அத்தியாயம் 18
காமினி எப்பொழுதுதான் இவன் செல்வான் என்று ரொம்ப நேரமாக காத்துக் கொண்டிருந்தாள் இவனோ வேண்டுமென்றே ரம்பை போல் பேசிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் நன்றி என்று முடித்தவுடன்..
அனைவரையும் அவரவர் வேலை இருக்கையில் அமர சொல்லி தன் இடத்திற்க்கு ஓடி சென்று விட இவனும் குட்டி போட்ட பூனை போல் மனைவி முந்தானை பிடித்துக் கொண்டு செல்ல அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர்…
தன் அறைக்குள் வந்து கதவை மூடப் போக அதற்குள் அவளை தடுத்து உள்ளே வந்து கதவை லாக் செய்து சுற்றி இருக்கும் ஸ்கிரீன் அனைத்தையும் மூடி அவளை நெருங்கி வர…
"உனக்கு கொஞ்சம் கூட இங்கீதம் இல்லையா பைத்தியமா நீ..? ஏன் இப்படி முட்டாள் தனமா நடந்துகிட்டு இருக்க பாக்குறவங்க என்ன கேவலமா நினைக்க மாட்டாங்க…
அதுதான் பேசி முடிச்சிட்ட இல்ல வீட்டுக்கு கிளம்பி போ"
என்று சொல்ல
"அதெல்லாம் முடியாது நீயும் வா வீட்டுக்கு போலாம் ஒரு நிமிஷம் கூட என்னால நீ இல்லாம இருக்க முடியல இனிமே இந்த கம்பெனிக்கு வராத நம்ம கம்பெனிக்கு வா கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணுங்க சில விஷயங்களை மாத்திக்க வேண்டியது இருக்கு நீ இனிமே உன்னுடைய ஹஸ்பண்ட் கம்பெனியில் வேலை பாரு இங்க வேணாம் இது உங்க அண்ணாவுக்கு சொந்தமானது"
என்று சொல்ல…
"இங்க பாரு கல்யாணத்துக்கு அப்புறம் புருஷன் பேர பக்கத்துல வச்சிக்கிறது இனிஷியல் மாத்துறது புருஷன் என்ன சொல்றானோ அதை மட்டும் கேட்கிறது தனக்கு சின்ன வயசுல இருந்து பழகுன விஷயத்தை ஒரு நாள் தாலி கட்டி குடும்பம் நடத்துவதற்காக மொத்தமா மாத்திக்கிட்டு வர முடியாது
இது நானும் அண்ணாவும் எங்கள் பெரிய அண்ணி மூணு பேரும் ஆரம்பிச்ச பிசினஸ் இதுல நான் 40 சதவீதம் ஷேர் ஹோல்டர் அனாவசியமா உன் பணக்கார திமிர இங்க காட்டாத கஷ்டப்பட்டு வந்தவங்களுக்கு தான் அந்த பலி வேதனை உழைப்போட அருமை தெரியும்
நீ ஆல்ரெடி உங்க அப்பா பெரியப்பா சித்தப்பா டெவலப் பண்ண கம்பெனில இப்போ சிஇஓ வா இருக்கலாம் எல்லாமே நீயா இருக்கலாம் ஏன் எட்டு வருஷத்துல நீ பெரிய பிசினஸ் மேக்னட் கூட ஆகியிருக்கலாம் ஆனால் எங்க கம்பெனி மூனே வருஷத்துல டாப் 10 ல அஞ்சாவது இடம் வருது அவ்வளவு சுலபம் இல்லை அது என்னோட ஐடியா என்னோட உழைப்பு இதை கம்பெனியில் இருக்கு அவ்வளவு சீக்கிரம் என்னால விட்டு தர முடியாது இது எனக்கு குழந்தை மாதிரி உன்னை விட எனக்கு இந்த கம்பெனி ரொம்ப முக்கியம்
இப்போ எனக்கு தலை வலி அதிகம் ஆயிடுச்சு தயவு செஞ்சி நீ வீட்டுக்கு போ ஒரு ரெண்டு மணி நேரத்துல நானே வந்துடுறேன் எப்பவுமே நான் உன் கட்டுப்பாட்டுக்குள்ள தான் இருக்கணும்னு நினைச்சா அப்போ நீ என்ன வேற மாதிரி பார்க்க வேண்டி இருக்கும் "
முகத்தை கடுமையாக வைத்து சொல்ல அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்யாமல் அவள் நெற்றியில் முத்தம் மட்டும் கொடுத்து அங்கிருந்து சென்றுவிட
எவ்வளவு திட்டியும் எவ்வளவு சண்டை போட்டு எவ்வளவு ஒதுக்கம் காட்டினாலும் ஏன் இவன் பைத்தியக்காரத்தனமாக தன் மீது காதல் வைத்துக் கொண்டிருக்கிறேன்???
