22) தீயே

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
100
Reaction score
1
Points
18
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 22

சோகத்தின் மறு உருவமாக அமர்ந்து கொண்டிருந்த சுஷ்மாவை பார்த்த அசோக் சற்று தயங்கி,

"ஹாய் என்ன இப்படி உக்காந்துகிட்டு இருக்கீங்க ஏதாவது வேணுமா??"

என்று கேட்க

"பரவால்ல என்கிட்ட பேசறதுக்கு டைம் இருக்கு உங்களுக்கு".

சற்று விரக்தியாக சொல்ல.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல உங்கள பாக்க நல்லவங்க மாதிரி தான் இருக்கு உங்க முகத்தில் ஒரு குழப்பம் இருக்கு ஆனா இப்ப நீங்க எங்க அண்ணனோட வருங்கால மனைவி அதற்கான மரியாதை நான் கொடுத்து தானே ஆகணும் நீங்களா பேசும் வரைக்கும் நான் எதுவும் பேச வேண்டாம் நான் அமைதியா இருந்தேன் ஆனா இப்படி ரொம்ப கவலையா இருக்கீங்க அது மட்டும் தெரியுது சொல்லுங்க என்ன விஷயம்??".

என்று தோழமையோடு அசோக் பேச சற்று மனம் நிதானம் கொண்ட சுஷ்மா தான் கவலையே கொட்ட ஆரம்பித்தாள்.

"கல்யாணம் அப்படின்னு சொன்னா எல்லா பொண்ணுங்களும் சந்தோஷப்படுற மாதிரி தான் நானும் சந்தோஷப்பட்டேன். உண்மைய சொன்னா ஊர்ல அப்பா அம்மாவோட பிசினஸ் கொஞ்சம் லாஸ் பிகாஸ் யாமினி ஓட அம்மா அப்பாவோட முட்டாள்தனமான ஐடியா தான் எங்க அம்மா அப்பாவும் பிசினஸ் நம்பி நிறைய பணம் போட்டு லாஸ் ஆகி கடன் எல்லாம் மறைச்சிட்டு வேற வழி இல்லாம கல்யாண சம்மதம் எடுத்தவுடன் என்கிட்ட எதுவும் கேட்காமல் பணக்கார குடும்பம் சொன்னவுடன் நான் ஒத்துக்கிட்டேன் மிஞ்சி போனா என்ன ஆகும் வீட்டோட மருமக அப்படின்னு ஒரு பேரோட வாழ்ந்திடலாம் ஆசைப்பட்டேன்.

ஆனால் சராசரி பொண்ணுங்களுக்கு இருக்கிற அதே ஆசைதான் எனக்கும் இருக்கு என்னோட கணவன் எனக்கே எனக்கு மட்டும் என்ன நேசிக்கிற என்னோட புருஷன் இருக்கணும்னு நான் ஆசைப்படறது தப்பு இல்ல,

ஆனா உங்க அண்ணன் மனசுல நான் இல்லன்னு வெளிப்படையாவே தெரியுது ஆனா கௌரவத்துக்காகவும் அண்ணன் கல்யாணம் பண்றாரு,

அதுதான் எனக்கு வேதனையாவும் இருக்குது இப்ப எல்லாம் நல்லா இருக்கும் ஆனா,

ஃபியூச்சர்ல பெரிய பிராப்ளம் ஆகி டைவர்ஸ் அது இதுன்னு வந்தால் என்ன பண்றது எல்லாமே பிடிக்காம பண்ணலாம் ஆனா கௌரவத்துக்காக குழந்தை பெத்துக்கிறது ரொம்பவே தப்பு இல்லையா கணவன் மனைவி தாம்பத்தியம் ரொம்ப சென்சிடிவ் ஆன விஷயம் அது கௌரவத்துக்காக பண்ண கூடாது இதுக்கு மேல என்னால முடியல இன்னும் அஞ்சு நாளில் கல்யாணம் ஆனா எனக்கு எந்த ஒரு ஆசையும் வரல இன்னைக்கு சாயங்காலத்தில் இருந்து எல்லா சடங்கும் ஆரம்பிக்குது".

