27,28) ராகம்

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
74
Reaction score
1
Points
8
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 27




காலை 6 மணி அளவில் தாய் தந்தை இருவருக்கும் மத்தியில் தூங்கி எழுந்த ஹர்ஷவர்த்தினி குட்டி கண் முழித்து பார்க்கும் பொழுது..


"ஹாப்பி பர்த்டே லிட்டில் பிரின்சஸ்"


என்று மொத்த குடும்பமும் கையில் பரிசுகளோடு நிற்க பார்த்த குஷியான குழந்தை கைதட்டி கொண்டு ஒவ்வொரு இடமும் தாவித்தாவி அவளுக்கு பிடித்த பொம்மைகளை வாங்கி விளையாடிக் கொண்டிருந்தது..


பிறந்தநாள் விழாவை கொண்டாட அதற்கு முந்தைய நாள் அனைவரும் ஊருக்கு வந்து சேர்ந்தனர் பெரிய வீடு அலங்காரங்களால் அழகாக காட்சி அளித்தது..


குழந்தைக்கு காலையில் குளித்து முடித்து மகா வாங்கி கொடுத்த பட்டு பாவாடை சட்டையும் வெள்ளி கொலுசு அனிருத் வாங்கிய மோதிரம் காமினி ஆரவ் இருவரும் வாங்கிய தங்க சங்கிலி அனைத்தையும் போட்டு தெய்வ கடாட்சம் நிறைந்த அழகோடு தத்தி தத்தி நடந்து அனைவரும் முன்பும் வந்து நிற்க..


குட்டி தேவதை கை, கால்களை அசைந்து கொண்டு வரும் அழகை அனைவரும் மெய் மறந்து பார்த்தனர்..



"பேபி ரொம்ப க்யூட்டா இருக்கு அத்தை"


என்று ரோகன் குட்டியை தூக்கிக் கொண்டு சுற்ற..


("ஆஹா அடுத்த பார்ட் க்கு ஏற்பாடு பண்றாங்களே"(😬😬😬)



"டேய் டேய் போதும் பாப்பாவ விடுடா சரி வாங்க எல்லாரும் கோவிலுக்கு போலாம்"


என்று அபி வர்தினி குட்டியை தூக்கிக்கொள்ள பாட்டியை விட்டு நகராமல் அவள் கழுத்தோடு ஒட்டிக்கொண்டது அனைவரும் கோவிலுக்கு சென்று குழந்தை பெயர் யாகம் அர்ச்சனை அனைத்தும் செய்து முடித்து ஊர் ஜனங்களுக்கு விருந்து நடைபெற்றது அறுசுவை உணவோடு விருந்து தட உடலாக நடைபெற்றது


மதியத்திற்கு மேல் சினிமா துறையில் சேர்ந்த சில நபர்கள் வந்து ஹர்ஷாவை வாழ்த்த வந்திருந்தனர் அதில் ரித்திகாவும் ஒன்று

இரண்டு மாதங்களுக்கு முன்பு ராமச்சந்திரன் கொடுத்த பணத்திற்காக ஹர்ஷாவை எப்படியாவது தன் கை வளைவுக்கு கொண்டு வந்து அவனை சின்னா பின்னம் ஆக்க வேண்டும் என்று திட்டத்தோடு இருக்கிறாள் அவள் வளர்ந்து வரும் பிரபல மாடல் இதோ மூக்கு வேர்த்து இங்கையும் வந்துவிட..


"டேய் டேய் அந்த ஆளு எங்க விஷயத்துலயாவது பரவால்ல வேலை விஷயமா தான் எங்ககிட்ட மோதிவிடுறான் ஆனா கரெக்டா உனக்கு பொம்பளையை வைத்து பிராப்ளத்தை உருவாக்க பார்க்கிறான் உஷாராகிக்கோ"


என்று நகுலன் ஆரவ் அனிருத் அனைவரும் ஹர்ஷாவுக்கு அறிவுரை வழங்க அவன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான்…


"ஹே ஹர்ஷா ஸ்வீட் ஹார்ட் நீயே பேபி மாதிரி இருக்க இப்போ உனக்கு 2 இயர்ஸ்ல ஒரு கேர்ள் பேபி இருக்கு பாக்கவே கியூட்டா இருக்கு ஆனா பேபி ஓட அம்மாவும் சரி இல்ல பேபி உன்னோட ஜாடையிலும் இல்ல எனக்கு என்னமோ கொஞ்சம் சந்தேகமா இருக்கு ஹா ஹா ஹா ஹா"


என்று நகைச்சுவை என்ற பெயரில் எரிச்சல் மூட்டும் வார்த்தைகளை பேசி சிரிக்க அங்கே இருப்பவர்கள் அமைதியாக இருந்தனர் ஆனால் ஒருத்தியின் கை மட்டும் ரித்திகாவின் கன்னத்தை பதம் பார்த்தது வேறு யார் பத்ரகாளி போல் முறைத்துக் கொண்டிருக்கும் விஷாகா தான்..


