19) ராகம்

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
74
Reaction score
1
Points
8
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 19


"அது எப்படி மீனாட்சி அம்மாவோட பேத்தி நம்ம ரெண்டு பேரும் ஜாடையில் இருக்கும்??"


என்று ஹர்ஷா சந்தேகமாக கேட்க..


"அது அது வந்து என்ன நீங்க இது கூட தெரியாதா வாய் இருந்தா என்ன வேணாலும் பேசுவாங்க அது மட்டும் இல்ல மீடியா நியூஸ் பேப்பருக்கு அல்வா மாதிரி ஒரு நியூஸ் கிடைச்சா சும்மா விட்டுடுவாங்களா என்ன எல்லாரும் நம்ம குழந்தை நினைச்சுட்டு இருக்காங்க அதனால தான் நாம் மூன்று வருஷம் எப்படி இருந்தோம்னு அவங்க பார்த்தாங்களா என்ன??


சூட்டிங் முடிஞ்சாச்சுல்ல சரி பாப்பா எங்க??"


என்று குழந்தையை தேட..


"கூல் கூல் எப்பவுமே சரி ஷூட்டிங் டைம்ல குழந்தை வச்சி சூட்டிங் எடுக்கணும்னா குழந்தைக்கு சில மெடிக்கல் டெஸ்ட் எடுப்பாங்க அது ஷூட்டிங் அப்புறம் குழந்தைகளுக்கு ஏதாவது உடம்பு சரியில்லாமல் போச்சுன்னா அதுக்கு நாங்க பொறுப்பில் இருந்து முன்கூட ஒரு மெடிக்கல் செர்டிபிகேட் அந்த பிராசஸ் தான் அங்க போயிட்டு இருக்கு இதோ அங்க வராங்க பாரு"


என்று சொல்லி காட்டிய திசையில் ஒரு செவிலி பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு வர போலீஸ் என்று குழந்தையை வாங்கிக்கொண்டு


"சரி ஹர்ஷா வாங்க டைம் ஆயிடுச்சு வீட்டுக்கு போகலாம்"


என்று சொல்லி உடன் கார் எடுத்துக் கொண்டு நீண்ட நேரம் பயணமாக வீட்டு பக்கம் செல்லாமல் ஏதோ ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருந்தான். ஏற்கனவே மணி ஏழு நெருங்கிக் கொண்டிருந்தது குழந்தைக்கு இது சாப்பிடும் நேரம்..


"ஹர்ஷா டைம் ஆயிடுச்சு பாப்பா இப்போ டின்னர் சாப்பிடுற டைம் இப்போ வீடு பக்கம் போகாம எங்க போயிட்டு இருக்கோம்??"


"அது இப்பவே சொன்னா அது நல்லா இருக்காது சோ போனதுக்கப்புறம் தெரிஞ்சிக்கலாம்"


என்று சமாதானம் செய்து ஒரு வழியாக அந்த இடத்திற்கு வந்து நிறுத்த திரும்பி பார்த்தவர்களுக்கு கண்கள் சாசர் போல் விரிந்தது அது அவளுக்கு பிடித்த ஒரு ரெஸ்டாரன்ட் அது எளிமையாகவும் கிளாசிக் வில்லேஜ் முறையில் தயாரிக்கப்பட்டது


நவ நாகரிக விரும்பிகள் கௌரவத்திற்காக இங்கு வரமாட்டார்கள் ஆனால் இந்த இயற்கை சூழல் விஷக்காவுக்கு ரொம்ப பிடிக்கும் திருமணமான புதிதில் இங்கே சேலம் என்று சொன்னதற்கு இதெல்லாம் என் தகுதிக்கு செட் ஆகாது என்று விலை உயர்ந்த ரெஸ்டாரண்ட்க்கு சென்று விதவிதமாக வாங்கி கொடுத்து சாப்பிடு என்று கட்டாயப்படுத்திய நாட்களை நினைத்து பார்க்கும்போது அவளுக்கு சிரிப்பு தான் வந்தது…


"பிளாஷ்பேக் நினைச்சு சிரிச்சது போதும் வா போலாம்"


என்று குழந்தையை தன் கையில் வாங்கிக் கொண்டு அவள் கரங்களைப் பிடித்துக் கொண்டு சென்றான் அவளுக்கு எல்லாம் கனவு போல் இருந்தது …


மூன்று வருடங்களுக்கு முன்பாக கணவனாக அனைத்தும் செய்தான் ஆனால் காதல் மட்டும் தரவில்லை என்றோ வித்தியாசமாக நடந்து கொள்கிறான் என்ன லிஸ்டில் சேர்ப்பது என்று புரியவில்லை அவளுக்கு..


