1) தீயே 🔥

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
94
Reaction score
1
Points
8
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 1

விஷ்வ மித்ரன் பேலஸ்...

என்று மிகப்பெரிய பலகை தாண்டிய அந்த ராட்சச கேட் திறக்கப்பட்டது அங்கே ஏகப்பட்ட மனிதர்கள் அங்கும் இன்னும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்..

கேட்டரிங் நபர்கள் எல்லாரும் போய் சேர்ந்தார்களா ஸ்டைலிஷ் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ஏம்பா அந்த போட்டோகிராபர் போய் சேர்ந்துட்டாரா..

என்ற கேள்விகள் அதிரடியாக வந்து கொண்டிருந்தது...

"அண்ணா நமக்கு இன்னும் டைம் இருக்கு இவங்க எல்லாரும் முன்னாடி போய் சேர்ந்தால்தான் அங்க வேலை நடக்கும்"

என்று அங்கு இருப்பவர்களை வேலை சொல்லிக் கொண்டு வந்தான் அந்த வீட்டின் கடைக்குட்டி தர்ஷன் மித்ரன்..
வயது 30 சாக்லேட் பாய் என்று அனைவராலும் அழைக்கப்படும் கேடி பிலே பாய் எது இல்லாமல் இருப்பானோ இல்லையோ வாரம் ஒரு முறை அல்லது இரு முறை பெண் தோழிகளோடு டேட்டிங்ஸ் எல்லாம் இருக்க மாட்டான்..

"டேய் தர்ஷன் இதெல்லாம் நமக்கு சொல்லனுமா ஆல்ரெடி எல்லாரும் கிளம்பிட்டாங்க இப்போதைக்கு ஒர்க்கர்ஸ் மட்டும் தான் இருக்காங்க அவங்களும் கிளம்பிட்டு இருக்காங்க நீ நம்ம பாட்டு என்ன பண்றாங்க போய் பாரு"

என்று தனது சகோதரனுக்கு சொல்லிவிட்டு வெளியே கண்காணிப்பு வேலை பார்க்க சென்று விட்டான் அசோக் மித்ரன் தர்ஷன் மித்ரனுக்கு முன்பாக பிறந்தவர் 32 மாநிறத்து அழகன் கண்களில் ஏதோ ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும் அது என்னவென்று அவனுக்கு தான் வெளிச்சம் இவன் ஸ்ரீராமனுக்கே டாப் கொடுக்கும் அளவிற்கு உத்தமனோ உத்தமன்..

"ஐயா எல்லாரும் கிளம்பியாச்சு இப்ப நாங்களும் கிளம்பனும்"என்று வேலை ஆட்களின் தலைமை நிர்வாகி ஒருவர் சொல்ல தர்ஷன் அவர்களை வழி அனுப்பி வைத்து தன் பாட்டி எங்கே இருக்கிறார் என்று பார்க்க அவர் அழகிய பஞ்சாபி பட்டியாலா சுடிதார் அணிந்து கொண்டு தோட்டத்தில் இருக்கும் நாற்காலையில் அமர்ந்து கொண்டு டேபில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்..

"என்ன தாதிமா இவ்வளவு சீக்கிரம் ரெடியா என்ன பண்ணிட்டு இருக்க நமக்குன்னு டைம் இருக்குல்ல சீக்கிரம் போய் நீ தான் நமக்கு என்ன மரியாதை??"

"டேய் இப்ப வேணா நீங்க மிக பெரிய இந்த மாதிரி மேனேஜ்மென்ட் நடத்தி காசு சம்பாதிக்கலாம் ஆனா ஒரு காலத்துல உங்க தாத்தா சாதாரண மேடை அலங்காரம் நிபுணர் உன்னோட அப்பா கேட்டரிங் மற்றும் கல்யாண அலங்கார நிபுணர் தான் என் பிள்ளையும் மருமகளும் போன பிறகு உன்னோட அண்ணன் விஷ்வா தன்னோட ஆசை எல்லாம் மறந்து படிச்ச படிப்பையும் விட்டு 19 வயசுல இந்த தொழிலை கையில எடுத்து 15 வருஷமா கடின உழைப்பில் அவனுக்கு தனியா நீங்களும் சேர்ந்து இப்போ இவ்வளவு பெரிய ஈவன் மேனேஜ்மென்ட் டீம் அப்படின்னு நம்ம குடும்பத்துக்கு பெயர் வாங்கி கொடுத்திருக்கான் உங்க தாத்தாவுக்கும் உங்க அப்பாவுக்கும் ஒரு பழக்கம் இருக்கு என்னதான் நம்ம முதன்மையா இருந்தாலும் ஒரு வீட்ல நம்மள நம்பி ஆர்டர் கொடுத்து இருக்காங்கன்னா நாம முன்னாடி போய் நின்னு எல்லாத்தையும் கண்காணிக்கணும் அதனால தான் எம்எல்ஏ வீட்டு கல்யாணத்துக்கு நானும் இப்பவே கிளம்பலாம்னு இருக்கேன் மரியாதையாக வந்து கூப்பிட்டாங்க நாம முன்னாடி போய் நின்னா வேலைக்கு வேலை நடக்கும் எம்எல்ஏவும் சந்தோஷப்படுவார்டா"

