24) தீயே

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
100
Reaction score
1
Points
18
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 24

மறுநாள் காலையே விழா சிறப்பிக்க ஆரம்பித்துவிட்டது. மெஹந்தி பங்க்ஷன் பெண்களுக்கும் மட்டுமல்லாமல் வரும் பெண்களுக்கும் மெஹந்தி பங்க்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அனைவரும் காலையிலேயே தங்கள் வெறும் கையை வீசிக்கொண்டு வந்து விட்டார்கள்..

காலை சிற்றுண்டி உணவுகளை சரி பார்த்துக் கொண்டிருந்த தேவி வரிசையாக அமர்ந்து கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்து,

"பொறந்தா இப்படி பொறக்கணும் இந்த வேலை வெட்டியும் கிடையாது ஏதாவது பங்க்ஷன் அப்படின்னா எப்படி போகலாம் ஆனால் ஒரு பெனிஃபிட் இந்த மாதிரி பெரிய வீட்டு பிள்ளைங்க தங்க அதிகாரத்தை பயன்படுத்தி மேல் வர்க்கத்தை ஆளலாம் ஆனால் இவங்க கிட்ட உழைக்கிறதுக்கு நம்மள மாதிரி மிடில் கிளாஸ் ஆளுங்க தான் வரணும்"

என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது

"நீங்க மட்டும் என்ன நல்ல வசதியான வீட்டு பொண்ணுதானே அதையும் உனக்கு உங்க வர்க்கத்தை சேர்ந்த மக்கள புடிக்காம போகுது??"

என்று கேட்டுக் கொண்டே அசோக் வர

"வந்துட்டியா இப்பதான் என் ஞாபகம் வந்ததா அது என்னவோ எனக்கு பிடிக்கல சரி நீ எதுக்கு அவங்க கூடவே இருக்க நீ என்ன அவங்க கூட பொண்ணு தம்பியா வேலைக்கு வச்சிருக்காங்க அவ்வளவுதான் ரொம்ப இன்வால் ஆக வேண்டாம் இப்பவே சொல்லிட்டேன் கல்யாணம் அந்த நடுப்பையன் அசோக் எங்க போனான்??"


என்று ஆவலோடு கேட்க

"அது அது வந்து அவனுக்கு வெளிநாட்டில் ஏதோ வேலை இருக்குன்னு கல்யாணத்துக்கு வர முடியலன்னு சொல்லிட்டு இருக்காங்க அதைப்பற்றி நீ எதுக்கு கவலைப்படுற உங்க அப்பா ஏதோ வரேன்னு சொல்லி இருக்காங்க சீக்கிரமா அவர் வந்த பிறகு நம்ம கல்யாணத்தை பத்தி பேசணும்".

என்று அப்படியே பேச்சை மாற்றிவிட.

"நானே இதை பத்தி சொல்ல நினைச்சேன் எங்க அப்பாவ காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணி பட் ரீச் ஆகல ஆனா அவர் வந்தவுடன் நம்ம கல்யாணத்தை பத்தி தான் பேசணும் ஆமா பஞ்சாப்ல நீங்க எங்க இருக்கீங்க இப்போ உங்க ரிலேட்டிவ்ஸ் எல்லாரும் அங்க தான் இருக்காங்களா இதுவரைக்கும் நாம் அதை பத்தி பேசல ஆனா இப்ப கல்யாணம்னா எல்லாரும் வந்துதானே ஆகணும் என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சுதான் ஆகணும் ஆனா இப்ப எனக்கு வேலை அதிகமா இருக்கு அதனால இந்த கல்யாண வேலையெல்லாம் முடியட்டும் அதுக்கப்புறம் நம்மளை பத்தி பார்க்கலாம்".