அவனைப் பார்த்தவுடன் சில விசிறிகள் வந்து ஆட்டோகிராப் வாங்கி சென்றனர் மரியாதை நிமித்தமாக அவர்களுக்கு அமைக்கப்பட்ட இடத்தில் டேபிள் நாற்காலி போடப்பட்டு வித விதமான தென்னிந்திய அசைவ உணவுகள் அனைத்தும் எடுக்கப்பட்டது …



அவளை மகாராணி போல் கரங்களைப் பிடித்து அவள் இருக்கையில் அமர வைத்து அவளுக்கான உணவை அவனே பரிமாற அவள் முதலில் அங்கு இருக்கும் இட்லி மட்டன் குழம்பிலிருந்து வெறும் கிரேவி மட்டும் எடுத்து குழந்தைக்கு தொட்டு ஊட்டி கொண்டு இருந்தால் குழந்தைக்கு மட்டன் குழம்பு என்றால் உயிர் சட்னி சாம்பார் எல்லாம் சாப்பிட மாட்டாள் இது போன்ற காரசாரமான கிரேவி என்றால் தட்டு காலியாகும்…


"பார்ரா குட்டிமாக்கும் மட்டன் கிரேவி கலக்குங்க நானும் சின்ன வயசுல தான் ஐஸ்கிரீம் சாக்லேட் எல்லாம் அவ்வளவு சாப்பிட மாட்டேன் இந்த மாதிரி மொளகா பொடி இட்லி மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு தான் வெளுத்து கட்டுவேன் என்ன மாதிரி இந்த பப்பு குட்டியும் இருக்கு கியூட் பேபி"


என்று குழந்தையின் கண்ணத்தைப் பிடித்துக்கொள்ள விஷாகா சிரித்துக் கொண்டே அமைதியாக குழந்தைக்கு ஊட்டி முடித்தாள்..


ஒரு இட்லி சாப்பிட்டு முடித்ததற்கு


"ம்மா.. நேநா.."


என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு உதட்டை பிதுக்கி வேண்டாம் என்று சொல்ல…


"அட லிட்டில் பேபி என்ன ஒரு இட்லி வேணாம்னு சொல்ற நான் எல்லாம் நாலு இட்லி சாப்பிடுவ அப்பவே இந்தா நீ சாப்பிட்டே ஆகணும் தப்பா விஷு நினைச்சுக்காத பாப்பா இப்போ வளர்ந்துட்டா நம்ம ஊட்டி பழக கூடாது அவளே தப்பு தப்பாவும் கீழே சிந்து சாப்பிட்டாலும் பழகிக்க வேண்டிய பிராக்டிஸ் வயசு இது. சோ குட்டிமா இப்ப நீங்களே சாப்பிடுங்க பார்க்கலாம்"


என்று சொல்ல ஏதோ தனக்கு தானே சாப்பிட்டுக் கொள்வது அவளுக்கு பிடித்திருந்தது போல இடது கையால் கொஞ்சம் கொஞ்சமாக இட்லியை விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தது..


"பாப்பா சாப்பிடட்டும் இந்தா இது உனக்கு ரொம்ப புடிச்ச பட்டர் நான் பட்டர் சிக்கன் கிரேவி"


என்று அவளுக்கு பரிமாற இருவரும் சிரித்துக் கொண்டே சில பல கதைகள் பேசி சாப்பிட்டு முடித்தனர் குழந்தையும் ஒரு வழியாக மூன்று இட்லியை சாப்பிட்டு முடித்தது…


அளவான உணவு ஆர்டர் செய்ததால் மிச்சம் வைக்காமல் அனைத்தும் காலி செய்யப்பட்டது ஹோட்டல் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி இதுபோன்ற பெரியா ஆட்கள் வர மாட்டார்கள் சிறு youtube சேனல் நிபுணர்கள் சீரியல் ஆர்டிஸ்ட் மட்டும் வந்து வீடியோ எடுத்து தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் போட்டு எளிமையாக இருக்கிறார்கள் என்று லைக் கமெண்ட் வாங்கிக் கொள்வார்கள் ஆனால் இப்பொழுது எவ்வளவு பெரிய நடிகர் வந்திருக்கிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் உள்ளே மீடியாவுக்கு அனுமதி இல்லை போட்டோ எடுக்க ஊழியர்களுடன் ஒரு குழு படம் மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டான் …



