எபிலாக் ராகம்

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
74
Reaction score
1
Points
8
Location
india
Website
srijanovels.com
எபிலாக்

"விஷாகா உன்ன ரூம்ல இருக்க சொன்னா எதுக்கு இங்க வந்து வேலை பார்த்துட்டு இருக்க இப்ப உனக்கு எட்டாவது மாசம் நடந்துக்கிட்டு இருக்கு கொஞ்சம் கேர்ஃபுல்லா இருடி"

என்று எட்டு மாத வயிற்றை சுமந்தவாறு தோட்டத்தில் இருக்கும் உதிர்ந்த இலைகளை பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தாள் விஷாகா..

"நீங்க ரொம்ப பண்றிங்க ஹர்ஷா ஆல்ரெடி எனக்கு நார்மல் டெலிவரி தானே ஆச்சு இந்த மாதிரி குனிஞ்சு நிமிந்து வேலை செஞ்சா தான் அடுத்த மாசம் உங்க பிள்ளை சுகமா சுகப்பிரசவத்தில் பிறக்கும்"

என்று அவனை சமாதானம் செய்ய

"உன்கிட்ட போட்டி போட்டு ஜெயிக்க முடியுமா இந்த ஜூஸ் குடி"

என்று அவனே அவளுக்கு ஆரஞ்சு பழம் ஜூசை புகட்டிக் கொண்டிருக்கும் பொழுது..

“ஆமா நம்ம முதல் பாப்பா பொறக்கும் போது உங்க கூட இல்ல நான் பொய் தான் சொல்லி இருந்தேன் நீங்க எப்படி உடனடியா இவ நம்ம குழந்தைதான் அப்படின்னு எப்படி கண்டுபிடிச்சீங்க எனக்கு தெரிஞ்சு டி என் ஏ ரிப்போர்ட் வர கண்டிப்பா லேட் ஆகி இருக்கும் நீங்க சீக்கிரமா எதையோ வெச்சு கண்டுபிடிச்சு இருக்கீங்க என்னது இத்தனை வருஷமா நானும் கேட்கலாம் என்று நினைக்கும் போது மறந்து போயிடுவேன் இப்ப ஞாபகம் வந்தது சொல்லுங்களேன்” என்று ஆர்வமாக மனைவி கேட்க தட்ட முடியாதவன் சிரித்துக்கொண்டே

“ நம்ம மறுபடியும் ஒன்று சேர்ந்த பிறகு ஒரு சீமந்த ஃபங்ஷனுக்கு போக அங்க நீ அந்த டாக்டர் ஆண்டி கிட்ட ரொம்ப நேரமா பயந்து பயந்து பேசும் போது எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு கொஞ்ச நாள் பிறகு இந்த பாப்பாவோட ஆட்டிடியூட் சில ஆக்டிவிட்டி எல்லாம் என்ன மாதிரியும் உன்ன மாதிரியும் இருக்குது அதனாலதான் என்ன பண்றது தெரியாம முதல்ல டாக்டர்கிட்ட போய் உண்மையை தெரிஞ்சுகிட்டேன் மேடம் ஏதாவது சொல்வீங்கன்னு பார்த்தேன் கடைசி வரைக்கும் சொல்லல “

என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடிக்க பாவி மகன் அனைத்தையும் தெரிந்து கொண்டு தன்னிடம் விளையாடி இருக்கிறான் இது போதாக்குறைக்கு மீனாட்சி அம்மாவிடமும் சந்திரலேகா டாக்டரிடமும் கணவனுக்கும் எனக்கும் பிறந்த குழந்தைதான் ஆனால் அவர் அவர் காதலி ரதி என்று நினைத்து என்னோடு வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சி என்பதால் இவள் ரதியின் குழந்தை என்று இத்தனை நாட்களாக அனைவரிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறாள்..

இப்படி இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது…

"விஷூ மம்மி "

என்று பிஞ்சு பாதங்கள் பூமியில் தத்தி தத்தி பதிய அவளிடம் கைகளை தூக்கி நிற்க..