என்று பாட்டி சொல்ல என்னதான் பாட்டி பழைய பழக்க வழக்கத்தில் இப்படி பேசினாலும் இப்போது இருக்கும் காலத்தில் கொஞ்சம் இரு மாப்பு காட்டினால் தான் மரியாதை கிடைக்கும் அது அவருக்கு தெரியவில்லை சரி பொறுமையாக புரிந்து கொள்வார் என்று தர்ஷன் அங்கு இருந்து சென்றுவிட அசோக் டென்ஷனில் இருந்தான் தன் அண்ணன் இன்னும் அறைய விட்டு வெளியே வரவில்லை என்று...

அவர் வந்தால் எல்லாம் நீட்டாக இருக்க வேண்டும் என்னதான் வேலை சரியாக செய்தாலும் தன் அண்ணனிடம் ஓகே என்ற பதில் வருவதற்குள் அண்ணன் தம்பி இருவரும் தலைக்கே நின்று விடுவார்கள் அவ்வளவு சீக்கிரம் விஷ்வா எதையும் ஒப்புக்கொள்ள மாட்டான் அவன் செய்யும் வேலையில் நேர்த்தி இருக்க வேண்டும்..

"டேய் எல்லாமே ரெடி ஆயிடுச்சு இப்ப நாம ரெண்டு பேரும் ரெடி ஆகணும் இல்லனா அண்ணன் நம்மள சாகடித்துவிடும் வாடா போகலாம்"என்று அசோக்கை இழுத்துக் கொண்டு தர்ஷன் சென்று விட இங்கே தனது அறையில் வெற்று உடலோடு இடுப்பில் டவல் மட்டும் கட்டிக்கொண்டு கண்ணாடி முன்பாக வந்து தன்னையும் ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா...

நாம ஹீரோ எப்படி இருக்காரு என்று பார்க்கலாம்

34 வயது கட்டழகு வாலிபன் ஆனால் பார்ப்பதற்கு முப்பது வயசுக்குள்ள தான் பா இருக்கும் இவருக்கு என்று சொல்வது போல் இருப்பான் உரம் ஏறிய புஜம் கட்டு மஸ்தான தேகம் தாடி ட்ரிம் செய்து மீசைய முறுக்கி வைத்திருப்பான் இவர்கள் தமிழ்நாட்டில் வசித்தாலும் பூர்வீகம் பஞ்சாபியை சேர்ந்ததால் சற்று தங்கள் கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள்...

கண்கள் பிறப்பிலிருந்து சாம்பல் நிறத்தை பூசிக் கொண்டது அதனால் அவன் கந்தர்வ கண்களை ஒரு முறை பார்க்கத் தோன்றும் தன் கையில் தங்க காப்பை முறுக்கிக் கொண்டு அங்கே ஏற்கனவே வைத்திருந்த நீல நிற சர்வாணி அணிந்து கொண்டு கண்ணாடி முன்பாக வந்து தன் தலைக்கு ஜெல் வைத்து ஒருமுறை தன் கம்பீரத் தோற்றத்தை பார்த்துக் கொண்டிருந்தான்...

தன்னைத்தானே ஒரு முறை பார்த்துக் கொண்டான்

'ஆமா பெரிய இவன் வயசான கிழவி இரண்டு சின்ன பசங்கள வச்சிக்கிட்டு இவன்லாம் வந்துட்டா நம்ம கூட போட்டியா இவனை வளரவே விடக்கூடாது'

என்று சொந்த பந்தங்கள் தன் அப்பா சேர்த்து வைத்து சம்பாதித்த சில சொத்துக்களை அடமானம் என்ற பெயரில் மொத்தமாக வாங்கிக்கொண்டு அவர் இறக்கும் தருவாயில் தங்களை ஏமாற்றி விட தன் அப்பாவை நம்பி இருந்த நான்கு ஊழியர்களை வைத்து அப்பாவின் தொழிலான இந்த மேடை அலங்காரம் சமையல் வேலை இரண்டையும் தன் சகோதரர்கள் உதவியுடன் படித்துக் கொண்டு செய்து கொண்டிருந்தாள் விஷ்வா..