என்று இன்றளவும் பெண்ணாவளால் நம்ப முடியவில்லை அவனை பார்த்தால் கை நடுங்கும் ஆட்கள் தி கிரேட் பிசினஸ்மேன் என்று பல பட்டங்களை வாங்கி இருக்கிறான் அவன் கம்பீரம் நடை உடை பாவனை அனைத்தையும் அனைவரும் பெருமையாக சொல்லும் போது ஒரு மனைவியாக மனதில் ஒரு கர்வம் தானாகவே வரும்
ஆனால் தன் காதலுக்காக இப்படி மண்டியிட்டு கெஞ்சுகிறானே என்று நினைக்கும் போது அவளுக்கு வருத்தமாக இருந்தது அவனோடு வாழ ஆசைதான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள் ஆனால் அவன் எழுவது சதவீதம் நல்லவனாக இருந்தால் 30 சதவீதம் ஒரு மிருகம் அதை கண்டுபிடித்து ஒழித்து விட வேண்டும் கணவனோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் இதற்காகத்தானே பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள்…
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அரை மணி நேரம் தன் இருக்கையில் சாய்ந்து கண்கள் கூட ஏதோ சிறிது நேரத்தில் மகா அறைக்கு வெளியே இருந்து அனுமதி கேட்க…
அப்பொழுது ஸ்கிரீன் லாக் செய்து இருப்பதை பார்த்தவள் அது ரிமூவ் செய்து பார்க்க மகா நின்று கொண்டிருந்தாள்..
இங்கே இருந்து வெளியே உள்ளே வரவும் என்று தொடுதிரையில் காண்பிக்க கதவு அன்லாக் செய்யப்பட்டு மகா சோர்ந்து இருக்கும் தங்கையை பார்த்து பதறிப் போனவள்..
"என்னடி இவ்ளோ டல்லா இருக்க இப்பதான் அண்ணா சொல்லிட்டு போனாரு உன்னோட ஹஸ்பண்ட் வந்துட்டு போனாராமே அது சரி ஏன் இவ்ளோ டயர்டா இருக்க ??"
அதை ஏண்டி கேக்குற என்று நடந்தவை அனைத்தும் சொல்ல மகா சிரித்துக் கொண்டே…
"அது என்னவோ உன் பீரங்கி மூக்கன் பாக்க தான் அப்படி இருக்கான் ஆனா மனசு குழந்தை மாதிரி உன் மேல எவ்வளவு உயிரா இருக்கான் எப்படித்தான் அவரை பிரிந்து நீ இருந்தியோ??"
என்று இறுதியில் தங்கையை குறை சொல்ல
"அங்க மட்டும் என்ன வாழுதாம் நீ கூடத்தான் ஏழு வயசுலேயே அவருக்கு ஜோடியா நான் மட்டும்தான் நடிப்பேன் அப்படின்னு அடம்மா அப்பவே சண்டைக்கு போனவ ஏன் மாமாவும் நீயும் எவ்வளவு விரும்பினீங்க??"
என்று இருவரும் மாறி மாறி சொல்லிக்கொள்ள இருவரும் சிரித்துக் கொண்டே
"எல்லாம் நம்ம கடைசி உடன் பிறப்பு விஷாகாவுக்கு தான் "
என்று சொல்லி அவள் பட்ட கஷ்டங்கள் அனைத்து பக்க மனம் வருத்தமாக இருந்தது ..
