அத்தியாயம் 17
மறுநாள் காலை எட்டு மணி ஆகிவிட்டது ஆனால் யாரும் அறைய விட்டு வெளியே வரவில்லை இங்கே நடுராத்திரியில் மீனாட்சி அம்மா வீட்டிற்கு சென்ற விஷாகா அதிகாலை 3 மணி அளவில் தான் யாரும் அறியாமல் அறைக்குள் வந்து ஹர்ஷாவை தன் மீது போட்டுக்கொண்டு நல்ல பிள்ளை போல் உறங்கிவிட அவன் கூடி கலைந்த களைப்பில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க இவளும் அவனுக்கு போட்டி போட்டு உறங்கிக் கொண்டிருந்தாள் மற்ற ஜோடிகளும் கூடல் தந்த களைப்பால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்..
"அக்கா என்னக்கா இவ்ளோ நேரம் ஆகுது பசங்க யாரும் விட்டு வெளியே வரவே இல்ல நேத்து பாலில் கொடுத்த மருந்து வேலை செய்தோ??"
என்று சொல்லி ஆத்மிகா சிரிக்க அபியும் ஆம் என்பது போல் கண்ணடித்து சிரிக்க..
"எல்லாம் அகிலா தேவிக்கு தான் வெளிச்சம் காலம் காலமா கொடுத்தே ஆகணும்னு கேட்டா முதலிரவு பாலாம் என்னதான் அதுல இருக்கோ"
என்று சலிப்புடன் கூறி காலை சிற்றுண்டிக்கு காய்கறி நறுக்கி கொண்டிருக்க…
" அது சரி பசங்க வாழ்க்கை ரூட் கிளியர் நம்ம பொண்ணு அங்க என்ன சண்டித்தனம் பண்ணிக்கிட்டு இருக்காளோ ரன்ஞனி அண்ணி அப்பாவி அவங்கள வாயில போடாம இருந்தா சரி அதான் நம்ம சாத்வி இருக்காள ஓரவத்தி கொடுமையே இந்நேரம் ஸ்டார்ட் பண்ணி இருப்பா"
என்று ஆத்மிகா தன் மகளின் நிலைமை நினைத்து பரிதாபமாக சொல்ல ஆனால் அது நூற்றுக்கு நூறு உண்மையாகவே போல் அங்கே அக்காவின் அர்ச்சனைகளால் சுட்டி தங்கை அக்மார்க் மருமகளாக ட்ரெயினிங் எடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறாள்…
இருவருக்கும் ஜாதகம் சிறு கோளாறு இருப்பதால் வெற்றிகரமாக முதல் இரவு ஒரு மாதத்திற்கு தள்ளப்பட்டது இதில் உடன்பாடு இல்லாததால் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் சாதாரணமாகவே இருந்தனர் …
காவியா ஒரு மாதத்திற்கு மாமியாரோடு தான் இருக்க வேண்டும் என்று கட்டளை வந்து விடவே அவளும் தன் செல்ல அத்தையோடு இருந்துவிட நகுலன் தன் அறைக்குள் சென்றுவிட்டான். மறுநாள் காலை பாவம் புது இடம் என்பதால் பிள்ளை துங்கட்டும் என்று ரஞ்சனி எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்றுவிட
ஆனால் ஓரவத்தி என்று மூத்த மருமகள் புடவையை இழுத்து சொருகி கையில் தொடப்பக்கட்டை பக்கெட் எடுத்துக்கொண்டு அறைக்குள் வர வீட்டில் உறங்குவது போல் மல்லாக்க படுத்துகிட்டு வாயை பிளந்து தூங்கும் தங்கையை பார்த்து சிரித்துக்கொண்டே அருகில் இருக்கும் ஜக்கில் நிரப்பப்பட்ட நீர் எடுத்து தன் தங்கையின் முகத்தில் ஊற்றி விட பதறி அடித்து எழுந்தவள் தன்னை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் அக்காவை பார்த்து…
"கொடுமைக்காரி கொடுமக்காரி உனக்கு மனசாட்சி இருக்கா தூங்க விடுடி நடு ராத்திரில போய் எழுப்புகிற போடி வேலைய பாத்து"
என்று தூக்கத்தில் ஏதேதோ உளறி மீண்டும் தூங்க போக மீண்டும் தண்ணீர் அவள் மேல் ஊற்றப்பட்டு தூக்கம் மொத்தமாக களைத்து..