தனக்கு போட்டியாக ஒரு வாலிபன் வருகிறானா என்று இவனுக்கு முன்பாக இருந்த சில மூத்தோர்கள் இவன் எப்படியாவது ஒதுக்கிவிட வேண்டும் என்று எவ்வளவு திட்டம் போட்டாலும் அது நடைபெற முடியவில்லை இளம் ரத்தம் சில புதிய ஐடியாக்களை கொண்டு வந்து திருமணத்திற்கான அனைத்தையும் ஒரே பேக்கேஜில் செய்து முடித்து இப்பொழுது அனைவரின் பார்வையில் தங்கள் மீது வைக்கும்படி செய்திருக்கிறான் விஷ்வா அவரது சகோதரன் உதவி இல்லாவிட்டால் இது நடைபெறாது ஒருவன் சமையல் டிபார்ட்மெண்ட் ஒருவன் அலங்கார டிபார்ட்மென்ட் ஒருவன் போட்டோகிராபர் மேக்கப் பாட்டு எப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை சார்ந்தவர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு சிறப்பாக நடத்தி வந்து கொண்டிருக்கிறான்..

மேலும் போதாக்குறைக்கு ஒரு மிகப்பெரிய ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வைத்திருக்கிறான்..

இதெல்லாம் விடாமுயற்சி கடின உழைப்பு தான் இவர்களுக்கு சாத்தியமானது...

தன்னை தானே செதுக்கிக்கொண்டு ‌ வாழ்ந்து வரும் ஒரு சுயம்பு அவன்..

கண்களால் கர்வத்தை தத்தெடுத்து கண்ணாடியில் தன் கம்பீரத் தோற்றத்தை பார்த்தவன் விஷ்வா ஆல்வேஸ் கிரேட் என்று தனக்கு தானே மோட்டிவேஷன் கொடுத்து விட்டு

கீழே ஹாலிற்கு வர அதே சமயம் அவனது பாட்டி இரண்டு சகோதரர்கள் அனைவரும் அவனை வரவேற்க..

அவன் பார்வையிலேயே பல கேள்விகளை தத்தெடுத்துக்கொண்டு பார்க்க அண்ணனின் பார்வைக்கான கேள்விகளை அர்த்தம் புரிந்து கொண்ட இளையவர்கள் இருவரும்..

"அண்ணா ஆல்ரெடி மேக்கப் ஆர்டிஸ்ட் அங்க வேலை நடந்துக்கிட்டு இருக்கு போட்டோகிராபர் எல்லாத்தையும் செட் பண்ணிட்டு இருக்காரு சமையல் வேலை எப்பயோ ஆரம்பிச்சாச்சு ஒரு மணி நேரத்துல முடிஞ்சா பந்தி கூட போட்டு வாங்கலாம் டிஜே ஆல்ரெடி ஆரம்பிச்சு அங்க போயிட்டு இருக்கு இன்னும் அரை மணி நேரத்துல நம்ம ரீச் ஆனா நம்ம கரெக்ட் டைம்க்கு மண்டபத்துக்கு போயிடலாம். எம்எல்ஏ சார் ரொம்ப ரேஸ் பண்ணி கூப்பிட்டு இருந்தாரு"

என்று அசோக் தர்ஷன் இருவரும் மாறி மாறி சொல்ல விஷ்வா சரி என்று தலையாட்டி தனக்கான ஸ்பெஷல் லம்போகினி காரில் தனியாக செல்ல பாட்டியை அழைத்துக் கொண்டு இவர்கள் தனி காரில் வந்தனர் சகோதரர்கள் முன்பாகவே சென்று இருக்க விஷ்வா பொறுமையான வேதத்தில் தனது பயணத்தை மேற்கொண்டிருக்கும் போது