வேறு பெண்ணாக இருந்தால் விவாகரத்து வாங்கி சென்று இருப்பாள் ஆனால் எப்படி தான் மீண்டும் ஏற்றுக் கொண்டு இதோ இன்னும் அவனுக்கு மனைவியாக தானே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்..
"இருந்தாலும் நம்ம தங்கச்சி புருஷனை இவ்ளோ சீக்கிரம் மன்னிச்சி இருக்க கூடாது"
என்று காமினி நொடித்துக் கொள்ள
"முதல்ல அவ புருஷன் மேல கோபப்பட்டா தானே மேடம் அவர் சந்தோஷமா இருக்க தானே விட்டுட்டு போனா கடைசில தான் தெரியுது பாவம் பயபுள்ள இவ இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கான்னு வேற ஒரு பொண்ணு விரும்பி கல்யாணம் ஆனாலும் அவள தான் விரும்புவேன் என்று வீண்பா சொல்ற அவனையே தன் கைக்குள்ள கொண்டு வந்து இருக்கா இது அன்னைக்கே பண்ணி இருக்கலாம் நடுவுல மூணு வருஷம் வேஸ்ட்"
இன்று இருவரும் சிரித்துக் கொண்டிருக்கும் போது சீரியஸ் மோட் வந்து விட்டனர்…
"சரி சரி நீ சொல்லு ஃபர்ஸ்ட் கம்பெனி எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு சில இண்டஸ்ட்ரி எல்லாம் நல்ல இருந்தது ஆனா இப்போ எல்லாம் உன் புருஷன் கம்பெனியோட கண்காணிப்பில் இருக்கு மேனேஜ்மென்ட்ல இருந்த எம்பிளாய் எல்லாருமே அங்கங்க கம்பெனியில் மேனேஜிங் டைரக்டரா இருக்காங்க இது என்னது"
மகா சந்தேகமாக கேட்க..
"பிஸ்னஸ்ல அந்த பீரங்கி மூக்கன் ஏதோ பெருசா வேலை பண்றான் அது என்னன்னு என்னால இப்ப வரைக்கும் கண்டுபிடிக்க முடியல…
இன்னொன்னு பத்து கம்பெனி இதோட இவங்களுக்கு கீழ வந்து இருக்கு அந்த பத்து கம்பெனி ரெண்டு மூன்று வருடங்களுக்கு முன்னாடி சில பல தப்பான காண்ட்ராக்ட்ல ரன்னிங் ஆன கம்பெனி இவன் கீழ வந்ததுக்கு அப்புறம் எல்லாம் நார்மல் இன்டஸ்ட்ரியல் நடக்க ஆரம்பிச்சிருக்கு ஆனா அதோட ஓனர்கள் எல்லாருமே இப்போ வேற நேம்ல புது கம்பெனி ஓபன் பண்ணி நடத்திக்கிட்டு இருக்காங்க இவருக்கு எதிரா ஏதாவது ஒரு சதி திட்டம் பணி இவரை ஏதாவது பண்ணனும் நினைக்கிறாங்க
எனக்கு பயமா இருக்கு இவனுக்கு ஏதாவது ஆபத்து வந்தா நான் என்ன பண்ணுவ"
என்று கண் கலங்கியவுடன் மகா அவளை சமாதானம் செய்து..
"ஹர்ஷாவ பத்தி பிரச்சினை இல்ல அவர் இந்த ஃபீல்டு இல்ல முழுக்க முழுக்க சீனி இண்டஸ்ட்ரி தான் ஆனா இவனுங்க மெடிக்கல் பிசினஸ்ல தப்பு நடக்கக்கூடாது தப்பு நடக்கக்கூடாது சொல்லி இவனுங்களே சில பல எதிரிகளை சம்பாதிச்சு வச்சிருக்கானுங்க இப்போ ஒரு டெத் நடந்திருக்கு அதுவும் ஹாஸ்பிடல்ல நினைக்கவே பயமா இருக்கு அந்த பையனுக்கு வயசு என்ன தெரியுமா 22 தான் ஆகுது ஏன் செத்துப் போகணும்னு இப்ப வரைக்கும் குழப்பமா இருக்கு "
என்று மகா தலை பிடித்துக் கொள்ள தன்னை ஆஸ்வாசப்படுத்தி கொண்ட காமினி பொறுமையாக..
