15) ராகம்

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
74
Reaction score
1
Points
8
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 15



"இந்த நேரத்துல அங்க போய் என்ன பண்ணிட்டு வர??"



என்று ஹர்ஷா சந்தேகத்தோடு கேட்க என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்தவள் ஒரு ஐடியா வந்தவளாக


"இல்ல குட்டி பாப்பா இருக்கு இல்லையா புதிய இடம் கண்டிப்பா அழுவும் அதனால் தான் என்ன பண்ணுது அப்படின்னு பார்த்துட்டு வந்தேன் உங்களுக்கு ஒன்னு தெரியுமா அந்த குழந்தைக்கு அம்மா இல்ல அப்பா இல்ல பாவம் மீனாட்சி அம்மா தனியா வளத்துக்கிட்டு இருக்காங்க என்கிட்ட வந்ததுக்கப்புறம் அந்த பாப்பா ரொம்ப க்ளோசா ஆகிட்டா நானும் அவள கொஞ்சி சமாதானம் பண்ணி தூங்க வைப்பேன் 6 மாத முன்னாடி நான் சென்னை வரதா இருந்துச்சு பாப்பா ரொம்ப அழுதுட்டா தினமும் நான் போன்ல பேசணும் வீடியோ கால்ல வரணும் அந்த அளவுக்கு என்னை மிஸ் பண்ணவா சரி என்னனு பாத்துக்கலாம்னு போன சும்மா அடிக்கடி எல்லாரும் முன்னாடியும் போனா எதுக்கு அனாவசியமா இப்படி பண்றன்னு கேப்பாங்க என் மனசு கஷ்டப்படும் அதான் எதுக்கு நான் மத்தவங்க கிட்ட பெர்மிஷன் கேட்டு எனக்கான வேலையை பாக்கணும் அதான் நானே போய் பார்க்கிறேன்"


என்று வாய்க்கு வந்தபடி சிறப்பாக புரட்சிகரமாக பேசி முடிக்க அதையும் நம்பியவன்


" சரி வா"என்று அவளை அல்லைக்காக தூக்கிக்கொண்டு தனது அறைக்கு சென்று கட்டில் மேல் அவளை தூக்கி போட்டு கதவை தாழ் போட்டு அவளை நெருங்கி வர இதயத்துடிப்பு எகிறி துடித்தது அவளுக்கு..


"இப்போ எதுக்கு இப்போ எதுக்கு என்கிட்ட வரீங்க??"

என்று பயத்தோடு சுவற்றை ஒட்டிக்கொள்ள அவள் காலை பிடித்து இழுத்து அவள் இடை கட்டிக்கொண்டு அவள் வயிற்றில் முகம் புதைத்து..


"நான் எதையும் பண்ற மூடு இல்ல அப்ப நான் தூங்கும் போது நீதானே இப்படி தூக்கி உன் மடி மேல போட்டு தல வருடி விடுவ இப்ப அது பண்ணு அது பழக்கப்பட்டு அது இல்லாம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா நீ இருந்தது ரெண்டு மாசம் தான் ஆனா பிரிஞ்சது மூணு வருஷம் அது ஞாபகம் வச்சுக்கோ ப்ளீஸ் டி எனக்கு தூக்கம் வருது நான் நிம்மதியா தூங்க நினைக்கிறேன்"



என்று இறுதியில் கெஞ்சும் படியாக குரல் வர அமைதியாக அவன் தலைய வருடி விட மயிலிறகாய் வருடிய விரல்களின் சுகம் கொடுத்த மகிழ்ச்சியில் நிம்மதியாக கண் மூடிக்கொண்டான் மற்றொரு கரம் அவனை தட்டிக் கொடுத்திருந்தது இடையை பலமாக கட்டிக்கொண்டு உறங்கிப் போனான் பார்க்க பார்க்க திகட்டவில்லை அவளுக்கு…


