23) தீயே

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
100
Reaction score
1
Points
18
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 23

சடங்கு முடிந்த பிறகு ஓய்வு கிடைத்தவுடன் அனைவரும் இளைப்பாற சென்று விட சுஷ்மா எது நினைப்பில் வரும் பொழுது அவளது அப்பா வழி சொந்தமான அத்தை அவளை பிடித்து,

"என்னடா எங்க மறந்துட்டியா எங்களை பார்த்து கூட எதுவும் பேசாம இருக்க உங்க அம்மா அப்பா என்கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களா??"

என்று அக்கறையுடன் கேட்க

"அப்படியெல்லாம் இல்ல அத்தை கல்யாண டென்ஷன் வேற ஒன்னும் இல்ல ரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்க்கிறேன் எனக்கு சந்தோஷமா தான் இருக்கு ஆமாம் கரன் எங்கே??"

"அதோ வரான் பாரு அவனுக்கு 100 வயசு உன்னோட கல்யாணத்தை அட்டென்ட் பண்ணனும் அப்படின்னு லீவ் போட்டு அமெரிக்கா ல இருந்து வந்து இருக்கான்"

என்று சொல்லி தன் மகனைப் பார்த்து சிரிக்க.

"எங்க அம்மா அப்படித்தான் ஆவுனா நான் அமெரிக்கா போறது சுய தம்பட்டம் அடிச்சுக்கிட்டே இருப்பாங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி இருந்து இந்த மாதிரி வேலைக்கு வெளியூருக்கு போறது பெருமைக்குரிய விஷயம்ல அதான் எங்க அம்மா எல்லா இடத்திலும் அதை பதிவு பண்ணிக்கிட்டே இருப்பாங்க"

என்று சொல்லி சிரிக்க சுஷ்மாவுக்கு ஒருமுறை அவன் முகத்தை பார்க்க வேண்டும் போல் இருந்தது இன்னும் கொஞ்ச நாட்கள் வேறு ஒருவனுக்கு மனைவி ஆனால் இப்பொழுது வேறு ஒரு ஆடவனை பார்க்கிறாயே என்று அவள் மனம் கோட்பாடு போட்டாலும் சிறு வயதிலிருந்து கைப்பிடித்து வளர்ந்த அத்தை மகனாயிற்றே, ஒரு முறை அவனைப் பார்த்து சிரிக்க.


"மூணு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த சுஷ்மா தான இது அப்படின்னு எனக்கே டவுட் வருது??

என்ன பஞ்சாப் விட்டு எங்கேயும் போக மாட்டேன் அப்படின்னு சொன்ன இப்போ மெட்ராஸ் வந்துட்டா,

ஆனா உனக்கு ரொம்ப நல்ல குடும்ப அமஞ்சி இருக்கு.

நான் சொல்றது தப்பா இருக்கலாம் ஆனா அதான் உண்மை அந்த யாமினி பொண்ணு சொல்றத தலையாட்டி பொம்மை மாதிரி கேட்காத ,

உனக்கு வந்திருக்க புருஷன் ரொம்ப நல்லவரா இருக்காரு அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை வாழ பாரு அந்த பொண்ணு சொல்றதுக்கெல்லாம் சரின்னு சொன்னா காலம் முழுக்க இன்னொருத்தவங்க சொல் பேச்சு கேட்டு வாழுற வாழ்க்கை தான் உனக்கு வரும்.

இது உன்னோட வாழ்க்கை அதுவும் இந்த வீட்டுக்கு முதல் மருமகளா உனக்கு தான் நிறைய உரிமை இருக்குன்னு நினைக்கிறேன் பார்த்துக்கோ".

இன்று அறிவுரை சொல்லிவிட்டு சென்று விட இன்னும் சுஷ்மாவின் மனதில் குழப்பம் ஏற்பட்டது விஷ்வாவிடம் சற்று பொறுமையாக பேசிப் பார்த்தால் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும் போலிருக்கிறது என்று ஆனால் கண்களை மூடி ஆழ்ந்து யோசிக்க திடீரென்று தனக்கு மஞ்சள் வைத்து தன்னை பார்த்து குறும்பாக சிரித்த கரன்முகம் தானே ஞாபகம் வருகிறது இது என்னடா கொடுமை இந்த நேரத்தில் சோதனை என்பது போல் சுஷ்மா அப்படி சோர்ந்து போய்விட.