"நீ வேற அதே பையன் தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஆரவ் கம்பெனில ஆறு மாசம் வேலை பார்த்துட்டு இருந்தான் அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் மெடிக்கல் ஃபீல்டுல டெலிவரி பாய் வேலை பார்த்துகிட்டு இருந்தான் ஆனா ஏன் அவன் இறந்து போகணும் அதுதான் எனக்கு புரியல இத்தனை வருஷம் இவனுங்க வெறும் ஆள வச்சு மிரட்டி தான் முடிஞ்ச அளவுக்கு எல்லாம் பண்ணாங்க இப்போ கொலை நடக்குற அளவுக்கு சில பல விஷயங்கள் நடந்து இருக்கு
இத பத்தி டிஸ்கஸ் பண்ண தான் இவங்களோட எதிரி இண்டஸ்ட்ரி ஆர் கே குரூப் ஆஃப் கம்பெனி நம்ம கூட ஏதோ டிஸ்கஷன் பண்ணனும்னு அடுத்த மாத 31 ஆன் தேஇ அன்னைக்கு வர சொல்லி இருக்காங்க ஏதாவது பேசி நம்ம அவங்கள சமாதானம் பண்ணி வைக்கணும் பிகாஸ் இப்போ இறந்து போன பையன் ஆர் கே இண்டஸ்ட்ரியோட ஓனர் ராமச்சந்திரன் ஓட தம்பி பையன்
பெரியப்பாவுக்காக உளவு வேலை பார்க்க நம்ம இன்டஸ்ட்ரி குள்ள வந்திருக்கான் வந்து ஒரு வருஷத்துல இப்பவும் இறந்து போய் இருக்கான் அடிபட்ட பாம்பு எப்ப வேணாலும் சீறிப்பாயலாம் இப்போ அவங்களும் சில டெவலப்பிங் கம்பெனி கூட டையப் பண்ணி பிசினஸ் பண்ணலாம்னு இவங்கள எதிர்த்து போராடனும்னு ரெடியா இருக்காங்க அதுல கூப்பிட்டு இருக்கிற கம்பெனில நம்மளதும் ஒன்னு"
என்று பரிதாபமாக சொல்ல இப்பொழுது என்ன செய்ய என்று இருவரும் குழம்பிக் கொண்டிருக்கும் பொழுது..
"நீங்களே எல்லாம் டிஸ்கஸ் பண்ணிட்டா உங்களுக்கு அண்ணன் ஒருத்தன் இருக்கான் நான் என்ன பண்றது"
என்று நகுல் சொல்லிக் கொண்டே உள்ளே வர..
"அண்ணா அது"
என்று சொல்ல வரும் வார்த்தை காமினி தொண்டைக்குள் அடைந்து விட்டது அவள் கண்களில் கணவனுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் தெரிந்தது…
தங்கையை அணைத்துக் கொண்டவன் அவள் தலை வருடி எதுவும் ஆகாது என்று தலை அசைக்க…
"அண்ணா அடுத்த மாதம் ராமச்சந்திரன் குரூப் ஆஃப் கம்பெனி ஓனர் ராமச்சந்திரன் நம்மள மீட் பண்றதா சொல்லி இருக்காரு அது மட்டும் இல்லாம நம்ம ஃபேமிலி பத்தி எல்லாமே தெரிஞ்சும் நம்ம ஒரே ஃபேமிலி தெரிஞ்சதுக்கு அப்புறம் இப்படி ஆஃபர் கொடுத்திருக்காங்க இதுல எதோ உள்குத்து இருக்கு தானே??"
