19) தீயே 🔥

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
100
Reaction score
1
Points
18
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 19


சாக்ஷி சொல்ல சொல்ல மற்ற இருவருக்கும் பயம் வந்துவிட்டது. தேவி இதற்கு மேல் முடியாமல் அவள் வாயை பொத்தி..

"இவ்ளோ பெரிய வீட்டாளுங்க சுத்தி சொந்தக்காரங்க இருக்காங்க எதையும் விசாரிக்காம பண்ணிருக்க மாட்டாங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு காதலிக்கிறது தப்பு இல்ல இனிமே அது சரியா இருக்கணும் அவன் எக்ஸ் லவ்வர் வந்து மிரட்டனா அவ கல்யாணம் பண்ணிக்க போற தர்ஷன் ஒன்னும் அவ்வளவு நல்லவன் இல்லை நானும் அவன பத்தி கேள்விப்பட்டிருக்கின்ற ரெண்டு பேருக்கும் பொருத்தம் சரியா இருக்கும் அப்புறம் யாமினி கல்யாணத்துக்கு அப்புறம் காதல் வருவது சகஜம். நம்ம விசுவாசகர் கல்யாணத்துக்கு பிறகு மன்மதனா மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு இங்க பாரு நம்ம வேலை என்னவோ அதை மட்டும் பண்ணலாம்"

என்று தேவி சொல்ல

"அட இவ்வளவு பெரிய விஷயம் கிடைச்சிருக்கு நமக்கு தெரிஞ்சும் நாம இவங்க கிட்ட எதுவுமே ஷேர் பண்ணாம இருந்தா நீங்க கூட என்கிட்ட சொல்லல அப்படின்னு என்னை கேப்பாங்க இல்லையா அதுவும் நீங்க எல்லாரும் வேலை முடிஞ்சவுடன் ஆளுக்கு ஒரு பக்கம் போவீங்க ஆனா சின்ன வயசுன்னு பொறந்ததிலிருந்து இங்கதான் இருக்கேன் எங்க அப்பா இந்த குடும்பத்துக்கு ஓடாதேஞ்சு போயிருக்காரு. போனா போகட்டும் முதலாளி குடும்பத்துக்கு ஒரு சகாயம் பண்ணலாம்னு பார்த்தேன் நீங்க வேணாம்னு சொல்றீங்க ஆனா என்னால முடியலையே"

என்று சாக்ஷி ஒரு விஷயம் கிடைத்த பிறகு எப்படி வெளியே சொல்லிவிட வேண்டும் என்று ஒரு ஆர்வத்தில் குதிக்க..

"இங்கு பாருடா சாக்ஷி உனக்கு இப்ப இந்த விஷயம் ஒரு பிரேக் நியூஸ் மாதிரி இருக்கு வெளியே சொல்லி எல்லாரும் அவமானப் படனும் முக்கியமா நீ என்கிட்ட பெர்சனலா ஷேர் பண்ண தர்ஷன் அவன் கல்யாணம் நின்னு போகணும்னு ஆசைப்படறேன் இங்க பாரு நமக்கு இது வேண்டாத வேலை சொன்னா புரிஞ்சுக்கோ டா நீ சொன்ன மாதிரி நாங்க எல்லாரும் வேலை முடிஞ்ச பிறகு இங்கே இருக்கலாம் வேற இடத்துக்கு வேலைக்கு போகலாம் ஆனால் நீ இனிமே ஒரு வீட்டுக்கு வாழ வேண்டிய பொண்ணு அப்புறம் உங்க அம்மா அப்பா இங்கேயே இந்த வீட்டுக்கு சேவ் பண்ணிக்கிட்டு இருக்கிறவங்க அவங்கள பத்தி யோசிச்சு பாரு எந்த ஒரு விஷயமா இருந்தாலும் ஒரு பொண்ணு மூலியமா வந்துச்சுன்னா யாரும் முதல்ல பெருசா எடுத்துக்க மாட்டாங்க கடைசில பழி நம்ம மேல தான் வந்து விழும் என் அனுபவத்துல சொல்ற யாருக்கும் உதவி பண்றேன் மத்தவங்களுக்கு சேவை பண்றேன் அப்படின்னு சொல்லி எந்த ஒரு காரியத்தையும் நம்ம எடுத்தோம். கவிழ்த்து விட்டோம் அப்படின்னு பேசக்கூடாது சொன்னா புரிஞ்சுக்கோ இப்ப நாம வேலை என்னவோ அது மட்டும் பார்க்கலாம் அப்புறம் தேவி இப்ப க்ரிஷ் சூப் சாப்பிடலாம் தானே"

என்று மேனகா தேவி இடம் கேட்க..