ஒரு பைக்கில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தம்பதிகள் போல முன்பாக ஒரு குழந்தையும் அந்த பெண்மணி மடியில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டு போகிறார்கள் அவனுக்கு சிறு வயதில் தன் அப்பா ஞாபகம் வந்தது இப்படித்தான் மூவரையும் அமர வைத்து தன் அம்மாவையும் அமர வைத்து ஒரே பைக்கில் ரவுண்டு அடிப்பார் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் தன் அப்பா இருக்கும் வரை உலகம் என்றால் என்ன மனிதர்கள் என்றால் என்ன என்று அவனுக்கு தெரியவில்லை 19 வயதில் தன் அப்பா இறந்து போன பிறகு அவர் தொழிலை கையில எடுத்து குடும்பத்தை காப்பாற்றும் பொழுது தானே இது உலகில் வாழும் மனிதர்கள் வேஷத்தில் இருக்கும் பல கொடிய மிருகங்களை கண்டு கொண்டான் தன் அப்பா அம்மாவை மிகவும் நினைத்து கவலைப்பட்ட பெருமூச்சு விட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது

சரியாக அவன் எதிரே ஒரு ஸ்கூட்டி வந்து மோதியது...

"இந்த மாதிரி ஆட்களுக்கு இதே வேலையா போச்சு பணக்கார வண்டிய பார்த்தவுடன் மோதிரம் மாதிரி மோதி வந்து கீழே விழுந்து காசு வாங்கிட்டு போறது யூஸ்லெஸ் ஃபெல்லோஸ்"

என்று சலிப்பாக கதவை திறந்து வெளியே வந்து பார்க்க..


ஸ்கூட்டி வந்து சாய்ந்திருக்க அருகில் ஒரு பெண் தன் கரங்களை துடைத்துக் கொண்டு ஹெல்மெட் சரி செய்து கொண்டு எழுந்து நின்று தன் எதிரே இருந்த விஷ்வாவை பார்த்து முறைத்துக் கொண்டு..

"என்கிட்ட லைசென்ஸ் இருக்கு ஹெல்மெட் கூட போட்டு இருக்கேன் சூப்பரா வண்டி ஓட்டுவேன் நீங்க எதுல வரீங்க தெரிஞ்சு அவ்ளோ தூரத்திலிருந்து நீங்க நினைச்சிருந்தா அந்த பக்கம் டர்ன் பண்ணி இருக்கலாம் சரி நான் இந்த பக்கம் டர்ன் பண்ணலன்னு பார்த்தா கரெக்டா நீங்களும் அந்த பக்கம் வரீங்க கார் வாங்கி நான் ஒரு பணக்காரன் அப்படின்னு பவனி உலா வந்தா மட்டும் போதாது எதுல என்ன வருதுன்னு பாக்கணும் கவனத்த வச்சுக்கிட்டு வண்டி ஓட்டுங்க மிஸ்டர் பணக்காரர் "

எடு நக்கலாக பேசி முடித்து அவள் அங்கிருந்து சென்று தன் ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு கிளம்ப பார்க்க விஷ்வாவுக்கு அவமானமாக இருந்தது மேலும் இப்பொழுது வண்டிக்காரன் தப்பு செய்தாலும் இப்பொழுது கார் காரன் வீடு தானே பழி வருகிறது இதில் நான் தான் தவறு செய்தேன் அது அந்த பெண் அனைவரும் முன்பாக தன்னை அவமானப்படுத்தி பேசுவது விஷ்வாவுக்கு மிகவும் ஆத்திரம் வந்தது செல்லப் போனவரின் கரங்களை கெட்டியாக பிடித்து..

"எவ்வளவு தைரியம் இருந்தா என்னைய அவமானப்படுத்தி இருப்பேன் நான் யார் தெரியும??"

"நீங்க யாரா இருந்தா எனக்கு என்ன வண்டி ஒழுங்கா ஓட்டிட்டு போங்கன்னு சொன்ன அதுவே ராஜாவுக்கு இவ்வளவு கோவம் வருதா அப்பா சொத்துல ஜாலியா டான்ஸ் ஆடுறவர் போல அதான் பார்த்தாலே தெரியுது வழி விடுங்க எங்களுக்கு உங்களை மாதிரி பொழுது போக்குவதற்கு எங்கேயும் போக முடியாது வீட்டுக்கு போகணும்"

என்று சலிப்பாக அவனை விட்டு விலகி தந்து ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு சித்தாக பறந்து விட கோபத்தில் விஷ்வ தன் கார் டேஷ் போர்டில் தன் கையை முட்டி கோபத்தை வெளிப்படுத்த அப்பொழுது சரியாக அசோக் நம்பரில் இருந்து போன் வந்தது நேரம் ஆனது என்று உணர்ந்தவன் தன் தமிழனுக்கு இது வந்து விடுகிறேன் என்று சொல்லி காரை வேகமாக மண்டபத்தில் விட அனைவரும் அவனை மரியாதையாக வரவேற்றனர் கௌரவத்திற்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்து சாப்பிட்டு முடித்து அனைவரும் கிளம்பி வந்து விட்டனர்..

