அத்தியாயம் 11
மறுநாள் காலை அனைவரும் ஆளுக்கு ஒரு வேலை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தனர் சும்மா உட்கார்ந்திருந்தால் அபி இல்ல ரஞ்சனி இருவரும் வெளுத்து வாங்கி விடுவார்கள்…
"சமையல்காரன் கிட்ட சொல்லியாச்சா இன்னும் எதுவும் முடிக்காம இருக்காங்களே பூஜை ரூம் பாருங்க இன்னும் பூ டெக்ரேசன் எதுவும் பண்ணாம அப்படியே இருக்கு அத்தை பாட்டி ரெண்டு பேரோட போட்டோவுக்கும் மாலை ரொம்ப கிராண்டா பண்ண சொல்லி இருக்கேன் ஆடர் யார் கிட்ட கொடுத்திருந்த ரஞ்சி"
என்று அபி பரபரப்பாக அங்கே இருக்கும் வேலைகளை செய்து கொண்டே கேட்க..
"நம்ம வீட்டிலேயே பெஸ்ட் செஃப் ஈவன்ட் மேனேஜர் சூப்பர்வைசர் இருக்கும் போது நீ எதுக்கு இதெல்லாம் கவலைப்படுற???
மகா டெக்கரேஷன் எல்லாம் பார்த்துக்கிறா காமினி பொருள் எல்லாம் வந்திருச்சா கவனிச்சுக்கிட்டு இருக்கா
விஷாகா இந்நேரம் சமையல் வேலை எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு மத்த வேலையை கவனிக்க ஆரம்பிச்சிடுவா என் பொண்ணுங்க இருக்குற வரைக்கும் ஒரு விஷயத்துக்கு எந்த ஒரு குறையும் வராது"
என்று பெருமையாக சொல்லி ரன்ஞினி மற்ற வேலைகளை கவனிக்க செல்ல..
அபி சிரித்துக் கொண்டு மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது காவியா அவளிடம் வந்து..
"மம்மி அவங்க எதுக்கு சும்மா சும்மா அவங்க பொண்ணுங்கள பத்தி அழுத்தமா உங்ககிட்ட சொல்லிக்கிட்டே இருக்காங்க எனக்கு ஒண்ணுமே புரியல அவங்க தானே இதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டு வீட்ட விட்டு போனாங்க நம்ம எவ்வளவு கெஞ்சி பார்த்தோம் வந்தாங்களா இப்ப ஏதோ நம்மதான் தப்பு பண்ண மாதிரி சும்மா சும்மா குத்தி காட்டி பேசிக்கிட்டே இருக்காங்க ஏன் உலகத்துல அவங்க பொண்ணுங்க மட்டும் தான் ரொம்ப புத்திசாலியா? ஏன் நானும் அக்காவும் என்னமா நம்ம அக்காவை புடிச்சு தானே அர்ஜுன் மாமா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு நம் அக்காவை எட்டு ஒன்பது வருஷமா நல்ல மருமகளா பெயர் எடுத்து அந்த வீட்டில் வேலைதானே பார்த்துகிட்டு இருக்கா இவங்க பொண்ணுங்க மட்டும் தான் சூப்பர் மாதிரி பேசுறாங்க என்ன சுத்தமா பிடிக்கல மம்மி"
என்று காவியா குறைபட்டுக் கொள்ள
"அடியே வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டியா எப்ப பாத்தாலும் அவங்க மேல பொறாமை போட்டு ஏதாவது பேசிக்கிட்டே இருப்பியா எனக்கே சந்தேகமா தான் இருக்கு நேத்து உன்னோட அக்கா எல்லாத்தையும் சொன்னா நிஜமா நீ நான் பெத்த பொண்ணு தானா எப்படி உன் மனசுக்குள்ள இவ்வளவு வக்கிர புத்தி வந்தது உனக்கு ஒரு விஷயம் நடக்கலைன்னா மத்தவங்க மேல இப்படித்தான் பழிய அப்பாட்டமா சம்பத்தி பேசுவியா ??
