர்ட்டில் வயிற்றில் மூன்று கரு என்று சொன்னவுடன் ஆகாயத்தில் பறக்காத குறை தான் அவனுக்கு…


"என்ன கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தியே பாரு ஒரே அட்டெம்ப்ட் ல மூணு பிள்ளை பெத்துக்க போற"


என்று ஹர்ஷா அண்ணனை ஒரு பக்கம் கலாய்க்க ஒரு பக்கம் அனிருத் ஆறு மாதம் மேடிட்ட வயிற்றைப் பிடித்து மெதுவாக நடந்து வரும் மகாவை அங்கு இருக்கும் சோபாவில் ஓரமாக அமர வைத்து அரை மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடுவதற்கு ஏதாவது ஒன்றை கொடுத்துக் கொண்டிருந்தான்…


இங்கே ஐந்து மாத குழந்தையை வயிற்றில் சுமந்தவாறு அங்கேயும் இங்கேயும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தாள் விஷாகா ஹர்ஷா முறைத்தாலும் அவள் கேட்கவில்லை அவளுக்கு உடல் உபாதைகள் சோர்வு எதுவும் இல்லை சுறுசுறுப்பாக வேலைகளை செய்து கொண்டிருந்தாள்…


"ஏண்டி என்னோட தங்கச்சிங்க மூணு பேருமே டெலிவரி டேட் கிட்ட நெருங்கிட்டு இருக்காங்க இப்பதான் உனக்கு நாலாவது மாசமே அதுக்கு இப்படி சோர்ந்து சோர்ந்து படுத்துகிறாயே??"


என்று விழாவிற்கு இன்னும் தயாராகாமல் சோம்பேறியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் தன் மனைவி காவியாவை பார்த்து நகுலன் சிடுசிடு என்று பேச..


"உனக்கென்ன தெரியும் ரொம்ப லேசியா இருக்கு பாடி எல்லாம் உன்னோட பிள்ளை பண்ற சேட்டைதான் அதிகமா சாப்பாடு கேக்குது அதிகமா தூக்கமும் கேக்குது எல்லாம் உன்னால தான் இதுல என்னையே நீ திட்டுற போ நான் எங்கேயும் வரல"


என்று அழுவது போல் பேசி முகத்தை மூடிக்கொண்டு திரும்பிக் கொள்ள அவளை கொஞ்சி கெஞ்சி எப்படியோ சமாதானம் செய்து அவனே ஒரு புடவை எடுத்து கட்டிக்கொண்டு படி இறங்கவிடாமல் அவளை தூக்கிக்கொண்டு நடந்து வந்தான்…



"கூடிய சீக்கிரம் இந்த வீடு ஒரு பிளே ஸ்கூலா மாற போகுது போல "


என்று வந்த உறவினர்கள் நகைச்சுவை என்ற பெயரில் சில சில அடல்ட் ஜோக்குகளை பேசிக்கொண்டு போக…


இதோ ஆரவ் எடுத்துக் கொடுத்த கணம் இல்லாத ஒரு அழகிய சிகப்பு நிற புடவையில் தேவதையாக ஜொலிக்கும் காமினி


தன் ஏழு மாத மேடிட்டு வயிற்றை பிடித்துக் கொண்டு மெதுவாக அங்கே போடப்பட்டிருக்கும் நாற்காலையில் வந்து அமர ஆரவ் அவளுக்கு மாலை அணிவித்தான் முதல் படியாக சந்தனம் குங்குமம் அவன் வாங்கி வந்த கண்ணாடி வளையல்கள் அணிவித்து அவள் நெற்றியில் முத்தம் கொடுக்க கண்கலங்கி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..