அவன் நன்றாக தூங்கி முடித்து விட்டான் மேலும் முதுகு வேறு அவளுக்கு வலித்தது அப்படியே அவன் நகர்த்தி பக்கத்தில் படுக்க வைக்க எங்கிருந்து கண்டுபிடித்தானோ பிடித்து இழுத்து அவள் நெஞ்சோடு கட்டிக் கொண்டு உறங்கினான்…



அவளுக்கு இன்னைக்கு சிவராத்திரி ஆகி போனது சகோதரிகள் மட்டும் அங்கே தனித்து விடப்பட்டு தான் மட்டும் கணவனோடு இப்படி இருக்கிறோமே என்று அவள் மனம் குற்ற உணர்ச்சியில் மிதக்க ஆனால் அங்கே…


ஏற்கனவே ஆரவ் காமினியை தூக்கிக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்.. வெறும் தூக்கி மட்டும் தான் சென்றான் மிச்ச வேலை எல்லாத்தையும் அவள் பார்த்துக் கொண்டாள் ஒரு துப்பட்டாவை எடுத்து அவன் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு ஓரமாக உட்கார வைத்து விட இவள் சுகமாக மெத்தையில் மல்லாக்க படுத்து உறங்கிவிட பாவம் ஆரவ் தான் எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டான்..


மிச்சம் அந்த அறையில் இருந்தது காவியா மகா மட்டும்தான் அனிரூத் காவியாவை அவள் அறைக்குள் செல்லுமாறு ஆணையிட அவளும் நீ நடத்தும் மகாராஜா என்பது போல் சிரித்துக்கொண்ட அறைக்குள் சென்று விட

கதவை லாக் செய்து மகாவை தன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு இன்னும் இன்னும் தட்டி உறங்க வைத்துக் கொண்டிருந்தான் அவளும் இன்னும் அவன் பரந்த மார்பில் கைகளை முறுக்கி அவனை வளைத்து உறங்க அவனுக்கு தான் படாத இம்சை ஆகி போய்விட்டது…


மறுநாள் காலை அழகாக விடிய..


விடிய ஆறு மணிக்குள் அனைவரும் இரவு எங்கே உறங்கினாரோ அதே இடத்திற்கு வந்துவிட்டார் இல்லை என்றால் பெரியவர்களிடம் யார் திட்டு வாங்குவது..


காலை ஐந்து மணி அளவில் தான் ஆரவ் கை, கால்கள் விடுவிக்கப்பட்டது…


அவள் மீது உச்சகட்ட கோபத்தில் இருந்தான்


பெண்கள் மூவரும் அழகாக தயாராகி உறவினர் வீட்டிற்கு சீமந்த விழாவிற்கு செல்ல தயாராக இருந்தனர்…



"அப்பா எங்கள காலையில இருந்து ரெடியாக சொல்லிட்டு நீங்க யாருமே வராமல் இருக்கீங்க??"

என்று அனிருத் கேட்க



"அந்த பங்க்ஷனுக்கு நீங்க தான் உங்க ஜோடியோட போகப் போறீங்க நாங்க இல்ல சோ போயிட்டு மத்தியானம் சாப்பிட்டுட்டு வீடு பக்கம் வாங்க அப்படி இல்லையா எங்கேயாவது வெளிய போயிட்டு கூட வாங்க பிகாஸ் நாங்க எல்லாரும் வெளியே போக போறோம் நைட்டு தான் வருவோம்"


என்று சொல்லி கிருஷ்ணா அவன் மனைவியை அழைத்துக்கொண்டு சென்று விட இதற்காக காத்துக் கொண்டிருந்த அமர் ஆத்மகாவை தூக்கிக்கொண்டு சென்றுவிட அபி அவள் கணவன் ரேயன் இருவரும் அமைதியாக தங்கள் காரில் சென்று விட்டனர்…


காவியா தோழியுடன் வெளியே செல்வதாக சொல்லி விடவே அவள் ஏற்கனவே ஸ்கூட்டியில் பறந்து சென்று விட்டாள்..