"எனக்கு முன்னாடி அத்தை இந்த மொத்த குடும்பத்தையும் பார்த்துக்கிட்டாங்க நான் வந்ததுக்கப்புறம் அவங்களுக்கு ரெஸ்ட் கொடுத்து என்னோட கடமையை என் பங்குக்கு செய்தாச்சு நீ வந்ததுனால இப்போ வேலைகள் பிரிக்கப்பட்டு இருக்கு சோ இனி சின்ன மருமகள் தான் வாசல் பெருக்கி கோலம் போடணும்
அப்புறம் பாதி வீட்டை நீ தான் தொடச்சி கிளீன் பண்ணி சுத்தமா வைக்கணும் உன் புருஷனுக்கான வேலைகள் எல்லாமே நீ தான் பண்ணனும் சமையல் வேலைகளை பங்கு போட்டு செய்யணும் இந்த மாதிரி நிறைய இருக்கு மருமகளே இப்படியே நல்லா அசந்து தூங்கினா விட்டு விடுவேனா என்ன சீக்கிரம் வந்து வாசல கோலம் போடு"
என்று சொல்லி சென்று விட பாவம் காவியா தூக்க கலக்கத்திலேயே கழிவறை சென்று முகம் கழுவிக்கொண்டு வாசலில் தனக்குத் தெரிந்த 8 புள்ளி கோலத்தை போட்டு முடித்து விட…
ஜாகிங் சென்று வந்த நகுலன் அவள் கோலம் போடுவதை எட்டிப் பார்த்தான் நன்றாக இருந்தது ஆனால் ஏதாவது ஒரு கலாட்டா செய்ய வேண்டுமே என்று நினைத்தவன் அந்த பக்கெட் இருப்பது தெரியாது போலவே வேகமாக நடந்து வருவது போல் வந்து பக்கெட்டை தட்டி விட கஷ்டப்பட்டு இடுப்பு வலிக்க போட்ட கோலம் சர்வநாசனம் ஆகியது அவன் கொட்டிய பக்கெட் நீரினால்…
அவ்வளவுதான் பொங்கி வந்த கோபத்தில் எதிரில் இருப்பது யார் என்று கூட பார்க்காமல் பக்கெட் எடுத்து போட்டு அடிக்க வர…
"அடியே கல்யாணமான மறுநாளே புருஷனை அடிக்க வர நான் தாண்டி பக்கெட் இருக்கிறத பாக்கல சாரி என்ன பண்ற மறுபடியும் பெருக்கி சூப்பரான ஒரு கோலம் போட்டுட்டு"
என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளிவிட்டு செல்ல அவள் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது..
அண்ணியும் கொழுந்தனரும் சேர்ந்து என்னை வைத்து செய்கிறார்கள்..
என்று புலம்பிக்கொண்டே ஒரு கோலத்தை போட்டு முடித்து அறைக்கு சென்று குளித்து முடித்து ஒரு புடவை கட்டிக்கொண்டு வெளியே வர உடனடியாக வீட்டை துடைப்பதற்கான உபகரணங்கள் அவளிடம் கொடுக்கப்பட்டது..
அதையும் வாங்கி வீட்டை சுத்தம் செய்ய போகும்போது பாவம் ரஞ்சனி ஓடிவந்து மருமகளை தடுத்து …
"அடியே மூத்த மருமகளே என்னோட குட்டி மருமகள் நேத்துதான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து இருக்கா வந்த உடனே பிள்ளையே இவ்ளோ வேலை வாங்குர அதுவும் உன் தங்கச்சி தானே ஒரு விளையாட்டுக்கு அளவு வேண்டாம்????
நகுல் நீ கூட எதுவும் சொல்லாம அமைதியா இருக்க உன்னை நம்பி தான் இந்த பிள்ளை வீட்டுக்கு வந்து இருக்கு உங்க அண்ணன் எப்படி உங்க அண்ணிய விட்டுக் கொடுக்காமல் இருக்கான் அந்த மாதிரி நீயும் இருக்கனும் விளையாட்டுக்காக இருந்தாலும் ஒரு அளவு தான் வந்த முதல் நாளே நம்மளுக்கு இப்படி பண்றாங்கன்னு சொல்லிட்டு மனசு கஷ்டப்படாது???