"ஹாய் வருங்கால அண்ணி என்ன இந்த பக்கம் உக்காந்துகிட்டு இருக்கீங்க சடங்கு முடிஞ்சதுக்கு அப்புறம் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாதுன்னு நம்ம ரூல்ஸ் சொல்லுவாங்க அதனால உள்ள ரெஸ்ட் எடுங்க"

என்று அவளுக்கு பிடித்த ஆரஞ்சு ஜூஸ் கொடுத்து அசோக் பேச.

"அது தேவர் (கொழுந்தனாருக்கு ஹிந்தியில்) ஜி எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு இதை பத்தி சொல்லியே ஆகணும் இது ரொம்ப முக்கியமான விஷயம்".

என்று இப்பொழுது தனக்குள் நடந்த மாற்றங்கள் அனைத்தையும் சொல்லி முடித்து இப்ப என்ன செய்வது என்று பரிதாபமாக கேட்க.

"திடீர்னு ரொம்ப நாள் கழிச்சு நமக்கு வேண்டியவர்களை சந்திக்கும் பொழுது இந்த மாதிரி நிறைய கெமிக்கல் ரியாக்சன் நடக்கும் அது எல்லாம் போட்டு மனச குழப்பிக்க வேணாம் நாள் இருக்கு கொஞ்சம் அமைதியா இருங்க நான் பாத்துக்குறேன்".

என்று சொல்லிவிட்டு அசோக் அவளை அனுப்பி விட சுஷ்மா ஏதோ யோசனையில் அப்படியே சென்றுவிட அசோக்கிற்கு ஒரு ஐடியா தோன்றியது.

தன் அண்ணனுக்கும் இதே நிலைமை தானே கௌரவத்திற்கு திருமணம் செய்பவன் ஏன் பிடித்த பெண்ணை செய்யக்கூடாது அவர் மனதில் மேனகா இருக்கிறார் என்று சிறுவயதில் இருந்து தன் அண்ணன் அருகில் இருந்து அவன் நோக்கத்தை பார்க்கும் சகோதரன் தெரியாமல் வைத்திருப்பானா என்ன இதுதான் தக்க சமயம் இவர்களெல்லாம் கெஞ்சி கேட்டு சேர்த்து வைக்க முடியாது அடாவடியாக ஏதாவது கலாட்டா செய்துடும் கல்யாணத்தை செய்து முடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டு வைத்தான்.
,,,,,,,,,,

யாமினி தனது தோழர் தோழிகளே தர்ஷனுக்கு அறிமுகம் செய்து வைக்க அவன் நட்பு ரீதியாக மரியாதை நிமித்தமாக அவர்களிடம் பேசி முடித்து சென்றுவிட நண்பர்கள் இருக்கும்பொழுது இதுதான் சமயம் என்று தர்ஷனை ஒட்டி உரசிய யாமினயை அவர்கள் சென்ற பிறகு அவளை உதறி தள்ளியவன்,

"பணக்கார வாழ்க்கைக்காக என் கூட படுக்க வந்தவ நீ எனக்கு விருப்பமில்ல
அது உனக்கு தெரியும் இருந்தாலும் இவ்ளோ தைரியமா என்னை கல்யாணம் பண்ணிக்க வந்து இருக்க அப்படி இருக்கும்போது எதுக்கு உன் பிரண்ட்ஸ் முன்னாடி நடிக்கிற இந்த மாதிரி ஆக்டிங் எல்லாம் என்கிட்ட வச்சுக்காத."

என்று நெருப்பாக வார்த்தைகளை கொட்ட


"ஹலோ மிஸ்டர் நீங்க ரொம்ப ஆம்பள பத்தினி மாதிரி பேசாதீங்க நீங்களும் பொம்பளைங்க கூட சுத்திகிட்டு இருந்தவர் தானே நான் இதுவரைக்கும் எவன் கூடவே படுத்துறது கிடையாது வேணும்னா செக் பண்ணி பாருங்க தெரியும் ஆனா உங்கள மாதிரி ஆம்பளைங்களுக்கு அது கிடையாது அதனால் தான் இஷ்டத்துக்கு வாழுறீங்க எது நீங்க மட்டும் ஒழுங்கு மாதிரி பேசாதீங்க ஆமா வசதியான வாழ்க்கை அமையப்போகுது நான் வேணாம்னு சொல்ல முட்டாள் கிடையாது அதேசமயம் என்ன பத்தி பேசறதுக்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை வசதியான வாழ்க்கைக்காக கல்யாணம் பண்ண அதுக்காக தன்மானத்தை விட்டுக்கொடுக்கிற பொண்ணு கிடையாது நானு".