அன்று இரவு விஷ்வாவுக்கு உறக்கம் வரவே இல்லை எப்படி தன்னை அவமானப்படுத்துவாள் இதுவரை அனைவரும் முன்பாக பெருமை பெயர் வாங்கினவங்களுக்கு ஒரு சின்ன அவமானம் கூட தாங்க முடியவில்லை
..
வெற்றி மார்பில் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டிருந்தாள் நீச்சல் குளத்தில் முடியும் அளவிற்கு நீந்தி முடித்து அவனுக்காக இருக்கும் ஓட்காவை எடுத்து ஒரு மிடறு விழுங்கியவன் தன்னை சரி செய்து கொண்டு..

"அந்த மாதிரி சீப் நியூஸ்லெஸ் பர்சன் பத்தி நான் எதுக்கு நினைக்கணும் அடுத்து மிகப்பெரிய ஆர்டர் ஒன்னு வருது எனக்கு ஒரு பர்சனல் செகரட்டரி ஏற்பாடு பண்ணனும் அப்பதான் நமக்கு வேலை கரெக்ட்டா இருக்கும்"

என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் மீண்டும் பழைய விசுவாவாக மாறி தன்னுடைய அன்றாட வேலையை பூர்த்தி செய்து கொண்ட இதோ இரண்டு நாட்களில் அவனுக்கு பர்சனல் செக்யூரிட்டி வேலைக்காக நீ நான் என்று போட்டி போட்டு வரிசை கட்டி அவன் வேலை செய்யும் முன்பாக இருக்கும் கெஸ்ட் ஏரியாவில் அமர்ந்திருந்தனர் ஆண் பெண் இரு பாலர்களுக்கும் வாய்ப்பு உண்டு என்பதால் அனைவரும் நன்றாக தங்களை பிரிப்பேர் செய்து கொண்டு காத்திருந்தனர்..

"இந்த மாதிரி ஒரு ஆப்பர்ச்சியூட்டி யாருக்கு கிடைக்கும் ஒரே ஒரு வேக்கன்சி ஆனா லக் மாசம் ஒரு லட்சம் சம்பளம் அதுவும் விசுவாசம் பேலஸிலேயே நமக்கு இருக்கிறதுக்கான வசதி இதெல்லாம் அதிர்ஷ்டம் ஃபேமிலியாக இருந்தால் பக்கத்திலே குவாட்டர்ஸ் தர போறாங்களாம் இதுக்காக தானே இத்தனை பேர் காத்துக்கிட்டு இருக்கோம் யாருக்கு கிடைக்கப் போகுதோ அதுவும் விசுவாச பக்கத்துல ஒரு வேலை பொண்ணுங்க தான் முதல்ல போட்டி போட்டுகிட்டு வருவாளுங்க"

என்று ஒரு பக்கம் ஆண்கள் கூட்டம் பேசிக்கொண்டிருக்க

"எப்படியாவது இந்த விஷ்வாவைய வளைகுள்ள விழுந்து வைக்கணும் எப்படியாவது வேலையில் சேர்ந்து அவனை மயக்கி கல்யாணம் பண்ணி செட்டில் ஆகணும்"என்று முட்டாள் நாவல்கள் படித்து கரைத்துக் குடித்து ஒரு ஆணை மயக்குவதற்கு தன் பெண்மை இழக்க கூட தயார் என்பது போல் தான் பெண் என்பதை மறந்து ஒருத்தி போதையில் பேசிக் கொண்டிருக்க அவளோடு சேர்ந்து சில பெண்களும் ஆமாம் கூட சில பெண்கள் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பது போல் இருக்க இத்தனை கூட்டம் வரிசையில் இந்த வேலை கிடைக்குமா கிடைக்காதா என்று மிகவும் பதட்டத்தோடு நகத்தை கடித்துக் கொண்டிருந்தாள் இரண்டு நாட்களுக்கு முன்பு விஷ்வாவை போடா பணக்காரர் என்று கி
ண்டல் செய்த நம் நாயகி மேனக வர்ஷினி..

இந்த
விஷ்வாமித்திரனை மயக்கி விடுவாளா இந்த மேனகை...???
 

Author: srija
Article Title: 1) தீயே 🔥
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.