20) தீயே 🔥

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
100
Reaction score
1
Points
18
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 20

தர்ஷன் அவளை கோபம் கலந்த நக்கல் பார்வையோடு பார்த்துக் கொண்டிருக்க சாக்ஷி தனது சிவந்த உதடுகளை பிடித்து அழுது கொண்டு இருந்தாள்...

சில நேரங்களுக்கு முன்பு..

மதிய உணவு மேனகா மற்றும் தேவியோடு தான் என்று சொல்வதற்காக தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அவளை தன் தோட்டத்தின் மற்றொரு பக்கமாக மறைவான இடத்திற்கு அவளை தன் வலியை கரம் கொண்டு இழுத்து சென்று கொண்டிருந்தான் தர்ஷன்..

"ஹே ஹலோ என்ன நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ஹேய் என்ன இது.???"

என்று அவள் எவ்வளவு சொல்லியும் அவள் கரங்களை விடாமல் வலிமையாக பிடித்துக் கொண்டவன்

"எங்க வீட்டுக்கு அடிக்கடி நீ எதுக்கு வந்துட்டு போற அன்னைக்கு ஏதோ பெரிய இவள் ஆட்டம் பேசிகிட்டு இருந்த உங்கள மயக்குறத்துக்கு எனக்கு வேற வேலை இல்லையா அப்படின்னு ஆம்பளைங்க இருக்குற வீட்ல எதுக்கு 10 தடவை வந்துட்டு போற??"

என்று அவள் கரங்களை வலிமையாக பிடித்துக் கொண்டு கேட்க.


"ஹலோ இவர் பெரிய மன்மதன் எத்தனை தடவை சொல்றது உங்கள மயக்குறதுக்கு எனக்கு வேற வேலை இல்லையா நான் வேலைக்காக மட்டும் தான் அங்க வந்து இருக்கேன் உங்க வெட்டிங் டிசைனர் பொறுப்பு என்கிட்ட இருக்கு நிச்சயதார்த்தத்துக்கு ஆஹா ஓஹோன்னு உங்க எல்லாரும் புகழ்ந்துட்டு போனது என்னோட உழைப்ப பாத்து தான் மேனகா எனக்கு இந்த வேலை கொடுத்து இருக்காங்க இதுக்கு நீங்களும் ஓகே சொல்லி இருக்கீங்க அப்புறம் என்ன ஒண்ணுமே தெரியாத மாதிரி என்கிட்ட கேக்குறீங்க இவர் பெரிய ஹீரோ இவரை நாங்க எங்க வலையில் விழ வைக்க பத்து தடவை நடந்து வரும் கன்னி பையன் உங்கள கொத்திகிட்டு போக நான் காத்துகிட்டு இருக்கேன் நான் எப்பவுமே அடுத்தவங்க உபயோகப்படுத்துற எச்சி பொருளை பயன்படுத்த மாட்டேன் அது உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது"

என்று அவரிடம் இரு தன்னை விடுவித்து அங்கு இருந்து செல்ல பார்க்க தன்னை எச்சி பொருள் என்று சொன்னவளை ஏதாவது செய்ய வேண்டுமென்று சென்றவளை மீண்டும் இறுக்கிப்பிடித்து அவளைப் பார்த்து

"என்னடி சொன்ன நான் எச்சி பொருளா?? அவ்ளோ இளக்காரமா தெரியுதா என்ன பாத்தா??"

என்று கோபம் மூச்சு அவள் முகத்தில் பட்டு தெறிக்க..