"ஹேய் ரப்பிஷ் எவ்வளவு தைரியம் இருந்தா என் மீது கை வைத்திருப்ப நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு மேக்கப்ல நீ கொஞ்சம் பிரைட்டா இருந்தா நீ ஒன்னும் பேரழகி கிடையாது அது மட்டும் இல்லாம குழந்தை சம்மதமே இல்லாத ஜாடைல இருக்கு அதனாலதான் கேட்டேன் உண்மைய சொன்னா சில பேருக்கு கசக்குது"


இதழ் வளைத்து சொல்ல மீண்டும் ஒரு அடி வைத்த விஷாகா



"இந்த பாரு நீ யார் யார் கூட எப்படி எப்படி பழகுகிறாய் என்று எனக்கு நல்லாவே தெரியும் யார் அனுப்பி வந்து இருக்குன்னு எங்க குடும்பம் மொத்த பேருக்கும் தெரியும் இருந்தாலும் வந்த விருந்தாளி அவமானப்படுத்தக் கூடாதுன்னு நாங்களும் அமைதியா இருக்கோம் ஆனா நீ அளவுக்கு மீறி ரொம்ப பேசுற குழந்தை யார் ஜாடையில் இருந்தா என்ன கொடுத்தது ஹர்ஷா நான் பெத்த நாங்களே அமைதியா இருக்கும்போது நீ எதுக்குமா ஓவரா சீன் போட்டுக்கிட்டு இருக்க???


உன்ன மாதிரி அசிங்கம் பண்ணிட்டு குழந்தையை கலைக்கவும் முடியாமல் யாருக்கும் தெரியாமல் பெத்து எடுத்து ஏதோ ஒரு ஆசிரமத்தில் தூக்கி வீசிட்டு வரலையே??"


என்று விஷாக இதழ் வளைத்து கூற


"ஏய் என்ன பேசற நீ எனக்கு குழந்தையா உன் மை காட் எனக்கு 25 வயசு தான் ஆகுது நான் இன்னும் கன்னித்தன்மையோடு இருக்கிற பொண்ணு என்ன போய் என்ன பேச்சு பேசுற"


என்று இஷ்டத்திற்கு வசனம் பேச…


அப்பொழுது அங்கே வந்த சில காவல் அதிகாரிகள் எதுவும் பேசாமல் ரித்திகாவின் கையில் விலங்கு மாற்ற திடுக்கிட்டு போன ரித்திகா


"ஹலோ ஹலோ சார் நாங்க சும்மா கேஷுவலா பேசிகிட்டு இருக்கோம் இது விவிஐபி வீட்டு பங்க்ஷன் தான் அதுக்காக சும்மா பேசறதுக்கு நீங்க என்ன ஹரஸ்ட் பண்ண கூடாது "


என்று இன்னும் தன் அலட்டல் குறையாமல் பேச…


"இல்ல மேடம் நாங்க இங்க வந்த போலீஸ் கிடையாது நாங்க சென்னையில் இருந்து வந்து இருக்கோம் நீங்க சில டிரக் டீலர் கூட ஜாயிண்ட் பண்ணி பிசினஸ் பண்றது கேள்விப்பட்டோம் உங்ககிட்ட லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருக்குற சந்துரு இதுக்கு ஹெட்டு அப்படின்னு விஷயம் வந்தது நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சினிமா வாய்ப்பு சீரியல் வாய்ப்புக்காக வர சின்ன சின்ன காலேஜ் பசங்க பொண்ணுங்களுக்கு டிரக் சேல் பண்ணி ரொம்பவே தப்பா பயன்படுத்துறதா ஆதாரபூர்வமா நிரூபிக்கப்பட்டிருக்கு அதனால்தான் உங்களை அரெஸ்ட் பண்றோம் இது பெரிய வீட்டு பங்க்ஷன் அனாவசியமா கலாட்டா பண்ணாம அமைதியா வந்து வண்டியில் ஏறுங்க"