ஆறு பேரும் ஜோடிகளாக அந்த விழாவிற்கு சென்றடைந்தனர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து நடக்கும் விழாவை பார்த்துக் கொண்டிருக்கும் போது பெண்ணின் அம்மாவை பார்த்தவுடன் விஷாகா மனம் பக் பக் என்று இருந்தது பையன் வீட்டு உறவு தான் இவர்கள் ஆனால் பெண்ணின் குடும்பத்தை பற்றி ஒன்றும் தெரியாது ஆனால் பெண்ணின் அம்மாவை விஷாகாவுக்கு நன்றாக தெரியும் அவர் வந்து ஏதாவது உளறி வைத்து விடுவாரோ என்று பயந்து கொண்டு இருந்தாள்…


இவ்வளவு நேரம் நன்றாகவும் கலகலப்பாகவும் இருந்த விஷாகாவின் முகம் வேர்வை போர்த்து பதட்டமாக இருப்பதை பார்த்த ஹர்ஷா…



"எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகிற என்ன ஆச்சு உனக்கு அன்-கம்பட்டபிலா இருக்கா??"


என்று அக்கறையாக கேட்க அவள் அவன் கைகளை பிடித்து சிரித்துக்கொண்டே அதெல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்ட அவனும் அதன் பிறகு எதுவும் கேட்கவில்லை நிறைய உறவினர்கள் வந்ததால் பெண்ணின் அம்மா இவர்களை கவனிக்கவில்லை பையனின் அம்மா அவர்களை அழைத்து பெண்ணிற்கு நலங்கு வைக்குமாறு ஆணையிட அவர்களும் ஜோடிகளாக வந்து அந்த பெண்ணிற்கு வளையல் அணிவித்து மஞ்சள் குங்குமம் வைத்து ஆசீர்வாதம் செய்தனர்



விஷாகா முடிந்த அளவு தன் கணவன் பின்னால் ஒளிந்து கொண்டே இருந்தாள்..


ஒருவழியாக நலுங்க முடித்து கீழே வர இதோ ரெஸ்ட் ரூம் சென்று வருகிறேன் என்று சொல்லி அங்கே தன்னை ஆசிவாசப்படுத்திக் கொள்ள அங்கு இருக்கும் கழிவறைக்குள் சென்று முகம் கழுவி முகத்தை தொலைத்து வரும் பொழுது எதிரே வந்தார் பெண்ணின் அம்மா மருத்துவர் சந்திரலேகா…


"அட நீயா எப்படி இருக்க மா நல்லா இருக்கியா நீ என்னோட மாப்பிள்ளை வீட்டு சைடா உன்ன கவனிக்கவே இல்ல பாரேன் நான் எத்தனை பேர வேணாலும் என்னோட சர்வீஸ்ல பாத்து இருக்கலாம் ஆனா உன்ன மாதிரி ஒரு பொண்ண பார்த்து இருக்கவே முடியாது சரி இப்ப எப்படி இருக்க குழந்தை எப்படி இருக்கா குழந்தை அவங்க அப்பாவோட போய் சேர்ந்துச்சா இல்லையா"



என்று கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்க அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு மறைவிடம் வந்து தன் வாழ்க்கையில் நடத்தவற்றை அனைத்தையும் கூற



"என்னம்மா நீ இவ்ளோ பெரிய விஷயத்தை பண்ணி இருக்க உன் புருஷன் விரும்புற பொண்ண அவர்கிட்ட இருந்து பிரிக்கலாமா இது தப்பு இல்லையா அவர்கிட்ட அந்த பொண்ண பத்தி உண்மையை சொல்லிடு அதுக்கப்புறம் அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்று பார்க்கலாம்"


என்று தன் வயதிற்கு ஏற்ற கருத்தை சொல்ல அதை ஏற்காத விஷாக்கா..


