18) தீயே 🔥

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
100
Reaction score
1
Points
18
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 18

யாமினி பயந்தது போலவே நடந்தது. எப்படியாவது தப்பித்து விடலாம் என்று பார்த்தால் கைகளை பிடித்து இழுத்து வந்து விட்டானே சுற்றி யாரும் இல்லை பகல் நேரம் என்றாலும் மழைக்காலம் என்பதால் சற்று இருட்டிக் கொண்டு வந்தது அனைவரும் விழாவை கொண்டாடுவதிலும் விருந்து சாப்பிடுவதில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் முழுகி இருந்தனர் தன்னை யாராவது இவளோடு பார்த்து விடுவார்களா என்று யாமினி கண்கள் படப்படத்தை கொண்டு அங்கும் எங்கும் சுற்றிக் கொண்டிருக்க..

"அச்சா லடிக்கி என்னை ஏமாத்தி தப்பிக்க பாக்குறியா இந்த ராஜ் வீர் கிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது எங்க கிராமத்துல கட்டப்பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு காட்டு சிங்கம் மாதிரி வாழ்ந்துகிட்டு இருந்தேன் ஆனா எண்ணிக்கை உன்ன டெல்லியில் ஒரு பார்ல வச்சு பார்த்தேன் அப்ப முடிவு பண்ணி நீ எனக்கு தேவைப்படுவ அப்படின்னு உங்கள மாதிரி பொண்ணுங்க தான் பேண்ட் சட்டை போட்டு சோக்கா இருந்தா தானே பிடிப்பீர்கள் அதனால் தான் உன்னோட ஊருக்கு என்னோட அடையாளத்தையும் மறைச்சு வந்து உன் கிட்ட பழகுன நீயும் நல்லா இருந்த ஆனா திடீர்னு கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டுப் போக ட்ரை பண்ணிட்டு இருந்தா எனக்கு என்னவோ பட்டுச்சின்ன மனசுல சரி உன்னை விட்டு பிடிப்போம்ல ட்ரை பண்ணேன் ஆனா உன்னை எப்படி என்னோட அடி ஆட்கள் பாலோவ் பண்ணதால நீ இங்க சென்னையில் மிகப்பெரிய பணக்காரன கல்யாணம் பண்ணிக்கறதுக்காக தான் என்னை ஏமாத்திட்டு வந்திருக்கேன் புரிஞ்சது இவன்கிட்ட அது தப்பிச்சிடலாம் இவன் ஒரு வேஸ்ட் ஃபெல்லோ அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்த ஆனா நான் ராஜ் வீர் சண்டிகர் பகத்சிங் நகர்ல கேட்டு பாரு என் பேரை கேட்டா சின்ன குழந்தையிலிருந்து பெரியவங்க வரைக்கும் நடுங்கி போவாங்க நல்லா வாட்டசாட்டமா கல்யாண ட்ரெஸ்ல அழகா தான் இருக்க இந்த ஊருக்குலாச்சாரப்படி கல்யாணம் பண்றது எனக்கு விருப்பம் இல்லை உனக்கு ரெண்டு நாள் அவகாசம் தரேன் அதுக்குள்ள உன்னோட பெட்டி படுக்கை எடுத்துக் கொண்டு என்கூட வர நாம சண்டிகர் போகிறோம் இல்லன்னு வச்சுக்கோ இந்த ராஜ் வீரோட உண்மையான முகத்தை பார்க்க வேண்டி வரும்"