என்று படபடவென்று பேசிவிட்டு யாமி சென்றுவிட இருந்தாலும் மனம் கொதித்தது எப்படி எல்லாம் இவன் பேசுகிறான் இவன் மட்டும் என்ன ஒழுங்கா ஆமாம் நான் கூட தவறு செய்திருக்கிறேன். ஆனால் இவனைப் போல் யாரிடமும் படுத்தி எழுந்திருக்கவில்லையே இவன் ஏதோ நல்லவன் போல பேசுகிறான் எத்தனை பெண்கள் சாபமோ என்னை போல் மோசமான மனைவி இவனுக்கு வரப் போகிறாள் திருமணத்திற்கு பிறகு எப்படியோ இந்த குடும்பத்தை பிரித்து இதை மொத்த சொத்துக்களுக்கும் நான் தான் அதிபதியாக போகிறேன் ஏன் ஒரு மந்திரவாதியிடம் பேசி முடித்து இதை தர்ஷன் எனக்கு பெட்டி பாம்பாக அடங்கி இருக்க வசிய கட்டலாம் ஏற்பாடு செஞ்சாச்சு பேசுமாறு பேசட்டும் அதன் பிறகு இவனால் பேசவே முடியாது.

என்று வில்லத்தனமாக சிரித்துக் கொண்டு சென்றாள்.
,,,,,,,,,,,,,,

இங்கே சடங்கு முடிந்த பிறகு குளிக்க வேண்டும் என்பதற்காக விஷ்வா சென்று கொண்டிருக்கும் போது அவன் மீது தடுக்கி விழுந்து மேனகா அவன் சட்டையை கெட்டியாக பிடித்துக்கொள்ள அவள் எங்கு கீழே விழுந்து விடப் போகிறாளோ என்று விஷ்வாவை தாங்கி பிடித்துக் கொள்ள அவன் சட்டையில் கரங்களில் முகத்தில் இருந்த மஞ்சள் அவர் உடம்போடு உடம்பு அவள் உடம்பை தழுவி நிற்க..

'நம்ம நல்லது ஃபங்ஷன் இந்த மாதிரி நடந்தது கிடையாது நீங்க தமிழ்நாட்டுல வைக்கிற மாதிரி வைக்கிறீங்க நம்ம ஊர்ல எப்படி நடக்கும் முதல்ல பையனுக்கு மஞ்சளை பூசுவோம் பையன் உடம்புல இருந்து கொஞ்சம் மஞ்சள் எடுத்து பொண்ணுக்கு வைக்கிறது அப்புறம் பொண்ணு உடம்புல கொஞ்சம் மஞ்சள தேச்சு அதிலிருந்து கொஞ்சம் மஞ்சள் எடுத்து பையனுக்கு வைக்கணும். இப்படி அவங்க உடம்புல பட்ட மஞ்சளா மாறி மாறி கல்யாணம் பண்ணிக்க போறாங்க வச்சிக்கிட்டா தான் அது முழுமையான சடங்கை கொடுக்கும் நீங்க என்னடான்னா பொண்ணும் பையனும் பார்க்க கூடாது நலுங்கு தனித்தனியா வச்சுக்கிட்டு இருக்கீங்க எல்லாம் டிஃபரென்ட் ஆனா ஒன்னு பையன் உடம்புல இருக்குற மஞ்சள் இருந்து கொஞ்சம் மஞ்சள் பொண்ணு மேல பட்டாதான் அவனோட மனைவி அவள் அப்படின்னு ஒரு முழுமை கிடைக்கும்'

என்று விழாவில் ஒரு சொந்தக்கார பெண்மணி சொல்லிக் கொண்டிருந்தது விஷ்வா மனதை சபல படுத்த,


தன் மீது இருக்கும் மஞ்சள் இவள் மீது பட்டு இருக்கிறது அப்படி என்றால் இவள் என்று ஒரு கணம் எதையும் சிந்திக்காமல் அப்படியே மேனகா இடையை கெட்டியாக பிடித்துக் கொள்ள.