இதெல்லாம் சரி இல்ல காவியா இந்த மாதிரி எண்ணத்தோடு இருந்தா போற வீட்ல ரொம்ப கஷ்டம் நல்லவேளை நகுலன் தம்பிக்கு வேற வீட்ல பொண்ணு பாக்குறாங்க உன்ன கல்யாணம் பண்ணிட்டு அந்த தம்பி வாழ்க்கை என்ன ஆகும் சீக்கிரம் உங்க அப்பா கிட்ட சொல்லி உனக்கு ஒரு மாப்பிள்ளைய பாக்கணும் அதுவும் திமிருக்கு ஏத்தவனா"
என்று ஆத்மிகா மகளை சரமாரியாக திட்ட..
"அம்மு எதுக்கு பாப்பாவ திட்டிகிட்டு இருக்க பாப்பா இங்க வாடா"
என்று ரேயன் அழைத்தவுடன் அவ்வளவுதான் கண்களில் கண்ணீரை வரவைத்து நாடகத்தை தொட பெரியப்பா செல்லம் என்பதால் அவள் எது சொன்னாலும் கண்மூடித்தனமாக நம்பி விடுவான்..
"டாடி சீக்கிரம் அவங்கள அவங்க வீட்டுக்கு போக சொல்லுங்க நம்ம வீட்ல இருந்துகிட்டு ரொம்ப தான் பண்றாங்க நாளைக்கு நம்ம அண்ணங்களுக்கு அவங்க கூட டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க நம்ம அண்ணங்களுக்கு வேற நல்ல பொண்ணுங்களா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம் நமக்கு இந்த ஃபேமிலி வேணாம் யாரும் வேணாம்"
என்று தேம்பித் தேம்பி அழ..
"ஏண்டா பாப்பா உனக்கு நகுலன் கிடைக்கலைன்னு உங்க அண்ணங்களுக்கு புடிச்ச பொண்ணுங்கள அவனுங்க கிட்ட இருந்து பிரிக்கணும் அதானே உன்னோட ஆசை சரி உங்க அண்ணனுங்க அவங்க மனைவிகள் இல்லாம தனிமையில் கஷ்டப்பட்டுடும் அவர்களை நான் பிரிச்சு விட்டு நம்ம வீட்ல எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம் சரியா"
என்று அழுத்தி பேசிய உடன் அவளுக்கு அப்போதுதான் உரைத்தது தான் எவ்வளவு பெரிய சுயநலவாதி என்று பாவமாக பெரியப்பாவின் முகத்தை பார்க்க அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து..
"என்னோட லிட்டில் பிரின்சஸ் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன் அவளோட பெரியம்மா மாதிரி அனாவசியமா மத்தவங்க வாழ்க்கையில நாம எப்பவுமே எதையும் பண்ண கூடாது நமக்கு நடக்கிறது தானா நடக்கும் நாளைக்கு அவங்க என்ன முடிவு எடுத்தாலும் அது அவங்களோட வாழ்க்கையை பொறுத்து இருக்கு நம்ம எதுவும் தலையிட கூடாது சரியா டார்லிங்"
என்று அவன் சொன்னவுடன் அவ்வளவுதான் கீ கொடுத்த பொம்மை போல் தலையாட்டிக் கொண்டிருந்தாள் பெரியப்பா எது சொன்னாலும் கேட்கும் மகள் மகள் என்ன சொன்னாலும் கேட்கும் பெரியப்பா இவர்கள் பந்தத்தை அனைவரும் பொறாமைப்போடு தான் பார்ப்பார்கள் அடிக்கடி சாத்விகா கூட
'என்ன இருந்தாலும் உங்க டார்லிங்க் சொல்றதெல்லாம் கேட்பீங்க நான் சொல்றதெல்லாம் கேட்க மாட்டீங்க போங்கப்பா'
என்று அடிக்கடி கோபப்பட்டு கொண்டதும் உண்டு..