தேவதை வம்சம் நீயோ என்பது போல் தெய்வ கடாக்ஷம் நிறைந்த பிஞ்சு முகத்தை பார்த்தவுடன் வெடிக்கென்று தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள் மகளை..

"அடியேய் கொஞ்சம் கூட உனக்கு கேர் என்பதே இல்லை இந்த மாதிரி டைம்ல நீ வெயிட் அதிகமா தூக்கக்கூடாது குட்டிமா டாடி கிட்ட வாங்க"

என்று கரங்களை நீட்ட அவளோ முடியாது என்பது போல் அவள் கழுத்தை கட்டிக் கொண்டாள்


அவ்வளவுதான் இவளை தூக்கி இடுப்பில் வைத்தவுடன் மூக்கு வேர்த்தது ஒரு கூட்டத்திற்கு வரிசையாக வந்து நின்று விட்டனர்..

அத்தை என்று ரோகன் ரோகினி மற்றும் காவியாவின் மகள் ரோனிஷா அதற்கு பின்னால் மம்மி, அம்மா என்று காமினியின் இரண்டு ஆண் பிள்ளைகளான ஹரிஷ் க்ரிஷ் மகாவின் மகள் ஹர்ஷிதா அதன் பிறகு விஷாகா மற்றும் ஹர்ஷாவின் மூத்த புதல்வி ஹர்ஷவர்தனியும் இரண்டாவது மகன் கிஷோரும்..

இப்பொழுது விஷாகா தூக்கி வைத்திருப்பது காமினியின் மூன்று பிள்ளைகளில் முதல் பெண் குழந்தையான அமிர்தாவை

காமினி பிள்ளைகள் மகாவின் மகள் மற்றும் விஷாகாவின் மகனுக்கு இப்பொழுது ஐந்து வயது தொடங்கி இருக்கிறது இப்பொழுது விஷாகா மூன்றாவது முறை கர்ப்பம் தரித்திருக்கிறாள் அனைத்தும் அவர்கள் காதல் சின்னம் தான் மாதத்தில் மூன்று நாள் மட்டும் தான் விலக்கு மத்தபடி அட்டை போல் ஒட்டிக் கொள்வான் மனைவியிடம்...

"அதான பார்த்தேன் ஒருத்தி வந்துட்டா என்னடா மத்த கும்பல எல்லாரும் காணோம்னு ஈவினிங் பார்ட்டி இருக்கு ரெடி ஆகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க"

என்று காவியா அங்கே வந்து நிற்க பிறகு மகா காமினி அனைவரும் வந்து நின்றனர்..

"பசங்களா டைம் ஆச்சு நீங்க லேட் பண்ணீங்கன்னா யாருக்கும் ஒரு பீஸ் கேக் கூட நான் தரமாட்டேன்"

என்று சாத்விகா சொன்னது தான் தாமதம் அனைத்து பிள்ளைகளும் உள்ளே ஓடி சென்று விட்டது...


இன்று மகாவின் இரண்டாவது பிள்ளை அகிலாவுக்கு முதல் பிறந்தநாள் வீட்டில் தாத்தா பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் அனைவரும் அவர்களை சூழ்ந்து அமர்ந்து கொள்ள அகிலா செய்யும் சேட்டைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு அனைவரும் ரசித்துக் கொண்டிருந்தனர்..

"வர்தினி பாப்பா தான் அகிலா பாட்டி மாதிரி பிகேவ் பண்றான்னு பார்த்தா இந்த குட்டி அகி டோட்டலி பாட்டி தான் இப்பவே எவ்வளவு பொறுப்பா இருக்கா"

என்று காமினி அக்கா மகளுக்கு திருஷ்டி கழிக்க..


"சரி சரி நேரமாச்சு இல்ல அப்புறம் விஷாகா இன்னைக்கு செக்கப் போகணுமே போயிட்டு சீக்கிரம் வருவீங்களா??"