"அதுக்கு என்ன தாராளமா அது செய்யறதுக்குள்ள என் உயிரை வாங்கிட்டா கிச்சன்ல ஒரு இடத்தில் அமைதியா இல்லாம இரு நான் போய் எடுத்துட்டு வரேன். அப்புறம் நம்ம மூணு பேரும் சேர்ந்து லஞ்ச் சாப்பிடலாம் முதல்ல இந்த பையனுக்கு சாப்பாடு வச்சிட்டு நாம நிம்மதியா சாப்பிடலாம்"

என்று சொல்லிக்கொண்டு தேவி கிச்சன் ஏரியா பக்கம் செல்ல அப்பொழுது ஒரு வழியை கரம் அவளை பிடித்து ஸ்டோர் ரூம் அருகே இழுத்துச் சென்றது கதவு தாழ் போட்டு அவள் பக்கமாக திரும்பி தன் கரங்களை கட்டிக்கொண்டு அவளை முறித்துக் கொண்டிருந்தான். அவளது நாயகன் அசோக்

"அட சிங்கு மாமா என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம் உங்க முதலாளிக்கு நிச்சயதார்த்தம் ஆனா நீ தான் உடன்பிறவா சகோதரன் மாதிரி சுத்திகிட்டு இருக்க அது சரி முதலும் கடைசியும் கல்யாணம் மாப்பிள்ளையா இருக்காங்க நடுப்பையன் ஒருத்தன் இருப்பானே அவன் யாரு ஏகப்பட்ட சிங்க மாமாக்கள் இருந்திங்க அதுல யாரு நடு பையன்"

என்று தேவி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கேட்க..

அசோக் சிரித்தவாறு அவள் கையில் ஒரு லெட்டரை கொடுக்க அமெரிக்காவிலிருந்து அவள் அப்பாவிடம் இருந்து வந்த லெட்டர் ஆர்வமாக அதைப் பிரித்துப் பார்க்க

"என்ன மன்னிச்சிடு மா உனக்கு பார்த்து வச்ச மாப்பிள்ளை நல்லவன் கிடையாது நம்மளோட சொத்துக்கள் எல்லாத்தையும் அபகரிச்சு உன்னையும் பிணைய கைதியா மாத்தி உன்ன கல்யாணம் பண்ணி மொத்தமா எல்லாத்தையும் எடுத்துக்கலாம்னு பிளான் பண்ணி எங்கள ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சிருந்தான் நீ அது வெளியே சொல்லாவிட்டாலும் நம்ம குடும்பத்து மேல எப்பவும் ஒரு பார்வை வச்சிருக்க விஷ்வாவோட குடும்பம் அது தெரிஞ்சுகிட்டு எங்கள காப்பாத்தி இருக்கு இருந்தாலும் பிரச்சனை முழுசா முடியல அதனால தான் போன் வீடியோ கால் மூலமா உன்ன நாங்க காண்டாக்ட் பண்ணல ஆனா கூடிய சீக்கிரம் விஷ்வாவோட கல்யாண விழாவில் உன்னை சந்திப்பேன் இந்த வார கடைசியில் எப்படியாவது இந்தியாவுக்கு வந்து விடுவேன் உங்க அம்மா நல்லா இருக்கா சீக்கிரமா உங்களை சந்திக்கிறோம்"

என்று எழுதப்பட்டிருக்க தேவி கண்களில் கண்ணீர் இத்தனை நாட்கள் அம்மா, அப்பாவிடம் இருந்து எந்த ஒரு விஷயமும் தகவலும் வரவில்லை ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்று பயத்தில் இருக்க அனைத்து உண்மையும் தெள்ளத் தெளிவாக தன் தந்தை கைப்பட எழுதிக் கொடுத்த லெட்டர் அவளுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது..