"இல்ல இல்ல இப்பதான் பல வருஷம் போராட்டத்திற்கு பிறகு என்னோட ஹர்ஷா எனக்கு கிடைச்சிருக்காரு மறுபடியும் ரதி மூலம் அந்த பிரச்சனை வர வேண்டாம்னு நினைக்கிறேன் முடிந்த அளவுக்கு ரதி எங்க வாழ்வில் வரக்கூடாது அவளால் நாங்கள் பட்டது போதும் அந்த ரதி பெயர் இனிய கணவன் வாயிலிருந்து வரக்கூடாது அவர் அவளை மனதில் இருந்து மொத்தமாக நீக்க வேண்டும் ரதி ஒழித்து விட வேண்டும்"



என்று இறுதி வார்த்தை அழுத்தி கூற மறுத்தவர் அவள் நிலையை புரிந்து கொண்டு கைகளை பிடித்தவர் ஆறுதலாக நான்கு வார்த்தைகளை பேசி அனுப்பி வைத்தார்..


மருத்துவருக்கு நன்றி கூறிவிட்டு தன் ஆட்களோடு கலந்து கொள்ள ஏன் தாமதம் என்று அனைவரும் போட்டு வதக்கி விட்டனர்…


பிறகு விருந்து தடபுடலாக நடக்க அனைவரும் உண்டு விட்டு சரி எங்கேயாவது செல்லலாம் என்று பூங்காவிற்கு சென்றனர்…


வீட்டு அருகிலேயே பெரிய பூங்கா இருக்கிறது இவர்களுக்கு சொந்தமானது தான் அங்கேயே செல்லலாம் என்று அனைவரும் முடிவெடுக்க அனைவரும் அங்கே சற்று நேரம் நடந்து கொண்டிருக்கும்போது மீனாட்சி அம்மாவும் குழந்தையை சமாதானம் செய்யும் பொறுத்து பூங்காப்பக்கம் நடந்து வந்து கொண்டிருந்தார் குழந்தை விஷாகாவை பார்த்தவுடன் அவ்வளவுதான்..


"ம்மா…"



கத்தி அழ ஆரம்பிக்க அவள் குரலைக் கேட்டவுடன் விஷாகா அவரிடம் சென்று பிள்ளையை தூக்கி தன் மீது போட்டு தட்டிக் கொண்டிருந்தாள்



" வீட்ல ரொம்ப நேரம் இருக்க பிடிக்கல மா அதனால்தான் தோட்டக்கார அம்மா கிட்ட கேட்டு வீடு பக்கத்துல இருக்கு இந்த பார்க்குக்கு வந்த கொஞ்ச நேரம் குட்டி பசங்க கூட விளையாடிட்டு இருந்தா உன்ன பாத்த உடனே ஆரம்பிச்சிட்டா என்ன விட உன்கூட தானே இவளுக்கு இருக்க பிடிக்கும்"


என்று மீனாட்சி அம்மா பொறாமைப்பட்டு கூறுவது போல் சொல்ல காமினி மகா இருவரும் சிரித்துக் கொண்டனர் இதுவரை குழந்தை என்று நினைத்துக் கொண்டிருந்த தன் தங்கை ஒரு குழந்தையை சமாதானம் செய்யும் அளவிற்கு பெரிய மகிழ்ச்சியாகிவிட்டால் என்று…


அழகாக இருக்கும் குழந்தையை பார்த்தவுடன் ஹர்ஷா அதன் அருகே வந்து விளையாட்டு காட்ட..


"ப்பா..ப்பா… ம்மா…ப்பா…"


என்று சொல்லி அவன் பக்கம் தாவ குழந்தையை தூக்கிப் பிடித்துக் கொண்டு விஷக்காவை சந்தேகத்தோடு பார்க்க..


"தம்பி என் மாப்பிள்ளை ஏற்கனவே விபத்துல இறந்து போயிட்டாரு பிரசவத்தில் என் பொண்ணு போய் சேர்ந்துட்டா பச்ச குழந்தையோட யாரும் இல்லை அனாதையா நிக்கும் போது இந்த பாப்பா தான் வேலை போட்டு கொடுத்து நான் வேலை செஞ்சுகிட்டு இருக்கும் போது இவதான் பாப்பாவ சமாதானப்படுத்துவா அதனால குழந்தை அம்மா அப்படின்னு சொல்லி பழகிடுச்சு அப்புறம் எங்க எல்லாம் சென்டர்லயும் உங்க பேமிலி போட்டோ அப்புறம் உங்க கல்யாண போட்டோ எல்லாமே இருக்கும் """குழந்தை அது யாரு யாருன்னு கேட்கும் போது நான் தான் தம்பி இவளை அம்மான்னு சொல்ற இல்ல அப்படி தான் இவன் தான் உங்க அப்பான்னு சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க தம்பி"