என்று பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக கேட்க..

"நீங்க என்னதான் என்ன நோட் பண்றீங்க இன்னிக்கி ஒரு நிமிஷம் கூட மிஸ் பண்ண கூடாது அதுக்காக நேற்றே செக்கப் எல்லாம் போயிட்டு வந்தேன் உங்க பேர பிள்ளைங்க ரெண்டு பேரும் வயித்துல நல்லா தான் இருக்காங்க இன்னொரு விஷயமும் சொல்லி அனுப்புனாங்க அடுத்த தடவை பிரகனண்ட் ஆகி ஹாஸ்பிடல் பக்கம் வந்தா அவ்வளவுதான்னு"

என்று சொல்லி சிரிக்க..

"அது எங்க கிட்ட சொல்லக்கூடாது எங்க பிள்ளை கிட்ட சொல்லணும்"

என்று ரேயன் கிருஷ்ணா அமர் மூவரும் ஒன்றாக சேர்ந்து கமெண்ட் அடிக்க..

"அட என்னங்க நீங்க வயசு தகுந்த மாதிரி பேசுங்க"
என்று அவரவர் மனைவிமார்கள் கணவனை கண்டிக்க அவர்களோ அவர்களைப் பற்றி கண்ணடித்து ஒரு பக்கமாக சிரித்துக் கொண்டிருந்தனர்..

"ஆத்தாடி ஆத்தா எனக்கு ரெண்டு பசங்க மகாவுக்கு ரெண்டு பிள்ளைங்க காமினிக்கு மூணு காவியாவுக்கு ஒண்ணே ஒண்ணு ஹர்ஷாவுக்கு கையில ஒன்னு இடுப்புல ஒன்னு வைத்துள்ள ரெண்டு அப்பப்பா திருஷ்டி சுத்தி போடணும் அன்னைக்கு ஒரு நாள் சொன்னாங்க பிளேஸ் ஸ்கூல் அப்படின்னு உண்மையிலேயே பிளே ஸ்கூல் தான் ஓபன் பண்ணனும் போல"


என்று அர்ஜுன் அனைத்து குழந்தை எண்ணிக்கைகளையும் பார்த்து கிண்டல் அடித்து சிரிக்க அனைத்து பெண்களும் குழந்தையை சுற்றி திருஷ்டி கழித்தனர் யாரு கண்ணும் படக்கூடாது என்பதற்காக...

கொஞ்ச நேரத்தில் பார்ட்டி ஹால் தயாராகி விட புத்தாடை அணிந்து கொண்டு அனைவரும் அங்கே இங்கே என்று வலம் வந்துக் கொண்டிருந்தனர் தேவியை மகா மற்றும் அனிருத் இருவரும் ஒரு சேர தூக்கிப்பிடித்து மூன்றெடுக்கு பார்பி கேர்ள் கேக் கட் செய்ய அவளும் மகிழ்ச்சியாக கேக் கட் செய்து தன் சகோதர சகோதரிகளுக்கு பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சியாக பிறந்த நாளை கொண்டாடினாள்...


"அப்பாடா இதோடு விஷாகாவுக்கு குழந்தை பிறந்து அவங்களோட ஃபர்ஸ்ட் பர்த்டே கொண்டாடற வரைக்கும் நமக்கு வேலை இல்லை"

என்று அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர் இங்கே அர்ஜுன் நகுலன் அசோக் ரஞ்சனி காவியா சாத்வி கா அவர்களின் பிள்ளைகள் அனைவரும் அவர்கள் வீட்டிற்கு சென்று விட...

"என் அண்ணன் தம்பிங்க எல்லாம் ரொம்ப ஃபாஸ்ட் கொஞ்ச நேரத்துல நீங்க கண்ணு வச்ச மாதிரி பேசினா உடனே ஒரு மாதிரி ஆயிடுச்சு அர்ஜுன் உங்க தங்கச்சிங்களுக்கு தான குழந்தை பிறந்திருக்கு"


என்று கணவனிடம் சாத்விகா செல்லமாக கோபிக்க ...

