13) ராகம்

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
74
Reaction score
1
Points
8
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 13

ஒரு நாள் மின்னலென கழிந்து சென்றுவிட..

அனைவரும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர் அங்கேதான் புது வீடு கட்டமைக்கப்பட்டது எத்தனை நாட்கள் தான் இந்த ஊர் வாழ்க்கை என்று ஆனால் ஊரை விட்டு செல்கிறோம் என்று மனதில் அனைவருக்கும் கவலை இருந்தாலும் ஒரு மாற்றம் தேவை என்பதால் இவர்களும் குடும்பத்தோடு சென்னைக்கு படையெடுத்து விட்டனர்..

அசோக ரஞ்சனம்..
என்று அழகிய பெயர் சூடப்பட்ட மூன்றடுக்கு அழகிய மாளிகை வீடு பிரம்மாண்டமாக காட்சியளிக்கப்பட்டது சுற்றி பெரும் தோட்டம் சிறுவயதிலிருந்தே அர்ஜுன் நகுலன் மகா காமினி விஷாகா நால்வரும் தங்களுக்கு என ஒரு வீடு இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று சிறுவயது கனவை ஒவ்வொன்றாக ஒவ்வொருவரும் விதவிதமாக டிசைன் செய்து நிபுணர்களால் இதோ அவர்களின் கனவு வீடு கட்டி எழுப்பப்பட்டு பிரம்மாண்டமாக காட்சியளித்தது

பூ இலை தோரணங்களால் மங்களகரமாக இருக்கும் வீட்டை அசோக் ரஜினி இருவரும் கைப்பிடித்து கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க சொந்த வீட்டிற்கு வந்து விட்டோம் என்று மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது பிள்ளைகள் நால்வரும் தாய் தந்தையை பின்னிலிருந்து கட்டிக் கொண்டு அவர்களை வரவேற்றனர்..


ஐயர் வந்து பூஜை செய்ய ஆரம்பித்தார் ஒரு பக்கம் ரஞ்சினி அசோக் மாலை மாற்றிக் கொண்ட அமர எதிர்ப்புற ம் அர்ஜுன் சாத்விகா இருவரும் மாலை மாற்றி அமர்ந்திருந்தனர் பூஜை வேலைகள் நடந்து கொண்டிருந்தது..

அனைவரும் ஜோடியாக சென்று ஐயரிடம் ஆசி வாங்கிக் கொண்டனர் விஷாகா ஹர்ஷா இருவரும் ஒன்றாக நின்று ஆசீர்வாதம் வாங்குவதை பார்த்து பெரியோர்கள் இதை அன்றே செய்திருக்கலாம் என்று ஒரு வெற்று சிரிப்பு சிரித்தனர்…

அர்ஜுன் நகுலன் இருவரும் மகிழ்ச்சியாக வீட்டில் உலா வந்தனர் இத்தனை மகிழ்ச்சியை கொண்டாட மூன்று வருடம் கடும் உழைப்பு செய்திருக்கிறார்கள் இருவரும்..

ஆளாளுக்கு தனி தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது மேலும் மூன்று அறைகள் விருந்தாளிகளுக்காகவும் மேல்புறம் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா போன்ற அமைப்பு நீச்சல் குளம் போன்றவை அனைத்தும் நகுல் பிள்ளைகளுக்காக ஆசையாக செய்தது இரு பிள்ளைகளும் சித்தப்பாவின் கைகளை கட்டிக்கொண்டு நன்றி தெரிவித்தனர்…


"இத்தனை வருஷம் பேலஸ்ல நீங்க இருந்தீங்க இனி பேலஸில் யார் இருக்க போறது எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு வந்தாச்சு"

என்று காவியா வருத்தமாக சொல்ல..