என்று சொல்லி கண்ணடிக்க அவ்வளவுதான் தேவி அவனைப் பற்றி முழு விசாரணையை உயர்த்தி விட்டு அவனோடு காதல் வயப்பட்டு கதைத்துக் கொண்டிருந்தாள்.
,,,,,,,,,,,,


இங்கே வயது பெண்களும் நடுத்தர வயது பெண்களும் சிறு ஏன் வயதான பாட்டி முதல் கொண்டு தங்கள் கையில் அழகிய மருதாணியை போட்டுக்கொள்ள வரிசையாக அமர சென்னையில் மிகவும் சிறப்பு வாய்ந்த அனைத்து மருதாணி போடும் ஆர்டிஸ்ட் அனைவரையும் வரவழைக்கப்பட்டு விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது அவர்களுக்கு நட்ட நடுவில் மூன்று நாற்காலி போடப்பட்டு இருந்தது யாருக்கும் எதுவும் புரியவில்லை ஆண்களுக்கு தேவையில்லை மெஹந்தி. ஆனால் மணப்பெண்கள் இருவர் தானே ஏன் மூன்றாவதாக ஒரு நாற்காலி போடப்பட வேண்டும் என்று அனைவரும் குழம்பிய நிலையில் இருக்கும்பொழுது,

"நீங்க எக்ஸ்ட்ராவா ஒரு சேர் இருக்கு அப்போ நான் யாருன்னு உங்களுக்கு டவுட்டாவே இருக்கும் அது நானே சொல்ல வரேன்"

என்று விஷ்வா ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான்.

"உங்க எல்லாருக்கும் தெரியும் எனக்கும் தர்ஷனுக்கும் நடுவில் பிறந்த அசோக் அவனுக்கு இன்னும் கல்யாணம் பேச்சு அமையல அதனால அமைதியாக இருந்தும் ஆனா அவனுக்கும் கல்யாணம் கை கூடி போச்சு எங்களுக்கு தெரிஞ்ச தூரத்து சொந்தக்காரரான மிஸ்டர் மூர்த்தி குடும்பத்தை சேர்ந்த மிஸ்டர் மூர்த்திவோட மகள் தேவிக்கும் என்னுடைய தம்பி அசோக்குக்கும் எங்களுடைய கல்யாண முகூர்த்தத்தில் கல்யாணம் நடக்க போகுது தேவி நீ போட்ட செஃப் வேஷம் போதும் நீ இங்க வரலாம்.

என்று சொன்னவுடன் இவ்வளவு நேரம் மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருந்த தேவி அப்படியே அதிர்ச்சி அடைந்து ஸ்தம்பித்து போய் நிற்க அனைவரும் தேவி யார் என்று திரும்பிப் பார்க்க சமையல் கலை வல்லுநரின் உடை அணிந்து கொண்டு அங்கே நின்ற தேதியை பார்த்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சிதான். பணக்கார வீட்டுப் பெண் எதற்கு இப்படி இருக்க வேண்டும் என்று அவரவர் பேசிக் கொண்டிருக்க.

"என்னதான் வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் தன்னை எளிமையா காட்டிப்பதில் எங்க தேவி அன்னைக்கு மிகவும் பிடிக்கும் அந்த எளிமை தான் எங்க அசோக் அண்ணாவுக்கு பிடிச்சிருந்தது அதனால் தான் இப்போ எங்க அசோக் அண்ணா கூட தேவயானிக்கும் கல்யாணம் நடக்க போகுது அண்ணி இந்த மெஹந்தி சாங்கியம் உங்களுக்கும் தான் சீக்கிரம் வாங்க".

என்று தர்ஷன் சொல்ல உடனே மேக்கப் அலங்காரம் செய்யும் பெண்கள் தேவியை அழைத்துச் சென்று மெஹந்தி சாங்கியத்துக்கு போட வேண்டிய ஒரே அணிந்து கொண்டு வந்தனர் அவள் வெளியே வந்த நொடி அவள் தாய் தந்தை இருவரும் மகிழ்ச்சியோடு நின்று கொண்டிருக்க பல நாட்கள் கழித்து சந்தோஷத்தில் இருவரையும் கட்டி தழுவி தன் கண்ணீரை வெளிப்படுத்த.