என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு அவன் அங்கிருந்து சென்றுவிட யாமினிக்கு பயம் வந்தது இவன் சாதாரண வீட்டுப் பையன் பார்ப்பதற்கும் இளைய வயது என்று நினைத்துக் கொண்டு அவனோட டைம் பாசுக்கு பழகி இருக்க பிறகுதான் அவளின் தோழி சண்டிகரை சேர்ந்த ஒரு பெண் இவர் ஒரு ஏரியாவில் மிகப்பெரிய வட்டி வசூல் செய்யும் பெரிய தாதா என்றும் இவர் பார்ப்பதற்கு சாக்லேட் பைபிள் தோற்றமளிப்பார் ஆனால் இவர் மிகப்பெரிய தனிக்காட்டு சிங்கம் என்று சொல்லிவிட எப்படியாவது இவனை ஒதுக்கிவிட்டு எஸ்கேப் ஆகலாம் என்று திட்டமிட்ட யாமினிக்கு பெரும் ஏமாற்றம் அவன் சாதாரணமாக பேசிவிட்டுப் போனாலும் அவன் கைகள் கொடுத்த பலத்தின் தடம் அப்படியே அவள் கரங்களில் இருந்தது இதை மறைத்துக் கொண்டு சமாளிக்க வேண்டும் என்று அமைதியாக தன் அறையை நோக்கி சென்று விட்டாள் அன்றைய தினம் வெளியே வரவே இல்லை வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. வந்தவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் ஆனால் வீட்டை சேர்ந்தவர்களுக்கு ஏதோ போல் இருந்தது ஒரு பக்கம் சுஷ்மா இந்த திருமணம் தனக்கு அவசியம் நடக்கணுமா என்று ஒரு பக்கம் வேதனை இருந்தாலும் இந்த பணம் தரும் மாயை அவள் கண்ணை மறைத்து விட்டது. ஒரு பக்கம் யாமினி முன்னாள் காதலன் வந்துவிட்டான் அவனும் சாதாரண ஆள் கிடையாது ஒரு ரவுடி என்று தெரிந்த பிறகு இன்னும் அவளுக்கு நெஞ்சுக்கூடு ஏறி இறங்கி குளிர் காய்ச்சல் வந்து கொண்டிருக்கும் நிலைமை முக்கியமாக மாப்பிள்ளைகள் யாருக்கு விருந்து என்பது போல் மதிய நேரத்திற்கு மேல் வீட்டில் இருக்க விருப்பம் இல்லாமல் அவரவர் தங்கள் வேலையை பார்த்து சென்று விட்டனர் பாட்டி அமைதியாக தன் அழைப்பில் முடங்கி விட்டார் இதில் பெண்ணை பெற்றவர்களுக்கு கொண்டாட்டம் வந்த சொந்தங்களோடு அனைத்து சௌகரியங்களையும் அனுபவிக்க..

இப்படி அன்றைய பொழுது கழிந்தது..


மறுநாள் காலையிலிருந்து இன்னும் இரண்டு நாட்கள் நடைபெற மற்ற விலாவுக்கான பிளானர் அனைத்தையும் மேனகா தன் கற்பனையை புகுத்து அதை வரைந்து வைத்து சின்ன சின்ன ஓவியங்களாக வைத்து முடித்த அருகில் சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாக்ஷி அதை பார்த்து..


"கல்யாண வீட்ல இருக்குறவங்க கூட இவ்வளவு மெனக்கெட்டு வேலை செஞ்சது இல்ல நீங்க எதுக்கு இவ்வளவு ஸ்ட்ரெஸ் எடுத்துக்குறீங்க சிம்பிளா பண்ணிட்டு போகலாம்ல இவ்ளோ கஷ்டப்பட்டு நீங்க ஹார்ட் வொர்க் பண்ணா மட்டும் இந்த வீட்ல இருக்குறவங்கள பாராட்ட போறாங்களா கொஞ்சம் உங்க ஹெல்த் பார்க்கலாம் அல்லவா ஒரு பக்கம் குழந்தையோட ஹெல்த் பத்தி யோசிச்சு யோசிச்சு நீங்க ரொம்பவே மெலிஞ்சு போயிட்டீங்க இப்போ கல்யாண வேலையில ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கீங்க உங்கள பாக்க எனக்கே கஷ்டமா இருக்கு சிம்பிளா பண்ணிக்கலாம்ல"