"அடி போடி நான் என் கண்ணு வைக்க போறேன் அத்தனையும் என்னோட ரத்தினங்கள் "

என்று தன் பிள்ளைகளை உறங்க வைத்துக் கொண்டிருந்தான் தன் பிள்ளைகள் வளர்வதை கண் குளிர் ரசித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்..


இங்கே நகுலன் முதல் குழந்தை பிறந்தவுடன் காவியாவை எம்பிஏ படிப்பை தொடர வைத்து எம்ஃபில் முடித்து ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்து விட்டான் கல்லூரி வேலைகளிலும் சிறப்பாக ஈடுபட்டு வீட்டையும் நல்ல மனைவியாகவும் அம்மாவும் மருமகளாகவும் தன் கடமையை செய்து கொண்டிருக்கிறாள் அவளுக்கு உறுதுணையாக கணவன் நகுலன் துணையாக இருந்தான்


"செல்லம் அது தான் உன்னோட ஸ்டடிஸ் உன்னோட ஜாப் கூட மூணு வருஷமா போயிட்டு இருக்கு இல்ல நம்ம ஏன் அடுத்த குழந்தைக்கு முயற்சி பண்ண கூடாது??"

என்று முகத்தை பாவமாக வைத்து கேட்க..

"நான் எத்தனை வாட்டி கெஞ்சி இருப்பேன் கருணை பார்த்தியா ஓடிடு ஒழுங்கா எதுவும் கிடையாது"

என்று அங்கிருந்து தப்பி ஓட பார்த்த அவளை தூக்கி பிடித்து குழந்தையை தொந்தரவு செய்யாமல் அறைக்குள் இருக்கும் தங்கள் அந்தரங்க அறைக்குள் அழைத்துச் சென்று அடுத்த குழந்தைக்கான திட்டத்தை நியமித்துவிட்டு அவளை விடுவித்தான் நடுவில் மகளை படுக்க வைத்து இருவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்து வைக்கப்பட்டு கொண்டே உறக்கத்தை தழுவினர்
_________________________________________

இங்கே மஹாவும் ஹர்ஷிதாவும் நன்றாக உறங்கிவிட அவர்களை தொந்தரவு செய்ய வண்ணம் அகிலாவை தூக்கி தட்டிக் கொடுத்து உறங்க வைத்துக் கொண்டிருந்தான் அவன் ஆசைப்பட்டது போல பெற்ற இரண்டு முத்துக்களும் பெண்பிள்ளைகள் சிறப்பாக வளர்த்து நல்ல வழியில் அவர்கள் முன்னேற வேண்டும் என்று பல கனவுகளை கட்டி இருந்தான்..

"செல்லக்குட்டி நான் உங்க அம்மாவ எவ்ளோ லவ் பண்றேன்னு சொன்னா புரியாது நீயும் அக்காவும் அத பாத்து தெரிஞ்சுக்கிட்டு நீங்களும் லைஃப்னா எப்படி இருக்கும் ஃபேமிலி என்றால் எப்படி இருக்கும் எல்லாம் தெரிஞ்சுக்கணும் முக்கியமா நீங்க நல்லா படிக்கணும் எங்க பாட்டி அகிலா மாதிரி ஒரு தைரியமான பொண்ணா இருக்கனும்"

என்று மகளை கொஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து அவளுக்கான தொட்டியில் உறங்க வைத்து தன் இடத்தில் வந்து படுக்கப் போனவனை கைபிடித்து தடுத்த மகா..