"கவலைப்படாதே நம்ம பங்காளி குடும்பம் இத மெயிண்டைன் பண்றதா ஆல்ரெடி இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டாங்க டான்ஸ் கிளாஸ் கோச்சிங் சென்டர் எல்லாமே எக்ஸ்பீரியன்ஸ் நல்ல செட்டிலான டீச்சர் நிறைய பேர் இருக்காங்க நம்ம ஊர்ல சோ அவங்களுக்கு இனி ஜாப் கொடுத்து அதை எல்லாம் மெயின்டெயின் பண்ணலாம் பக்கத்துல இருக்கிற மினி பங்களாவ ஒரு குட்டி ரெஸ்டாரன்ட் மாதிரி ஒரு நியூ ட்ரெண்டா ரெடி பண்ண சொல்லி இருக்கேன் சில பேர் வெளியூருக்கு டூருக்கு வருவாங்க இல்லையா அப்போ நம்ம ரெஸ்டாரண்ட்ல தங்கலாம் அந்த மாதிரி எல்லாம் டிசைன் பண்ணியாச்சு ஒரு வருஷத்துல எல்லாமே முடிஞ்சிடும் நம்ம ஊர் கூட டூரிசம் அப்புறம் நிறைய ஹனிமூன் கப்புள்ஸ் வருவாங்க இல்லையா சோ இது அவங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும் நமக்கும் ஒரு இன்கம் வரும்"

என்று கிருஷ்ணா ரேயன் அமர் மூவரும் எடுத்த முடிவை அவர்களிடம் சொல்ல அனைவருக்கும் பெருத்த நிம்மதி ..


"சரி சரி எல்லாம் சூப்பரா சக்சஸ் புல்லா முடிச்சாச்சு.. இப்போ நம்ம மூணு பிள்ளைகளும் ஒண்ணா வாழ முடிவு பண்ணியாச்சு இல்லையா சோ வெயிட் பண்ணாம நாளை மறுநாள் நல்ல நாளா இருக்கு காலைல கோவில்ல மாலை மாத்தி கல்யாணம் பண்ணி முடிச்சிட்டு சாயங்காலம் பிரம்மாண்டமா ரிசப்ஷன் வைக்கலாம்"


என்று அபி சொன்னவுடன் அனைவரும் ஆமோதிக்க இதோ அதற்கான வேலைகளை அடுத்த கட்டம் நடந்து கொண்டே இருந்தது..

அபி குடும்பம் கிளம்பலாம் என்று அனைவரும் தயாராக இருந்தனர் பெண்கள் மூவருக்கும் தாய் தந்தையை விட்டு பிரிய மனமில்லை ஒரேடியாக ரிசப்ஷன் முடிந்து அன்று வருகிறோம் என்று சொல்லிவிட முடியவே முடியாது என்று இன்று நல்ல நாள் வீட்டிற்கு மருமகள்கள் வந்தா நன்றாக இருக்கும் என்று ஆத்மிகா ருக்மணி அபி மூவரும் மருமகளை கையோடு அழைத்து சென்று விட்டனர்..

அனைவரும் அவரவர் ஜோடிகளோடு காரில் சென்று கொண்டிருந்தனர் மகா அனிருத் இருவரும் அமைதியாகவும் மகா அனிருத் தோலில் சாய்ந்து கொண்டு கைகளை கோர்த்துக்கொண்டு பின்னிசையில்

"ஹே சீதா
உயிர் நுழைய வாசல் தா
ஹே சீதா
உன்னில் வசிக்க வாய்ப்பை தா

என்றும் பிரிந்திடா வண்ணம்
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா

பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா
தனிமையில் உன்னை நான் நீங்காத
உரிமை வேண்டும் தா

ஹே ராமா
எனை பிரிய வேண்டாமா
ஹே ராமா
நிழல் அறிய வேண்டாமா

நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை
இன்றே எழுதுகோல் தீட்டுமா
நேற்றே எழுதிய பாடல் ஒன்றை
காலம் நாளையும் மீட்டுமா

ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே
இருக்குமா சும்மா"