என்று சொல்ல

"இல்ல சாக்ஷி எப்பவுமே நான் பர்ஃபெக்க்ஷன் பாக்குறவ அதுனால தான் எந்த ஒரு வேலையும் யாரும் குறை சொல்லாம இருக்குறதுக்காக இவ்வளவு மெனக்கெட்டு பண்ணிட்டு இருக்கேன் நான் ஒன்னும் சும்மா பண்ணலையே சம்பளம் கொடுக்குறாங்க இல்லையா அதுவும் எத்தனையோ விஐபி வீட்டுக்கு ஈவன்ட் நடத்துற விசுவாசாரோட வீட்ல ஒரு ஈவென்ட் நடக்குது பிரம்மாண்டமான கல்யாணமா இருக்கணும்னு சொல்லி இருக்காங்க அதனால தான் இவ்வளவும் பண்ணிக்கிட்டு இருக்கேன் நீ சொன்ன மாதிரி கல்யாணத்துல கல்யாண வீட்டு ஆளுங்களுக்கு சந்தோஷம் இருக்கோ இல்லையோ இதனால போட்டோகிராபர் சமையல்காரங்க டெக்கரேஷன் பண்றவங்க நீ நான் இந்த போல வேலை செய்றவங்களுக்கு பெனிஃபிட் தானே அப்போ இதை சந்தோஷமா தானே செஞ்சாகணும்"
என்று சிரித்துக்கொண்டே சொல்ல.

"என்ன என்ன நாய் இல்லாம பெரிய பட்டிமன்றம் நடந்துட்டு இருக்கு அப்புறம் இந்த கிரிஷ் பையன் கிச்சன் பக்கம் வரக்கூடாதுன்னு எத்தன தடவ சொல்றது ஓடி ஆடி விளையாடின அப்படின்னு மூச்சு வாங்குதா உனக்கு இன்னும் ஒரு மாசம் கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை மேனகா இவன கிச்சன் பக்கம் விடாத"

என்று கையோடு அழைத்து வந்த பிள்ளையை கட்டில் மீது அமர வைத்து அவனுக்கான டானிக் சிறப்பு எடுத்து தேவி கொடுக்க..

"பாரேன் இந்த மேஜிக் நம்ம எல்லாம் யாரோ மாதிரி இதே இடத்துல இருந்தோம் இப்ப எதை நம்ம சிஸ்டர்ஸ் மாதிரி ஒரே இடத்தில் இருந்து பேசுவது ஒரு மாதிரியா இருக்கு இல்ல"

என்று சிரித்துக் கொண்டே சொல்ல

"ஆமா மாமா அது உண்மைதான் ஏதோ நமக்குள்ள ஒரு அட்டாச்மென்ட் கனெக்ட் இருக்கிற மாதிரியே தோணுது ஆனா பாரேன் மேனகா ஆந்திராவ சேர்ந்தவர் தேவி நம்ம தமிழ்நாட்டு பக்கம் நான் தமிழ்நாட்டில் வாழும் பஞ்சாபி பெண் நம்ம மூணு பேருக்கும் பிறப்பிடம் வாழ்ந்து வாழ்க்கை முறை எல்லாம் ஒற்றுமை கிடையாது ஆனா நம்ம மனசுக்குள்ள ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கிறது "

என்று சாக்ஷி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ஆச்சரியமாக கேட்க..

"இதுக்கு வேற ஒரு பேர் சொல்லுவாங்க ஆனா எனக்கு என்னனு தெரியல அறிவியல் ரீதியா ஒருத்தவங்க பார்த்தவுடனே ரொம்ப நெருக்கமா பழக ஆரம்பிச்சாங்கன்னா அவங்க முன்பிறவியில் ரொம்ப நெருக்கமான உறவினர்களாக இருந்திருப்பாங்கன்னு ஒரு அர்த்தம் இருக்கு ஒரு வளர்ப்பு ஜென்மத்துல நம்ம அக்கா தங்கச்சிங்களா பிறந்திருக்கலாம் இந்த ஜென்மத்துல பார்த்தவுடன் ஒத்துமையா இருக்கும் அவ்வளவுதான் இருக்கும் ஆனா திடீர்னு பிளாஷ்பேக் வைத்து நீங்க எல்லாம் ஒரே தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் அப்புறம் பிரிஞ்சி மறுபடியும் 20 வருஷம் கழிச்சு அன்பு மலர்களே என்று சேருகிற மாதிரி எதுவும் நடக்க போறது கிடையாது எல்லாமே நம்ம மனசுல இருக்குறத பொறுத்துதான் இருக்கு நம்ம கேரக்டருக்கு ஒத்து போற நபர் கிடைச்சா அவங்க கூட ஆட்டோமேட்டிக்கா நமக்கான பந்தம் உருவாக ஆரம்பிச்சிடும் அப்படிதான் நம்ம மூணு பேருக்கும் சரி தேவி நம்ம பழைய கேட்டரிங் மாஸ்டர் இருக்கா இல்லையா அவர்கிட்ட இருந்து தகவல் சொல்லிடு ரெண்டு நாள் கழிச்சு எல்லாமே ஆரம்பிச்சுடனும். அதுக்கு முன்னாடி எல்லாமே வந்துடனும் அதுவும் இந்த பெரிய வீட்டு பங்க்ஷன் தான் எதுக்கு இல்லையே இல்லையோ சாப்பாட்டுக்கு கண்டிப்பா குறை சொல்றதுக்கு 100 பேர் இருப்பாங்க தயவு செஞ்சி நீ தான் பாத்துக்கணும் இந்த பொறுப்பு உன்னோடது"