"எப்ப பாத்தாலும் உங்க பொண்ணுங்க கூடவே டைம் ஸ்பென்ட் பண்றது இப்ப எல்லாம் என் ஞாபகம் உங்களுக்கு இருக்குதா இல்லையா என்று கூட தெரியல அகிலா பாப்பா பொறந்த பிறகு கொஞ்சம் கூட நமக்குள்ள ஒரு டச் இல்லாம இருக்கு"

என்று சிறுபிள்ளைக்குள் கோபித்துக் கொள்ள அப்போதே அவன் புத்திக்கு உரைத்தது சிறிது நாட்களாக மனைவியிடம் விலகி இருக்கிறான் என்று ஆணுக்கு ஏக்கம் இருப்பது போல் தானே ஒரு பெண்ணுக்கும் இருக்கும்... போதாக்குறைக்கு பத்து மருத்துவமனைக்கு தலைமை நிபுணராக வேலையும் செய்துவிட்டு வீட்டில் இரண்டு பிள்ளைகளையும் சமாளிக்க அவளுக்கு போதும் போதும் என்றாகிவிடும் அதிகபட்சம் குழந்தைகளுக்கான நேரத்தை அனிருத் ஒதுக்கி விடுவான் மகா முழுக்க முழுக்க வேலையில் தனி ஈடுபடுத்திக் கொண்டால் அவளை எந்த தொந்தரவும் செய்ய மாட்டான் அதனால் கொஞ்சம் விலகல் அவர்கள் இருவருக்கும்

"சாரிடி பாப்பா நார்மல் டெலிவரில பிறந்திருந்தாலும் கிரிட்டிக்கல் ப்ரக்னன்சி அதையும் தாண்டி நீ கஷ்டப்பட்டு எடுத்திருக்க நான் உன் பக்கத்துல வந்து எக்கு தப்பா ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன பண்றது இப்போதைக்கு உன்னால ஆபரேஷன் பண்ணிக்க முடியாது உடம்பு ரத்தம் இல்லை இன்னும் ரெண்டு வருஷம் போனதுக்கு அப்புறம் தான் ஃபேமிலி ப்ளானிங் ஆனா உன்னால அடுத்த குழந்தை அளவுக்கு வலு இல்லை இல்லையா அதான் கொஞ்சம் பயந்து போயிட்டேன் அது மட்டும் இல்லாம இப்போ நீ ஒரு பெரிய பொறுப்புல இருக்க உன்னை டிஸ்டர்ப் பண்ண முடியுமா"

என்று தயங்கி தயங்கி நெளிந்து சொல்ல..

"அதெல்லாம் ஒன்னும் இல்லங்க அந்த டைம்ல பண்ணா தான் குழந்தைகள் நிற்கும் இப்ப எனக்கு அந்த டைம் கிடையாது "

என்று கணவனைப் பார்த்து கண் சிமிட்ட அவ்வளவுதான் மனைவியை கட்டிக்கொண்டு அப்படியே கீழே உருண்டு குழந்தைகளின் உறக்கம் கலையா வண்ணம் கட்டிலின் கீழே வெற்று தரையில் இருவரும் இன்ப கடலில் மூழ்கி முட்டு எடுத்தனர்..

இவர்கள் காதல் கதை சொல்ல இயலாத அளவிற்கு மனதில் பல காவியங்களை படைத்த கதை இது சிறுவயதிலிருந்து இருவருக்கும் ஒருவர் ஒருவர் என்றால் உயிர் ஒருநாள் பகதூர் வீட்டில் பக்கத்து தெரு பிள்ளைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ராமாயணம் நடத்தலாம் என்று பார்க்கும் பொழுது அப்பொழுது அனிருத் வயது 14 அதற்கு ஏத்த மாதிரி 13 வயது பெண்ணை நடிக்க வைக்க இங்கே ஏழு வயது மகா நான்தான் சீதாவாக நடிப்பேன் என்று முதல் முதலில் அவன் மனதில் குடி கொண்ட தருணம் அது ஆனால் மகா குட்டி பெண் என்பதால் ஒதுங்கி இருந்தான்…