"சாரி டாடி நான் தெரியாம பேசிட்டேன் அது என்னன்னு தெரியல என்னால எதுவும் ஏத்துக்க முடியல இவங்கள பார்க்கும் போதெல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு "
என்று தன் மனநிலமையும் சொல்ல அவளை சமாதானம் செய்து ஒரு வழி ஆகிவிட்டனர் சிறிது நேரத்தில் அனைத்து வேலைகளும் கடகடவென்று நடந்தது..
அங்கே பிரம்மாண்டமாக பெரிய சைஸ் வைத்திருந்த பத்மாவதி மற்றும் அகிலாதேவியின் புகைப்படத்திற்கு அழகான மாலை கோர்க்கப்பட்டு அம்சமாக காட்சியளித்தது..
அது மட்டுமா அறையில் இருக்கும் ஒவ்வொரு பூ அலங்காரங்களும் அவ்வளவு அம்சமாக இருந்தது. அவை அனைத்தும் காமினி மற்றும் மகாலட்சுமி இருவரின் கைவண்ணம் தான் மேலும் அங்கே வருவோர்களை வரவேற்க நாற்காலி பூஜையறை அலங்காரம் போன்றவற்றை அனைத்தும் இன்னும் சிறப்பாக அலங்கரித்து வைத்திருந்தனர்…
பாட்டி மற்றும் அம்மாவின் புகைப்படத்தை பார்த்து ரேயன் அமர் கிருஷ்ணா மூவரின் கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது அதை யாரும் அறிய வண்ணம் துடைத்துக் கொண்டனர் பிறகு சாஸ்திரிகள் வந்து யாகம் செய்து பத்தாம் ஆண்டு திதியை சிறப்பாக செய்து முடித்தனர் உறவினர்களும் வந்து சென்று கொண்டிருந்தனர்…
காலை டிபன் அமோகமாக இருந்தது யார் கேட்டரிங் என்று அனைவரும் கேட்டு கேட்டு சென்று விசிட்டிங் கார்டு வாங்கி சென்றனர்..
மத்தியானம் உணவும் இன்னும் பிரமாண்டமாக தடபுடலாக வைக்கப்பட்டது அனைவரும் அந்த கேட்டரிங் சர்வீஸ் ஆட்களை மெச்சி தள்ளினர்..
"ஆமா ரன்ஞி கேட்டரிங் யாரு இது சுப்பிரமணி நாயுடு கேட்டரிங் இல்லையே புதுசா இருக்கு யாரு எந்த ஊரு??"
என்று அபி குடும்பம் அனைவரும் கேள்வி மேல் கேள்வி கேட்க..
"இது விஷாகா ஓட கேட்டரிங் சர்வீஸ் அவ ஹோம் பேக்கிங் அப்புறம் குக்கிங் கோர்ஸ் ஒன் அரை வருஷம் ஹைதராபாத்தில் படித்து முடித்து வந்தா இல்லையா தனியா பேக்கரி 10 பிரான்ச் இருக்கு அது மட்டும் இல்லாம தனியா கேட்டரிங் சர்வீஸ் வெச்சி இருக்கா அவளோட சென்டரில் இருந்து தான் எல்லாரும் வந்திருக்காங்க அதுவும் அதுல பாதி பேரு விஷாகா கிட்ட படிச்ச ஸ்டுடென்ட் தான் அவளோட கம்பெனியிலேயே சில பேருக்கு வேலை போட்டு கொடுத்து இருக்கா ஒரு சில ஸ்டூடண்ட் எல்லாம் வேலை பார்த்துகிட்டு இருக்காங்க"
என்று சொன்னவுடன் அனைவருக்கும் அதிர்ச்சி தான்..