என்ற பாடல் மழையில் நனைந்து கொண்டு இருவரும் வாழப்போகும் புதிய வாழ்க்கை நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தனர் மகா மனதில் இன்னும் ஒரு விஷயம் உறுத்திக் கொண்டே இருந்தது அந்த நபர் எப்படி இறந்து போனார் எதற்காக அவன் இறப்பை இப்படி மாற்ற வேண்டும் அப்படி என்ன நடந்திருக்கும் என்று உண்மை அறிய இவனோடு இன்னும் நன்றாக பழகிதான் உண்மை அவன் வாயாலே தெரிந்து கொள்ளலாம் என்று அமைதி காத்திருந்தாள் ஒரு பக்கம் காதல் ஒரு பக்கம் சந்தேகம் இரண்டும் கலந்த மன நிலையில் போராடிக் கொண்டிருந்தாள்..


இங்கே இரு குரங்குகளும் முடியை பிடித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்..

வேறு யாரு ஆரவ் அவனின் சரி பாதி காமினி ஆரம்பத்தில் அமைதியாக கார் ஓட்டிக் கொண்டிருந்த அவனை..

"இந்த மாதிரி காரு உருட்டிக்கிட்டு போனா நாளைக்கு மறுநாள் தான் வீடு போய் சேர முடியும் போல"

என்று முதலில் அவனை வம்பு இழுக்க..

"ஆமா பொண்ண கட்டி கொடுத்து சீதனமா கொடுத்த கார் பாரு இது என்னோட சம்பாத்தியத்தில் வாங்கின கார் நான் எப்படி வேணாலும் ஓட்டுவேன் வேகமா ஓட்டி எங்கேயாவது மோதி கார் டேமேஜ் ஆக நான் ஒத்துக்க மாட்டேன் அப்படி உனக்கு சீக்கிரம் ஸ்பீடா போகணும்னா உங்க அண்ணங்கார கிட்ட சொல்லி ஒரு பெரிய லாரி வாங்கிட்டு வா சூப்பரா ஓட்டி காட்டுறேன் எனக்கு தான் எல்லாம் ஓட்ட தெரியுமே"


என்று அவளை வெறுப்பேத்த அவ்வளவுதான் அவன் கையை கிள்ளிவிட அவனும் அவள் கையில் அடிக்க அவன் தலை முடியை பிடித்து அவள் இழுக்க அவள் இடுப்பை கிளி விட இப்படி மாறி மாறி அடித்துக் கொண்டே இருவரும் இருக்க அவர்களுக்கு பின்னிசையில்…


"உன்ன பார்த்தாலே பிபி ஏரும்
என் ஹேப்பி லைப் சேடா மாறும்
நீ ஓசாமானா நான் ஒபாமா டீ
என்ன ஓட்டுறது ஏன் கையலடீ
ஓன் ஃபேஸ நான் பார்த்த போதும்
ஏன் பேடுடைம் ஸ்டார்ட் ஆகும்
முன்ன வராதடா மூஞ்சி காட்டாதடா
என் கோபத்தை தூண்டாதடா

வாம்மா வா வாயை கொஞ்சம் மூடு
ஃப்ரீ அட்வைஸ் வீட்டை விட்டு ஓடு
வாடா வா கிராமத்து ஆளு
சரியாகமா ஊர விட்டு ஓடு"

என்று இருவருக்கும் பின்னணியில் சிறப்பாக ஓடிக் கொண்டும் பாட்டை உண்மையாகும் விதமாக அடித்துக் கொண்டு இறுதியில் சமாதானமாகி வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது

முதல் இரண்டு ஜோடிகள் இப்படி இருக்க இறுதியாக வரும் ஜோடி ஐயோ பரிதாபம்..

முதல் ஹர்ஷா பக்கத்து இருக்கையில் உட்காருவதற்கு பல யோசனைகள் பின் இருக்கையில் சென்று அமரலாம் என்று பார்த்தால் அவன் முறைப்புக்கு ஆளாகி பயத்துடன் அவன் அருகில் வந்து அமர அவள் கைகளை தனக்குள் வைத்துக் கொண்டு..