ஆண்டுகள் செல்ல இருவர் மனமும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராய் நேசித்தது இதோ அதற்காக தானே பெற்றவர்கள் ஏற்பாடு செய்த திருமணத்தை தடுக்க வேறு வழி தெரியாமல் அந்த பெண்களிடம் கெஞ்சி கூத்தாடி அவர்களை அனுப்பி வைத்து அந்த சமயத்தில் தங்கள் காதலிகளை கரம் பிடித்துக் கொண்டான் இதை முன்கூட்டி சொல்லி இருந்தால் இப்படி நடந்திருக்காது இல்லையா என்று அம்மாவிடம் துடைப்பக்கட்டையில் அடி வாங்கிய ஞாபகமும் அவ்வப்போது வந்து செல்லும்…

___________________________________________

இங்கே வழக்கம்போல் காமினி தன் கணவனை கை, கால்களை கட்டி போட்டு விட்டாள் திடீரென்று அவனுக்கு நான்காவது குழந்தைக்கு ஆசை வந்துவிட்டது ஏற்கனவே மூன்று பிள்ளைகள் இதற்கு மேல் முடியவே முடியாது என்று ஆர்டர் போட்டுவிட ஆனால் பீரங்கி மூக்கன் அவளை விடாக்கண்டன் போல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தான்..

"இங்க பாரு ஏற்கனவே மூணு பிள்ளை நாலாவது எல்லாம் சத்தியமா என்கிட்ட சான்ஸ் இல்ல"

என்று கழுத்தை திருப்பிக் கொள்ள அவனும் பார்வையால் ஏதேதோ செய்தி அவளை மயக்க அவனை பார்க்கவே பாவமாக இருந்தது கட்டுகளை அவிழ்த்தவுடன் அவளை வாரி சுருட்டி கொண்டவன்...

"குழந்தை பெற்றுக்கொள்வது உன்னுடைய விருப்பம் கண்ணு குட்டி அடுத்த குழந்தை பிறக்கும் போது பொறக்கட்டும் இப்போ நம்ம ரெண்டு பேரும் பிறந்த குழந்தையா மாறலாமா"

என்று இரட்டை அர்த்தத்தில் கேலி செய்ய பக்கத்தில் குழந்தைகள் அனைவரும் உறங்கி விட்டார்களா என்று பார்க்க மூன்று பிள்ளைகளும் நன்றாக உறங்கி இருந்தனர் அவ்வளவுதான் அவளை அள்ளின்தூக்கிக்கொண்டு லீலையில் மூழ்கிப் போனான்..

இவர்களின் காதல் சிறுவயதில் இருந்து ஏட்டிக்கு போட்டி ஏதாவது கிண்டல் செய்து அடித்து விளையாடிக் கொள்வதுடன் இவர்கள் காதல் ஆனால் மனதில் ஒருவர் மீது ஒருவர் ஆசை இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை மேலும் இவனுக்கு திருமணம் என்று சொன்னவுடன் அவள் முகம் மாறி போனது தைரியமாக வீட்டில் சொல்லாமல் தன்னை புறக்கணித்த அவன் மீது அவளுக்கு அளவு கடந்த கோபம் ஆனால் திடீரென்று தன்னையே அவன் திட்டமிட்டு திருமணம் செய்வான் என்று அவள் அறியவில்லை சேரி சிறிது நாட்கள் ஒதுங்கி இருந்து அவனுக்கு ஆட்டம் காண்பிப்போம் என்றால் அவன் ஆளுமை பிடியில் சிக்கி அன்பு தொல்லையில் முழுகி போனாள் எப்படி வெறுக்க முடியும் அவன் காதலை அதிகபட்ச காதலும் அதிகபட்ச கோவமும் மொத்தமும் அவள் மீது செலுத்துவான் விட்டு செல்ல முடியாத அளவிற்கு கட்டிப்போட்டு காதல் செய்து கொண்டிருக்கிறான் அந்த கள்வன் அவளது செல்ல பீரங்கி முகன்.. இப்பொழுதும் அண்ணனுடன் தான் இவள் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள் எவ்வளவு பெரிய நிறுவனம் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னாலும் என் ஐடியாவில் என் உழைப்பிலிருக்கும் நிறுவனத்தில் தான் பணிபுரிவேன் என்று சட்டமாக சொல்லிவிட அவளுக்கு மறைமுகமாக பக்க பலமாக நின்று கொண்டிருக்கிறான் அவள் கணவன்..