"அழக்கூடாது பிஜிலி நீ சிரிச்சுக்கிட்டே இருக்கணும்"


என்று அவளை சமாதானம் செய்து அவள் அருகிலேயே நின்று கொண்டிருந்தான்…


கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இன்னொரு கர்ப்பிணி பெண்களுக்கு நலங்கு வைக்க கூடாது என்பதால் மகா விஷாகா காவியா மூவரும் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் இங்கே சின்னஞ்சிறு பாதத்தில் மகா வாங்கி கொடுத்த வெள்ளி கொலுசு ஜல் ஜல் என்று ஓசை ஒலிக்க அந்த வீட்டையே ஒரு வலம் வந்து கொண்டிருந்தாள் ஹர்ஷவர்தினி …


அங்கே இங்கே ஓடியாடி கீழ எங்கேயாவது விழுந்து விடப் போகிறாளோ என்று அவளை தூக்கி வைத்துக் கொண்டான் ஆரவ்


அவ்வளவுதான் பெரியப்பாவின் திரண்ட புஜத்தில் ஓங்கி ஒரு அடி வைத்தது அவளுக்கு சுதந்திரமாக சுற்றிவர ஆசை தூக்கி பிடித்தால் சுத்தமாக பிடிக்காது அவ்வளவுதான் பெரியப்பாவும் மகளும் கிள்ளி சண்டை போட்டுக் கொண்டனர்..


"அடுத்த மாசத்துல இவனுக்கே மூணு பிள்ளைங்க பொறக்க போகுது இன்னும் தம்பி பொண்ணு கிட்ட விளையாடிட்டு இருக்கான்"


என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்க இதோ சிறிது நேரத்தில் விருந்து உபசரிப்பு நடைபெற்றது விருந்தினர்கள் மெச்சும் படி அறுசுவை உணவு பரிமாறப்பட்டது எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் பகதூர் ஊரில்தான் நடக்கும் என்பது குடும்ப கட்டளை என்பதால் அனைவரும் ஊரிலேயே இந்த விழாவையும் நடத்தி முடித்தனர்…



தூரத்தில் இருக்கும் உறவினர்கள் பக்கத்து ஊரில் இருக்கும் உறவினர்கள் அனைவரும் வந்து ஆசீர்வாதம் செய்து சென்றனர்…



விருந்து உபசரிப்பு விழா அனைத்து முடிவு பெற்று அனைவரும் அவரவர் அறைக்குள் தஞ்சம் அடைந்து கொள்ள..



விஷாகா நைட்டி அணிந்து கொண்டு ஒரு நாவல் புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தாள்..


ஹர்ஷா அவள் மடியில் படுத்து கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தான் அவன் புருவ முடிச்சை பார்த்தவுடன் யூகித்துக் கொண்டவள்..


"சார் நீங்க எதைப் பற்றியும் தீவிரமா யோசிச்சிட்டு இருக்கீங்க கொஞ்சம் என்னன்னு சொன்னா நாங்களும் அதற்கான சொல்யூஷன் சொல்லுவோம்"


என்று சொன்னவுடன் அவள் மேடிட்ட வயிற்றுக்கு ஒரு முத்தம் கொடுத்து..


"இல்ல நாலு மாசம் வரைக்கும் டாக்டர் எதுவும் வைக்க கூடாதுன்னு சொன்னாரு. இப்ப உனக்கு அஞ்சாவது மாசம் தொடங்கிடுச்சு இல்லையா அதான் இப்போ நம்ம ப்ராசஸ் பண்ணலாமா அப்பதான் நார்மல் டெலிவரிக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமா அதான் யோசிச்சிட்டு இருக்கேன்"


என்று மொத்த பல்லையும் காட்டி இளித்து வைக்க புத்தகத்தை எடுத்து அவனை ஒரு போடு போட்டு..



"எப்ப பாரு உன் புத்திக்கு இது நெனப்பு மட்டும் தான் இருக்குமா ???



ஏற்கனவே மூணு மாசம் நீ வீட்லதான் இருக்க ப்ரொடக்ஷன் வொர்க் போயிட்டு இருக்கு உன்னோட கால் சீட் எப்போ அலோகேட் பண்ணி இருக்காங்க???"


என்று அவன் வேலை விஷயமாக கேட்க…


"இப்போதைக்கு கைவசம் எந்த மூவியும் இல்லை இப்ப ப்ரொடக்ஷன் தான் பண்ணிக்கிட்டு இருக்க பேமஸ் ஹீரோ தானே கண்டிப்பா படம் ஹிட் ஆகிடும் என்னோட பாப்பா பொறந்து ஆறு மாசம் வரைக்கும் நான் அது கூட தான் இருப்பேன் அப்பப்ப வேலை விஷயமா போயிட்டு சீக்கிரமா வந்துடுவேன் உங்கள விட்டுட்டு என்னால வெளியே ஸ்டே பண்ண முடியாது வரு பாப்பா பொறக்கும் போது தான் என்னால கூட இருந்து எதையும் பார்த்துக்க முடியல இந்த குட்டி பையனுக்காவது அப்பாவோட வாசம் இருக்கட்டும்"


என்று சொல்ல விஷக்கா அவனை பிடித்து இழுத்து நெற்றியில் முத்தம் கொடுத்து அவனை அனைத்துக் கொள்ள..