என்று மகா சந்தேகமாக கேட்க..
"கண்டிப்பா நேரடி தாக்குதலுக்கு நம்மள கூப்பிடுறான் நேரடியா அவனுங்கள மோத முடியாது அதான் நம்மகிட்ட நம்ம அஸ்திவாரத்தை அசைக்க பார்க்கிறான் அப்ப நம்ம கண்டிப்பா உங்க ஹஸபண்ட்ஸ் உதவியை தேடி போவோம் அதுக்கப்புறம் அனிருத் ஆரவ் ரெண்டு பேரும் வானத்துக்கு பூமிக்கு குதிக்க ஆரம்பிச்சிடுவாங்க
அப்புறம் நம்ம இத்தனை நாளா யாருக்காக இவ்ளோ நாள் மறைமுகமா அவங்களோட உயிருக்கு ஆபத்து தராங்கன்னு தெரிஞ்சு போயிடும் நம்ம அதை மறைச்ச விஷயமும் தெரிஞ்சு போயிடும் அப்புறம் ஏற்கனவே இப்பதான் நீங்க ரெண்டு பேரும் உங்க கணவர்கள் கூட வாழ ஆரம்பிச்சு இருக்கீங்க எனக்கு யார் மேலயும் எந்த கோபமும் இல்லை நீங்க நல்லா இருக்கணும் அவ்வளவுதான்
எல்லாம் நான் பாத்துக்குறேன் இனி இந்த விஷயம் உங்களுக்கு தெரியாத மாதிரி பார்த்துக்கோங்க தயவுசெஞ்சு இது எல்லாம் என் பொறுப்பு மொத்தமா அந்த ராமச்சந்திரன் குரூப் ஆஃப் கம்பெனியோட வண்டவாளம் எல்லாமே வெளிச்சத்துக்கு கொண்டு வர வரைக்கும் நான் ஓய மாட்டேன் அதுவரைக்கும் எதுவும் ஒரு வார்த்தை மூச்சு விடக்கூடாது சத்தியம் பண்ணுங்க"
என்று சொன்னவுடன் தயங்கியவாறு இருவரும் சத்தியம் செய்து இதோடு அந்த விஷயத்தை மறந்து விட்டனர்..
__________________________________
இங்கே விளம்பர படத்திற்காக வந்த ஹர்ஷா கையில் குழந்தையுடன் வருவதை பார்த்தவுடன் அனைவருக்கும் மகிழ்ச்சியாகி போய்விட்டது உடன் விஷாகாவை பார்த்தவுடன் அவனுக்கு துணையாக நடிக்கும் ஜோடி நடிகையின் முகம் பார்க்க வேண்டுமே பொறாமையில் வாடிப் போய்விட்டது…
இவர்கள் ரிசப்ஷன் புகைப்படம் சமூக வலைத்தளம் போதாது என்று இவர்களுக்கு அனைவருக்கும் பத்திரிகை வழங்கப்பட்டது திடீரென்று நடிகர் ஹர்ஷாவுக்கு திருமணம் ஆகிவிட்டது இதோ அறிவுபூர்வமாக சட்டபூர்வமாக ஊர் மற்றும் படி மிகப்பெரிய விழாவாக திருமண வரவேற்பு நடைபெற்றது என்றால் யாரால் மறக்க முடியும்…
இது போதாது என்று கையில் இரண்டு வயது குழந்தையும் மறுக்கையால் மனைவி தோலை வளைத்து பிடித்து கம்பீரமாக வரும் ஹர்ஷாவை பார்த்தவுடன் இது என்ன கொடுமை குழந்தையோடு தான் திருமணம் செய்து விட்டார்களோ என்று அனைவரும் முழு பிதுங்கி பார்த்தனர் இதை அனைத்தும் சிரித்துக் கொண்டே ரசித்தான் ஹர்ஷா ஆனால் விஷாகா தலை வெடிக்காத குறை…
விளம்பரம் தொடங்கியது அது குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து காண விழிப்புணர்வு விளம்பரம் அதனால் எளிமையான குடும்பத்தார்கள் போல் தான் மேக்கப் இருக்கும்…
நார்மலான குடும்பஸ்தன் போல் உடை அணிந்து கொண்டு ஹர்ஷா இருக்க அருகில் காட்டன் சேலையுடன் இருக்கும் நடிகையை கைப்பிடித்து ஒரு கையில் ஹர்ஷவர்தினியை தூக்கி பிடித்து மருத்துவரிடம் பேசுவது போல் ஷார்ட் எடுக்கப்பட வேண்டும்..