___________________________________________


இங்கே உறக்கம் வராமல் வயிற்றில் இரண்டு குட்டிகளும் இம்சை செய்து கொண்டிருக்க பாவம் விஷாகா கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டு இருந்தாள்

ஹர்ஷா நேற்றிலிருந்தே ஒரு மாதிரி தான் இருந்தாள் மருத்துவர் விளையாட்டாக சொன்னாலும் தான் மனைவியை கஷ்டப்படுத்திவிட்டோமோ ஒவ்வொரு முறையும் தன் ஆசைக்கு அவள் அடிபணிந்து போகிறாளோ அவளுக்கு உண்மையிலே உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறதா என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அவன் முக சுருக்கத்தை பார்த்தவள்...

"என்னாச்சு நேத்து டாக்டர் சொன்னது நினைச்சு கவலைப்படுறீங்களா இங்க பாருங்க நீங்க என்ன ஒன்னும் கஷ்டபடுத்தல நான் முடிவு பண்ணா தான் என் கர்ப்பத்தில் ஒரு குழந்தை தாங்க முடியும் நான் சந்தோஷமா தான் இந்த பிள்ளைகளை பெற்றெடுக்க போறேன் நீங்க கவலைப்படாதீங்க உங்க பிள்ளைங்கள உங்க கையில நிச்சயம் சந்தோஷமா பெத்து எடுத்துக் கொடுப்பேன் இது நம்ம காதலோட ஆதாரங்கள் ஆனா இதுக்கு அடுத்து ஏதாவது யோசிச்சா அந்த ஐடியாவை அப்படியே குழி தோண்டி படிச்சிடுங்க"

என்று இறுதியில் அவனை கலாய்த்து தள்ள அவன் முகம் மாறி போய் அவள் கைகளை பிடித்துக் கொண்டு..

"நமக்கு இரண்டாவது பிள்ளை பிறந்த பிறகு உனக்கு ஆபரேஷன் பண்ணி இருக்கணும் எல்லாம் என்னோட தப்பு தானே உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் இல்ல சாரி டி"

என்று பாவமாக முகத்தை வைத்து கேட்க அவன் தலையை வருடிவிட்டவள் வா என்று இரு கைகளை விரித்து கூப்பிட அவள் நெஞ்சுக்குள் தஞ்சம் அடைந்து விட்டான் ஒரு பக்கம் அவளை வளைத்து பிடித்து ஒரு பக்கம் வயிற்றை தடவிக் கொண்டு இருவரும் ஒரு ஏகாந்த நிலையில் இருந்தனர்...


சிறுவயதிலிருந்து திருமணத்திற்கு முந்தைய நாள் வரை சரியாக பேசிக் கொண்டதில்லை ஒரே ஒரு முறை நிறத்தை பற்றி கேலி செய்திருக்கிறான் அவ்வளவுதான் மனதில் அவன் மீது வைத்திருந்த ஆசை அப்படியே தாழ்வு மனப்பான்மையோடு ஒதுக்கி கொண்டவள் பிறகு தனக்கென ஒரு அடையாளத்தை நிரூபிக்க ஒவ்வொரு பாடங்களையும் வகுப்பையும் சிரத்தையோடு சிறந்த மாணவியாக விளங்கி வருபவள் அவனுக்கு திருமணம் என்றவுடன் மனம் வலித்தாலும் ஆனால் இறுதி நேரத்தில் தன் அண்ணன்கள் செய்த கலாட்டா காரணமாக இவனுக்கு பார்த்த மணப்பெண்ணும் அங்கிருந்து சென்றுவிட திடீர் திருமணமாக நடந்தது விசாகாவுக்கு அவள் தாழ்வு மனப்பான்மை கொண்ட குணத்தால் அவனுக்கு கோபம் வர அவளை குத்தி காண்பித்து திட்டிக் கொண்டே இருப்பான்.