என்று சமையல் வேலைக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று பிராப்பர் அட்டவணையை தேவி இடம் கொடுத்து விட தேவி அதை பார்த்து தான் செய்து கொள்கிறேன் என்று சொல்ல..

"பாரு தேவி மேனகா பண்ற வேலைய இந்த கல்யாணத்துல கல்யாணம் பண்றவங்களுக்கு இன்ட்ரெஸ்ட் கிடையாது ஆனால் இவன் சொன்ன புரிஞ்சிக்க மாட்டேங்குற"

இது சாக்ஷி நாசுக்காக சொல்ல தேவி புரியாமல் பார்க்க

"ஆமாம் யாரும் கண்டுக்கல அப்படி நினைச்சுக்கிட்டு இருக்காங்க ஆனா எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன் நாங்களும் பஞ்சாபிக்காரங்க தான் அங்கு எங்க சொந்தக்காரங்களும் இருக்காங்க ஆக்சுவலி இந்த கல்யாண பொண்ணுங்களோட அம்மா அப்பா இருக்காங்க பாத்தியா அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பினான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சாங்க நிறைய பேர் இவங்க நம்பி பணம் போட்டாங்க கடைசில பணம் திவால் ஆகிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம ஏற்கனவே உங்க பழைய கம்பெனியை வித்து அதுல வந்த பணத்தை தான் கடன் கொடுத்தவர்கள் எல்லாருக்குமே கடன் அடைச்சுட்டு இப்ப வேற வழி இல்லாம இருக்கும் போது தான் ஏற்கனவே தனது பேரப்பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆகும் வேண்டிக்கிட்டு இருக்க பாட்டிமா இவங்க ஞாபகத்துக்கு வர எங்க வீட்ல ரெண்டு பொண்ணுங்க இருக்கும்போது நீங்க எதுக்கு கவலைப்படணும்னு பாட்டிமா மனசுல ஆசையை விதைச்சு எப்படியோ இங்க வந்து செட்டில் ஆகிட்டாங்க பணக்கார வாழ்க்கைக்காக தான் அங்கிருந்து இந்த ஊருக்கு படையெடுத்து வந்து இருக்காங்க"

என்று சாக்ஷி சில உண்மைகளை சொல்லி முடிக்க..

"இப்ப பணம் தான பிரதான கொள்கை அதுக்காக தானே எல்லாரும் ஓடிக்கிட்டு இருக்காங்க அதை பத்தி நீ எதுக்கு கவலைப்படுற அது உங்களோட கஷ்டம் நமக்கு நமக்கான வேலையை தானே பாக்கணும்"