குழந்தை சமத்தாக அவன் கைகளிலே அடங்கிக் கொண்டிருந்தது கேமராவை அடிக்கடி திரும்பி திரும்பி பார்க்க முடிந்த அளவு குழந்தை சமாதானம் செய்து ஓரளவுக்கு சொல்லிக் கொடுத்தால் நடிப்பது போல் அழகாக செய்து முடித்தது…
ஷார்ட் முடிக்கப்பட்டு ஹர்ஷா அவன் நண்பர்கள் மட்டும் துணை நடிகர் டைரக்டர் அனைவரிடமும் குழந்தையை வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தான் இங்கே கேரவன் பின்னால் மொபைல் மூலம் மகாவிடம் பேசி முடித்த விஷாகா திரும்பிப் பார்க்க மேக்கப் ஆர்டிஸ்ட் கீதா அவளைப் பார்த்து…
"ஹலோ விஷாகா எப்படி இருக்கீங்க உங்க குட்டி பொண்ணு எப்படி இருக்கா???
உங்கள பாத்து ஒரு வருஷம் ஆச்சு நம்ம ஹைதராபாத்ல உங்க பாப்பாவோட முதல் பிறந்தநாள் போட்டோ ஷூட் காக எங்க ஸ்டுடியோ வந்து இருந்தீங்க ஞாபகம் இருக்கா அப்படின்னா நீங்க தான் ஹர்ஷா சார் வைஃபா அப்போ உங்க பாப்பா தானா அது அப்பவே நினைச்சேன் பாக்குறதுக்கு அப்படியே அப்பா மாதிரியும் லைட்டா உங்களையும் மிக்ஸ் பண்ண மாதிரி இருக்கு குழந்தை
என்ன மேம் புது ட்ரெண்டா குழந்தைங்களுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணி இருக்கீங்களா சூப்பர் உங்க பாப்பா தான் இங்க இப்போ ட்ரெண்ட் ஸ்டார் ஆய்டுவா போலருக்கு எல்லாரும் அவள பத்தி தான் பேசிட்டு இருந்தாங்க நானும் உங்கள பாக்க ட்ரை பண்ணிட்டு இருந்த நீங்க இங்க நிக்கிறீங்க அது மட்டும் இல்ல உங்க பேக்கர் பாயிண்ட் ரொம்ப பிரபலமாயிட்டு இருக்கு இப்ப எங்க பர்த்டே பார்ட்டிஸ் சொன்னாலும் அதிக அளவு ஆர்டர் பண்றது உங்க பேக்கரி சென்டரில் இருந்து தான்"
என்று அவள் பேசிக்கொண்டே போக இவளுக்கு வேர்வை பூ முத்து முத்தாக பூத்துக் கொண்டிருந்தது..
"ஓகே கீதா நம்ம அப்புறம் மீட் பண்ணலாம் கிளம்பற டைம் ஆயிடுச்சு வீட்டுக்கு சீக்கிரம் போகணும் ஓகே பாய்"
என்று சொல்லி அவளும் தப்பித்தோம் என்று குடுகுடு
என்று செல்ல எதிரே இருப்பவன் மீது மோதி கீழே விழ போனவளை தாங்கி பிடித்தவன்
"அது எப்படி மீனாட்சி அம்மா பேத்தி நம்ம ரெண்டு பேர் ஜாடையில் இருக்க முடியும்??"
என்று புருவம் சுருக்கி சந்தேகமாக கேட்டான் விஷாகாவின் ஹர்ஷா…

Author: srija
Article Title: 18) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.