ஏன்மா நீ கல்யாணம் ஆகி ஒரு மாசம் இந்த ஊரிலேயே இல்ல நீ நல்லா என்ஜாய் பண்ணிட்டு அப்புறம் தானா இந்த பொறுப்பெல்லாம் எடுத்துகிட்ட எதுக்கு உன் தங்கச்சிய இப்படி பண்ணனும் விளையாட்டுக்காக இருந்தாலும் எனக்கு இதெல்லாம் பிடிக்காது அதுவும் கல்யாணம் ஆகி மறுநாள் ஒரு பொண்ணு கஷ்டப்படறது என்னால பாத்து சும்மாவே இருக்க முடியாது தப்பா எடுத்துக்காதீங்க நீ வா கண்ணு"
என்று கடுகடுவென்று பேசி காவியாவை அழைத்துச் செல்ல அவளோ அவர்களை பார்த்து ஒழுங்கு காட்டிக் கொண்டு நல்ல பிள்ளையாக மாமியாருடன் எஸ்கேப் ஆகிவிட..
"அண்ணி இவளை கடுப்பேத்தலாம்னு பார்த்தா நடுவில் அம்மா வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க இப்ப என்ன பண்ணலாம்"
என்று நகுல் யோசிப்பது போல் பாவனை செய்ய அவன் தலையில் நங்கென்று கொட்டிய சாத்விகா
"போதும் கொழுந்தனாரே என் தங்கச்சிய ரொம்ப தான் கொடுமை படுத்துறீங்க நீங்க சொன்னதால தான் இதெல்லாம் செய்ய வந்த பாவம் அம்மா கூட என்ன தப்பா எடுத்துக்கிட்டாங்க எனக்கு டைம் ஆயிடுச்சு பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பனும் நீங்களே உங்க பொண்டாட்டிய பாத்துக்கோங்க"
என்று தன் வேலைகளை கவனிக்க சென்று விட நகுலன் இன்று இவளுக்கு இது போதும் என்பது போல் அமைதியாக தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான்..
_______________________________________________________________________
மணி பத்து கடந்த பிறகு தான் சூரிய ஒளி கதிர்கள் பட்டு விஷாகா முதலில் கண்விழித்தாள் கண் திறந்து பார்க்க ஹர்ஷா அவள் மீது படுத்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான் அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து அவனை ஓரமாக படுக்க வைக்க முழிப்பு கலைந்த ஹர்ஷா அருகில் இருக்கும் மனைவியை பார்த்து…
"அதுக்குள்ள என்ன அவசரம் இன்னும் பாக்கி நிறைய இருக்கு மொத்தமா வசூல் பண்ண வேண்டாம்"
என்று அடுத்த கூடலுக்கு அடிபோட அவ்வளவு தான் அடித்து பதறி குளியல் அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாள்…
"கேடி எஸ்கேப் ஆகிட்டா"
முனுமுனுத்திக்கொண்டு கண்களை மூடியவாறு படுத்து கொண்டிருந்தான் ஆனால் உறங்கவில்லை அவசரத்தில் உள்ளே சென்ற விஷா மாற்று உடை எதுவும் எடுத்து வரவில்லை வெறும் உடலை சுற்றி துண்டு மட்டும்தான் கட்டி இருந்தால் எட்டி பார்க்க உறங்கிக் கொண்டிருந்தான் மெதுவாக நடந்து கபோதி திறந்து உடை எடுத்து திரும்பும் பொழுது அவளை அப்படியே கட்டிலில் சாய்த்து தன் தேவைகளை நிறைவேற்றிய பிறகுதான் அவளை விடு விட்டான்…
விட்டான் சாமி என்று எஸ்கேப் ஆகும்போது அவளை அல்லேக்காக தூக்கி குளியல் அறைக்குள் மீண்டும் மீண்டும் அவளை எடுத்துக்கொண்டு 12 மணி அளவில் தான் அறையை விட்டு வெளியே வந்தனர்…
மற்ற ஜோடிகள் அனைவரும் சற்று விரைவாகவே தயாராகி வெளியே வந்து காத்துக் கொண்டிருந்தனர் இவர்கள் வருவதாக தெரியவில்லை என்று காலை சிற்றுண்டி முடித்து மதிய உணவை தயாராகிக் கொண்டிருந்தது அப்பொழுதுதான் படிக்கட்டில் இருந்து ஆடி அசைந்து ஹர்ஷா விஷாகா இருவரும் வந்தனர் இருவரின் முகத்தைப் பார்த்தவுடன் தெரிந்து போனது என்ன நடந்திருக்கும் என்று…
"பொதுவா இந்த கல்யாணத்தை ஆசையா பண்றவங்கள விட விருப்பமே இல்லாம கல்யாணம் பண்றவங்க தான் மத்த விஷயத்துல தெளிவா இருப்பாங்களாம்"
என்று அனிருத் ராகமாக சொல்ல மகா மினி இருவரும் ரகசியமாக சிரித்துக் கொண்டனர்
"ஆமா ஆமா அண்ணா அதும் நம்மள விட சின்ன பசங்க எல்லாம் இப்போ ரொம்ப தெளிவா இருக்கானுங்க" என்று ஆரவ் அவனுக்கு ஏற்றவாறு ஜாலரா அடிக்க..