அவள் தேவை என்னவென்று புரிந்து கொண்டவன்


"என்னடி வேணுமா"


என்று கேட்டவுடன் சம்மதம் என்று கண்களை மூட அவளை பூவை போல் மெதுவாக கையாண்டு..

அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு உறங்க வைத்தான்…



__________________________________



இங்கே காமினி கடுப்பாக ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டு காலை எதிரில் இருக்கும் டீ பாய் மீது நீட்டி வைத்திருக்க வலப்பக்கம் ஆரவ் இடப்பக்கம் வர்தினி இருவரும் அமர்ந்து கொண்டு காமினி வயிற்றை தொட்டு தொட்டு பார்த்து விளையாடிக் கொண்டிருந்தனர்…


"நான் சொல்றேன்ல மூணு உன்ன மாதிரி குட்டி பொண்ணுங்க தான் இருக்காங்க உனக்கு தங்கச்சி பாப்பாங்க தான் வர போறாங்க"

என்று ஆரவ் வர்த்தினி இடம் சண்டை போட


"இல்ல … என்கு குத்தி தம்பி பாப்பா தான் வேதும்"

என்று பெரியப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தது மாறி மாறி வயிற்றில் கையை வைத்து வயிற்றில் இருக்கும் பிள்ளைகள் எட்டி உதைப்பதையும் கைதட்டி ரசித்து கொண்டிருக்க…


"போதும் போதும் அப்பாவும் பொண்ணும் சும்மா சும்மா கை வைத்து மேட்ச் விளையாடிட்டு இருக்கீங்களா எனக்கு தூக்கம் வருது உள்ள இருக்குற மூணு குட்டிகளும் என்னை தூங்க விடல வெளியே இருக்கிற நீங்க ரெண்டு பேரும் தூங்க விட மாட்டீங்க வரு பாப்பா டைம் ஆயிடுச்சு இல்ல வாங்க தூங்கலாம்"


இன்று குழந்தையை தூக்க போக அவளை தடுத்து ஆரவ் குழந்தையை தூக்கிக்கொண்டு..


"அறிவு இருக்கா உன்னால குழந்தையை தூக்க முடியுமா நான் தூக்க மாட்டேன் பொறுமையா நடந்து வா"


என்று அவளை மெதுவாக கைபிடித்து அழைத்து வந்து கட்டில் ஒரு பக்கம் படுக்க வைக்க நடுவில் குழந்தையை படுக்க வைத்துக்கொண்டு மறுபக்கம் படுத்திக் கொண்டான் குழந்தை இருவரும் கைகளை பிடித்துக் கொண்டு ஏதேதோ மழை மொழியில் பேசிக்கொண்டு அப்படியே உறங்கிவிட..


"எனக்கு இருந்த டவுட் நீங்க எதுக்கு வரு பாப்பா கூட இவ்ளோ க்ளோசா இருக்கீங்களே என்ன சங்கதி??"


என்று காமினி விளையாட்டாக கிண்டல் அடித்து கேட்க..


"எனக்கு என் தம்பி ஹர்ஷனா ரொம்ப பிடிக்கும் அது மட்டும் இல்லாம அபி மம்மி ரொம்ப பிடிக்கும் அவங்கள மாதிரியே தானே வரு பாப்பா இருக்கா நான் அப்ப சொல்வேன் என் தம்பிக்கு குழந்தை பிறந்தாலும் அதை நான் தான் வளர்ப்பேன் அப்படின்னு சொல்லி வச்ச மாதிரி வரு பாப்பா கூட என்கிட்ட தான் க்ளோசா இருக்கா அதனால தான்"


என்று சொல்லி கண்ணடிக்க அவளும் சரி என்று தலையாட்டி அவன் நெற்றியில் முத்தம் கொடுக்க மூவரும் ஒருவர் கை ஒருவர் கோர்த்துக்கொண்டு உறங்கி விட்டனர்..