வீடு வந்து சேர்வதற்கு இரவு 10 ஆகி இருந்தது…


"என்ன ஹர்ஷா குழந்தையை கூட்டிட்டு வெளியே போய் இருக்கீங்க இவ்வளவு நேரம் கழிச்சு பாவம் மீனாட்சி அம்மா இன்னும் அவங்க வரலையே அப்படின்னு ரொம்ப கவலை பட்டாங்க விஷாகா நீ குழந்தைய அவங்க கிட்ட கொடுத்துட்டு வாம்மா"


என்று அபி சொன்னவுடன் குழந்தை எடுத்துக் கொண்டு மீனாட்சி அம்மா வீட்டிற்குள் சென்று கதவை தாழ் போட்டுக் கொண்டாள் …


"என்னம்மா இவ்வளவு பதட்டமா இருக்கு என்ன ஆச்சு??"


என்று அவர் கேட்க இன்னும் நடந்தவை அனைத்தையும் சொல்ல மீனாட்சி அம்மன் முகம் கலக்கத்தில் தெரிந்தது


"எனக்கு என்னமோ பயமா இருக்கு கண்ணு குழந்தையோட உண்மையை நீ சொன்னாதான் என்ன அந்த ரதி கூட ஹர்ஷா சேர்ந்தால் தான் என்ன??"


என்று மீனாட்சி அம்மா வழக்கம்போல் பழைய புராணம் பாட


"ப்ளீஸ்மா எனக்கு இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா என் ஹர்ஷா கூட வாழனும்னு ஆசை வந்திருக்கு மறுபடி நாங்க சேர்ந்து இருக்கும் முன் காலத்துல கூடல் இருந்துச்சு ஆனா காதல் செல்ல ஊடல் இல்ல ஆனா இப்போ எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு கிடைக்குது முன்ன மாதிரி இல்லை என்னோட ஹர்ஷா எனக்காக எல்லாம் இறங்கி செய்கிறான் இப்போ அவர் முகத்தில் திமிரு இல்ல ஆணவம் இல்ல கர்வம் இல்ல மூணு வருஷத்துல என்ன ரொம்ப மிஸ் பண்ணி இருக்காரு இந்த விஷயத்தை நான் முன்கூட்டியே சொல்லி இருந்தா பிரச்சனை இருந்திருக்காது இப்போ சொன்ன சத்தியமா என்னோட ஹர்ஷா என்ன விட்டு போயிடுவாரு உங்ககிட்ட கெஞ்சி கேட்கிறேன் தயவு செஞ்சு இதை பத்தி எதுவுமே பேசாதீங்க எல்லாத்தையும் மறந்து போயிடுங்க"


என்று படபடவென்று பேசி குழந்தையை உறங்க வைத்துவிட்டு அவரும் கொடுத்து வீட்டிற்குள் வர..


"என்ன குழந்தை கொடுத்துட்டு வருவதற்கு உனக்கு இவ்ளோ நேரமா??"


என்று வாசலிலேயே ஹர்ஷா நின்று கொண்டிருந்தான்..



"உங்களுக்கு தான் தெரியும் இல்ல பாப்பா முழிச்சிட்டு இருக்கும்போது அங்க குடுத்துட்டு வந்தா என்ன பண்ணுவா என்று அதனால்தான் கொஞ்சம் தூங்க வச்சுட்டு வந்தேன் சரி ஹர்ஷா வாங்க போலாம் அதுக்காக இங்கேயே நிற்கிறது??"


என்று கேட்க அவன் சிரித்துக் கொண்டே அவளை நெருங்கி அவள் இடைப்பிடித்து தூக்கிக் கொள்ள..


"அது எப்படி நீ இல்லாம நான் ரூம்குள்ள போக என்ன பண்றது அதான் உனக்காக வெயிட்டிங் மகாராணி"


என்று நெற்றியோட நெற்றி முட்டி அறைக்குள் சென்று கதவை லாக் செய்து..


"ஹர்ஷா இன்னிக்கு கண்டிப்பா நடந்தே ஆகணும?"