"என்ன நீங்க பைத்தியக்காரத்தனம் நடந்துகிட்டு இருக்கீங்க எத்தனை தடவை சொல்றது என்ன மாதிரி என்கிட்ட பிஹேவ் பண்ணாதீங்க அப்படின்னு உங்களுக்கு கல்யாணம் ஆகப்போகுது உங்களுக்காகவே ஒருத்தி காத்துக்கிட்டு இருக்கா அவளும் லேசு பட்டவ கிடையாது ஆனால் அவளுக்கு நீங்க கரெக்ட் அவளுக்கு வேணா கண்ட இடத்துல மேய்ந்த உங்கள கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கலாம் ஆனா உங்கள மாதிரி ஆட்களை கிட்ட பக்கத்துல நிக்க வைக்கிறது கூட அருவருப்பு தான்"

என்று அவள் இதழை சுருக்கி முகத்தை திருப்பிக் கொள்ள சுருங்கி ஆவல் இதழ்களை தணிதல்களால் தன் வசப்படுத்திக் கொண்டான் தர்ஷன் இந்த எதிர்பாராத மொத்த தாக்குதலில் ஸ்தம்பித்துப்போன சாக்ஷி அவரிடமிருந்து எவ்வளவு போராடி விடுபட முயற்சி செய்தாலும் முடியவில்லை. அவன் பிடிப்புடியாக அவள் இடைக்கரம் இரண்டையும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தது. அவள் கண்களில் வந்த கண்ணீர் இருவர் இதழ்க்கும் நடுவே வந்து உப்பு கரித்த பிறகு தான் தர்ஷன் தான் செய்த தவறை உணர்ந்து அவளை விடுவித்து அவளை பார்க்க அவளோ சிவந்த தன் இதழ்களை பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்க அவள் கண்களில் கண்ணீர் வந்த பிறகுதான் அவனுக்கு நிம்மதியாகவும் இருந்தது மனதிற்குள் குற்ற உணர்வு இருந்தாலும் அவளை அழ வைத்துவிட்டோம். ஏதோ இவளை பார்த்ததிலிருந்து தானே பைத்தியம் பிடித்தது போல் சுற்றிக் கொண்டிருக்கிறான். தன்னை போய் எச்சி பொருள் என்று சொல்லிவிட்டாய் என்று ஆதங்கத்தில் அவளை இப்படி செய்து விட்டான் ஆனாலும் ஆண் என்ற கர்வம் ஒரு பெண்ணை தனக்கு கீழ் கொண்டு வர வேண்டிய எண்ணம் அவன் அடி மனதில் தோன்றிய ஒரு சிறு சபலம் தான் இப்பொழுது அவளின் இந்த நிலை அதை பொருட்படுத்தாமல் அவளை முறைத்துக் கொண்டிருக்க.


"உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாது இன்னும் கொஞ்ச நாளில் ஒரு பொண்ணுக்கு புருஷனா மாற போறீங்க ஆனா என்கிட்ட போய் இப்படி நடந்துக்கிறீங்க ஆமா இது ஒன்னும் உங்களுக்கு புதுசு கிடையாது கல்யாணம் வரைக்கும் கொஞ்சம் அடக்கமா இருக்கு பாருங்க இப்ப கூட பொண்ணுங்க சவகாசம் தேவையா உங்களுக்கு இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் இந்த வீட்ல பொறந்தது நினைச்சா வெக்கமா இருக்கு எங்க அப்பா எப்படித்தான் இங்க எல்லாம் வொர்க் பண்றாரு அப்படின்னு எனக்கும் புரியல"

என்று அவனை நன்றாக திட்டி விட்டு சாக்ஷி அங்கிருந்து சென்றுவிட..