என்று சொல்ல அனைவரும் அவளை மிகவும் கேவலமாக பார்க்க அதற்கு மேல் அங்கு இருக்க முடியாதவள் தன் முகத்தை கட்சிப் கொண்டு மூடிக்கொண்டே வண்டியில் ஏறி சென்றாள். அதற்குள் பிரேக்கிங் நியூஸ் என்று போடப்பட்டு அவள் பெயர் அவள் வரலாறு போன்றவற்றை அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருந்தது…


இங்கே இப்படி ஒருத்தி வந்ததை ஞாபகம் இல்லாமல் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர்…


ஒவ்வொருவரும் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்து செல்ல மாலை 6:00 மணி அளவில் கேக் வெட்டி நவீன நாகரிக முறைப்படி பார்டி நடைபெற்றது பிசினஸ் சினிமா இண்டஸ்ட்ரி சேர்ந்த நபர்கள் அனைவரும் வந்து குழந்தைக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் அளித்து சென்றனர்…


"என்ன சார் உங்க பையனுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கு இரண்டாவது பிறந்தநாள் அன்று அறிமுகப்படுத்துகிறீர்கள்??"


என்ற அனைவரும் பெரியவர்களை போட்டு குடைந்து எடுத்தனர்…


"பாருடா ஒரு பேத்திக்கு பிறந்த நாளு ஒரு பேரக் குழந்தை ஏழு மாசத்துல பிறந்து விடுவான் இன்னொரு பேர குழந்தை எட்டு மாசத்துல பிறந்திடுவான் பலே பலே வீட்ல குழந்தைகள் சத்தம் அதிகமா கேட்கப்போகிறது போல"


என்று அவரவர் நகைச்சுவை என்ற பெயரில் கிண்டல் அடித்து சென்றுவிட…


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சிரிப்பு கேலி கிண்டல் மகிழ்ச்சி ஆனந்தம் உணர்வுபூர்வமாக பிறந்தநாள் விழா சிறப்பாக முடிவு பெற்றது அப்பா அம்மா இருவருக்கும் நடுவில் நின்று கொண்டு ஹர்ஷவர்தினி மகிழ்ச்சியாக தன் பிறந்தநாளை கொண்டாடி இருந்தாள் முதலில் அனைவரிடமும் நெருங்க தயங்கிய குழந்தை பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அனைவரிடமும் இயல்பாகி கொண்டது ..


அதற்காக விஷாகா மீனாட்சி அம்மாவின் நன்றியை மறக்கவில்லை அவரையும் முக்கிய நபராக குடும்பத்தில் சேர்த்துக் கொண்டாள்…


கர்ப்பிணி பெண்கள் இருவரும் களைப்பு காரணமாக விரைவாகவே உண்டு விட்டு தங்கள் அறைக்குள் சென்று உறங்கி விட கொஞ்சம் கொஞ்சமாக வந்த விருந்தினர்கள் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர் நாளை மதியம் ஊருக்கு புறப்பட வேண்டும் என்பதால் பொறுமையாக அனைவரும் அவரவர் அறைக்குள் முடங்கிக் கொண்டனர்…



ஹர்ஷா பால்கனியில் அமர்ந்து கொண்டு தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க விஷாகா வந்த பரிசு பொருட்கள் ஒவ்வொன்றையும் குழந்தைக்கு பிரித்துக் காட்டி பொம்மைகளை கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள்…


கால் பேசி முடித்து வந்த ஹர்ஷா மனைவி பிள்ளை இருவரும் விளையாடுவதை பார்த்து…


"போதும் போதும் அம்மாவும் பெண்ணும் இருக்கிற கிப்ட் எல்லாமே இன்னைக்கு பார்த்து விடுவீங்க போல இது ஒரு லோடு தான் இன்னும் பக்கத்து ரூம்ல சிலதெல்லாம் இருக்கு அதெல்லாம் பொறுமையா வேலை ஆளுங்க பாத்து கொடுத்து அனுப்புவாங்க குட்டிமா அப்பா கிட்ட வாங்க"


என்று குழந்தையிடம் கை நீட்ட அப்பா அழைத்தவுடன் ஓடி தாவி சென்று அவனை கட்டிக் கொண்டது…


"அம்மாவும் பிள்ளையும் ஒரே மாதிரி"


என்று கள்ள சிரிப்போடு விஷக்காவை பார்த்து சொல்ல அவள் வெட்கப்பட்டு அவன் தோள் மீது தட்டி.


"யாரும் என்ன மாதிரி இருக்க முடியாது என் ஹர்ஷா மேல எனக்கு தான் ஃபுல் ரைட்ஸ் இருக்கு அது நம்ம பொண்ணா இருந்தாலும் பரவால்ல ஒரு டிஸ்டன்ஸ் இருக்கணும்"


என்று இதழை சுழித்து காட்ட அவள் பொறாமையை பார்த்து ரசித்தவன்..