"சரி சரி போதும் இப்ப என்ன இதெல்லாம் எல்லாருக்கும் நடக்கிற சகஜமான விஷயம் தான்..
நீங்க ரெண்டு பேரும் இப்போ டிபன் சாப்பிடுறீங்களா இல்ல நேரடியா லஞ்ச் சாப்பிடுறீங்களா??"
என்று ஆத்மிகா கேட்க
"மம்மி மத்தியானம் ரெண்டு மணிக்கு மேல ஷூட்டிங் இருக்கு நான் இவளையும் அந்த குட்டி பாப்பாவையும் அழச்சிட்டு போகலாம்னு இருக்கேன் அப்படியே வெளியே போயிட்டு வந்த மாதிரி இருக்கும் அதனால்தான் கிளம்பி வந்திருக்கும் சரி நைட் மீட் பண்றேன் பாய்"
என்று ஹர்ஷா முன்னே சென்றுவிட விஷாகா தன் சகோதரிகள் மற்றும் வீட்டு நபர்களிடம் சொல்லிவிட்டு மீனாட்சி அம்மா கையில் இருக்கும் ஹர்ஷவர்தினியை தூக்கிக்கொண்டு காரில் சென்று அமர்ந்தாள்…
"ஏங்க பாப்பாவ ஏன் நம்ம கூட அழைச்சிட்டு போகிறோம்??"
என்று விஷாகா பவ்யமாக கேட்க…
"என்னன்னு தெரியல இந்த குட்டி என் கூடவே இருக்கணும்னு தோணுது மனசு ஒரு மாதிரி அடிச்சுக்கிறது பார்க்க பார்க்க திகட்டல அவ்ளோ அழகா இருக்கு இந்த குட்டி பாப்பா அதனாலதான் இன்னிக்கு எடுக்கப்போற ஷூட்ல ஒரு ரெண்டு வயசு குழந்தை தேவைப்படுது அதான் நம்மகிட்டயே பாப்பா இருக்குல்ல அதனால்தான் அசிஸ்டன்ட் டைரக்டரிடம் நானே ஏற்பாடு பண்றேன்னு சொல்லி அழைச்சிட்டு போறேன் இன்னிக்கி நானும் இந்த குட்டி ரெண்டு பேரும் ஒரு அட்வர்டைஸ்மெண்ட் ஷூட்டிங்கில் நடிக்க போறோம் கேரக்டர் என்ன தெரியுமா நான் இவளுக்கு அப்பாவாம் "
என்று கன்னக்குழி தெரிய சிரித்துக் கொண்டே கார் ஓட்ட ..
குழந்தையும் அவன் சிரிப்பை பார்த்து கன்ன குழி தெரிய சிரித்தது இருவரையும் பார்த்த விஷாகாவுக்கு மனம் அடித்துக்கொண்டது…
'நீ பெரிய தப்பு பண்ற என்னை என் ஹர்ஷா கிட்ட இருந்து பிரிச்சிட்ட இல்ல இந்த குழந்தை மட்டும் வேணும் நான் மட்டும் வேண்டாமா'
என்று ரதி கண்ணீர் மல்க வாதாடுவது போல் இருக்க விஷக்காவுக்கு பக் பக் என்று அடித்துக் கொண்டது..