பெருமூச்சு விட்ட தர்ஷன் தன் மனதில் நிலையான காதல் என்கிற இடத்திற்கு அர்த்தம் கண்டுபிடித்த இவரை எப்படி விடுவிக்க முடியும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தான் ஏனோ இவளை பார்த்ததிலிருந்து தானே காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் இந்த அவசரத்தனம் தனக்கு தேவையா என்று இருக்கும் நிலையில் முடிவே செய்துவிட்டார் எப்படியாவது இவளை தன் மனைவியாக மாற்றிவிட வேண்டும் என்று மாற்ற முடியாவிட்டால் அவன் தர்ஷன் இல்லையே...!
,,,,,,,,,,,,,,,,,,,

நீண்ட நாள் கழித்து ஒரு முக்கியமான கிளையண்ட் மீட்டிங் இருக்கிறது மேனகாவுடன் சென்றால்தான் அந்த மீட்டிங்கே நடைபெறும் ஏனென்றால் இதை மூன்று மாதங்களுக்கு முன்பாக புக் செய்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அந்த மேனேஜரிடம் பேசி முடித்தது அவள்தான் பல நாட்கள் கழித்து விஷ்வாவுடன் மேனகா பயணம் மேற்கொள்ள இருவரும் அமைதியாக நிலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்..

மேனகா லேப்டாப்பில் அந்த கம்பெனியின் மேனேஜரிடம் அப்பாயின்மென்ட் தங்கள் வருகைக்கான நேரம் அனைத்தையும் குறித்து வைத்து இன்னும் ஒரு மணி நேரத்தில் தயாராக போகிற மீட்டிங் காண அனைத்து விரிவுரைகளையும் தயார் செய்து கொண்டிருக்க,

"மேனகா இந்த ஒரு மீட்டிங் மட்டும்தான் அதன் பிறகு நீ முழுசா மேரேஜ் வொர்க்ல பிஸியா இருப்ப நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியும் நினைக்கிறேன். எந்த ஒரு குறையும் யாரும் சொல்லக்கூடாது அந்த அளவுக்கு குக்கிங் டிபார்ட்மெண்ட் டிசைனிங் டிபார்ட்மெண்ட் ஆர்கனைசிங் மத்த எல்லா விஷயமும் நீ அந்த மத்த ரெண்டு பொண்ணுங்க எல்லாமே கரெக்டா பண்ணா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்"

என்று விஷ்வா சொல்ல..

"சர் ஆல்ரெடி எல்லாம் பிளானும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கு ஏதோ இன்னைக்கு வந்தாச்சு நாளைக்கு சாயங்காலத்தில் இருந்து எல்லா வேலையும் சரியா ஆரம்பிக்கும் உங்க கல்ச்சர் படி சவுத் இந்தியன் கல்ச்சர் படி என்னென்ன நடக்கணுமோ எல்லாமே கரெக்டா நடக்கும் அதுவும் உங்க மேரேஜ் காக எத்தனை பேர் காத்திருந்தாங்க எல்லா பிரண்ட்ஸ்க்கும் இன்விடேஷன் ஸ்பெஷல் ஃப்ரெண்ட்ஸ்க்கு ஸ்பெஷல் இன்விடேஷன் போன்ற எல்லா விஷயமும் கரெக்டா அப்லோடிங் ஆயிட்டே இருக்கு சார் நீங்க எந்த ஒரு கவலையும் பட வேண்டாம் 15 நாளைக்கு நீங்க உங்க மேரேஜ் விஷயத்துல ஃபோக்கஸ் பண்ணிங்கனா இன்னும் நல்லா இருக்கும் என தான் நான் அட்வான்டேஜ் எடுத்து பேசுறேன் தப்பா நினைச்சுக்காதீங்க மேரேஜ்ங்கிற விஷயம் நம்ம வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கம் அதனால நாம கொஞ்சம் நல்லா இருந்ததா மேரேஜ் போட்டோ நல்லா இருக்கும்"

என்று சொல்லி மேனகா மீண்டும் தன் வேலையை பார்க்க விஷ்வா அப்பொழுது தான் சவரம் செய்யாத தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தான் ஏதோ காதல் தோல்வி அடைந்த தேவதாஸ் போல் காட்சி அளிக்கப்பட்டது அவனது முகம் அப்பொழுதுதான் தன்னையும் சற்று பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஒரு எண்ணம் வந்தது மேலும் கண்ணாடியை மெதுவாக திருப்பி மேனகாவுடன் இணைந்தவாறு தான் உருவத்தை கண்ணாடியில் பார்க்க ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று அடிமனம் கூவிக்கொண்டே இருக்க அது சமாதானம் செய்து முடித்து மீண்டும் சாலையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான்.