என்று பணிவாக கூற அப்பொழுதுதான் ஹர்ஷாவுக்கு பெருமூச்சு வந்தது என்னடா புது சோதனை என்று ஆனால் அந்த பிள்ளை அழைத்தது அவனுக்கு பிடித்தது அதன் கன்னத்தை பிடித்து கிள்ளி ஆம் நான் உன் அப்பா தான் என்று தலையாட்ட அதுவும் சிரித்துக்கொண்டே அப்பா அப்பா என்று அவன் கண்ணுக்குழி தெரிய சிரிக்க குழந்தையும் அவனும் சிரிக்கும் பொழுது பளிச்சென்று விழும் கண்ணுக்குழியை பார்த்து மகாவுக்கு சந்தேகமாக இருந்தது..


'இது எப்படி சாத்தியம்??'

என்பது போல்



"அம்மா இந்த டைம்ல பாப்பா வெளிய வர வேண்டாம் வாங்க எல்லாரும் வீட்டுக்கு போலாம் இல்லனா காய்ச்சல் வந்துடும் பட்டுக்குட்டி வீட்டுக்கு போலாமா??"

என்று குழந்தையை பார்த்து சிரித்துக் கொண்டே கேட்க குழந்தையும் போலாம் போலாம் என்று தலையாட்டிக் கொண்டிருந்தது ஆனால் ஹர்ஷாவை விட்டு வரவே இல்லை அவன் கைகளுக்குள் தஞ்சம் அடைந்து விட்டது..


"தம்பி அவ அப்படித்தான் என்கிட்ட குடுங்க அதுக்கப்புறம் அமைதியாகிடுவா"


என்று மீனாட்சி அம்மா குழந்தையை வாங்க வர இல்லை பரவால்ல என்னுடன் இருக்கட்டும் என்று ஹர்ஷாவை வைத்துக் கொண்டான் ஏனோ குழந்தையை தனக்குள்ளே வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு உணர்வு அவனை அறியாமல்..



ஒரு வழியாக அனைவரும் வீடு வந்து சேர குழந்தை நன்றாக உறங்கி இருந்தது மீனாட்சி அம்மா குழந்தையை பெற்றுக்கொண்டு அவர்களுக்கான இடத்திற்கு சென்று விட மற்ற அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர் மறுநாள் காலை சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்று சொல்லியதால் அனைவரும் இரவில் விரைவாக சென்று உறங்கி விட்டனர் இங்கே காவியா சாப்பிடாமல் வெறும் பால் மற்றும் குடித்துவிட்டு முடங்கிக் கொண்டாள் காரணம் இன்று நகுலன் ஒரு பெண்ணோடு சிரித்து பேசிக் கொண்டிருப்பதை தன் தோழியுடன் சென்ற ரெஸ்டாரண்டில் பார்த்து விட அதிலிருந்து அவள் மனம் நிதானத்தில் இல்லை..


'அப்போ அன்னைக்கு என்கிட்ட பேசுவதெல்லாம் பொய் தானே நகுல்?? நான் தான் பைத்தியக்காரி மாதிரி உன்னைய நினைச்சுகிட்டு இருந்தா போல இப்ப சொல்றேன் எனக்கு நீ வேண்டாம் போடா'


சிறு பிள்ளை போல் பத்து வருடங்களுக்கு முன்பு அவன் வாங்கி கொடுத்த கரடி பொம்மையை பார்த்து திட்டி அப்படியே உறங்கிப் போய்விட்டால் மறுநாள் காலை அனைவரும் விரைவாக எழுந்து மூன்று பெண்களையும் அலங்காரம் செய்து முடித்து கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்…