என்று கேட்க


கண்டிப்பா நடந்தே ஆகும் என்று அவளை மொத்தமாக எடுத்துக் கொள்ளும் வேலையை பார்க்க ஆரம்பித்தான்…


______________________________________________________________________


இங்கே காமினி ஆபீஸில் அவனிடம் பேசிய பேச்சுக்கு மொத்தமாக தண்டனை என்ற பெயரில் ஆரவ் அவளை ஒரு வழி செய்து விட பாவம் கூடல் வலியில் துவண்டு ஆரவ் வெற்று மார்பில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்


அவனும் உறங்கிக் கொண்டிருந்தாலும் அவளை விடாமல் நெற்றியில் முத்தம் கொடுத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து அவள் இடுப்பை பிடித்து கிள்ளி என்று முழித்துக் கொண்டு செல்லச் செல்ல சேட்டைகளை செய்து அவளை ஒரு வழி செய்திருந்தான்..



"அப்படி என்னடி உன் கிட்ட இருக்கு கட்டி போடுற இந்த விஷயத்துல என்னால கண்ட்ரோல் பண்ண முடியல எப்பவுமே சொல்வாங்க காம உணர்ச்சிகள் விஷயத்துல ஆம்பளைங்க வீக்கா இருக்க கூடாது இல்லன்னா பொண்ணுங்க நம்மள அடிமையாக்கி நம்மள ஆட்டி படைப்பாங்க அப்படின்னு ஆனா இந்த விஷயத்துல நீயும் நானும் அப்படி இல்ல சரிசம போட்டி போட்டு காதல் பண்றோம் நீ வேணா வேணான்னு அடாவடியா இருந்தாலும் இந்த விஷயத்துல எனக்கு மொத்தமா உன்ன தர என்னால உன்னை விலக்கி வைக்கவே முடியல டி காட்டான் மாதிரி எப்படி தூங்குற பாவம்"


என்று இன்னும் அவளை தன்னுடன் நெருக்கி இணைத்துக் கொண்டான் இருவருக்கும் காற்று புகார் இடைவெளி வரக்கூடாது என்று


இன்னும் கூடிய விரைவில் மிகப்பெரிய இடைவெளி வரும் என்பதை அறியாமல்..


__________________________________


இங்கே மகா இரவு உடையில் கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு தான் அணிந்திருந்த ஃபேஸ் பேக் ரிமூவ் செய்து கொண்டிருக்க..


"மேடம் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறீர்களா??"


என்று சொல்லிக்கொண்டே அவள் பின்னால் இருந்து அவள் இடையே இறுக்கிப்பிடித்துக் கொண்டான் அனிருத்..


"ஆமாங்க ஏ கே ஹாஸ்பிடல் பவுண்டர் சார்"


என்று சொல்லி நக்கல் அடிக்க..


"ஏய் தலையிலேயே அடிப்பேன் இந்த ஹாஸ்பிடல் வொர்க் எல்லாமே வெளிய தான் வீட்டுக்குள்ள நான் உன்னோட ஹஸ்பண்ட் நீ என்னோட வைஃப் அதை மட்டும் தான் யோசிக்கணும் நான் ஒன்னு சொல்லவா எனக்கு அந்த குட்டி பாப்பாவை பார்த்ததிலிருந்து ஒரு மாதிரி இருக்கு நமக்கும் சீக்கிரம் பாப்பா இருந்தா இப்படித்தான் இருந்திருக்கும் இல்ல நான் உன்னை கேட்பேன் தப்பா எடுத்துக்க மாட்டியே??"


என்று வார்த்தையில் புதிர் போட்டு கேட்க…


"என்ன அனிருத் ஏதோ சொல்ல வரீங்க எதுக்கு மென்னு முழுகனும் சொல்லுங்க"


என்று அவன் கழுத்தில் மாலையாக தன் கைகளை போட்டுக்கொள்ள…


"அது நம்மளும் சீக்கிரம் பாப்பாவை பெத்துக்கலாமா கொஞ்ச நாள்ல உன்னோட ப்ராக்டிஸ் முடிஞ்சுரும் எப்படி வொர்க் போயிடுவ அப்படியே இந்த பிரக்னன்சி உன்னால மேனேஜ் பண்ண முடியுமா அதுக்கேத்த மாதிரி நம்ம பிளான் பண்ணலாம்"