"நாங்க எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணல ஆக்சுவலி பெரிய மோசமான கும்பல் கிட்ட மாட்டிகிட்டோம். நல்ல வேலை விஷ்வா யார் மூலியமா எங்களுக்கு உதவி பண்ணி எங்களை காப்பாத்திட்டாரு அதே சமயம் அவர் என் தம்பிக்கு உங்க பொண்ண கொடுக்க முடியுமான்னு கேட்டாரு எங்க உயிரை காப்பாத்தி இருக்காரு மா அதுக்காக உன்ன கொடுக்க மாட்டோமா அதுவும் இவ்வளவு நல்ல குடும்பத்துல உன்னை கொடுப்பதெல்லாம் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்னு சொல்லி இருக்கேன் உங்களுடைய விருப்பம் இல்லாம அப்பா இந்த முடிவு எடுத்ததற்கு என்னை மன்னிக்கணும்".

என்று தேவியின் தந்தை சொல்ல தன் மனதில் இவ்வளவு நாள் தான் ஆசை நாயகன் சிங் மீது வைத்திருந்த காதல் அனைத்தையும் தோன்றி புதைத்து போலி புன்னகையோடு,

"எல்லா பொண்ணுங்க மாதிரி தான் நானும் சொல்ல போறேன் சின்ன வயசுல இருந்து எனக்கு எது சரி தவறு என்று நீங்கள் சொல்லி இருக்கீங்க நீங்க எடுத்த முடிவு தப்பா இருக்காது நிச்சயம் நான் என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்".

என்று தான் ஆசைப்பட்டவனை தான் வேறுவிதமான கோணத்தில் அவனை சந்தித்து திருமணம் செய்ய போகிறோம் என்று தெரியாமல் காதல் தோல்வி வழியில் தேவி மிதந்து கொண்டிருக்க , ஒரு பக்கம் பொறுமையாக விஷயத்தை கையாலலாம் என நினைத்துக் கொண்டிருந்த அசோக் தன் அண்ணன் திடீரென்று திருமண ஏற்பாடு தனக்கும் செய்து விட்டாரே என்ற பயத்தில் அசோக் இருக்க,

"என்ன அசோக் உன்ன கேட்காம நான் ஒரு முடிவு எடுத்ததுல என் மேல உனக்கு கோவமா?".

"அதெல்லாம் இல்ல அண்ணா ஆக்சுவலி தேவிக்கு நான் தான் அசோக் அப்படின்ற விஷயமே தெரியாது இப்போ கல்யாண மேடைல அவ பக்கத்துல நான் இருக்கும்போது என்னை பார்த்து நீ ஏமாற்றுக்காரன் அப்படின்னு சொன்னா நான் என்ன பண்றது பொறுமையா எடுத்து சொல்றதுக்குள்ள எல்லாமே கைமேறி போன மாதிரி இருக்கு".

"இதுக்காக தான் நான் இன்னொரு விஷயமும் வச்சிருக்கேன் நீ இப்போ தேவியை பார்க்க வேண்டாம் நீ தான் மாப்பிளைன்னு சபையில் நிக்க வைக்க முடியாது. ஆக்சுவலி நீ தான் அசோக் அப்படின்னு அவளுக்கு தெரியாதுல முகூர்த்த நேரத்தில் நீ மணமடைக்கு வந்தா போதும் அது வரைக்கும் சுத்திகிட்டு எங்களை மாதிரி".

என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட.