____________________________________________________________________
"மினி நான் ஹாஸ்பிடல் போகிறேன் வர வழியில கம்பெனில ட்ராப் பண்ற மூணு மணிக்கு மீட்டிங் இருக்குல சீக்கிரம் கிளம்பலாம் வா ஏற்கனவே லேட்"
என்று மகா மதிய உணவை உண்டு விட்டு ஸ்கூட்டி சாவியை எடுத்து தயாராக நிற்க..
"என்னமா மதியம் ஒரு மணி ஆகுது இதுக்கு மேல எங்க போக போறீங்க ஒரு ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம் இல்ல??"
என்று அபி கேட்க
"இல்ல அத்தை எனக்கு ரெண்டு மணிக்கு கான்ஃபரன்ஸ் இவளுக்கு மூணு மணிக்கு டிஸ்கஷன் மீட்டிங் இருக்கு அதனால்தான் கிளம்புறோம் ஆறு மணிக்குள்ள வந்து விடுவோம்"
இன்று இருவரும் ஸ்கூட்டியில் பறந்து சென்றனர் சென்று கொண்டிருக்கும்போது…
"அக்கா மாமா கிட்ட நைசா பேசி விசாரணை நடத்தினியா இல்லையா அந்த டெத் எப்படி நடந்தது எதுக்காக நடந்தது அந்த டெத்துக்கு காரணமானவர்கள் ஃபேமிலி மெம்பர் அதை பற்றி ஏதாவது க்ளூ கிடைச்சுதா"
என்று காமினி ரகசியமாக அவள் காதில் கிசுகிசுக்க…
"பாரு நான் உனக்கு மீட்டிங் னு சொல்லி வர வெச்சதே இத பத்தி பேச தான் எனக்கு கான்பரன்ஸ் முடிஞ்ச உடனே நான் கம்பெனிக்கு வந்து உன்கிட்ட பேசுறேன் நீயும் டெண்டர் பத்தி தான் டிஸ்கஷன் பண்ற மாதிரி ஒரு டிராமா கிரியேட் பண்ணு பிகாஸ் உன்னோட புருஷன் பீரங்கி மூக்கன் ஈசியா கண்டுபிடிச்சிடுவான்"
என்று மகா எச்சரிக்கை தர
"நீ வேற ஏற்கனவே அண்ணா கிட்ட சொல்லிட்டேன் அண்ணா டெண்டர் மீட்டிங் இருக்கிற மாதிரி அரேஞ்ச் பண்ணிட்டாரு நீ டென்ஷன் இல்லாம உன்னோட கான்ஃபரன்ஸ் அட்டென்ட் பண்ணிட்டு சீக்கிரம் கம்பெனிக்கு வா நானும் இந்த பீரங்கி மூக்கன் பத்தி பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு"
என்று இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேச வேண்டிய விஷயங்களை முன்கூட்டி தயார்படுத்த சிறிது நேரத்தில் கம்பெனியில் டிராப் செய்துவிட்டு ஹாஸ்பிடலுக்கு பறந்து சென்றாள் மகா அங்கே கான்ஃபரன்ஸ் நடந்து கொண்டிருந்தது தாமதமாகவே அனிருத் வந்து அமர…
"தலைமை நிர்வாகினா என்ன வேணாலும் பண்ணலாம்னு சில பேருக்கு திமிரு"
என்று அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டு அவன் காதில் கேட்கும்படி மகா பேச..