இவளுக்கும் இவ்வளவு திறமையா வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டா அனைத்தும் தயக்கம் தயக்கம் மட்டும்தான் அவளிடம் இருக்கும் ஆனால் அவளுக்குள் இவ்வளவு திறமை இருப்பதை நினைக்க நினைக்க அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆச்சரியம் தான்
எவ்வளவு வார்த்தை பேசி இருப்பார்கள் ஒவ்வொருவரும் ஏன் இப்படி பயந்தாங்கோலியாக இருக்கிறாய் இப்படி எல்லாம் இருந்தா குடும்ப நடத்த முடியுமா வாழ்க்கையில் லாய்க்கு இல்லாதவன்னு பட்டம் கட்டி விட்டுடுவாங்க எதுக்கு தான் உருப்பட்டு வர போற தண்டம் தான் நீ வேஸ்ட்
ஏன் நேற்று கூட ஒருவன் நீ வாழ்வதற்கு லாயக்கு இல்லாதவ என்று சுடும் சொற்களால் எத்தனை பேர் அவளை வதைத்து இருப்பார்கள் ஆனால் அதை அனைத்தையும் பக்கம் வைத்து இதோ பாரு என் புகழை உலகமெங்கும் என்பது போல் உயர்ந்து நிற்கிறாள் ஆனால் இவ்வளவு பெருமைக்கு உரிய அவளோ அங்கே இருக்கும் தன் கேட்டரிங் குழுவோடு பேசி முடித்து அவர்களுக்கான செட்டில்மெண்ட் கொடுத்து வேனில் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தாள்..
"இந்த மூணு வருஷத்துல நம்ம விஷாகா ரொம்ப மாறிட்டா இல்ல அவளுக்குள் எவ்வளவு திறமைகள் இருக்கு எத்தனை பேர் வாழ்க்கையை பேசி இருப்பாங்க என்னோட மருமகள இப்ப பாரு ஊரே மெச்சும் படி ஆகிட்டா"
என்று ருக்மணி பெருமையாக பேச அனைவரும் அதை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் போது நகுலன் குறுக்க வந்து
"அத்தை அவ நிரந்தரமா உங்க வீட்டு மருமகளா இல்லையா எல்லாமே நாளைக்கு தெரிஞ்சிடும் சரி அப்பா இப்ப நமக்கும் நேரமாச்சு வாங்க அங்க வேலை எல்லாம் முடிஞ்சுதான் பாக்கணும் இன்னும் ரெண்டு நாள்ல நம்ம வீட்டுக்க கிரகப்பிரவேசம் நடக்கப்போகுது இல்லையா"
என்று சொன்னவுடன் அசோக் அர்ஜுன் இருவரும் நகுலன் உடன் புது வீட்டிற்கான வேலைகளை பார்க்க சென்று விட்டனர் அனைவரும் ஏதோ பெயருக்கு உண்டு முடித்தனர்..
இவர்கள் புது வீட்டு வேலை அனைத்து முடித்து வருவதற்கு இரவாகிவிட்டது இரவு உணவு அனைவரும் முடித்து அவரவர் அறைக்குள் தஞ்சம் அடைந்து விட்டனர் நாளை என்ன ஆகுமோ என்ற பீதியில்..
இங்கே மொட்டை மாடியில் ஆறு நபர்கள் எதிரெதிர் அணிகளாக அங்கு இருக்கும் சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தனர்..
வேறு யாரு
அனிருத் மகாலட்சுமி
ஆரவ் காமினி
ஹர்ஷா விஷாகா
"சோ முடிவா நாளைக்கு என்ன சொல்ல போறீங்க எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல பிகாஸ் நாங்க உங்களை வீட்டை விட்டு தொரத்தல எதையும் சொல்லல உங்களுக்காக தான் மூன்று வருஷம் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் நீங்களும் படிச்சு முடிச்சு இப்போ உங்களுக்குன்னு தனி ஐடென்டி கூட வந்து இருக்கு நல்ல பாப்புலர் ஆகிட்டீங்க இதுக்கு மேல உங்க விருப்பம்"
என்று ஆரவ் அழுத்தி சொல்ல மற்ற இருவரும் அதை ஆமோதித்தனர்..