________________________________


இங்கே அனிருத் பால்கனியில் அமர்ந்து கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருக்க மகா அவனிடம் பேசலாமா வேண்டாமா என்று தயங்கி தயங்கி அவனிடம் நெருங்கி வர எந்த முகத்தைக் கொண்டு அவரிடம் பேச வேண்டும் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கிட்ட ஆகிவிட்டது அவன் ஏதாவது கேட்டால் பதில் சொல்வாள்


இவளுக்காக ஏதாவது ஒன்று தோன்றினால் அவனிடம் கேட்பாள் இதைத் தவிர இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை மனதில் ரணம் அப்படியே இருக்கிறது ஆனால் வளரும் பிள்ளையின் எதிர்கால முக்கியம் அல்லவா அம்மா அப்பாவின் ஒற்றுமையான உறவு தானே ஒரு பிள்ளை வளர முக்கிய காரணமாக இருக்கிறது…


சரி எதுவா இருந்தாலும் நாமாகவே போய் பேசுவோம் என்று மகா மெதுவாக அங்கு நின்று கொண்டிருக்கும் அனிருத் பின்னால் இருந்து கட்டிப்பிடிக்க…


"ஒரே ரூம்ல இவ்வளவு நாள் இருக்க இப்பதான் என்னோட ஞாபகம் என்னோட காதல் எல்லாம் தெரிஞ்சுதா??"


என்று கேட்டவுடன் நிமிர்ந்து பார்த்தவள் அப்படியே அவள் புறம் திரும்பி என்னவென்று புருவத்தை உயர்த்த அவன் பார்வை வீச்சு தாங்க இயலாமல் தலைகுனிய அவளை நிமிர செய்து தன்னை பார்க்க செய்தவன்…


"நான் என்ன செய்தால் உன்னோட கோபம் போகும்??"


என்று கேட்க….


"அவசரப்பட்டு வார்த்தை விடுற குணத்தை மட்டும் நீங்க ஒதுக்கி வச்சா நீங்க நல்லவர் தான் நீங்களே நினைச்சு பாருங்க வயிற்றில் இருக்கிறது குழந்தை என்று கூட தெரியாம அது இல்லன்னு ஒரு விஷயம் சொல்லி மெண்டல் அப்சட்ல வரும்போது சம்மதமே இல்லாம உங்க அரைகுறை செக்யூரிட்டி கார்ட் சொன்ன அரவேற்காடு விஷயத்தை நம்பி நீங்க என்கிட்ட அனாவசியமா சண்டை போட்டீங்க நாலு அடி அடித்து இருக்கலாம் பிரச்சனை இல்லை சாட்டையால் அடிக்கிற மாதிரி வார்த்தைகள் நான் சாகும்போது கூட என்னால் அதை மறக்க முடியாது"


என்று சொல்லி முடித்தவரின் கண்கள் ஈரம் கசிய…


"போதும் போதும் அதுக்குள்ள வாட்டர் பால்ஸ் ஓபன் பண்ணாத"


என்று கன்னத்தைப் பிடித்துக் கொள்ள அதை தட்டி விட்டவள்..


"எனக்கு கோபம் வரும் நான் ரொம்ப எமோஷனல் நீங்க பேசிய வார்த்தைய ஜீரணிக்கவே எனக்கு பல நாள் ஆகும் நான் அமைதியா இருந்ததால நீங்களும் அமைதியா இருந்துட்டீங்க எப்பயாவது ஒரு வாட்டி தான் பேசுறீங்க அதனால நானும் எதையும் பெருசா கண்டுக்கல ஆனா இப்போ எனக்கு உங்களோட அருகாம அதிகமாக தேவைப்படுது என்ன விட இப்போ நம்ம பிள்ளைக்கு நம்ம ரெண்டு பேரும் தேவை இல்லையா நம்ம சந்தோஷமா இருந்தா தான் நம்ம பிள்ளையும் நல்லபடியா இருக்கும் அதுக்காகவாது எவ்வளவு கோவமா இருந்தாலும் ஒரு வார்த்தை பேசி இருக்கலாம் இல்ல இப்படி நீங்க அமைதியா இருப்பீங்க பேசினா ரொம்ப ஓவரா பேசுவீங்க இது ரெண்டும் தவறு உங்களுக்கு என்ன தெரியும் இப்ப கூட நானே தான் வந்து பேசுறேன் போங்க அனி"


என்று திரும்பி செல்பவளை பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் முகம் முழுவதும் முத்தம் கொடுத்து….