என்று கண் கலங்கி கூற.

"நீ சொல்றது எனக்கு வேதனையா தான் இருக்கு ஒன்னு மனசுக்கு பிடிச்ச ஒருத்தவங்கள கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழனும் இன்கேஸ் அரேஞ்ச் மேரேஜ் பண்றாங்க அப்படின்னு நினைச்சுக்கோ அப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் மனசு விட்டு பேசி புரிந்து கல்யாணத்த ஒத்துக்கணும் ஆனா எதுவுமே இல்லாம கல்யாணம் ஓகே பண்ணிக்கலாம் ஓகே வாழலாம் அப்படின்னு நினைக்கிறது எல்லாம் ரொம்ப அநியாயம் மோஸ்டபா நம்மள மாதிரி பெரிய இடத்து வீட்டு பிள்ளைங்களுக்கு நடக்குற அநியாயம் இதுதான். ஸ்டேட்டஸ் கௌரவத்துக்காக ஒரு கல்யாணத்தை பண்ணி குழந்தையை பெற்றுக்கிட்டு ஏதோ அரைகுறை வாழ்க்கை இப்படி எல்லாம் கூடாது முடிஞ்ச அளவுக்கு நான் உதவி பண்ண பார்க்கிறேன் நீ எதைப் பத்தியும் கவலைப்படாத".

என்று சொல்லிவிட்டு அசோக் அங்கிருந்து சென்றுவிட

'அப்போ பொறுமையா பேசி பார்த்தா செட் ஆகும் பிகாஸ் கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு இனி நம்ம விடக்கூடாது விஷ்வா கிட்ட பேசி ஆகணும்'

என்று தக்க சமயத்துக்காக காத்திருக்க ..

இங்கே தனது அறையில் மேனகா க்ரிஷ் குட்டியை உறங்க வைத்திருக்க அவள் மனம் எல்லாம் விஷ்வா மீது தான் இருந்தது ஏன் தன்னையே அறியாமல் அவள் மனம் அவனிடம் சென்றடைகிறது ஏன்? காரணம் என்ன அதுவும் ஆபத்து நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் அரவணைத்துக் கொள்வது போல் இருவரும் கட்டிக்கொண்டு அதற்கு அர்த்தம் தான் என்ன??.

என்று புரியாத புதிருக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது சரியாக உள்ளே நுழைந்தனர் தேவி மற்றும் சாக்ஷி.

"என்ன ஒரே திங்கிங்ல இருக்கீங்க லாஞ்ச் கூட வரலைன்னு பாட்டி சொல்லிட்டு இருந்தாங்க அதான் உன்கூட லன்ச் சாப்பிடலாம் என்று நானும் அம்மா கிட்ட கேட்டு வந்தேன் ஆமாம் ஈவினிங்ல இருந்து வேலை ஆரம்பிக்குதே நமக்கு என்ன வேலை இருக்கும்??"

என்று சாக்ஷி கொஞ்சம் ஆர்வமாக கேட்க.

"என்ன இருக்கப் போகுது நான் பெஃபே கேட்டரிங் மெம்பர்ஸ் ஃபுட் சர்வெண்ட் எல்லாருக்கும் கைட் குடுத்து டின்னர் அரேஞ்ச் பண்ணனும் நீ கெஸ்ட் எல்லாரையும் வெல்கம் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் இரண்டு பேரும் கரெக்டா செய்யறாங்களா அப்படின்னு செக் பண்ணனும் அப்புறம் மேனகா வி ஐ பி வி ஐ பி அவங்களுக்கான எல்லாமே பார்க்கணும் இந்த பெரிய வீட்டு கல்யாணம்னால இப்படித்தான் தலைவலி ஜாஸ்தி".