"நான்தான் பெரிய சார் கிட்ட சொன்னேன் அவர் தான் இந்த உதவி பண்ணினார் இப்போ உனக்கு சந்தோஷம் தானே"

என்று அசோக் சொல்ல அவனை கட்டிப்பிடித்துக் கொண்டதேவி..

"என்னுடைய இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வேற ஒருத்தரா இருந்தா வேற மாதிரி நடந்து இருக்கும் ஆனா நீ உங்க முதலாளி சாரி கிட்ட சொல்லி என் பிரச்சினையை தீர்த்து வைச்சிருக்க நான் பணக்கார பொண்ணு தெரிஞ்ச நீ என்னை விரும்பி இருக்க அதுவும் என்கிட்ட இருக்க பணத்துக்காக இல்ல என் முகத்தில் இருக்கிற சந்தோஷத்தை பாக்குறதுக்காக நீ ரொம்ப நல்லவன் சிங் ஆனா ஒன்னு உன்னோட உண்மையான பெயர் மட்டும் இப்ப வரைக்கும் எனக்கு சொல்லவே இல்ல அதுக்குள்ள நம்ம காதல் உலகத்திற்கே போயிட்டோம்"

என்று சொல்லி தேவி சிரிக்க அவள் தலையை வருடிவிட்டவன் அவள் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தமிட..

தேவியின் உடல் சிலிர்த்தது அதற்கு மேல் அசோக் பரிதாப நிலை இதுவரை பெண்ணின் வாசம் படாமல் வளர்ந்தவன் ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை அனுபவிக்க அவன் உடல் ஹார்மோன்கள் எல்லாம் செயல்பட ஆரம்பித்து இருந்தது மீண்டும் ஒரு முத்தத்தை வைத்து அவள் இரு கன்னங்களையும் தாங்கி பிடித்து..

"எனக்கு என்னோட தேவியோட சந்தோஷம் தான் முக்கியம் அவளுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன் அதனாலதான் கொஞ்ச நாள் நம்ம டிஸ்டன்ஸ்ல இருந்தோம் இனிமே அப்படி கிடையாது கல்யாண வேலை எல்லாம் நடக்குது மத்தவங்க நம்மள பார்த்தா நல்லா இருக்காது இல்லையா அதனாலதான் உன்னோட அம்மா அப்பா வர போறாங்க அந்த வெளிநாட்டு மாப்பிள்ளை கிட்ட இருந்து உங்க அம்மா அப்பாவ முழுசா காப்பாத்த கொஞ்சம் டைம் எடுக்கும்"


என்று சொல்லி அசோக் அங்கிருந்து செல்ல பார்க்க ஆனால் காதல் வயப்பட்டு அவன் முத்தத்தில் கிறங்கி இருந்த தேவி அவன் கரங்களை கெட்டியாக பிடித்து இழுத்து அவன் கரங்களை தன் இடுப்போடு சேர்த்து அணைத்தவாறு வைத்துவிட்டு அவன் சட்டையை பிடித்து இழுக்க

"என்ன என்னடி பண்ற??"இன்று பயத்தில் அவன் குரல் நடுங்கி வர

"அட டம்மி பீட்சா நீ கூட ரோமியோ டைப் நெனச்சேன் நீ எல்லாம் வேஸ்ட் உன்னை கட்டிக்கிட்டு குடும்பம் நடத்தி புள்ளைங்கள பெத்து என்ன ஆகப்போகுதோ"

என்று நக்கலாக பேசி முடித்து தேவி அங்கிருந்து செல்ல அவள் எடையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் அவளை நேரெதிரே பார்த்து..

"இப்படி எல்லாம் பேசினா மட்டும் கோவத்துல நான் ஆம்பள தான் அப்படின்னு முகம் சுளிக்கிற விஷயத்தை நான் பண்றதுக்கு நான் தயாராக இல்லை ஆனால் உன் மேல எனக்கு எல்லா உரிமையும் இருக்கு எல்லா ஆசையும் இருக்கு ஆனா அதுக்குன்னு ஒரு நேரம் காலம் இருக்கும் நீ எனக்கு சட்டப்படி சாஸ்திரப்படி எனக்கு மனைவியா வந்து பாரு நீயே அய்யோ போதும் சாமின்னு சொல்லுவ பொண்டாட்டி சந்தோஷமா வச்சுக்குறத தவிர புருஷனுக்கு வேற என்ன வேலை இருக்க போகுது ஆனா என்னோட மாமனார் மாமியார் காப்பாத்துற வேலையில விஷ்வா சார் கூட கொஞ்சம் பிசி அதனால இப்ப இன்னொரு ரொமான்ஸ்"