என்று தேவி சொல்ல

"அட நீ வேற சும்மா இரு தேவி சரி அம்மா அப்பா இப்படி கஷ்டம் பண்ணிட்டாங்க நம்ம இங்க வந்து ஒழுங்கான வாழ்க்கை வாழனும்னு அந்த பொண்ணுங்க மனசுல இருந்தா தானே ரெண்டும் பக்கா கிரிமினல் அது சுஷ்மா ஒரு வேஸ்ட் ஃபெல்லோ சின்ன வயசுல இருந்து யாமினி என்ன சொல்றாரோ அதை தான் செய்வா சுஷ்மா யார் சொன்னாலும் தலையாட்டி பொம்மை மாதிரி தலையாட்டி இருப்பா அவளை பொறுத்த வரைக்கும் ஒரு வசதியான வாழ்க்கை வந்திருக்கு சரி கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படின்னு விசுவாசார கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா அவளுக்கு மனசார புடிச்ச இந்த கல்யாணம் நடக்கல ஆனா அவளையாவது விடுதலை கல்யாணத்துக்கு பிறகு காதல் வந்தால் அவங்க லைஃப் எப்படி வேணா போகட்டும் அந்த யாமினி பொண்ணு இருக்கா பாரு அவ பக்கா ஃபிராடு அவருடைய எக்ஸ் லவ்வர் நேத்து ஃபங்ஷனுக்கு வந்தாரு"

என்று சொல்லி முடிக்க மற்ற இரு பெண்களும் வாயில் கைவைத்து கொண்டார்கள்..

"அடியே என்னடி சொல்ற"என்று மேனகா சற்று நடுக்கத்தோடு கேட்க..

"ஆமாம் அவளைக் கேட்கவே எக்ஸ் லவ்வர் இருக்கான் அவன் ஏதோ சண்டிகர்ல பெரிய தாதா அதான் வட்டி பிசினஸ் பண்றவன் அந்த ஏரியாவே அவன் தான் கிங் இந்த பொண்ண பாத்து புடிச்சு போய் தன்னை சாதுவா மாத்திக்கிட்டு இந்த பொண்ணு கிட்ட காதல் வயப்பட்டு இருக்கிறார் இதுவும் பையன் பார்க்க ஸ்மார்ட்டா அழகா இருக்காருன்னு லவ் பண்ணி இருக்கு அதுக்கப்புறம் என்ன இருக்கு பணக்கார சம்பந்தம் வரப்போகுதுன்னு அவங்க அம்மா அப்பா சொல்லவே இவனை எப்படி கழட்டி விடறது யோசிக்க அந்தப் பொண்ணோட பிரண்டு மூலியமா இவன் சண்டிகர்ல பெரிய ஆளுன்னு தெரிஞ்சது. சரி இவன வேற மாதிரி அட்டாக் பண்ணனும் அப்படின்னு சொல்லாம கொள்ளாம ஊர விட்டு ஓடி வந்துட்டாங்க ஆனா அந்த ஆள் விடுவானா பாக்க தான் அலைபாயுதே மாதவன் மாதிரி சாப்டா தெரிவான் ஆனா மனிதன் சைத்தான் படத்துல வர மாதவன் மாதிரி அவர் கண்ணில் மண்ணைத் தூவி வந்து பார்த்தா ஆனா இவர் இங்கே வந்து நிற்கிறார் இப்படி ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணத்தைப் பற்றிய சீரியஸ் மிஸ் தெரியாம இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருக்காங்க இது தெரியாம பாட்டி இவங்க குடும்பத்துக்கேட்டா நல்ல மருமகள்கள் அப்படின்னு நினைச்சுகிட்டு கல்யாணத்துக்கான ஏற்பாடு செய்றாங்க என்ன நடக்குதுன்னு பொறுமையா இருந்து பார்த்தா தான் தெரியும்"

என்று சாக்ஷிப் ஒவ்வொரு விஷயமாக சொல்லி முடிக்க இரு பெண்களும் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயிருந்தார்கள் மேலும் அவர்களுக்கு அதிர்ச்சியும் கூட இவ்வளவு கௌரவமான குடும்பத்திற்கு இப்படிப்பட்ட பெண்களா மருமகளாக வரப்போகிறார்கள் தாங்கள் மட்டும் உண்மை சொன்னால் தங்கள் நிலைமை என்ன ஆகுமோ என்ற பயமும் மூன்று பெண்களுக்கும் வந்துவிட்டது.

,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 

Author: srija
Article Title: 18) தீயே 🔥
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.