என்று சொல்லி தேவி சிரிக்க.

"கேர்ள்ஸ் எதுக்கு நாம டென்ஷன் பண்ணனும் வொர்க் எல்லாம் சரியா போயிட்டு இருக்கு நாம ஒன்னும் சும்மா வேலை செய்யல கொடுக்கிற சம்பளத்துக்கு வேலை செய்கிறோம் அது உண்டான எபெக்ட் நம்ம போட்டாச்சு இனிமே அவங்களோட விருப்பம் ம். அதுவும் அந்த கல்யாண பொண்ணு யாமினி இருக்காலே அவள் கண்ணில் மட்டும் நம்ம படவே கூடாது ரொம்ப திமிர் பேச்சு பேசுறா".

என்று சாக்ஷி சொல்லிக் கொண்டிருக்க..

"மத்தவங்க பத்தி நமக்கு எதுக்கு வந்தது இது அவங்க குடும்ப விஷயம். நம்ம தலையிடக்கூடாது சரி சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் அதன் பிறகு ஹல்தி பங்க்ஷன் ஸ்டார்ட் ஆகப்போகுது அப்புறம் சரியா ஆர்கனைஸ் பண்ணல லொட்டு லொசுக்குன்னு பேச ஆரம்பிச்சுருவாங்க"

என்று சொல்லி மேனகா சாப்பிட ஆரம்பிக்க மற்ற இருவரும் அவளோடு சேர்ந்து கதை அளந்து சாப்பிட்டு முடித்து அங்கே ஒரு குட்டி தூக்கத்தை போட்டு ஒரு நான்கு மணி அளவில் கண் முழிக்க..

"சரியா போச்சு சீக்கிரம் நாம ரெடியான பிறகுதான் வெளியே ஆர்கனைஸ் பண்ண முடியும் சீக்கிரம் குவிக்"

இன்று மூன்று பெண்களும் ஆளுக்கு ஒரு திசை பக்கம் சென்று அன்றைய விழாவுக்கான சிறப்பான நேர்த்தி உடைய அணிந்து கொண்டு குழந்தையை ரெடி செய்து விட்டு மூன்று பெண்களும் விழா நடக்கும் இடத்திற்கு வர சரியாக அங்கு சமையல் வேலை நடந்து முடியும் தருவாயில் இருந்தது இன்னும் இரண்டு மணி நேரத்தில் அனைவரும் சாப்பிட வந்து விடுவார்கள் என்பதால்.

தேவி சமையல் வேலை நடக்கும் இடத்திற்கு சென்று விட சாக்ஷி விருதாளிகளை வரவேற்கும் நபர்களிடம் சில பல விஷயங்களை சொல்லி அவர்களை சிறப்பாக கவனிக்க வேண்டும் என்றும் மறுப்பக்கம் மேனகா விஐபி என்ட்ரி வழியாக இருக்கும் பாடிகார்ட் அனைவருக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொண்டிருந்தாள் எந்த ஒரு தலைவலி இல்லாமல் விஷ்வா வீட்டில் இருக்கும் நபர்கள் அன்றைய விழாவுக்கு தயாராகி வந்தனர் மஞ்சள் நிற உடை அணிந்து விஷ்வா ஒரு பக்கம் தர்ஷன் ஒரு பக்கம் அமர்ந்திருக்க அவர்களுக்கு திரை போட்டு மறுபக்கம் மணப்பெண்களான யாமினி சுஷ்மா இருவரும் இருந்தனர்..