"இருக்கலாம் இருக்கலாம் உங்களுக்கு மட்டும் தான் எல்லா உரிமையும் இருக்கலாம்"


என்று மீண்டும் பால்கனி சென்று குழந்தையை உறங்க வைத்துவிட்டு சத்தம் போடாமல் குழந்தைக்காக அமைக்கப்பட்ட கட்டிலில் குழந்தை நன்றாக உறங்கிய பிறகு அங்கே தனியாக அமர்ந்திருக்கும் மனைவியை தூக்கிக்கொண்டு பால்கனி ஊஞ்சலில் அமர வைத்தான்…


"நேரமாச்சி ஹர்ஷா எனக்கு தூக்கம் ரொம்ப அதிகமா வருது இன்னிக்குன்னு பார்த்து செம டயட்"


என்று அவன் மீது சாய்ந்து கொள்ள …



"என்னடி இப்படி தூங்குற குழந்தையை கஷ்டப்பட்டு தூங்க வச்சதுக்கான காரணம் என்ன தெரியுமா அடுத்த குழந்தை ஏற்பாடு பண்ண நீ என்னடா தூக்கம் வருது களைப்பா இருக்குன்னு கதை விட்டுக் கொண்டு இருக்கிறாய்"


என்று அவளிடம் நெருங்கி சாய அவனை தடுத்தவன்..


"போதும் போதும் இப்பதான் ஒரு குழந்தைக்கு இரண்டு வயசு ஆகுது இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும் அதுக்கப்புறம் அடுத்ததுக்கு பிளான் பண்ணலாம்"


என்று விலகி செல்ல ஆனால் விடா கொண்டன் அவளை அள்ளி தூக்கிக்கொண்டு பால்கனி ஓரமாக முதல் இரவு அலங்காரம் போல் அங்கே காட்டில் பூக்கள் அலங்காரம் மின்னிக் கொண்டிருக்க யாரும் பார்க்க வண்ணம் திரையும் அங்கே அமைக்கப்பட்டது…


"அடப்பாவி என்னடா இது??"


"இப்படித்தான் நம்ம முதல் ஃபர்ஸ்ட் நைட் இருக்கணும்னு ஆசைப்பட்டது ஆனால் அவசர அவசரமா எல்லாமே நடந்து போச்சு நீயும் நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் சரியா புரிஞ்சுக்கல நீ எவ்ளோ எமோஷன் கேரக்டர் அப்படின்னு எனக்கு தெரியாம போயிடுச்சு நம்ம ரெண்டு பேரும் அடாவடியா இருந்ததால மூன்று வருஷம் வாழ்க்கை போனதெல்லாம் மிச்சம் நல்லவேளை நம்ம வாழ்க்கைக்கு அடையாளமா நம்ம பொண்ணு இருக்கா இப்போ இன்னும் சந்தோஷமாக எனக்கு அடுத்து ஒரு பையன் வேணும்"


என்று அவளை மெத்தையில் தள்ளி விட…


"ஹர்.."


என்று ஏதோ சொல்ல வந்த இதழ்களை தன் இதழுக்குள் புகுத்திக் கொள்ள அவளை இரவெல்லாம் தூங்கவிடாமல் காதல் இசை செய்து கொண்டிருந்தான்


கூடலில் உச்சம் தொட்ட பிறகு பெண்கள் முணங்கும் ஓசை தான் கேள்விப்பட்டு இருப்பார்கள் ஆனால் இங்கே பெண்ணுக்குள் புதையல் எடுத்த ஹர்ஷா ஒவ்வொரு நொடியும்



"விஷூ…விஷூ.." என்று ஒரு நொடி கூட அவளை விட்டு விலகாமல் மொத்தமாக நாடி இருந்தான் அவள் போட்ட இரண்டு வருடங்களுக்கு கழித்து தான் அடுத்த குழந்தை என்ற திட்டம் அந்த நொடியே தவிடு பொடியாகிவிட்டது"🙈🙈🙈


_________________________________



இங்கே கைது செய்யப்பட்ட அடுத்த நாளே பெயிலில் எடுக்கப்பட்ட ரித்திகா ராமச்சந்திரனிடம் புகார் அளிக்க..