"இது புதுசா கல்யாணம் ஆகி விருப்பமில்லாத புருஷன் கூட வாழற பொண்ணு மாதிரி பண்ற ட்ராமா எல்லாம் வேணாம் நம்ம ஆல்ரெடி வாழ ஆரம்பிச்சிட்டோம் மூணு வருஷம் கேப் விட்டு போச்சு அவ்வளவுதான் எதுக்கு இவ்வளவு சீன் ஒழுங்கா என்கிட்ட நல்லா பேசு நல்லா பழகு நான் உன்னோட புருஷன் அதை முதலில் ஞாபகம் வச்சுக்கோ நான் மட்டும்தான் உனக்கு எல்லாமே அடுத்து நம்ம குழந்தைங்க அதை பத்தி மட்டும் யோசி என்னோட பாஸ்ட் எனக்கு தனிப்பட்ட முறையில் இருக்கும் காதல் அதையெல்லாம் மறந்து தொலை நானும் முடிந்த அளவுக்கு அது உன்னிடம் எக்ஸ்போஸ் பண்ண மாட்டேன் ஒரு தடவ பண்ணி ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்"

என்று ஏதோ உண்மையாக அவளை மட்டுமே உயிருக்கு உயிராய் நேசித்தவன் போல் பேச அவளுக்கு ஆச்சரியம் அவனை நம்ப முடியாமல் சந்தேக பார்வை பார்க்க..

"என்ன லுக்கு விடுற ஆமா எனக்கு ரதி யார் என்று கூட தெரியாது ஆனா எனக்கு அவள பிடிக்கும் ஆனா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டவன் ரெண்டு மாசம் நம்ம ரெண்டு பேரும் ஒரே ரூம்ல இருந்து அதுவும் விலகியா இருந்தோம் நமக்குள்ள நடக்க வேண்டியது எல்லாம் அமோகமாக நடந்தாச்சுல்ல திடீர்னு என்ன விட்டு பிரியும்போது நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா தனியா தூங்க முடியல மூச்சு அடைச்சா மாதிரி இருந்தது பக்கத்துல நீ எப்பவுமே இருப்ப உன்னோட முகத்தை பார்த்து எழும்பும்போது ஒரு பாசிட்டிவிட்டி வரும்

நீ போனதுக்கப்புறம் உடனே டல் அதனால்தான் மோஸ்ட்லி வீட்டுக்கே வரமாட்டேன் உன் கூட வெப் சீரிஸ்னு சொல்லும்போது எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா எல்லாரும் கேட்டாங்க உனக்கு இருக்கிற கெபாசிட்டிக்கு எதுக்கு இந்த மாதிரி ஆனா அவங்களுக்கு தெரியாதே என் அந்தஸ்தை விட மனைவி ரொம்ப முக்கியம்னு ஆனா நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல நான் வந்தா அங்கிருந்து விலகி பத்தடி தூரம் ஓடுற கண்ணுல உணர்ச்சி செத்து போய் பேசுற எனக்கு வந்துச்சு கோவம்

அதனால் தான் உன்கிட்ட நான் அப்படி பிஹேவ் பண்ண அதுவும் நம்ம வெப் சீரிஸ் வேற நம்ம ரெண்டு பேருக்கும் ஏத்த மாதிரி எதிரும் புதிர்மா இருக்கு இதுல எங்க உன்ன சமாதானம் செஞ்சி கூட்டிட்டு போறது நல்ல வேலை எல்லாரும் காம்ப்ரமைஸ் ஆகி ஊருக்கு வந்து கையோடு உங்களை அழைச்சிட்டு வந்தாச்சு இதுக்கு மேல எந்த ஒரு ஆட்டத்தையும் நீ போடக்கூடாது"


என்று அவன் பாட்டிற்கு சொல்லி அவள் கைகளை தனக்குள் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் அவர்களுக்கு பின்னிசையில்..