இதுதான் தக்க சமயம் என்று சுஷ்மா தைரியத்தை வரவழைத்து

"இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு கல்யாணம் ஆகப்போகுது. இன்னும் நம்ம சரியா ஒரு வார்த்தை கூட பேசினது கிடையாது உங்களுக்கு நிஜமாவே இந்த கல்யாணத்துல சம்மதம் தான என்ன புடிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிறீங்க"

என்று பாவமாக கேட்க விஷ்வாவுக்கு ஒரு நொடி அவன் பார்வை மேனகாவை தேடியது ஏன் எதற்காக என்று அவனுக்கே தெரியவில்லை ஆனால் ஒரு முறை மேனகாவை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று சுற்றி அவளைத் தேட ஆனால் அவள் பிசியோ பிசி பிறகு தன்னை சரி செய்து கொண்டவன்,

"செல்லம் காலம் போற போக்குல நல்லபடியா அமைய நீ அத மட்டும் டென்ஷன் பண்ணாத ஃபங்ஷன்ல உன்னோட ஃபேஸ் நல்லா இல்லனா போட்டோ நல்லா இருக்காது"

என்று குழந்தையை சமாதானம் செய்வது போல் செய்து விட சுஷ்மாவுக்கு ஒரு பிடிப்பு வந்தது காலம் போக்கி சரியாகிவிடும் என்று அப்பொழுது பஞ்சாபில் இருந்து வந்த சொந்த பந்தங்கள் அனைவருக்கும் நழுங்கு வைக்க அப்பொழுது சுஷ்மாவின் அத்தை மகன் கரன் வந்திருந்தான்

"ஸ்கூலுக்கு போகறதுக்கு மட்டும் அடம் பிடிச்சா கல்யாணம் சொன்னவுடன் எவ்வளவு ரெடியாக உட்கார்ந்து கொண்டிருக்க பாரு இனிமே உன் தொல்லை இல்லாம எங்க ஊர் நிம்மதியா இருக்கும் ஹாப்பி மேரிட் லைப் இன் அட்வான்ஸ்"..

என்று செல்லமாக அவளுக்கு கன்னங்களில் மஞ்சளை தடவி நெற்றி முட்டி விட்டு சிரிக்க ஏனோ அந்த நொடி அவள் மனதில் ஒரு மின்னல் கரன் முகத்தை பார்க்க அவன் குறும்புத்தனமாக சிரித்துக் கொண்டிருந்தான் சுஷ்மாவுக்கு அந்த நேரம் என்ன சொல்வது என்றே புரியவில்லை பிறகு ஒவ்வொரு பெண்களாகவும் குடும்பமாகவும் வந்து நலுங்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து விட்டு செல்ல இங்கே ஒரு பக்கம் யாமினிக்கு கொள்ளை மகிழ்ச்சி மித்ரன் வீட்டு மருமகள் என்று ஆளாளுக்கு அவளுக்கு செய்யும் சேவகத்தை பார்த்து இன்னும் இன்னும் தலைக்கு ஆணவம் ஏறிக் கொண்டே இருந்தது.

'இன்னும் அஞ்சு நாள் தான் இந்த வீட்டு மருமக னு மொத்த அதிகாரியை என் கைக்குள்ள போட்டு சீக்கிரமா அந்த ராஜ்வீர் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகணும்'.

என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டிருக்க ஆனால் மறுபக்கம் ராஜ்வீர் தன திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருந்தான்.

"பாஸ் பாபி இன்னொருதர கல்யாணம் பண்ணிக்க போறாங்க நீங்க எந்த ஒரு ஆக்சன் எடுக்காம இருக்கீங்க??"..

என்று வீரா வின் அடியார்களில் ஒருவன் சொல்ல..

"டேய் என்ன விட்டு அவ எங்கயோ போக முடியாது ஆடும் வரை ஆடட்டும் எல்லாமே பக்காவா பிளான் பண்ணி வச்சிருக்கேன் கல்யாணத்தப்போ அவன் அங்க இருக்க மாட்டா அதுக்கு முன்னாடி நாளே பிரம்ம முகூர்த்தத்தில் எனக்கு மனைவியா இருப்பா"

என்று சபதம் போட்டு முடித்தான்.

‌,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 
Last edited:

Author: srija
Article Title: 22) தீயே
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.