மகா சந்தன நிறத்தில் பட்டாடை உதித்தி அளவான நகைகளோடு வந்து நிற்க அப்சரஸ் அரசு போல் இருக்கும் தன் மனைவியை அப்படியே அள்ளிக் கொண்டு செல்லலாமா என்று இருந்தது அனிருத் மனம்…



இங்கே ஒரு காட்டான் எப்பொழுது கம்பத்தில் பாயலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் பொழுது சிகப்பு நிறப்பட்டு சேலையில் வந்து நிற்பவளே பார்க்க திகட்டவில்லை அவனுக்கு இன்று இரவு ஒரு வழி செய்து விடலாம் என்று ஒரு திட்டம் தீட்டி இருந்தான்…



எப்பொழுதும் போல் வாழ்வே மாயம் என்ற கமல் போல் சாதாரணமாக அலங்காரத்தில் வந்து நின்ற விஷாகாவை பார்த்து ஹர்ஷாவுக்கு கோபம் வந்தது எதையும் காட்டும் நிலைமையில் இல்லை முதலில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வு மனப்பான்மையிலிருந்து விலகி தன்னையும் குழந்தை பற்றியே இவள் சிந்தனை இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தான்…



ஆனால் இன்று முதல் இரவு அன்று ஒரு பூகம்பம் விடியும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்…


காலை அனைவரும் கோவிலில் ஆஜராகி விட்டனர் இதோ புது மாப்பிள்ளை போல் மிகவும் புத்துணர்ச்சியாக மூவரும் தங்கள் துணைவிகள் முழுவதுமாக தங்களுக்கு சொந்தமாக போகும் நாளுக்காக எத்தனை நாட்கள் காத்திருந்தனர் இதோ அந்த நாள் வந்துவிட்டது..




அனைவரும் ஜோடிகளாக நிற்கவைக்கப்பட்டனர் அய்யர் எல்லாம் வேண்டாம் மாலை மாற்றி பொன்தாளியில் குங்குமம் வைத்தால் போதும் என்று சொல்லிவிட..


இதோ ஜோடிகளின் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு அம்மன் முன்னாள் வைக்கப்பட்ட குங்குமத்தை எடுத்து அவரவர் தங்கள் மனைவிகளுக்கு வைத்து விட மூவரின் கண்களிலும் தங்களை அறியாமல் கண்ணீர் துளி பணித்தது அதை கட்டுப்படுத்திக் கொண்டு பொன் தாலியை கண்ணில் ஒட்டிக்கொண்டு இனி கணவனுடன் நன்றாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்..


ஹர்ஷாவை விட்டு சென்றுவிடலாம் என்று இருந்த விஷா அக்கா கூட இந்த நொடி இவனோடு வாழ வேண்டும் அந்த ரதி தங்கள் வாழ்வில் வரவே கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்


ஆனால் அவள் கணவன் மனதில் ஒருமுறையாவது ரதியை சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான் இருவரும் யார் வேண்டுதல் நடைபெறுமோ...


இங்கே கடவுளிடம் மனம் உருகி வேண்டிக் கொண்டிருந்தால் காவியா இனி தன் வாழ்வு சீர்படுத்த வேண்டும் பல பல விஷயங்கள் நடந்துவிட்டது நம்பியவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கும்போது அவள் கழுத்தில் ஏதோ ஊர்ந்து செல்ல திடுக்கிட்டு கண் விழித்துப் பார்த்தவள் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் பொன் தாலி...


'ஆத்தாடி இது என்னது'


என்று கட்டியவனை திரும்பிப் பார்க்க நகுலன் தான் அவளைப் பார்த்
து குறும்பாக கண்ணடித்து உதடு குவித்து முத்தம் கொடுக்க

வந்த கோபத்தில்


"என்ன தைரியத்துல என் விருப்பம் இல்லாமல் என் கழுத்துல தாலி கட்டுவிங்க"


என்று கேட்டு விட அனைவருக்கும் இது என்ன புது ட்விஸ்ட் என்பது போல் பார்த்தனர்..
 

Author: srija
Article Title: 15) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.