ராமச்சந்திரன் ரித்திகா கேசவன் ரித்திகா வின் கள்ள காதலன் சந்துரு அனைவரும் தங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த அந்த குடும்பத்தை பழிவாங்க திட்டமிட்டு கொண்டிருந்தனர்…


ரித்திகாவை இது போன்ற கேசில் மாட்டி விட்டதே ஹர்ஷா என்ற சகோதரர்களின் வேலை தான்…


(மூணு எபிசோட்ல கதை முடிந்து விடும்)



அத்தியாயம் 28




இங்கே அனிருத் ஒரு பக்கம் ஆரவ் ஒரு பக்கம் தங்கள் வேலைகளீல் தங்களை பிஸியாக்கிக் கொண்டனர் மனைவியிடம் குறைந்த அளவு நேரத்தை ஒதுக்கி இருந்தனர்


மெடிக்கல் போர்டு கவுன்சிலில் ஒன்று நடைபெற உள்ளது 10 மெடிக்கல் நிறுவனத்திற்கு ஒரு தலைமை அதிகாரி நியமிக்கப்படுகிறார் அந்த போட்டியில் அனிருத் பங்கேற்று இருக்கிறான் அதற்கான பிரசன்டேஷன் தங்கள் நிர்வாகத்தை பற்றியும் இருக்கும் விவரத்தை சேகரித்து மருத்துவமனை கதி என்று இருந்தான்…


இது போதாது என்று புதிதாக கட்டப்படும் பில்டிங் வேலைகள் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க மூச்சு விட கூட நேரம் இல்லாமல் ஓடி ஓடி கொண்டிருந்தார் ஒரு பக்கம் மகா தன்மீது கோபமாக இருக்கிறாள் விலகி இருந்தான் அனிருத் விலகினால் அருமை தெரியும் என்பதால் வேண்டுமென்றே மனைவியை இம்சை செய்து கொண்டிருந்தான்


இங்கே அதற்கு ஏற்றது போலவே தலைவனை காணாத தலைவி பசலை நோய் கண்டது போல சூல் கொண்ட உள்ளம் உடையாள் கணவனைக் காணாமல் ஏங்கித் தவித்து இருந்தாள்…



இங்கே ஒரு பக்கம் டெண்டர் விடப்பட்டிருந்தது இந்த முறை எந்த நிறுவனம் வெற்றி பெறும் என்று அனைவரும் போட்டோ போட்டி கொண்டு ப்ராஜெக்ட் செய்து முடித்தனர் வீட்டிலிருந்தபடி காமினி தன் அண்ணனுக்கு துணையாக ப்ராஜெக்ட் வேலைகளில் உதவி புரிந்து கொண்டிருக்க ஒரு பக்கம் ஆரவ் தனது கம்பெனிக்காக படாத பாடு பட்டு கொண்டு இருந்தான்…


கிட்டத்தட்ட இரு மாதம் மேல் ஆகிவிட்டது..


"இதுக்கு தான் நகுல் இந்த ப்ராஜெக்ட் வேலை எல்லாம் முடிச்சிட்டு நம்ம ஹனிமூன் போகலாம்னு சொன்னது நீங்கதான் அவசர அவசரமா அழைச்சிட்டு போயிட்டு இப்ப பாருங்க உங்க கூட நிம்மதியா பேசக்கூட முடியல"


என்று காவியா கோபித்துக் கொள்ள..


"நாங்க என்னடி பண்றது ரெண்டு மாசம் டெண்டர் தள்ளி வச்சுட்டாங்க எதுக்கு வேஸ்ட் பண்ண பிடிக்கல அதனால தான் நம்ம ஹனிமூன் என்ஜாய் பண்ணிட்டோம் இப்ப எதுக்கு ரொம்ப கோவப்படுற ரெண்டு மாசம் கஷ்டப்பட்டு உழைத்தது நாளைக்கு தெரியும் யார் கம்பெனி டெண்டர் வின் பண்ண போது அப்படின்னு தெரியறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு தப்பி தவறி கூட அந்த ராமச்சந்திரன் குரூப் ஆஃப் கம்பெனி வரவே கூடாது இது போதா குறைக்க அந்த ரித்திகா சனியன் அவங்க லவ்வரோட சேர்ந்து அவங்க கூட கூட்டணி வச்சுருக்கா அவளோட வலையில் விழுந்த நிறைய கம்பெனி ஓனர் எல்லாம் ராமச்சந்திரன் பக்கம் நிக்கிறாங்க அதுதான் எனக்கு இன்னும் டென்ஷனா இருக்கு"



என்று தலைப்பிடித்துக் கொள்ள அவன் கைகளை விளக்கி தலைக்கு மெதுவாக மசாஜ் செய்தாள் அவ்வளவுதான் இருந்த டென்ஷன் அனைத்தும் காற்றாக பறந்து விட்டது..