ஏதோ பொம்மை வேண்டும் போல் அவளிடம் கெஞ்சி கேட்க



"ஹா ஹா ஹா மக்கு ஹஸ்பண்ட் இது என்ன ரிசர்வேஷன் டிக்கெட் புக் பண்றதா இப்படி வந்து கேட்கிற அதெல்லாம் பொறக்கும் நினைச்சா தானா பொறக்கும் அதுக்கான வேலையில் நம்ம இறங்கினா போதும் அதான் நேத்துல இருந்து சார் என்னை விடவே இல்லையே"


என்று இதழ் வளைத்து சிரிக்க அவளை தூக்கி தலைக்கு மேல் வைத்து சுற்றிக் கொண்டவன் அப்படியே சரிந்து அவளோடு மன்மத லீலைகள் புரிந்தான்…


__________________________________


இங்கே ஆர் கே நிறுவனத்தின் தலைமை நிபுணர் ராமச்சந்திரனும் அவரது சகோதரன் கேசவனும் போதையில் நன்றாக குடித்து முடித்து…


"நம்ம எவ்வளவு முயற்சி பண்ணாலும் அந்த ரெண்டு பேர நம்மளால ஒண்ணுமே பண்ண முடியல நம்ம கோகுல் மரணத்திற்கு ஒரு அர்த்தமில்லாமல் போயிடும்"


என்று ராமச்சந்திரன் சொல்ல கேசவன் தன் மகன் புகைப்படத்தை பார்த்துக் கொண்டே



"கண்டிப்பா என் புள்ளையோட சாவுக்கு ஒரு நியாயம் கிடைத்தே ஆகணும் நம்மளுக்காக தான் நம்ம பிள்ளை அப்படி ஒரு வேலை செய்யப் போனான் ஆனால் செத்தது கூட நமக்கு ரெண்டு நாள் கழிச்சு தானே அண்ணா தெரிஞ்சு இருக்கு"


என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு அழ ராமச்சந்திரன் சகோதரனை சமாதானம் செய்து ஒரு வழியாகிவிட்டார்


பின்ன சும்மாவா இத்தனை கோடி சொத்துகளுக்கு ஒரு அதிபதி அவன் மட்டும்தான் ராமசந்திரனுக்கு இரண்டும் பெண் பிள்ளைகள் திருமணம் செய்து நல்ல வசதியாக வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர் தம்பிக்கு ஒரே மகன் அவன் தான் கோகுல் பெரியப்பாவுக்கு செல்லம் அவர் என்றால் உயிரையும் கொடுப்பான் இதோ அவருக்காக தானே மற்ற கம்பெனிகளில் சேர்ந்து தங்கள் கம்பெனியை திருட்டு வழியாக உயர்த்தினான். திடீரென்று அவன் இறந்து விட்டான் என்ற செய்தி வீட்டையே உலுக்கி விட்டது


ஏற்கனவே அண்ணன் தம்பி இருவரும் ஒரு விபத்தில் மனைவிமார்களை இழந்து விட்டனர் இப்பொழுது வீட்டின் ஒற்றை வாரிசு இறந்து விட்டது பழி உணர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க அனிருத் மற்றும் ஆரவ் இருவரையும் கொலை செய்யும் அளவிற்கு முடிவெடுத்து விட்டனர் இதோ அதற்கான ஏற்பாடு தான் நடந்து கொண்டிருக்கிறது…


"அண்ணா உள்ளூர் ஆளுங்க சரிப்பட்டு வராது இப்ப உடனடியா தாக்குதல் பண்ணா கூட நம்ம மேல தான் பழி வரும் இந்த ஞாயிற்றுக்கிழமை தான் ஏ ஆர் கம்பெனி நம்ம கூட பேச வராங்க முதல்ல அவங்க குடும்பத்த ஆளுங்க மேல கை வைப்போம் அப்புறம் பொறுமையா அவங்க மொத்த குடும்பத்தையும் அழிக்கனும் நம்ம வீட்டு ஒத்த உயிரை கொடுத்தற்க்கு அந்த மொத்த உயிரையும் பழிவாங்கியே ஆகணும்"


என்று கேசவன் கு
டித்துக் கொண்டிருந்த மது பாட்டிலை உடைத்து அதை எடுத்து தன் கையில் கிழித்துக்கொண்டு ரத்தத்தின் மூலம் தன் மகன் புகைப்படத்திற்கு வாக்களிக்க..


விரைவாக அந்த திட்டத்தை செய்ய வேண்டும் என்று ராமச்சந்திரனும் ஒரு முடிவு எடுத்துக் கொண்டார்…
 

Author: srija
Article Title: 19) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.