ஒரு கட்டத்தில் முடியாதவள் விட்டு சென்று விட்டாள் ஆனால் மறைமுகமாக ரதி என்ற பெயரில் அவன் உயிர்வரை சென்றாள் என்று அவள் அறியவில்லை அப்பொழுதும் ஒரு தாழ்வு மனப்பான்மை குடி கொண்டது அப்படி என்றால் அந்த ரதிதான் அவர் மனதில் இருக்கிறாள் தான் இல்லை என்று அவன் காதலை புரிந்து கொள்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது இதோ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒரு புதிய காதல் உலகில் இவர்கள்
______________________________________

வாழ்க்கை எந்த ஒரு தடங்கலும் என்று இவர்களுக்கு பிரகாசமாகவும் உற்சாகமாகவும் சென்று கொண்டிருந்தது அவரவர் வேலைகளை அனைவரும் சிறப்பாக செய்து கொண்டிருந்தனர்..

விஷாகாவுக்கு இரட்டை பெண் பிள்ளைகள் பிறந்தன
ஒரு பிள்ளைக்கு லாரா என்றும் இன்னொரு பிள்ளைக்கு பத்மாவதி என்று பெயர் வைத்தனர்...

இந்த இரண்டு பிள்ளைகளும் பிறந்த உடனேயே அவளுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டது இதற்கிடையில் காமினியும் அந்த சிகிச்சை செய்து கொண்டாள் அவளாலும் அடுத்த குழந்தை பெற்றெடுக்க பலம் இல்லாததால் அவளுக்கும் இது நடைபெற்றது...


இதற்கிடையில் காவியா இரண்டாவது முறை கர்ப்பம் தரித்திருந்தால் வீட்டில் விசேஷங்கள் முடியுமா என்று கேட்கும் அளவிற்கு அந்த வீட்டில் விசேஷங்கள் நடந்து கொண்டிருந்தது ...

லாரா மற்றும் பத்மாவுக்கு முதலாம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பாக நடைபெற்றது பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தோட்டத்தில் வட்டமடித்து அமர்ந்து கொண்டிருந்தனர் அனைத்து பிள்ளைகளும் சுற்றி ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருக்க பெரியவர்கள் அனைவரும் சிரித்து பேசி கலாட்டா செய்து கொண்டிருந்தனர்...

அப்பொழுது யாரோ வாந்தி எடுக்கும் சத்தம் கேட்கவே அனைவரும் அவரவர் மனைவிகளை பார்த்தனர் அனைவரும் அருகில் தான் இருந்தனர் அப்பொழுது அனிருத் தந்தை கிருஷ்ணா தன் மனைவி ருக்மணியை தேட அவர்தான் அங்கே ஓரமாக இருக்கும் குழாய் அடியில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார் அனைவரும் கிருஷ்ணாவை ஒரு மாதிரி பார்க்க..

ருக்மணி அவர்களை பார்த்து

"டேய் டேய் அசிங்கப்படுத்தாதீங்கடா இது பித்த வாந்தி வயசானவ நானு எத்தனை பேர பிள்ளைங்க இருக்கு இது பித்தம்"

என்று சொல்லி சமாளித்து வாயை துடித்துக் கொண்டு வந்து கணவன் அருகில் அமர அவரோ ருக்மணியை பார்த்து

"நான் கூட போன மாசம் நான் கொடுத்த முத்தமோ னு அப்படி நினைத்துவிட்டேன் டி"

என்று மெதுவாக வடிவேல் காமெடி மனைவியிடம் ம
ட்டும் சொல்கிறேன் என்ற பெயரில் மைக் செட் போடாத குறை தான் அனைவரும் அதைக் கேட்டு கலகலவென்று சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக அந்த இரவு பொழுதை கழித்தனர்...


💖💖💖💖💖💖 சுபம் 💖💖💖💖💖💖
 

Author: srija
Article Title: எபிலாக் ராகம்
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.