சிறிது நேரம் பயணத்தில் அவர்களது கிளைன்ட் ஒருவரை மீட் செய்வதற்கான அவர் அலுவலகத்தை வந்து அடைந்தது அந்த கார் இருவரும் இறங்கி மீட்டிங் ஹாலுக்கு செல்ல ஏற்கனவே அவர்களுக்காக காத்திருந்தவர் அவர்களை வரவேற்று மீட்டிங் மற்றும் பிசினஸ் டீலிங் பற்றிய விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க..


"விஷ்வா நான் ஒரு சின்ன ரெசார்ட் ஆரம்பிச்சேன் இப்ப நிறைய பிரான்சஸ் வந்திருக்கு ஆனா என்னோட பழைய பிரான்ச் என்னால பாத்துக்க முடியாது நிலைமையில் இருக்கேன் பிகாஸ் நான் இருக்கிற ஏரியாவை விட அது சிட்டி விட்டு ரொம்ப லாங்ல இருக்கு நீங்க அத மெயின்டைன் பண்றதா இருந்தா நான் உங்களுக்கே என்னோட ரெசார்ட் பொறுப்புகளை ஒப்படைப்பேன்"

என்று அவர் கேட்டு முடிக்க விஷ்வா இருக்கும் இடத்திலிருந்து அந்த ரெசார்ட் சற்று அரை மணி நேர தூரப்பயணம் தான் நிச்சயமாக தனக்கு சாதகமாக தான் இருக்கும் ஏனென்றால் அது நல்ல முறையில் சென்று கொண்டிருக்கும் ரெசார்ட் என்று புரிந்து கொண்ட விஷ்வா சரி என்று ஒப்புதல் அளிக்க..

"நான் உங்களை எதுவும் சொல்லி ஏமாற்ற போறது கிடையாது நீங்க ஒரு தடவை நம்ம ரெசார்ட் வந்து ஃபுல் விசிட் பண்ணி ஒரு நாள் ஸ்டே பண்ணிட்டு அதுக்கப்புறம் நீங்க வாங்குறதும் வாங்காததும் உங்க பொறுப்பு ஏன் நீங்க இப்பவே ரெடி சொன்னா கூட நான் அரேஞ்ச்மென்ட் பண்ணி வைக்கிறேன் நீங்க அங்க போய் ஒரு விசில் பார்த்துட்டு வந்தா எனக்கு நிம்மதியா இருக்கும்"

என்று அவர் மிகவும் தாழ்மையுடன் கேட்டு தான் சரி என்று ஒப்புக் கொண்ட விஷ்வா மேனகாவுடன் அந்த ரெசார்ட் செல்ல தயாரானான்...


இங்கே பல நாள் இறைக்காக காத்திருந்த கொக்கு போல் சுஜித் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் விஷ்வா மேனகா இருவர் மட்டும் தனியாக ஒரு ரிசார்ட் செல்வதாக இருக்கின்றனர் என்ற தகவல் வர சில ஆட்களை அனுப்பி வைத்து அவர்களை கொல்வதற்காகவே திட்டம் போட்டு விட்டான் தன்னை எதிர்த்தவர்கள் உயிரோடவே இருக்க கூடாது என்ற கொடிய நிலையில் இருக்கும் சுஜித் இவர்களை கொள்வதற்காக ஆளை அனுப்பி விட இதை அறியாமல் விஷ்வா மேனகா இருவரும் ரிசாட் விசித்காக சென்று கொண்டிருந்தனர்.

,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 

Author: srija
Article Title: 20) தீயே 🔥
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.