"போதும் போதும் உடலை வருத்திக்க வேண்டாம் எல்லாம் சரியாயிடும் எல்லாம் பாசிட்டிவா நினைச்சா பாசிட்டிவ் தான் கிடைக்கும்"


என்று சொல்ல தலையைப் பிடித்துக் கொண்டிருந்த அவள் கையைப் பிடித்து தன் பக்கமாக முகத்தை பார்க்க வைத்து..


"எப்படி இப்போ ப்ரெக்னன்சி பாசிடிவ் பத்தி சொல்ல வந்தியே அது மாதிரியா??"


இன்று குறும்பாக கண்ணடித்து கூற இவனுக்கு எப்படி தெரியும் என்பது போல் கண்களை விரித்து ஆச்சரியமாக பார்க்க இவ்வளவு நேரம் உடைக்குள் மறைத்து வைத்திருந்த பிரக்னன்சி கிட் எடுத்து அவனுக்கு காண்பிக்க அதில் பிங்க் நிறத்தில் இரட்டை கோடுகள் காட்டப்பட்டது…


தந்தையாகும் தருணம் சொல்ல இயலாது இதோ உணர்ச்சி பூர்வமான அந்த நொடியை எப்படி அவன் வெளிப்படுத்துவான் இறுக்கி அணைத்துக் கொண்டான் அவளை கழுத்து வளைவில் வாசம் பிடித்து..


"தேங்க்யூ டி"


என்று அதற்கு மேல் வார்த்தை வராமல் தட்டு தடுமாறியவனை தன்னை பார்க்க செய்து நெற்றியில் முத்தம் கொடுத்து…


"ஆல் தி பெஸ்ட் நாளைக்கு உங்க ரிஸலட்க்காக நானும் நம்ம பாப்பாவும் வெயிட் பண்ணிட்டு இருப்போம் குட்டிமா அப்பாவுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லுங்க"


என்று வயிற்றில் இருக்கும் பிள்ளை மீது கை வைத்து சொல்ல அவனும் சிரித்துக்கொண்டே அவளுக்கும் வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு மாறி மாறி முத்தம் கொடுத்து…


"சரி சரி இப்ப ரெஸ்ட் எடு நான் வேலையெல்லாம் முடிச்சுட்டு வரேன்"


என்று அவளை அறைக்கு அனுப்பி வைக்க இவன் அலுவலக அறையிலேயே வேலை செய்து கொண்டு அப்படியே உறங்கி விட்டான்…


__________________________________



இதோ அனைத்து பிசினஸ் நிறுவனங்களும் அந்த டெண்டருக்கான இடத்தில் அமர்ந்து கொண்டனர் யாருக்கு டெண்டர் இந்த முறை கிட்டும் என்று இது மதிப்பு அதிக கோடியைக் கொண்டது அதனால் தான் அனைவருக்கும் பதட்டம் அனைவரும் ப்ராஜெக்ட் மற்றும் கோடிங் செய்த அனைத்து விவரங்களையும் பட்டியலிட்டு சமர்ப்பித்து விட ஒரு பக்கம் கேசவன் அருகில் ரித்திகா அமர்ந்து கொண்டிருந்தனர் ராமச்சந்திரன் மருத்துவப் போர்ட் மீட்டிங்கு சென்று இருப்பதால் அவர் வரவில்லை…



இதோ அனைவரும் வந்து…


"எல்லாரோட ப்ராஜெக்ட் மற்றும் கோடிங் எல்லாம் சரியா தான் இருந்தது ஆனா கொடுத்தவர்களுக்கே திரும்ப திரும்ப ஜெயிச்சவங்களை திரும்பத் திரும்ப ஜெயிக்கிறது எங்களுக்கு புதுசா இருக்கிற கம்பெனிக்கு தான் கொடுக்கலாமே ட்ரை பண்ணி இருக்கோம் சோ அதனால நாங்க செலக்ட் பண்ண கம்பெனி


"V.R" கம்பெனி"


என்று அறிவித்தவுடன் அனைவரும் இது என்ன புது கம்பெனி என்று அனைவரும் திரும்பி அந்த கம்பெனி நிறுவனத்தை சார்ந்தவர்களை பார்த்தனர்…


இங்கே மருத்துவ போர்ட் கவுன்சிலிங் ஒரு முடிவு எடுத்தவர்களாக..