"ஸ்ஸ்.. சார் வலிக்குது விடுங்க"

என்று செல்ல குரலில் அவள் சொன்ன பிறகுதான் தான் எப்படி அவரை கையாண்டு கொண்டிருக்கிறோம் என்று புரிந்து கொண்டவன் அப்படியே அவளை விட்டு விலகி அங்கிருந்து சென்றுவிட.

"இவர் சும்மா சும்மா பிரம்ம புடிச்ச மாதிரி பண்ணுவாரு இப்ப பாரு அவர் மேல இருக்கிற மஞ்சள் எல்லாம் என் மேலயும் பட்டுடுச்சு இதை யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க அது மட்டும் இல்லாம அந்த லூசு யாமினி இத பாத்தா கதையை வேற மாதிரி மாத்தி விடுவான் உடனே போய் டிரஸ் மாத்திக்கணும்"

எந்த தன் அறைக்குள் நுழைய ஏற்கனவே இரவு உணவு சாப்பிட்டு முடித்து கிருஷ்ணா உறங்கிக் கொண்டிருக்க தானும் இலகுவான உடை மாற்றிக் கொண்டு குழந்தை அருகில் உறங்க ஆரம்பிக்க...

'நான் ஒரு பொண்ண லவ் பண்ண ஆனா அவ இவளோ கேடுகெட்ட கேரக்டரா இருப்பானு என நினைச்சு கூட பாக்கல உன்ன மாதிரி ஒரு பொண்ண யாராவது லவ் பண்ணுவாங்களா??

உனக்கு தேவை பணம் அந்த பணத்துக்கு ஆசைப்பட்டு போய் யார் கூடயோ படுத்து குழந்தையை பெத்துட்டு வந்து நிக்குற நீ எல்லாம் பொம்பளையே கிடையாது??'

என்று ஒரு ஆணின் குரல் மிகவும் வக்கிரமாக அவளுக்கு கேட்க..

"நோ.."

என்று பதறி அடித்து எழுந்து அமர அது கனவு மேனகாவின் உடல் எல்லாம் வேர்வையில் முத்து முத்தாக பூத்திருந்தது அருகில் இருக்கும் குழந்தையை பார்க்கவே பரிதாபமாக இருந்தது எப்படி பேசி விட்டான் அவன் என்று அவனை கிட்ட தான் தோன்றியது அவளுக்கு.

"இந்த குழந்தையை பெத்த அம்மா என் கைல கொடுத்து இவனை நீ தான் பத்திரமா பாத்துக்கணும்னு சத்தியம் வாங்கி செத்து போயிருக்கா அப்படி பட்ட அவளோட குழந்தையை நான் எப்படி விட முடியும் ஆனால் இந்த ஊர் எனக்கு எவ்வளவு கேவலமாக பேசினாலும் நான் தாங்கினேன் என்ன சார்ந்தவங்க பேசும்போது கூட நீ இருக்குன்னு ஒரு நம்பிக்கையை தான் இருந்தேன் ஆனா நீயும் என்னை கண்டபடி பேசிட்ட நான் யாரை வேணாலும் மன்னிப்பேன் ஆனா உன்ன மட்டும் மன்னிக்கவே மாட்டேன் நிச்சயமா மன்னிக்க மாட்டேன் உன்னை இதுவரைக்கும் நேர்ல பாக்கல ஆனால் இப்போதைக்கு மனசுல காதல் கல்யாணம்னா அந்த இடத்துல நீ மட்டும் தான் உன்ன வச்சு தான் பாக்குறேன் ஆனா நீ இவ்ளோ கேவலமா பேசிட்ட இல்ல நிச்சயம் உனக்கு இது தான் தண்டனை கிடைக்கும் ஒரு நாள் பாரு நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ஓடிப்போ போறா".

என்று யாருக்கும் சாபத்தை கொடுத்து விட்டு மேனகா உறங்க ஆரம்பிக்க.

தான் அறையில் இருந்த விஷ்வா திடீரென்று தூக்கத்தில் இருந்து இரும்ப ஆரம்பித்தான்.

"இந்த மாதிரி எனக்கு வந்ததே கிடையாது யாரும் என்னை திட்டுறாங்க போல"

என்று சொல்லி தண்ணீரை குடித்து முடித்து மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 

Author: srija
Article Title: 23) தீயே
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: mahesh