சுஷ்ம யாமினி இருவருக்கும் போட்டி செய்யும் விதமாக நட்ட நடுவில் அமர வைக்கப்பட்டால் தேவி இவ்வளவு நாட்களாக சமையல் காரி முதலாளியை மயக்கி கைக்குள் போட்டுக் கொள்வாய் என்று ஏனோ தானோ என்று வாய்க்கு வந்தபடி பேசிய யாமினி இப்பொழுது தனக்கு முன்பாக இருக்கும் மூத்த மரபுகளாக இருந்து விட்டாலே என்ற வக்கிரம் கோபம் எல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் சுஷ்மா அவளை பார்த்து மெதுவாக புன்னகைக்க தேவி எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் கல் சிலை போல் அமர்ந்து கொண்டிருந்தாள் விழ ஆரம்பித்தது தங்களோடு ஒட்டி சுற்றிக்கொண்டிருந்த தேவி இப்பொழுது இந்த வீட்டு மருமகளில் ஒருவர் என்பதால் மேனகா மற்றும் சாக்ஷி இருவரும் சற்று விலகியே விட்டனர்.

விழா நடந்து கொண்டிருந்தது கிரிஷ் மற்றும் அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டிருக்க அவனை அழைத்த தேவி

"சித்தியும் சாக்ஷி இரண்டு பேரும் எங்க போனாங்க இந்த பக்கமே வரல??".

"உங்களுக்கு கல்யாணம் ஆகப்போகுது உங்கள் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு பேசிகிட்டு இருந்தாங்க ஆனா என் வரலைன்னு எனக்கு தெரியல ஆமா எப்பவுமே எங்க கூட தானே இருப்ப இப்ப எதுக்கு இங்க இருக்க சும்மாவே நீ எங்களை விட்டு போக போறியா??"

என்று அவனுக்கு தெரிந்த மொழியில் கேட்க

"நான் ஏண்டா உங்களை விட்டு போக போறேன் நிரந்தரமா உன் கூட தான் இருக்க போறேன் நானும் இந்த வீட்ல அசோக்னு ஒரு அங்கிள் இருப்பாரு இல்லையா அவரை கல்யாணம் பண்ணிக்க போறேன் நீ அவரை பார்த்து இருக்கியா அவரு இங்க வந்து இருக்காரா??"

என்று கேட்க

"ஐயோ அவர் தான் என்னோட ஃபேவரிட் அங்கிள். என்ன அப்பப்போ சிங் மாதிரி சுத்திகிட்டு இருப்பாரு சில சமயம் கோட் சூட் போட்டு சுத்திக்கிட்டு இருப்பாரு"

என்று அசோக் தேவியை கரெக்ட் செய்யும் நேரம் போடும் வேஷத்தையும் சாதாரணமாக அவன் இருக்கும் நிலையையும் சொல்லிவிட்டு சென்றுவிட இவளுக்கு குழப்பமாக இருந்தது ஒருவேளை அலுவலகத்தில் ப்ரொபஷனல் உடையும் வீட்டில் டிரெடிஷனல் உடையிலும் இருப்பார் போல அப்படி என்றால் அவர் வெளிநாட்டுக்கு செல்லவில்லையா இல்லை பிசினஸ் விஷயமாக வெளிநாட்டுக்கு சென்று வந்துவிட்டாரா? நாம்தான் பார்க்கவில்லையா அதானே எத்தனை நாட்களில் விழா நடக்கும்போது அனைவரையும் பார்த்தோம்னா அசோக்கை பார்க்கவில்லை விந்தையாக இருக்கிறது இறுதியில் அவன் தான் என் கனவு என்று வரும்போது இன்னும் சொல்ல முடியாத அளவிற்கு வேதனை. ஆனால் தனக்கு இப்பொழுது திருமணம் இவ்வளவு நாட்கள் காதல் என்ற ஒரு உலகில் என்னோடு சஞ்சரித்தவன் இப்பொழுது எனக்கு திருமணம் என்று அறிவித்தவுடன் என் கண்ணில் படாமல் போனதுதான் இன்னும் வேதனை..


என்று தேவியின் மனம் துள்ளத் துடிக்க செத்துக் கொண்டிருந்தது.
,,,,,,,,,,,,,
 

Author: srija
Article Title: 24) தீயே
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.