"வி ஆர் மெடிக்கல்"

என்று அந்த நிறுவனத்தை பேரை அறிவித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகிக்கு பத்து மெடிக்கல் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பொறுப்பு வழங்கப்பட அனைவரும் அந்த நிறுவனத்தின் தலைவரை கைதட்டி வரவேற்றனர்…



"என்ன இது கன்ஸ்ட்ரக்சன்ல நடந்த டென்டர்ல வி ஆர் கம்பெனி தான் வின் ஆகி இருக்கு அதே சமயம் இந்தப் பத்து மெடிக்கல் இண்டஸ்ட்ரிக்கு ஹெட் ஆஃபீஸா வி ஆர் மெடிக்கல் செலக்ட் ஆயிருக்கு யாருப்பா இந்த விஆர் கம்பெனி??"



என்று அனைவரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒருவருக்கு ஒருவர் அலசி ஆராய…


இங்கே டென்டரில் தோற்றுப் போன கேசவன் முகம் மாறிவிட்டது ஆனால் கம்பெனி பெயர் புதிதாக இருக்கிறது யார் போட்டிக்கு வந்த புதிய நபர் என்று திரும்பி பார்க்க இதோ கம்பீர நடையுடன் காட்டன் புடவையில் அத்தனை ஆண்களுக்கு மத்தியில் சிங்க நடை போட்டு வி ஆர் கம்பெனியின் மேனேஜராக வந்து நின்றள் சாத்விகா …


இந்த புது கம்பெனி மூலம் ப்ராஜெக்ட் தொடங்கலாம் என்று புதிய ஐடியா சாத்வி கொடுத்துவிட அனைவரும் இதற்கே மெனக்கெட்டு வேலை செய்தனர் இதில் தலைமை பொறுப்பாளர் சாத்விகா தன் தம்பியின் மகள் வர்தினி பெயரையும் தன் பிள்ளைகள் பெயரில் இருக்கும் முதல் எழுத்தையும் சேர்த்து வி ஆர் கம்பெனி என்று வைத்து முழுக்க முழுக்க சாத்வி பொறுப்பை ஏற்று ப்ராஜெக்ட் செய்து முடிக்க இதோ வெற்றி அவளுக்கு கிடைத்தது…


"சார் பாத்தீங்களா இவங்க இல்லாம அவங்க வீட்டு பொண்ணு மூலமா வின் பண்ணிட்டாங்க ஆக மொத்தம் நமக்கு தோல்வி"


என்று ரித்திகா மூட்டிவிட..


பற்களை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தார் கேசவன்…


இங்கே அதே நிலைமைதான் விஆர் மெடிக்கல் இண்டஸ்ட்ரி முழுக்க முழுக்க அனிருத் ஆசை மனைவி மகாவின் பெயரில் நிறுவனத்தை தொடங்கி விட நிறுவனத்திற்கு சரியான கட்டிடம் வசதி அனைத்தையும் முன்னேற்பாடாக செய்து முடித்து மகாவையும் இரண்டு வருட பொறுப்பில் சிறப்பாக நியமித்து விட இதோ நல்ல நிறுவனம் என்று வி ஆர் மெடிக்கல் இண்டஸ்ட்ரி இப்பொழுது பத்து மெடிக்கல் இண்டஸ்ட்ரிக்கு தலைமை பொறுப்பாளராக பதவி ஏற்கப்படுகிறது இதோ பதவி பொறுப்பாளர் பதவியில் தன்னை நியமித்துக் கொள்ள மகா தன் மூன்று மாத வயிற்றில் மெதுவாக பிடித்துக் கொண்டு அங்கு இருக்கும் நபரிடம் தனக்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள அனைவரும் அவளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் பிரசவம் நடக்கும் வரை மகா பொறுப்பேற்க அதன் பிறகு பத்து மாதத்திற்கு தற்காலிக நியமன பொறுப்பாளராக அவர்கள் மருத்துவமனையில் முன்னாள் மாணவனாக இருந்து இப்பொழுது சிறந்த மருத்துவராக கருதப்படும் குரு என்பவரை நியமித்து இருந்தனர்..