"எங்க ரெண்டு பேருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை நாங்க உங்க கூட வாழ ரெடியா இருக்கோம் விஷாகா தான் என்ன சொல்ல போறான்னு தெரியல அதுக்காக இவ ஒருத்தி கஷ்டப்படுவா ன்னு சொல்லி உங்கள நாங்க விட்டு போக முடியாது இல்லையா அதுக்குன்னு உடனடியா எதையும் சொல்லுற மன நிலைமையில நாங்க இல்ல அதனால நாளைக்கு சொல்லலாம் இப்போ எங்களுக்கு தூக்கம் வருது வாங்க போலாம்"
என்று மகா மற்ற இருவரையும் அழைத்து சென்றுவிட..
"டேய் ஹர்ஷா அப்படி என்னடா பண்ண உன் பொண்டாட்டிய இவ்வளவு பெரிய விஷயமா மூணு வருஷமா நீங்க பிரிஞ்சி இருக்க காரணம் தான் என்ன??
நீ ஏதோ பெருசா ஒரு சம்பவம் நடத்தி இருக்க அதனால தான் அந்த பிள்ளை மனசு கஷ்டப்பட்டு போயிருக்கு அந்த பொண்ணு நாளைக்கு அந்த என்ன சொல்ல போகுதோ தம்பி மட்டும் கஷ்டப்பட்டு நாங்க மட்டும் பொண்டாட்டியோட மஜா பண்ண கூடாதுன்னு தான் சரி படிப்பு ஒரு காரணமா காட்டி எங்க பொண்டாட்டி எல்லாம் அனுப்பி வெச்சோம்
இனி என்னால் தாங்க முடியாது ராசா "
என்று அனிருத் ஏக்கமாக பெருமூச்சு விட ஆரவ் சிரித்துக்கொண்டே
"அது சரி பூனை மாதிரி இருப்ப இவ்வளவு பேசுறியா பாரு சாது மிரண்டா காடு தாங்காது ஊமை மாதிரி இருந்தா நம்ம அண்ணன் அனிருத் கூட இப்ப ஆரம்பிச்சுட்டான் ஹர்ஷா எல்லாம் உன் கையில தாண்டா இருக்குது"
என்று சொல்லிவிட்டு இருவரும் சென்று விட தனிமையில் ஹர்ஷா வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு..
"மூணு வருஷமா நான் விஷாகாவுக்கு புருஷனா இருந்தாலும் சின்ன வயசுல இருந்து நீ தானே ரதி எனக்கு காதலா இருக்க எங்க இருந்து நீ வந்தேன்னு தெரியாது ஆனா இதுவரைக்கும் பார்த்ததும் கிடையாது
நீ கொடுக்கிற ஒவ்வொரு பொருளையும் சேர்த்து வைத்து அழகு பார்த்துகிட்டு இருக்கேன் கடந்த மூன்று வருடமா நீ எங்க போனனு தெரியல என்னோட கல்யாண செய்தி உனக்கு தெரிஞ்சி போச்சா யாராவது உன்கிட்ட சொல்லிட்டாங்களா அதுவும் தெரியல
எனக்கு ஒரே ஒரு ஆசை தாண்டி உன்ன ஒரு தடவ பார்க்கனும் பாவம் விஷாகா என்னால பல கஷ்டங்களை அனுபவிச்சா நேத்து கூட அவள குத்தி குத்தி கிழிச்சிட்டேன் ஆனா எதையும் எடுத்துக்காம எப்பவும் போல இருக்கா அவ நல்லாவும் இருக்கா நான் மட்டும்தான்டி இருக்கொல்லி எறும்பு மாதிரி தவிச்சுக்கிட்டு இருக்கேன் எங்க இருக்க ரதி"
என்று கண்கள் வழியும் கண்ணீரைத் துடித்துக் கொண்டு ஒரு பக்கம் விஷாகாவின் பாவமான முகமும் ஒரு பக்கம் உருவமே இல்லாமல் ரதி என்கிற பெயர் வைத்த அ
வன் கற்பனையும் போட்டி போடு நின்று கொண்டிருந்தது..
ஆனால் இங்கே அவனது ரதியோ தன் இரண்டு வயது குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டிருந்தாள்..

Author: srija
Article Title: 11) ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.