"என் மேல உனக்கு கோபம் இல்லை ல??"


என்று கேட்க இல்லை என்று தலை அசைக்க..


அவள் முன் மண்டியிட்டு அவள் வயிற்றில் ஒரு முத்தம் கொடுத்து..


"பாப்பா என்னோட சீதா என் மேல கோவம் இல்லைன்னு சொல்லிட்டா"

என்று அவளை இடையோடு கட்டிக்கொள்ள அவளும் தன் கணவன் தலையை தன் வயிற்றோடு அழுத்தி பிடித்துக் கொண்டாள்…



மூன்று ஜோடிகளும் ஒவ்வொரு மன நிலைமையில் தங்கள் காதல் உலகில் சஞ்சரித்தனர்…


_________________________________



மறுநாள் மாலை அனைவரும் ஊருக்கு புறப்பட தயாராக இருந்தனர் இதோ தோட்டத்தில் சிறிது நேரம் நடை பயின்று விட்டு வருகிறோம் என்று விஷாகா மகா காவியா மூவரும் இன்னும் வரவில்லை வேலை ஆட்கள் அனுப்பி வைத்து பார்க்க மூவரும் அங்கு இல்லை என்று சொல்லி விடவே..


"ஏதாவது ரூம்ல ரெடி ஆயிட்டு இருப்பாங்க உள்ள போய் பாருங்க"


என்று பெரியவர்கள் சொன்னவுடன் அனைவரும் ஒவ்வொரு அறைகளாக தேட மூன்று பெண்களும் காணவில்லை…



"ஐயோ என்ன சொல்றீங்க மூணு பொண்ணுங்கள காணோம் கர்ப்பிணி பொண்ணுங்க எப்படி இவ்வளவு தூரம் எங்க போயிருப்பாங்க ??? என்று காமினி பதட்டமாக சொல்ல அவளை சமாதானம் செய்து வைத்த ஆரவ்



"இங்க பக்கத்துல தான் எங்கேயாவது போயிருப்பாங்க நீ கவலைப்படாத அவங்க வருவாங்க”..


என்று சமாதானம் செய்து அருகில் இருக்கும் இடம் வரைக்கும் பார்க்க அவர்கள் இருந்ததற்கான சுவடே இல்லை சிறிது நேரத்தில் அனிருத் மொபைல் போன் அலற எடுத்து காதில் வைத்த உடன்…


"மூணு பொண்ணுங்களும் மான் மாதிரி இருக்கு பத்தாததுக்கு வயிற்றுக்குள்ள குட்டிங்க இருக்கு மொத்தம் ஆறு உயிர் இன்னும் கொஞ்ச நேரத்துல உருத்தெரியாமல் சிதைய போகுது "



என்று அகோரமாக பேசும் ஒரு ஆண் குரல் கேட்க யார் என்று புரிந்து கொண்ட அனிருத்..


"அடேய் ராமச்சந்திரன் எவ்வளவு தைரியம் இருந்தா எங்க வீட்டு பொண்ணுங்கள கடத்தி இருப்ப உனக்கு என் கையில் தான் டா சாவு எங்க கடத்தி வச்சிருக்க அவங்கள??"



என்று கேட்க வருவதற்குள் மொபைல் போன் கட் ஆகிவிட்டது…


" அந்த ராமச்சந்திரன் தான் அவங்களை கடத்தி இருக்கான் எங்க வச்சிருக்கான் எப்படி இருக்காங்கன்னு எதுவுமே தெரியல??"


என்று தலையில் கை வைத்துக் கொள்ள ஒரு பக்கம் நகுல் ஒரு பக்கம் ஹர்ஷா இடிந்து போய்விட்டனர்…
 

Author: srija
Article Title: 29) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.