ராமச்சந்திரன் முகம் சுருங்கி விட்டது அனைத்தையும் திட்டம் போட்டு செயல்பட்டு விட்டார்கள் எத்தனை குட்டிகரணம் போட்டார் எப்படியாவது அனைத்தும் தன் வசப்படுத்த வேண்டும் என்று ஆனால் இதோ அனைத்தும் தோல்வியாக வந்துவிட்டது என்று இன்னும் இன்னும் வன்மம் வளர்த்துக் கொண்டார்…



"வாழ்த்துக்கள் சீதா மகாலட்சுமி மேடம் "


என்று அனிருத் தன் மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க அவளும் சிரித்துக் கொண்டே நன்றி தெரிவித்து தன் பதவி ஏற்க தயாராக இருந்தாள்…

மறுபக்கம் குருவுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க அவனும் தற்காலிக கடமையை செயலாற்ற தயாராக இருந்தான்…





சாத்விகா வீட்டிற்கு வர ஒரு பக்கம் மகா மெதுவாக அனிருத் கரங்களை பிடித்து வர இரு பெண்ணுக்கும் ஆர்த்தி எடுத்து இருவரையும் அமர வைத்து இனிப்புகளை வழங்க..


"வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இவ்வளவு நாள் நாங்களே கஷ்டப்பட்டு வேலை செஞ்சோம் இல்லையா இனிமேல் வி ஆர் இண்டஸ்ட்ரிக்கு நீங்கதான் முழு உழைப்பு போட்டு வேலை பார்க்கணும்"


இன்று இரு பெண்களை நக்கல் அடிக்க..


"அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம் நீங்க போகலாம்"


என்று மாறி மாறி அனைவரும் மகிழ்ச்சியாக பேசி முடிக்க தூரத்தில் யாரோ வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது…


"அட யார் வாந்தி எடுக்கிறா ருக்மணி வேற இங்க இல்ல அப்படின்னா கிருஷ்ணா"


என்று அபி ஆத்மிகா இருவரும் கிருஷ்ணாவை பார்க்க அவரோ நான் இதற்கு காரணம் இல்லை என்பது போல் முழிக்க


"டேய் அனிருத் ரொம்ப வருஷம் கழிச்சு நீ விளையாடுவதற்கு தங்கச்சி பாப்பா வரப்போகுது உனக்கே இப்ப பாப்பா பிறக்கப்போகுது இதுல தங்கச்சி பாப்பா வேற"


என்று சொல்லி அனைவரும் நக்கல் அடிக்க..


"அட ஆள் இங்க இல்லன்னா இஷ்டத்துக்கு இப்படித்தான் பேசுவீங்களா வாந்தி எடுத்தது நான் இல்ல"


என்று சொல்ல..


"அட நாங்க தான் சப்ரைஸ் சொல்லலாம்னு பார்த்தா அதுக்குள்ள சஸ்பென்ஸ் உடைஞ்சு போச்சு இப்போ காவியா தானே பிரக்னண்டா இருக்கா வேற யாரு "


என்று அலசி ஆராயும் போது தான்.. புரிந்தது ஹர்ஷவர்த்தினியின் அம்மா காணவில்லை என்று


"டேய் ஹர்ஷா"


என்று இளைய பட்டாளங்கள் அனைவரும் அவனை சூழ்ந்து கொள்ள அங்கே ஒரு பக்கம் வாந்தி எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டு களைப்பாக விஷாகா வர அவளை கைப்பிடித்து அங்கு அமர வைத்தான் அனிருத் அவள் நாடி பிடித்துப் பார்க்கையில் தெரிந்துவிட்டது கர்ப்பம் என்று..


"எல்லாரும் கஷ்டப்பட்டு நம்பர் ஒன் ரிலீஸ் பண்றதுக்கு நாக்கு தள்ளி போச்சு என் தம்பி அசாத்தியமா நம்பர் 2 ரிலீஸ் பண்றான்"


என்று அனிருத் சொல்லி சிரிக்க ஓடி சென்ற ஹர்ஷா அவளை தூக்கி சுற்ற ஆரம்பித்தான்..


வெட்கத்தில் விஷாகா முகத்தை மூடிக்கொள்ள ரோகன் ரோகினி ஹர்ஷவர்தினி
மூவரும் ஏதோ வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தனர்



குடும்பமே மகிழ்ச்சி கடலில் தத்தளித்தது ஒரு நல்ல செய்தி கேட்க இத்தனை நல்ல செய்திகள் மூன்று வருடத்தில் குடும்பத்தின் நிலை மொத்தமாக மாறி இருந்தது ஆனால் இப்பொழுது மகிழ்ச்சி சந்தோஷத்திற்கு அளவில்லாமல் ஆகிவிட்டது…



இதோ அதற்கு முட்டுக்கட்டாக ஒரு விஷயம் நடக்கப் போகிறது என்பதை யாரும் அறியாமல் சந்தோஷத்தில் அனைவரும் மிதந்து கொண்டிருந்தனர்…
 

Author: srija
Article Title: 27,28) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.