"என்னை விட்டு
ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவர் அல்ல ஒருவர்
இனி தெரியுமாஆஅ.ஆஅ.தெரியுமா

கண்ணுக்குள்ளே புகுந்து
கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து
அதில் இடம் பிடித்த பின்னே
எந்தன் அன்னை தந்தை
சம்மதித்த பின்னே
அன்பின் தன்மையை
அறிந்து கொண்ட பின்னே
ஹோ..ஓஓ"


என்று ஹர்ஷாவுக்கு மிகவும் பிடித்த பாடல் ஒலித்தது அந்தப் பாடல் நம் இருவருக்கும் இந்த சூழ்நிலையில் தக்க பாடல் என்று அவளை பார்த்து இதழ் வளைத்து சிரிக்க அவளோ இதழை சுழித்து

"ஹிம் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை"

என்று முணுமுணுக்க

"என்ன வார்த்தை ஜாஸ்தியா நீளுது??"


என்று கேட்ட உடன் ஒன்னும் இல்லை என்பது போல் தலை அசைத்து அந்த பாடலை தனக்குள் மொழித்துக் கொண்டாள் அவனுக்கு எது பிடிக்குமோ அதுவும் அவளுக்கு பிடிக்கும் அதுதான் அவளின் சாபம்..


ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தவுடன் விஷாகா அவசர அவசரமாக ஹைதராபாத்தில் இருக்கும் போது தனக்கு துணையாக இருந்த மீனாட்சி அம்மாவும் அவரது பேத்தியும் இங்கு வந்திருக்கிறார்கள் என்றும் இங்கே அவர்கள் வசதியாக தங்குவதற்கு பணியாட்கள் தாங்கும் கோட்டர்ஸ் ஏற்பாடு செய்யுமாறு கேட்டவுடன் அடுத்த ஆரை மணி நேரத்தில் அவர்களுக்கான ஒரு வீடு போன்ற கோட்டஸ் தனியாக காத்திருந்தது ஹால் கிச்சன் கழிவறை அனைத்தும் வீட்டின் உள்ளே இருந்தது..


அரை மணி நேரத்தில் விசாலாட்சி அம்மாவும் அவர் கையில் இரண்டு வயது பெண் குழந்தையும் சகீதமாக வீட்டிற்குள் வர அனைவரும் அவர்களை வரவேற்றனர்..

"வாங்கமா உங்கள பத்தி என் தங்கச்சி சொல்லிக்கிட்டே இருப்பா ஒன்னரை வருஷம் என் தங்கச்சி ஹைதராபாத்தில் இருக்கும்போது நீங்க தான் அவளுக்கு துணையாக இருந்திருக்கீங்க நாங்க வருவோம்னு சொன்னா கூட மீனாட்சி அம்மா இருக்காங்க நீங்க எதுக்குன்னு சொல்லிடுவா அந்த அம்மாவை நாங்க இப்ப பார்த்தாச்சு இந்த குட்டி ரொம்ப அழகா இருக்குல்ல உங்க பேத்தியா பையன் வழி இல்ல பொண்ணு பேத்தியா??"

என்று மகா கேட்டவுடன் அவர் சிரித்துக் கொண்டே மகளின் மகள் என்று சொன்னவுடன் குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டிருந்தனர் அந்த குழந்தையை பார்த்தவுடன் அபிக்கு ஏதோ போல் இருந்தது குழந்தை என்னிடம் தாருங்கள் என்று கேட்க குழந்தை ஈசியாக அபி கையில் வந்து சிரித்துக் கொண்டிருந்தது..

"அட ஆண்டிய பார்த்த உடனே சிரிப்பு தான் உனக்கு"

என்று சொல்லி அபி குழந்தையை சிரிப்பு ஏத்த அப்பொழுது அவளது ஆசை கணவன் அவள் காதோரத்தில்..