என்று அவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவர் இதழில் அவசர முத்தத்தைக் கொடுத்துவிட்டு அவன் அங்கிருந்து சென்றுவிட அவன் கொடுத்து முத்தத்தின் தாக்குதல் ஒரு நொடியே இருந்தாலும் அது முதல் முத்தமல்லவா ஏதோ வேறு உலகிற்கு போய் வந்தது போல் தேவி உணர சிறிது நேரத்தில் தன்னை உணர்ந்தவள் தான் மட்டும் தனியாக இருப்பதை புரிந்து கொண்டு வெட்கத்தோடு வெளியே வர அங்கே சமையல் அறையில் இருந்து அவளை கேவலமான பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் யாமினி.


'இந்த ஏலியன் குரங்கு எதுக்கு இங்க வந்தது அதுவும் நம்மளை ஒரு மாதிரி பாக்குது ஏதாவது பார்த்து வச்சிட்டாளா??"

என்று குழப்பமாக அவளைப் பார்த்து நிற்க

"சமையல் செஞ்சு பொழப்பு பார்க்க வந்த இடத்தில என்ன வேலை பாக்குறீங்க மேடம் வசதியாக வந்திருச்சா??"என்று மேலும் அவள் தரம் தாழ்ந்து பேச தேவிக்கு சிரிப்புதான் வந்தது இந்த லூசு பயகிட்ட இருந்து யாராவது என்னை காப்பாத்துங்கடா என்று

"என்ன சொன்னீங்க மேடம் வசதியாக எனக்கு ஆசை வந்துடுச்சா இந்த பணம் பகட்டி எல்லாம் எனக்கு தேவையில்லாத விஷயம். நான் படிச்சிருக்கேன் சம்பாதிக்கிறேன் இப்ப வேலை பாத்துட்டு இருக்கேன் மேடம் சொத்தை எல்லாம் தின்னு தீர்த்த பிறகு பணக்காரன் எவன் கிடைப்பான் நான் வேற ஊர விட்டு ஊரு வந்து இங்க கும்மி அடிக்கல என்ன மேடம் நான் சொல்றது புரிஞ்சுதா இல்ல இன்னும் தெளிவா சொல்லணும்னா வேற ஊர்ல ஒருத்தன கழட்டி விட்டுட்டு இந்த ஊர்ல புதுசா இன்னொருத்தனை சேர்த்துக்க வரல இப்ப புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்"

என்று ராகத்தோடு இழுத்து சொல்ல யாமினிக்கு முகம் வேர்த்து விட்டது ஒரு வேலை தான் ராஜ்வீரோடு பேசியதை இவள் பார்த்து விட்டாளோ என்று..

இருந்தாலும் தன் பயத்தை உள்ளே வைத்துக் கொண்டு

"ஏய் என்ன பாய்க்கு வந்தபடி பேசுற என்ன பாத்தா எப்படி தெரியுது மட்டம் தட்டி பேசுற நான் உன்னை மாதிரி பிச்சைக்கார பேமிலி கிடையாது ஐ அம் ராயல் ஃபேமிலி இனிமே இந்த பேச்செல்லாம் வச்சுக்காத அப்புறம் நல்லா இருக்காது ஒழுங்கா சமையல் வேலையை பாரு"

என்று பயத்தில் ஏதோ ஒன்று உளறி வைத்துவிட்டு அவள் அங்கிருந்து சென்றுவிட தேவிக்கு சிரிப்புதான் வந்தது தன் அடுத்த கட்ட வேலையை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.


இங்கே ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டின் பின்பக்க தோட்டத்தில் சாட்சி உதடு சிவந்து அழுது கொண்டிருக்க அருகே தர்ஷன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான் அவன் பார்வையில் ஒரு நக்கல் தெரிந்தது.

,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 

Author: srija
Article Title: 19) தீயே 🔥
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.