"எங்கள மாதிரி போஸ்டிங்ல இருக்குறவங்க இந்த மாதிரி பண்ணா கொஞ்சம் ரெஸ்பெக்ட் இருக்கும் கொஞ்சம் வாயை அடக்கு. கான்ஃபரன்ஸ் மேல போகஸ் பண்ணு நீயும் ப்ராக்டிஸ் எல்லாம் முடிச்சுட்டு நல்ல டாக்டரா வெளியே வரணும்"
என்று அனிருத் பல்ல கடித்துக் கொண்டு பதில் சொல்ல…
"உத்தரவு மகாராஜா"
என்று நல்ல பிள்ளை போல் வாயை பொத்தி பதில் சொல்ல அமைதியா இரு என்று சைகை செய்தவுடன் அந்த இடம் கப் சீப் என்று கான்ஃபரன்ஸ் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தாள்
ஆனால் மனதில் இவனிடம் நேரடியாக கேட்கலாமா வேண்டாமா என்று அடித்துக் கொண்டது ஆனால் முதலில் விசாரணை செய்வோம் பிறகு பார்க்கலாம் என்று அமைதியாக விட அதுவே அவள் செய்யப் போகும் தவறுக்கு முதல் படி…
____________________________________________________________
"செல்லம் என்ன பண்ற நீ இல்லாம போர் அடிக்குது எப்ப டி வீட்டுக்கு வருவ "
என்று ஆபீஸ் வந்து அரை மணி நேரம் கூட ஆகாத மனைவிக்கு போன் போட்டு இப்படி பிளேடு போடும் தன் கணவனை நினைத்து காமினி சுவற்றில் முட்டிக்கொள்ள
"என்னடி செல்லம் பக்கத்துல ஏதோ டக் டக் சவுண்டு வருது"
"பின்ன நான் வந்து அரை மணி நேரம் கூட இருக்காது அதுக்குள்ள போன் பண்ணி என்ன பண்ற ஏது பண்றேன்னு கேக்குற இப்போ கொஞ்ச நேரத்துல மீட்டிங் அரேஞ்ச் பண்ணனும் டெண்டர் விஷயம் உனக்கென்ன பெரிய கம்பெனி இருக்கு
எந்து டெவலப்பிங் கம்பெனி பொறுமையா தான் எல்லாத்தையும் டெவலப் பண்ணனும் சும்மா போன் போட்டு மொக்க போடாத இம்சை உன் தொல்லை தாங்க முடியல இன்னிக்கி எங்களுக்கு டெண்டர் பற்றி ஃபுல்லா பேச ஒரு கிரேட் பிசினஸ்மேன் வரப்போறாராம் என்னோட மேனேஜர் அரேஞ்ச் பண்ணி இருக்காரு கல்யாண டென்ஷன்ல அவரைப் பத்தி ஃபுல் டீடைல்ஸ் நான் படிக்கல அங்கதான் கான்பிரன்ஸ் ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருக்காரு இந்த நேரத்துல நீ என்ன டென்ஷன் படுத்தாத அமைதியா உன் வேலையை பாரு"
என்று கணவனிடம் காரசாரமாக பேசி முடித்து பதட்டமாக மீட்டிங் ஹாலிற்கு சென்று கதவை திறந்து உள்ளே வந்தபளுக்கு தூக்கி வாரி போட்டது இவர்களுக்கு அறிவுரை தருவதற்காக மேனேஜர் கஷ்டப்பட்டு காலில் விழாத குறையாக ஏகே நிறுவனத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது வேறு யாரும் அல்ல காமினியின் ஆசை காதல் கணவன் ஆரவ் தான்…
"மேனேஜர் சார் இவர் எதுக்கு இங்க வந்திருக்காரு??"
என்று தன் சந்தேகத்தை கேட்க
"மேம் நம்ம புது கம்பெனி அப்படிங்கறதால ஒரு அட்வைஸரி மீட்டிங் அரேஞ்ச் பண்ணனும் இல்லையா அதுக்கு ஒரு நல்ல அட்வைசர் அப்புறம் பிசினஸ்ல நல்ல பொஷிஷன்ல இருக்குறவங்க தேவைப்பட்டுச்சு
அதனாலதான் மேம் ஏகே இண்டஸ்ட்ரில இருந்து மிஸ்டர் ஆரவ அழைச்சிட்டு வந்தேன் உங்ககிட்ட சொல்லலாம்னு பார்த்தேன் நகுலன் சார் கிட்ட சொன்னதால உங்க கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு பர்சனல் லீவ்ல இருந்தீங்க இல்லையா சோ நீங்க திடீர்னு இங்க வந்து பார்த்ததால் உங்களுக்கு தெரியாம இருக்கலாம்"
என்று பணிவாக சொல்லி முடித்து தான் இருக்
கையில் சென்று அமர…
இவ்வளவு நேரம் தன்னை வெறுப்பேற்றி சூடாக்கி விட்டு இதோ எதுவும் தெரியாது போல் மிடுக்கு கம்பீரத்துடன் கூர்மையான பார்வைகளால் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்..
'வீட்டுக்கு வாடி உனக்கு இருக்கு கச்சேரி'
என்று மினியின் இதழ் முனுமுடித்தது…

Author: srija
Article Title: 17) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.