"பொண்டாட்டி மனசாட்சியோடு பேசு நீ ஆண்ட்டி இல்ல பாட்டி நம்ம பிள்ளைகளும் செய்ய வேண்டிய நேரத்துல கரெக்டா செஞ்சிருந்தா இந்த மாதிரி தான் உனக்கு பேத்தி வந்து இருக்கும்"
என்று கிளிக்கி சிரிக்க முகம் கண்ணம் இரண்டும் சிவக்க அபி தன் கணவனை பார்த்து முறைக்க அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டான் புது இடம் என்பதால் சிறிது நேரத்தில் குழந்தை ஸ்பீக்கரை ஆன் செய்துவிட விசாலாட்சி அம்மாவும் எவ்வளவு சமாதானம் செய்தும் அழுகை நிறுத்தவில்லை இறுதியாக விஷாகா அவள் கையில் வாங்கி நெஞ்சில் சாய்த்து தட்டிக் கொடுத்தவுடன் அமைதியாகிவிட்டது..

"விஷாகா கிட்ட போனாலே இவ அப்படித்தான் சைலன்டா ஆகிடுவா"

என்று மீனாட்சி அம்மா சொல்ல அனைவரும் குழந்தை பெயர் என்ன கேட்டவுடன்

"ஹர்ஷவர்தினி"

சொல்லி சிரிக்க அனைவரும் ஹர்ஷாவை பார்த்தனர் ..

"என்னடா குழந்தைக்கு உன்னுடைய பேர்ல பாதி இருக்கு கிட்டத்தட்ட உனக்கு பொண்ணு வேஷம் போட்ட மாதிரி தான் இந்த குழந்தை இருக்கு"

என்று அனிருத் கிண்டல் அடிக்க ஹர்ஷா அவனை முறைத்து கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்..

விஷாகா மீனாட்சி அம்மாவை அழைத்துக் கொண்டு அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு அழைத்து வந்து..

"அம்மா காலை நான் கிளம்பும்போது நீங்களும் என் கூட பேக்கரிக்கு வந்துருங்க பாப்பாவ இங்க இருக்குற கிரீச்சில் ஜாயின் பண்ணி விடலாம் அப்புறம் மத்தியானம் நான் பிக்கப் பண்ணிட்டு வீட்டுக்கு போயிடுறேன் நம்ம எம்பிளாய் வேன் ல நீங்க சாயங்காலம் வீட்டுக்கு வந்தா போதும் இது உங்களுக்கு சௌகரியமா இருக்குதானம்மா??"

என்று கேட்டவுடன் அவள் கைகளை பிடித்துக் கொண்டு..

"வேலை செய்றவங்களுக்கு இவ்வளவு வசதியே பெருசு தான் கண்ணு இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கஷ்டம் உனக்கு இத்தனை நாள் தனியா இருந்த பிரச்சனை இல்ல சில பல உண்மைகளை உன் புருஷனுக்கு நீ சொல்லித்தான் ஆகணும்??"

என்று கேட்டவுடன் தவித்து போனவள் அதெல்லாம் ஒன்றும் நடக்காது என்று அவரை சமாதானம் செய்துவிட்டு வீட்டிற்குள் வந்தாள்..



"சரி சரி எல்லாரும் ஜோடியா உங்க உங்க ரிசப்ஷனுக்கு என்ன டிரஸ் நகை தேவை எடுத்துட்டு வாங்க ஆல்ரெடி நாங்க வெச்சிருக்கோம் அதனால கல்யாண பொண்ணு கல்யாண பைய
ன் உங்களுக்கு தேவையானதை நீங்களே எடுத்துட்டு வாங்க"

என்று ருக்மணி ஆர்டர் போட்டுவிட அனைவரும் தங்கள் ஜோடிகளுடன் புறப்பட்டு அவர்களுக்கு பிடித்த ஷாப்பிங் மாலை சென்றடைந்தனர் ஆனால் அங்கே…..
 

Author: srija
Article Title: 13) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.